Monday, June 12, 2023

LOVELY BEN TEAK TREE- LAGERSTROEMIA LANCEOLATA அழகு பூமருது மரம்

 

பூமருது BEN TEAK 
Lagerstroemia lanceolata

கிளை நுனியில் பூக்கும். ஊதா நிறப் பூக்கள் ஒன்று முதல் 2 அடி உயரமான கொத்துக்களாகத் தோற்றம் தரும். மார்ச், ஏப்ரல் மே மற்றும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நிறைய பூக்கும். இதனைப் பார்க்கும்போதெல்லாம், இவ்வளவு அழகான ஒரு இந்திய பூமரம் பூமருதுக்கு மயில் கொன்றைக்குக் கிடைத்த அங்கீகாரம் இதற்குக் கிடைக்கவில்லையே என வருத்தமாக இருந்தது.

                                                      01. பூமருது    

                                                      (BEN TEAK)

ஏதிர்பாராமல் திடீரென ஒரு நாள் அதிர்ஷ்டவசமாகப் பார்த்தேன் இந்த மரத்தை. இப்படி ஒரு அழகான பூக்களைக் கொண்ட இந்த மரத்தை எப்படி பார்க்காமல் இருந்தேன் என குற்ற உணர்வாக இருந்தது. இந்தப் பூக்களுக்கு அப்படி ஒரு அழகு. ஒரு நர்சரியில் பார்த்தேன் ஒரு குறு மரமாக நீளநீளமான கிளைகளுடன்.

ன்ன மரம் என்று கேட்டதற்கு வெண்தேக்கு என்றார்கள். எனக்கு அந்த பதிலில் நம்பிக்கை ஏறபடவில்லை. காரணம் குமிழ் மரத்தைத்தான் வெண்தேக்கு என்று சொல்லுவார்கள் என எனக்குத் தெரியும்.

அழகான மரம்

ஆனால் அதற்குப் பிறகுதான் தெரிந்தது இது அழகான பூமரம் மட்டுமல்ல தேக்குக்கு அடுத்தபடியான டிம்பர் தரும் மரமும் கூட என்பது. ஆச்சிரியமாக இருந்தது. குயின்ஸ் ப்ளவர்மற்றும் பிரைட் ஆப் இண்டியாஎன்ற பெயரும் இதற்குப் பொருத்தமான பெயர்தான் எனத் தெரிந்து கொண்டேன்.

இதனைப் பார்க்கும்போதெல்லாம், இவ்வளவு அழகான ஒரு இந்திய பூமரம் பூமருதுக்கு மயில் கொன்றைக்குக் கிடைத்த அங்கீகாரம் இதற்குக் கிடைக்கவில்லையே என வருத்தமாக இருந்தது.

அழகான பூ கடினமான மரம். அதனால்தான் இதற்கும் வெண் தேக்கு என்ற பெயர் நிலவுகிறது.

கொஞ்சம் கூடுதலான ஈரப்பசையும் வளமான வண்டல் மண்ணும்  இதற்கு பொருத்தமானவை. விதைகளிலிருந்து சுலபமாய் வளரும்.

 பலமொழிப் பெயர்கள

தமிழ்: பூமருது, கதலி, வெண்தேக்கு, சென்னாங்கி, வேவலா (POOMARUTHU, VENTHEKKU, CHENNANGI, VEVALA)

தெலுங்கு: வரகோகு (VARAGOGU)

கன்னடம்: போலிதவாலா, சல்லா, போலி தாச்செல்லா (BOLE DASAVALA, CHALLA, BOLE DACHELLA)

மலையாளம்: அடம்பு, செம்மருதா, கடல்பூ, மணிமருது ((ATAMPU, CHEMMARUTA, KATALPU, MANI MARUTHU)

அசாமிஸ்: அஜ்ஹார், அஜார், திங்டோ திலாடோ(AJHAR, AJAR, THINGDOU THLADO)

பெங்காலி: அஜார், ஜாருல், ஜரூல், (AJAL, JAROOL, JARUL)

ஒரியா: பட்டோலி, ஆர்ரி (BATOLI, ARY)

பஞ்சாபி: ஜாருல் (JARUL)

இந்தி: அர்ஜூனா, ஜாருல் (ARJUNA, JARUL)

மராத்தி: டாமன், மோட்டா பொண்டாரா, பொண்டாரா லெண்டி (TAMAN, MOTA BONDARA, BONDARA LENDI)

தாவரவியல் பெயர் : லெகர்ஸ்ட்ரோமியா லேன்சியோலேட்டா (LAGERSTROEMIA   LANCEOLATA)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : பென் டீக் (Ben  Teak)

தாவரக்குடும்பம்  :  லித்ரேசி (LITHERACEAE)

மரத்தின் வகை  : நடுத்தரமான உயரம் கொண்ட அழகிய பூமரம். வறட்சிப்    பகுதிக்கான

மரம். 

பயன்கள் :--

தழை : தழை உரம் தரும், டசார் பட்டுப்புழுக்களுக்கு தீவனமாகும்.

 பட்டை : தோல்பதனிட டேனின் தரும்.

 விதை : சோப்பு தயாரிக்க எண்ணெய் தரும்.

 பிசின் : பெயிண்ட், வார்னிஷ்  தயாரிக்க உதவும் குங்கிலியம் என்னும் பிசின் தரும்.

மரம் :

கட்டுமானத்திற்கான மரச் சாமான்கள், பாலங்கள், ரயில் பாதைக்கட்டைகள், மேஜை நாற்காலி, தேயிலைப் பெட்டிகள்,        மரப்பலகைகள், படகுகள், பூப்பந்து மட்டை, டென்னிஸ் மட்டை, ஒட்டுப் பலகைகள், காகிதம்  தயாரிக்க மரக்குழம்பு அனைத்தும் தரும்.

இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க விறகாகும்.

மரத்தின் தாயகம் : இந்தியா

நடவுப் பொருள் : விதைநாற்றுவேர்க்குச்சி.

 மரத்தின் உயரம் :  20  மீட்டர்

பூக்கள் : கிளை நுனியில் பூக்கும். ஊதா நிறப் பூக்கள் ஒன்று முதல் 2 அடி உயரமான கொத்துக்களாகத் தோற்றம் தரும். மார்ச், ஏப்ரல் மே மற்றும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நிறைய பூக்கும்.

இந்த பூங்கொத்துக்கள் 20 முதல் 30  சென்டிமீட்டர் நீளம் உள்ளதாக இருக்கும். பூக்கள் சிறியவை.  பூக்களின் விட்டம் ஒரு சென்டிமீட்டர் இருக்கும். இந்த பூக்கள் அழகான 6 இதழ்களைப் பெற்றிருக்கும். இதனுடைய நீளம் 6 மில்லிமீட்டர் இருக்கும். இதன் பூக்கள் அடர்த்தியான ஊதா நிறத்தில் இருந்து  சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் வட அமெரிக்காவில் மிகவும் குறைவான பூ மரங்களையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஒரு பத்து மரங்கள் என்று சொன்னால் அவற்றில் ஒன்று இந்த பூமருதுதான்.

Please do write your comments box.

GNANASURIA BAHAVAN D


11111111111111111111111111111111111111111111111

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...