Wednesday, June 21, 2023

LUISIANA STATE TREE BALD CYPRESS 99. பால்டு சைப்ரஸ் லூசியானா அரசு மரம்

பால்டு சைப்ரஸ்
லூசியானா அரசு மரம்


பால்டு
சைப்ரஸ் மரம், அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் அரசு மரம், குளிர்ச்சியான மற்றும் மித வெப்பமான பகுதிகளில் வளரும் வணிக மரம், இதன் இலைகள், பட்டைகள், வேர்களிலிருந்து எடுக்கும் சாறு, குடிநீர், பொடி, கூழ், மற்றும் எண்ணை மருந்துகள் செய்ய பயன்படும், தாவரவியல் தோட்டங்களை, பூங்காக்களை உருவாக்க இவை மிகவும் பொருத்தமானவை.

தமிழ்ப்பெயர்; பால்ட் சைப்ரஸ் மரம் (BALD CYPRESS)

பொதுப்பெயர்: பால்ட் சைப்ரஸ் மரம் (BALD CYPRESS)

தாவரவியல் பெயர்: டாக்சோடியம் டிஸ்டிச்சும் (TAXODIUM DISTICHUM)

தாவரக்குடும்பம் பெயர்: குப்ரசேசி (CUPRESSACEAE)

தாயகம்: வட அமெரிக்கா      

பொதுப் பெயர்கள்: பால்ட் சைப்ரஸ், சைப்ரஸ், சத்தர்ன் சைப்ரஸ், ஒயிட் சைப்ரஸ், டைட் வாட்டர் ரெட் சைப்ரஸ், கல்ப் சைப்ரஸ, ரெட் சைப்ரஸ், ஸ்வேம்ப் சைப்ரஸ் (BALD CYPRESS, CYPRESS, SOUTHERN CYPRESS, WHITE CYPRESS, TIDE WATER RED CYPRESS, GULF CYPRESS, RED CYPRESS, SWAMP CYPRESS)   

வட அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலம் மற்றும் மிசிசிப்பி ஆகிய இடங்கள் இந்த மரத்தின் தாயகம்.  இது லூசியானா மாநிலத்தின் அரசு மரமும்கூட.     

பால்ட் சைப்ரஸ் மரங்கள் இலை உதிர்க்கும் ஊசியிலை மரங்கள்.  பிரமிடுக்கள் போன்ற தோற்றத்தில் நம்ம ஊர் சவுக்கு மரங்களைப்போல வளரும்.

ஈரப்பாங்கான நிலம் மற்றும் வறண்ட நிலங்களுக்குத் தக்கபடி தன்னை வளர்த்துக் கொள்ளும்.  மரங்களின் அடியில் தண்ணீர் தேங்கி நின்றாலும் அதனால் பாதிப்பு அடையாது.

மில நிலம் இருமண்பாடான நிலம் மண்ற்பாங்கான நிலம்,  ண்டல் மண்,  களிமண், வடிகால் வசதி கொண்ட மண் இப்படி அனைத்து மண் வயணங்களிலும் நன்கு வளரும்.

மரங்களின் வளர்ச்சிக்கு போதுமான சூரிய ஒளி அவசியம்.  ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது சூரியன் சுட்டெரிக்க வேண்டும். 

அதிக நிழல் ஆகவே ஆகாது.  நன்கு வளர்ந்த மரம் 50 முதல் 70 அடி உயரம் வரை வளரும்.

அழகு மரம் மற்றும் கட்டை மரம்    

இந்த சைப்ரஸ் ஒரு பிரபலமான அழகுமரம்.  பல வகையான மண் கண்டங்களில் வளரும் மரம்.  அமெரிக்கா, கனடா உட்பட, ஐரோப்பா, ஆசியா வரை பரவியுள்ள மரம்.  குளிர்ச்சியான மற்றும் மித வெப்பமான பகுதிகளில் வளரும் முக்கியமாக இது ஒரு வணிக மரம்.

இந்த மரங்களின் அடிமரம் வித்தியாசமாக பருத்துக் காணப்படும்.  மரங்களின் வேர் அமைப்பும் நன்கு அடர்த்தியாகப் பரந்து வளர்த்திருக்கும். 

இதனால் டுமையான புயல் வீசினால்  கூட அதனைத் தாங்கி நிற்கும் ஆற்றல் உடையவை இந்த மரங்கள்.  எப்படிப்பட்ட பலமான காற்றினாலும் இந்த மரங்களை அவ்வளவு சுலபமாகப் சுழற்ற முடியாது.

