Wednesday, June 21, 2023

LIVE OAK TREE SHIP BUILDING TREE 96. கப்பல்கட்ட உதவிய லைவ் ஒக் மரம்

 

கப்பல்கட்ட உதவிய
லைவ் ஒக் மரம்

லைவ் ஓக், அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது, அமெரிக்காவின் தேசிய மரம், ஒரு காலத்தில் கப்பல் கட்டுவதற்காக ரோப்பிய நாடுகளுக்கு ற்றுமதி செய்யப்பட்ட மரம், இனிப்பான தனது அகார்ன்களால்  வனத்தில் வாழும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் விருந்து வைக்கும் மரம், இதன் இலைகள், பட்டைகள் மற்றும் வேர்களின் மூலம் நோய்களை குணப்படுத்தும் மூலிகை மரமும் கூட.

தமிழ்ப்பெயர்: லைவ் ஒக் மரம் (LIVE OAK TREE)

பொதுப் பெயர்கள்: விர்ஜீனியா லைவ் ஒக், பே லைவ் ஒக், ஸ்கரப் லைவ் ஒக், ஸ்கார்ப்மெண்ட் லைவ் ஒக், பிளேட்டிவ் லைவ் ஒக், லைவ் ஒக் (VIRGINIA LIVE OAK, BAY LIVE OAK, SCRUB LIVE OAK, ESCARPMENT LIVE OAK, PLATEAU LIVE OAK, LIVE OAK)

தாவரவியல் பெயர்: கொர்கஸ் விர்ஐினியானா (QUERCUS VIRGINIANA)

தாவரக் குடும்பம் பெயர்: பேபேசியே (FABACEAE)

தாயகம்: அமெரிக்கா

கொர்கஸ் தாவரவகை    

ஒக் மரங்கள் அனைத்தும் கொர்கஸ் (QUERCUS) தாவரவகையைச் சேர்ந்தவை. பேபேசி” (FABACEAE) என்னும் பீச் (PEACH) தாவரக் குடும்பத்தைச் செர்ந்தவைஇவற்றில் தோராயமாக 600 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் (SPECIES) உள்ளன

சில்வர் ஓக்

வேறு வகைத் தாவரங்களையும் ஒக் எனக் குறிப்பிடுகிறார்கள்உதாரணமாக இந்தியாவில் சில்வர் ஒக் என்பது கிரிவில்லியா ரொபஸ்டா.  (GREVILLEA RUBUSTA) இன்னொன்று நாம் சவுக்கு மரம் (CASUARINA) கூட ஷீஒக் (SHE OAK) என ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள்.    

ஆனால் இந்த ஒக் மரங்கள், அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளில் குளிர்ச்சியான மற்றும் வெப்ப மண்டலப் பகுதிகளில் இந்த மரங்கள் பரவியுள்ளன.

வட அமெரிக்கா, சைனா மற்றும் மெக்ஸிகோ ஆசியா இடங்களில் அதிக வகையான ஒக் மர இனங்கள் பரவியுள்ளனஆனால் மெக்ஸிகோவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒக் மரவகைகள் இல்லாமல் போய்விட்டன.

வட அமெரிக்க தேசிய மரம்   

பலநூறு ஆண்டுகளாக அமெரிக்க மக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது ஒக் மரங்கள்வட அமெரிக்க தேசிய மரம் என்னும் பெருமைக்கு உரியவை ஒக் மரங்கள்

ஒக் மரங்களின் அதிகபட்சமான வயது 400 ஆண்டுகள்உணவாகவும், மரச்சாமான்கள் செய்யவும், வன உயிர்களுக்கும் நூற்றுக்கணக்கான வகைகளில் உதவியாகவும் / பயன்தரும் வகையிலும் உள்ளது.  

ஒக் மரங்கள். அழகுமரங்களாகவும், நிழல் தரும் மரங்களாகவும் வளர்க்கிறார்கள்இவை பெரிய மரங்கள்சுமார் 80 அடி உயரத்திற்கும் அலத்திற்கும் பரந்து வளரும்ஒக் மரம் நடுவதென்றால் குறைந்தபட்சம் 80 அடி டைவெளியாவது விட வேண்டும்.

பசுமைமாறா மரம்    

ஒக் மரங்கள் பெரும்பாலும் குளிர்ப்பருவங்களில் இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு காலி மரமாக இருக்கும்அந்த சமயங்களில் லைவ் ஒக் மரங்கள்மட்டும் தழையும்தாம்புடனும் பசுமை மாரா மரமாக (EVER GREEN) இருக்கும்அதனால்தான் இந்தவகை ஒக் மரங்களுக்கு மட்டும் லைவ் ஒக் மரங்கள் எனப் பெயர் வந்தது.   

