Thursday, June 15, 2023

LETTUCE TREE 14. நச்சுக்கொட்டைக் கீரை

பாம்பு விஷம் முறிக்கும்
நச்சுக்கொட்டைக் கீரை




லச்சகெட்ட மரம், பறவை பிடிக்கும் மரம் என்ற காரணப் பெயரும் கொண்ட மரம், சாலைகளிலும், சோலைகளிலும், வீடுகளிலும் காடுகளிலும் வளர்க்க ஏற்ற இலைஅழகு இந்திய மரம், பாம்புக்கடி விஷத்தை முறித்து, மூட்டுவலி மற்றும் சக்கரையை குறைக்க உதவும் மூலிகை மரம், தனது விதைகளைப் பரப்ப பறவைகளின் உயிரைக் கொல்லும் இந்த  மரத்தின் இன்னொரு பெயர் பறவைகளின் கல்லறை மரம்..

பொதுப் பெயர்கள்: லெட்யூஸ் ட்ரீ, கேபேஜ் ட்ரி, பேர்ட் லைம் ட்ரீ, அம்ப்ரெல்லா கேட்ச் பேர்ட் ட்ரீ, ஒயர் லெட்யூஸ் ட்ரீ, பேர்ட் கேட்சர் ட்ரி (LETTUCE TREE, CABBAGE TREE, BIRD LIME TREE, UMBRELLA CATCH BIRD TREE, WIRE LETTUCE TREE, BIRD CATCHER TREE)

தாவரவியல் பெயர்: பைசோனியா ஆல்பா (PISONIA ALBA)

தாவரக் குடும்பம் பெயர்: நிக்டேஞ்சினேசி (NYCTAGINACEAE)

தாயகம்: இந்தியா

பலமொழிப் பெயர்கள்

தமிழ்: ஞ்சு முறிச்சான், நச்சுக்கொட்டைக் கீரை, லஜ்ஜை கெட்ட கீரை, சாண்டி கீரை.

சைனிஸ்: பி சு ன் மு, ஜியாவோ குவோ மு (PI SUN MU, JIAO GUO MU)

டட்ச்: மொலுஸ்கே கூல் (MOLUSCHE KOOL)

ஹவாயன்: பாப்பலா கெப்பாவ் (PAPALA KEPAU)

ஜப்பானீஸ்: ஒ குசொ போக்கு (O-KUSA-BOKU)

இலையழகு மரம்.

நச்சுக்கொட்டை நமக்கு தெரிந்த வரை ஒரு கீரை மரம், “ஃப்ளாரெசண்ட்”  பச்சை   நிறமான  இலைகளை உடைய ஒரு சிறு மரம். மரமோ கிளையோ வெளித் தெரியாமல் இலைகள் போர்த்தி இருக்கும் இலையழகு மரம். அரிதாகப் பூக்கும் மரம். பூக்கள் கிளை நுனியில் சிறு கொத்துக்களாகப் பூக்கும். ஆண்டு முழுவதும் பூக்கும். இதன் இதழ்களைப்பிடித்து யாரோ இடது பக்கம் திருகிவைத்தது போல தெரியும்.

நகா்ப்புற காடுவளா்ப்பு   

கா்ப்புற காடுவளா்ப்பு (URBAN AFFORESTATION) என்பதில் உலகின் பல நாடுகள் இன்று கவனம் செலுத்துகின்றனநமது நாட்டிலும் நகர்ப்புறங்களில் நடுவதற்கு ஏற்ற மரம். அதிக இடத்தைப் பிடிக்காத மரம்

வீடுகள், அலுவகக் கட்டிடங்கள், தொழிற்சாலைகளின் முன்புறத் தோட்டம், பின்புறத் தோட்டம், சாலைகள், சோலைகள், நடைபாதைகள், வாகனங்கள் ஓடுபாதைகள் எங்கும் நடுவதற்கு ஏற்ற மரம்கைவைத்தியத்திற்கு கைகொடுக்கும் மரம்.