கோன்களும் விதைகளும் - CONES AND SEEDS  

வளர்ந்த மரங்கள், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நல்ல விதைகளை உற்பத்தி செய்யும். 

கோன்கள் என்னும் இதன் பழங்களுக்குள்தான் விதைகள் இருக்கும்.  இந்தக் கோன்களின் மேல்தோல் கடினமானதாக, உறுதியாக இருக்கும்.

புரியும்படி சொன்னால் கோன்கள் என்பவை இந்த வகை மரங்கள் உற்பத்தி செய்து சேமித்து வைக்க்கும் விதைப்பெட்டிகள். அவ்வளவுதான். 

ணில்கள் போன்ற சிறு பிராணிகள் இந்த கோன்களை கடிப்பதன் மூலம் இதன் விதைகள் வெளிப்படும்.  இப்படி வெளிப்படும் விதைகள்தான் முளைக்கும். 

மரங்களிலிருந்து விழும் கோன்கள் மழை நீரினால் அடித்துச் செல்லுவதன் மூலம் வேறு இடங்களுக்கும் பரவும்..  

சைப்ரஸ் பிரிவில் மொத்தம் 12 வகையான மரங்கள் உண்டு.  அவை பெரும்பாலும் அழகு மரங்கள் மற்றும் மரக்கட்டைகள் தரும் (ORNAMENTAL & TIMBER WOOD TREE) மரங்கள். 

வெது வெதுப்பான குளிர்ப்பிரதேசங்கள் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் இவை பரவியுள்ளன.  குறிப்பாக இவை வடஅமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசிய நாடுகளில் உள்ளன.

கோன்கள் என்றால் என்ன?      

சைப்ரஸ் மரங்கள், பெரும்பாலும் 25 மீட்டர் உயரம் வரை வளரும்.  சில வகை மரங்கள் 6 மீட்டருக்கு குறைவான உயரம் வளரும், சிறு மரங்களாகவும் இருக்கின்றன.  

இந்த மரங்களின் கிளைகளின் நுனியில் கோன்கள் தோன்றும்.  இதுதான் இந்த மரங்களின் ஆண் பெண் இனப்பெருக்கத்திற்கான உறுப்புகள் (MALE & FEMALE REPRODUCTNE STRUCTURES) எனலாம்.  இந்த கோன்கள் பெரும்பாலும் கோள டிவில் இருக்கும்.  இந்த கோன்களில் 6 முதல் 100 இறக்கைகளைக் கொண்ட விதைகள் இருக்கும்.

பாரம்பரிய மருத்துவப் பயன்கள் (TRADITIONAL MEDICINES)   

சைப்ரஸ் மரங்களின் கோன்கள், விதைகள், இலைகள், பட்டைகள் போன்றவற்றை காலம்காலமாக பலவிதமான பிணிகளைப் போக்க மருந்தாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.    

குடற்புண், சருமநோய்கள், மலேரியா, ஈரலை பாதிக்கும் நோய்கள், இருதய நோய்கள், அதிகப்படியான உதிரப்போக்கு, வயிற்றுப்போக்கு, நுரையீரல் சம்மந்தமான நோய்கள், இப்படி பல்வேறுவிதமான நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.    

இலைகள், பட்டைகள், வேர்கள் வற்றிலிருந்து எடுக்கும் சாறு, குடிநீர்,  தூள், கூழ், மற்றும் எண்ணெய், இவற்றை மருந்தாக பயன்படுத்தி வருகிறார்கள்.

நகர்ப்புறங்களில் நடலாம்      

உலகம் முழுவதிலும் நகர்ப்புறங்களில் மரங்களை நடுவதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்.  முடியும் இடங்களில் எல்லாம் சிறு வனங்களை உருவாக்கும் முயற்சிகளில் உள்ளார்கள். 

இயன்ற வழிகளில் எல்லாம் தாவரவியல் தோட்டங்களை, பூங்காக்களை உருவாக்குகிறார்கள்.  அந்த வகையில் இது போன்ற பணிகளுக்கு பால்ட் சைப்ரஸ் மரங்கள் பொருத்தமானவை.

FOR FURTHER READING

WWW.EN.WIKIPEDIA.ORG “TAXODIUM DISTICHUM”

WWW.MEDICINAL GARDEN. TREKBINGHAM.COM-“TAXODIUM DISTICHUM”

WWW.CONIFERS.ORG / TAXODIUM DISTICHUM

WWW.WILDFLOWERS.ORG / TAXODIUM DISTICHUM

WWW.SCIENCEDIRECT.COM / TAXODIUM DISTICHUM

WWW.POW.SCIENCE.KEW.ORG / TAXODIUM DISTICHUM

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...