ஊதாகொன்றை PINK CASSIA CASSIA GRANDIS |
இந்த மரத்தின் கவர்ச்சிகரமான அம்சம்
இதன் பூக்கள்தான்; பூக்கள் நீளமான சரங்களாகப் பூக்கும் ;
ஒவ்வொரு பூவும் 3 செ.மீ. அளவு பூவாக மலரும்; பூக்களின் வெளிப்புற இதழ்கள் பிங்க்
லேவண்டர் வண்ணத்திலும், உட்புற
இதழ்கள் ஊதாமஞ்சள் வண்ணத்திலும் பூக்கும் ; முதலில் சிவப்பாய் பூக்கத் தொடங்கி,
சிவப்பு ஊதாவாகி,
ஊதா ஆரஞ்சு நிறமாக
மாறி ஜாலம் காட்டும்; பூவின்
மையத்து இதழில் மட்டும் சிவப்பும் மஞ்சளும் சேர்ந்திருக்கும். இந்த பூக்களின் வண்ண
சேட்டையை வார்த்தையில் படம் பிடிப்பது கடினமான காரியம். ஏல்லோருமே கிரங்கிப்போவது
இந்த பூக்களின் அழகில்தான்.
15.
ஊதாகொன்றை மரம்
(PINK
CASSIA TREE)
888888888888888888888888888888888888
தாவரவியல் பெயர்: கேசியா கிராண்டிஸ் (CASSIA GRANDIS)
தாவரக்குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)
தாயகம்: பிரேசில், மத்திய அமெரிக்கா
இந்த ஊதா கொன்றை மரங்கள், தென் அமெரிக்கா, பிரேசில், பொலிவியா, பெரு, கரிபியன் தீவுகள், மத்திய அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய இடங்களில் பல நாடுகளில்
பரவியிருக்கும் இந்த மரம் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட ஆந்திரப்பிரதேசம், காநாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது.
ஊதா கொன்றை ஒரு அழகிய பூமரம்:
பூத்திருக்கும் போது அசப்பில் ஆப்பிள் மரங்களைப் போலவே இருக்கும்; இதன் தாவரவியல்பெயர் கேசியா கிராண்டிஸ்;
கேசியா என்ப
ஹிப்ருமொழி வார்த்தை; அதற்கு வாசைன அல்லது வாடை என்று பொருள் ;
கிராண்டிஸ் என்பது
அதன் அதகமட்சமான உயரத்தைக் குறிக்கும்; இந்த குறிப்பிட்ட மரவகையில் இது உயரமான மரம் ; அதிகபட்சம் 30 மீட்டர் உயரம் வளரும்.
1. ஊதா
கொன்றை மரத்தின் பல மொழிப் பெயர்கள்
1.1. பிரேசில்:
கேன்னா பிஸ்டுலா டாஸ் கிராண்டஸ், மரி-மரி
(CANNA FISTULA DOS
GRANDES, MARI - MARI)
1.2. ஆங்கிலம்:
ஹார்ஸ் கேசியா, பிங்க்
ஷவர் (HORSE CASSIA, PINK SHOWER)
1.3. பிரென்ச்:
கேசி டு பிரெசில் (CASSE DU BRESIL)
1.4. ஸ்பேனிஷ்: கேசியா டெல் பிரெசில் (CASSIA
DEL BRESIL)
1.5. கம்போடியா:
கிரீட்டி (KREETE)
1.6. கியூபா:
கேனா பிஸ்டோலா (CANA FISTOLA)
1.7. டொமினிகன்
ரிபப்ளிக்: (DOMINICAN REPUBLIC)
1.8. ஜெர்மனி:
கேசி (CASSE)
1.9. ஹெயிட்டி:
கேசி (CASSE)
1.10. இத்தாலி: கேசியா எ
கிரேண்டி புரூட்டி (CASSIA A GRANDI)
1.11. லாவோஸ்: பிராய் சியம்