ஒரு காலத்தில் லைவ் ஒக் மரங்கள்கப்பல் கட்டுவதற்காக அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டதுதெற்கு ரோப்பிய நாடுகளுக்கு பெருமவு லைவ் ஒக்மரங்கள் எற்றுமதி செய்யப்பட்டன.

மெரைன் டிம்பர்

ஓக், பைன், தேக்கு, சிட்கா ஸ்புரூஸ், இரோகோ, ஃபிர், எல்ம், செஸ்ட் நட் (OAK, PINE, TEAK, SITKA SPRUCE, IRAKO, FIR, ELM, CHEST NUT)ஆகிய மரங்கள் கப்பல் கட்டுவதற்கு உலகம் முழுக்க பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் தேக்கு, சால், சிசு, பூமருது ஆகிய மரங்களை கப்பல்கள் கட்டுவதற்கு பயன்படுத்தி வந்தார்கள்

இதுபோல கப்பல், மற்றும் படகுகள் கட்டுவதற்கு பயன்படுத்தும் மரங்களை மெரைன் டிம்பர் என்று சொல்லுகிறார்கள்.

டைடானிக் கப்பல் கட்டும்போது கூட தேக்கு மரக்கட்டைகளை பயன்படுத்தி இருந்தார்கள் என்று ஒரு செய்தி உண்டு. அதுவும் இந்தியத் தேக்கு மரங்கள்.

20 ம் நூற்றாண்டில் முழுக்க முழுக்க உலோகங்களில் கப்பல் கட்டத் தொடங்கினார்கள்அதுவரையில் இந்த லைவ் ஒக் மரங்களின் ஏற்றுமதி தொடர்ந்தது.  அந்த காலகட்டத்தில் இதர வகைகளை மிகவும் குறைவாகவே பயன்படுத்தினார்கள்.    

லைவ் ஒக் மரங்கள் பசுமைமாறா மரங்கள் என்றாலும் கூட முதிர்ந்த இலைகள் உதிரவே செய்யும்அதுபோல துளிர்விடும் பருவத்தில் (SPRING) புதிய துளிர் இலைகளையும்பசுமை மாறா மரங்கள் ஆண்டு முழுவதும் இலைகளைத் தாங்கி இருக்கும்.    

லைக் ஒக் மரத்தின் அகார்ன்கள்இனிப்பாக இருக்கும்அவற்றை பறவைகள் மற்றும் விலங்குகள் விரும்பி சாப்பிடும்.  வான்கோழிகள், வாத்துகள், குயில் போன்ற பறவைகள் மற்றும் மான்கள் போன்றவை இந்த லைக் ஒக்மரத்தின் அகார்ன்களுக்காக தேடி அலையும்.    

பூக்கள், துளிர்விடும் பருவத்தில் பூக்கும்ஆண், பெண் பூக்கள் ஒரே மரத்தில் தோன்றும்ஆண் பூக்கள் மூன்று அங்குல நீளம் இருக்கும்பெண் பூக்கள் இலை கணுக்களில் ஒன்று முதல் மூன்று அங்குல நீளம் இருக்கும்    

அகார்ன்கள் ஒரு அங்குல நீளமும் அரையங்குல விட்டமும் உள்ளதாக இருக்கும்கோள வடிவில் ஆழ்ந்த காவி வண்ணத்தில் பாதியும், மீதி சாம்பல் வண்ணத்திலும் நீண்ட காம்புகளில் தோன்றும்.      

இதன் விதைகளை அப்படியே சாப்பிடலாம்சமைத்தும் சாப்பிடலாம்விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கலாம்எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம்

விதைகளை வறுத்துப் பொடித்து, காப்பி பொடிக்கு பதிலாகப் பயன்படுத்தலாம்இதன் இலைகள், பட்டைகள், மற்றும் அகார்ன்களை, அமெரிக்கப் பழங்குடிகள் பல்வேறு நோய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

லைவ் ஒக்மரங்கள், மலை, ஈரப்பசை உள்ள மண்தன்மை, கடலோர மண்பரப்பு, மணல்சாரியான இருமண்பாட்டு மண், கடினமான களிமண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

FOR FURTHER READING

WWW.EN.M.WIKIPEDIA.ORG / QUERCUS VIRGINIANA

WWW.WILDFLOWER.ORG / QUERCUS VIRGINIANA

WWW.PLANTS.CES.NCSU.EDU / QUERCUS VIRGINIANA – NORTH CAROLINA EXTENSION GARDNER

WWW.SRS.FS.USDA.GOV/ QUERCUS VIRGINIANA

WWW.MISSURIBOTANICALGARDEN.ORG/ QUERCUS VIRGINIANA

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...