Wednesday, June 21, 2023

MAJOVE DESERT TREE JOSHUA 81. ஜோஷுவா பழங்குடி மக்களின் மரம்

ஜோஷுவா பழங்குடி  மரம்


ஜோஷுவா மரம், வட அமெரிக்காவைச் சேர்ந்த மரம்,   நான்கு மாநிலங்களில் பரவியிருக்கும் மஜோவ் (MAJOVE DESERTS) பாலைவனத்தில் மட்டும் காணப்படுவது, இதற்காக கலிபோர்னியாவில் ஜோஷுவா ட்ரீ நேனல் பார்க் என்ற தேசியப் பூங்காவினை அமைத்துள்ளது அமெரிக்க அரசு, வித்தியாசமான தோற்றம் கொண்ட இந்த பாலைவன மரத்தை சமீப காலமாக நகர்ப்புறவாசிகள் கூட தங்கள் வீடுகளில், அழகு மரமாக வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

தமிழ்ப்பெயர்: ஜோஷுவா மரம்

பொதுப் பெயர்கள்: ஜோஷுPவா ட்ரீ,  யூக்கா பால்ம்,  ட்ரீ யூகா,  பாம் ட்ரீ யூக்கா (JOSHUA TREE, YUCCA PALM, TREE YUCCA. PALM TREE YUCCA)

தாவரவியல் பெயர்: யூக்கா பிரேவிபோலியா (YUCCA BREVIFOLIA)

தாவரக்குடும்பம் பெயர்: ஆஸ்பரேகேசி (ASPARAGACEAE)

தாயகம்: வட அமெரிக்கா

பாலைவன மரம்    

வட அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா, அரிசோனா, ட்டா,  நெவாடா ஆகிய மாநிலங்களுக்கு சொந்தமான மரம். 

இந்த ஐந்து மாநிலங்களிலும் பரவியுள்ள மஜோவ் (MAJOVE DESERTS) பாலைவனத்தில் மட்டும் தான் இந்த மரங்கள் காணப்படுகின்றன. வட அமெரிக்காவிலேயே மிகவும் குறைவான மழைபெறும் பகுதி இது.  இந்த மஜோவ் பாலைவனம் 47.877 சதுரமைல் பரப்பில் பரவியுள்ளது.

பழங்குடி மக்களின் உணவாக இருந்தது      

சாஹில்லா (CAHUILLA) என்னும் அமெரிக்க பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது இந்த ஜோஷுவா மரங்கள்.  இந்ப் பழங்குடி மக்கள் கலிஃபோர்னியாவின் தென் பகுதியில் வசித்தார்கள். 

பல தலை முறைகளாக அங்கு வசித்த அந்த மக்கள் இதன் விதைகள் பூ மொட்டுக்கள்; ஆகியவற்றை உணவாக உட்கொண்டார்கள்.  இதன் இலைகளில் கட்டைகள் மற்றும் காலணிகள் (SANTALS) செய்து  நடந்தார்கள்.    

தென்மேற்கு ஐக்கிய நாடுகளின் அழிந்துவரும் மரம் என பட்டியலிடப் பட்டுள்ளது.  இந்த ஜோஷுவா மரம்.  இந்த மஜோவ் பாலைவனப் பகுதிகளில் 1300 முதல் 5900 அடி உயரம் வரை உள்ளப் பகுதிகளில் இந்த மரங்கள் வளர்ந்துள்ளன.   

ஜோஷுவா மரத்தின் பூக்கள் 35 முதல் 55 செ.மீ. நீளம்  30  முதல் 38 செ.மீ. அகலமும் உள்ள பூங்கொத்துக்களாகப் பூக்கும்.  தனிப்பூக்கள் 4 முதல் 7 செ.மீ நீளம் இருக்கும்.  பூக்கள் வெண்ணெய் போன்ற வெள்ளை நிறமாகவும் பசுமை கலந்த வெண்மை நிறமாகவும் இருக்கும். 

பூக்கள் பூத்ததும் யூக்கா மாத்ஸ் (YUCCA MOTHS) என்றும் அந்துப்P பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன.    

இலைகள் 15 முதல் 35 செ.மீ. நீளமான குத்தீட்டிகள் போல இருக்கும்.  கற்றாழை போல அடிப்புறம் அகன்றும் நுனிப்பகுதி கூர்த்தும் எப்போதும் பசுமையாக இருக்கும். இலைகளிpன் விளிம்புப் பகுதி ரம்பம் போல தோன்றும்.  