(BRAI XIEM)
1.12. மலேசியா: கோடக் (KOTEK)
1.13. பனாமா: கேனா பிஸ்டுலா
(CANA FISTULA)
1.14. ஸ்வீடன்: ரோசன்
கேசியா (ROSAN CASSIA)
1.15. தாய்லாந்து:
கான்பாப்ரூக் (KANPAPRUEK)
இந்த மரத்தின் கவர்ச்சிகரமான அம்சம்
இதன் பூக்கள்தான்; பூக்கள் நீளமான சரங்களாகப் பூக்கும் ;
ஒவ்வொரு பூவும் 3 செ.மீ. அளவு பூவாக மலரும்; பூக்களின் வெளிப்புற இதழ்கள் பிங்க்
லேவண்டர் வண்ணத்திலும், உட்புற
இதழ்கள் ஊதாமஞ்சள்
வண்ணத்திலும் பூக்கும் ; முதலில்
சிவப்பாய் பூக்கத் தொடங்கி, சிவப்பு
ஊதாவாகி, ஊதா
ஆரஞ்சு நிறமாக மாறி ஜாலம் காட்டும்; பூவின் மையத்து இதழில் மட்டும் சிவப்பும் மஞ்சளும்
சேர்ந்திருக்கும். இந்த பூக்களின் வண்ண சேட்டையை வார்த்தையில் படம் பிடிப்பது
கடினமான காரியம். ஏல்லோருமே கிரங்கிப்போவது இந்த பூக்களின் அழகில்தான்.
சரக்கொன்றையின் மரத்தின் தழையைப்போல,
இதன் கசப்பான
பழக்கூழையும் மலமிளக்கியாகவும் பயன்படுத்தலாம்; அத்தோடு ரத்தத்திற்குத் தேவையான,
இரும்புச் சத்தைத்தந்து,
ரத்தச் சோகையை
குணப்படுத்தும். இதற்கு
பழத்தசையை பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
இதன் பழங்கள் மற்றும்
விதைகள் இரண்டுமே மலமிளக்கியாக உபயோகப்படும். இலைச்சாறு, ‘லும்பாகோ’ என்னும் இடுப்பு வலியைக்
குணப்படுத்துவடன் படர்தாமரையைக் கட்டுப்படுத்தும். இலைச்சாந்து தோல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும்.
மத்திய அமெரிக்காவில் இதன் நெற்றுக்களை
சாப்பிடுகிறார்கள் ; இதன்
விதைகளின்மீது இருக்கும் மெல்லியதோல் இவர்களைப் பொருத்தவரை அது சாக்லட் ; சாக்லட்கூட அதனிடம் பிச்சை வாங்கு
வேண்டுமாம் ; இனி
இது ஆர்கானிக் சாக்லட் என்ற பெயரில் அமேசானில் இல்லை அலிபாபாவில் விற்பனை
செய்யலாம்.
இதன் விதைகளில் வியாபார ரீதியிலான
பிசின் தயாரிக்கலாம்; மருந்துப்
பொருட்கள் தயாரிக்கும் பார்மசூட்டிகல் தொழிற் கூடங்களில் இந்தப் பிசின்
உபயோகமாகிறது. இந்த மரத்தின் சாம்பல் சோப்பு தயாரிக்க உதவுகிறது.
இதன் மரங்கள், எல்லாவித மரவேலைகளுக்கும் பயனாகிறது;
கட்டிடம் கட்ட,
வேளாண்மைக் கருவிகள்
செய்ய, வேலிகள் அமைக்க
கம்புகளாக, அடுப்பெரிக்க
விறகாக, அதிக
வெப்பம் தரும் கரியாக ; மரச்சாமான்களில்
உட்புற வேலைகள் (INTERIOR WORKS)
செய்ய என அத்தனைக்கும் உதவும்.
இவை களிமண் பிரதேசங்களில் நன்கு வளரும்;
வறட்சியைத் தாங்கும் ;
மழைக்கால
நீர்த்தேக்கத்தைத் தாங்கும்; உப்பு
மண்ணில் மட்டும் சுமாராக வளரும்.
இதன் விதைகள் கடினமானவை: விதைத்தோல்
முரடானவை; இதனை
மிருதுவாக மாற்ற 12
முதல் 24
மணி நேரம், வெதுவெதுப்பான
நீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும்; தேவைப்படுமானால்
கூடுதலாக 12
மணி நேரம் ஊறவைத்தும் விதைக்கலாம்; எட்டு
முதல் 12
நாட்களில் 60
சத விதைகள் முளைத்துவிடும்.
பெரிய கிளைகளை வெட்டி எடுத்தும் நடலாம்;
15 செ.மீ விட்டமுள்ள
கிளைகளை வெட்டி 2.5
மீட்டர் நீள முள்ள துண்டுகளாக தயாரிக்க வேண்டும்.
சர்வதேச அளவில் உலகில் உள்ள களைகளை
தொகுத்து ஒரு பட்டியலாக (CUMPENDIUM) வைத்திருக்கிறார்கள். அந்த பெரும்பட்டியிலில் இந்த ஊதா கொன்றை மரமும்
களைமரம் (நுNஏஐசுழுNஆநுNவுயுடு றுநுநுனு) என நாமகரணம் சூட்டி
ஒரு கரும்புள்ளி வைத்துவிட்டார்கள்.
அழகுத்தோட்டம், பூங்காக்கள் அமைப்பவர்கள், இப்போது ஊதா கொன்றை மரத்தை
சீண்டுவதில்லை, காரணம்
பூக்கும் சமயம் இது அதிகமான இலைகளை உதிர்க்கிறது: நிறைய குப்பை சேர்க்கிறது
என்கிறார்கள். இன்னொன்று அதிகப்படியான விதைகளை உற்பத்தி செய்கிறது, என குற்றம் சாட்டுகிறார்கள்: இந்த
இரண்டு தொல்லைகளும் இல்லாத ஒரு கொன்றை மரத்தை அவர்கள் சிபாரிசு
செய்கிறார்கள்.
ஈரச் செழிப்பான தாழ்வான வனப்பகுதிகளில்
அதிகபட்சமாக 60
மீட்டர் உயரம் கூட வளரும்; இதன்
பூச்சரங்கள் சராசரியாக 10
செ.மீ நீளம் இருக்கும்; நல்ல வளமான பூமியில் வளரும் மரங்களில்
இந்த மலர்ச்சரங்கள் 20
முதல் 25
செ.மீ. கூட இருக்கும் ; பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மூன்று
மாதங்கள் வரை ஏராளமாய்ப் பூக்கும் ;
சில சமயங்களில்
இந்தப் பூப்பு மே மாதம் வரை கூட நீடிக்கும் ; ஒவ்வொரு
மரமும் 700
காய்களை உற்பத்தி செய்யும் ; காய்கள் 1.5 முதல் 2 அடி நீளம் இருக்கும் ; காய்கள்
நெற்றானதும், ஓவ்வொரு
நெற்றிலும் சராசரியாக 40
முதல் 55
விதைகள் இருக்கும் ; இதன் முளைப்புத் திறன் 8 ஆண்டுகள் வரை நீடிக்கும் ; இதன்
நெற்றுக்களை கால்நடைகள் மற்றும் இதர காட்டு விலங்குகள் விரும்பி சாப்பிட்டுவிட்டு
சாணத்தின் மூலம் பல இடங்களிலும் பரப்புகின்றன்
இந்த மரங்கள் களைச் செடியாக மாறுவதற்கு முக்கிய மான காரணம், இது
போன்ற அதிகப்படியான விதைப் பெருக்கம்தான்.
இதனை களை மரம் என அடையாளப்படுத்தினாலும்
இது அழகு மரம்; பாரம்பரியமான
மருத்துவ மரம் ; வன
உருவாக்க மற்றும் மீட்பு மரம் (AFFORSTATION & REFORESTATION TREE SPECIES); கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல
இது இந்த மரத்தின் இன்னொரு முகம் என்கிறார்கள் தாவரவியல் நிபுணர்கள்.
POST YOUR COMMENTS, REGARDS – GNANASURIA BAHAVAN
D (AUTHOR)
88888888888888888888888888888888
No comments:
Post a Comment