ஜோஷுவா மரங்கள் அதிகபட்சம் 49 அடி அல்லது 15 மீட்டர் உயரம் வரை வளரும்.  பாலை வனத்தில் வளரும்.  இதர தாவரங்களைவிட இது மிக வேகமாக வளரும். 

தற்கு முக்கியக் காரணமாக இருப்பவை இதன் வேர்கள்.  சில சமயங்களில் இந்த மரத்தின் வேர்கள் 36 அடி அல்லது 11 மீட்டர் ஆழம் வரை கூட செல்லும்.

சாதராணமாக 100 ஆண்டுகள் வரை வாழும் இவை 1000 ஆண்டுகள் வரை கூட இருக்கின்றன.  இந்த மரங்கள் 70 அடி உயரம் வரை கூட வளர்ந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.    

விதைகள் மூலமாக புதிய மரங்கள் உருவாகின்றன.  அதைவிட அதிகமான அதன் வேர்க்கிழங்குகள் மூலம் பரவுகின்றன.  ஆனால் இந்த புதிய கன்றுகள் தாய்மரத்தைச் சுற்றியே வளரும்.    

யூக்கா ஜேகரியானா (YUCCA JAEGERIANA) மற்றம் யூக்கா ஹெர்பெர்டி (YUCCA HERBERTI) என்று இரண்டு துணை இன மரங்களும் (SUB SPECIES) இதில் உள்ளன.   

19ம் நூற்றாண்டில் மர்மான் (MORMONS) என்னும் கிறிஸ்துவ குடியேற்றத்தினர் சிலர் இந்த பாலைவனத்தில் பணம் செய்தனர் அவர்கள்தான்.  இந்த மரத்திற்கு ஜோஷுவா மரம் என பெயரிட்டார்கள்.    

லிபோர்னியாவின் தென்கிழக்குப் பகுதியில் 1994 ம் ஆண்டில் இந்த மரத்திற்கென ஜோஷுவா ட்ரீ நேனல் பார்க் என்ற தேசியப் பூங்காவினை அமைத்துள்ளது அமெரிக்க அரசு.   

ஜோஷுவா மரத்தின் பழங்கள் முட்டை வடிவில் பெரியதாக இருக்கும்.  2 முதல் 4 அங்குல நீளமும்> 2 அங்குல விட்டமும் கொண்டதாக இருக்கும்.  பழங்கள் சிறு குலையாகக் காயக்கும்.  ஒரு பழம் 250 கிராமும்> ஒரு பழக்குலை 4 கிலோவும் எடையுடையதாக இருக்கும். 

வ்வொரு பழத்திலும் 30 முதல் 50 விதைகள் இருக்கும்.   

நன்கு வளர்ந்த அடிமரத்தின் பருமன் அதிகபட்சம் 4 அடி வட்டம் கொண்டதாக இருக்கும்.  இதன் வேர் அமைப்பு சிறப்பானது. அதிகமான ஆழமாக செல்லும். 

தன் வேர் அமைப்பு என்பது ஒன்று ரைசோம் என்று சொல்லும் கிழங்கு> இன்னொன்று சல்லிவேர்கள். ரைசோம் என்பதை புரிதலுக்காக வேர்க்கிழங்கு என்றும் சொல்லலாம்.

இதன் சல்லி வேர்கள் அடி ஆழத்திற்கும் செல்லும்> பக்கவாட்டில் பரந்து செல்லும் தன்மை கொண்டது.

எப்படிப்பட்ட மண்ணில் வளரும்?    

பரவலான மண்வகைகளில் வளரும்.  குறிப்பாக மணல்சாரியான மண் பரப்பு மிகவும் எற்றது.  சத்துக் குறைவான> வறட்சியான நிலப்பரப்பிற்கு மிகவும் ஏற்றது. 

வட அமெரிக்காவின் பிற பகுதிகளில் கூட அழகு மரமாக வளர்க்க சிபாரிசு செய்கிறார்கள்.  கன்றுகளை> விதைகளை விற்பனை செய்ய ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள்> விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் கூட இதனை வளர்க்க விரும்புவோர் ஆன்லைனில் இதன் விதைக் கிழங்குகளுக்கு ஆர்டர் செய்து வாங்கலாம், விசாரித்துப் பாருங்கள்.

FOR FURHER READING

WWW.EN.WIKIPEDIA.ORG – “YUCCA BREVIFOLIA”

WWW.VS.FED VS/DATA BASE – “YUCCA BREVIFOLIA” (US.FOREST SERVICES)

WWW.AI44 COUNTRY GARDENS (AMERICAN MEDOWS) – “ JOSHUA TREE”

WWW.DESERT USA.COM – “JOSHUA TREE”

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...