இது  ஒரு கீரை மரமாக இருப்பதால்  நம் சமையல்கட்டையும் ஒரு கை பார்க்கும் மரமாக உள்ளது.

அழகான இலை மரம்    

தமிழ்நாடு முழுவதும் நச்சுக்கொட்டைக் கீரைஎன்ற பெயரில் எல்லோருக்கும் அறிமுகமான கீரை மரம் இதுநிறையபேர் இதனை அழகுக்காக வளர்க்கிறார்கள்

இதன் இலைகளின் பசுமை நிறத்தை மரகதப் பச்சை என்று சொல்லலாம்ஆங்கிலத்தில் சொல்வதானால் புளாரஸண்ட் கிரீன்எனலாம்

பெரிய பெரிய இலைகள், ஒரு அடிக்கும் குறைவான நீளம்ரைடிக்கும் குறைவான அகலம்மரமும் கிளையும் தெரியாத அளவுக்கு இலைகளால் மூடி இருக்கும் மரம்5 முதல் 7 மீட்டர் உயரம் வரை வளரும் மரம்.   

இதன் இலைகளை கீரையாக சமைக்கலாம். நான் பலமுறை இதனை ருசித்துப் பார்த்திருக்கிறேன்.

பூக்காத காய்க்காத மரம்   

குறுமரம்தான்நீர் வசதி இருந்தால் கொப்பும் குலையுமாகக் காட்சி தரும்இந்த மரம் பூக்காது காய்க்காதுஅதனால் தான், இதனை லெக்சக் கெட்டக் கீரைஎன்று சொல்கிறார்களாம். ஆனால் இதில் சிலவகை பூக்கும் என்கிறார்கள். பூக்காத மரங்களும் சில சமயம் பூக்கும் என்கிறார்கள்.

மூட்டுவலிக்கு கீரை தோசை  

இதனைக் கீரையாக சமைத்துச் சாப்பிட்டால், பாம்புக்கடி விஷத்தை முறிக்கும், ரத்தத்தில் சக்கரையின் அளவைக் குறைக்கும், மூட்டுவலியைக் குணப்படுத்தும்.  இந்தப் பொதுவான வைத்திய முறைகளை பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.   

இதன் இலைகளில், உள்ள பிளேவனாய்டுகள், ஸ்டீராய்ட்ஸ், மற்றும் பினாலிக் காம்பவுண்டுகள் இதற்கு மருத்துவப் பண்புகளை அளிக்கின்றன.   

மூட்டுவலியும், சக்கரை நோயும் இருப்பவர்கள் இதன் கீரையை தோசை மாவுடன் சேர்த்து தோசை சுட்டு சப்பிடுகிறார்கள்இதற்கு நல்ல பலன் கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள்.   

இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால், ரத்தத்தின் கெட்டித் தன்மையைக் குறைத்து ரத்த ஒட்டத்தை சீர்படுத்துகிறதுஇதன் மூலமாகவே இது மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூட்டுப்பிடிப்பு போன்றவற்றை சரி செய்கிறது.

கடலோர மரம் 

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், சைனா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளை சொந்தமாகக் கொண்டதுஇங்கு அதிக அளவிலும் இந்த மரங்கள் பரவியுள்ளனகடலோரங்களில் வளரும் மரம் இது.          

இந்த மரங்கள் பரவியுள்ள நாடுகளில் எல்லாம் இதனை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.      

குருவி பிடிக்கும் மரம்

இந்தியாவில் இந்த மரங்கள் பூப்பதில்லை காய்ப்பதில்லைஆனால் சில நாடுகளில் பூக்கின்றன, காய்க்கின்றனஇதன் விதைகளில் ஒருவகைப் பிசின் சுரக்கிறது

இந்த மரங்களில் வரும் பறவைகளின் சிறகுகள் இந்தப்பிசினில் ஒட்டிக் கொள்ளுவதால், பறவைகள் பறக்க முடியாமல் சிக்கிக் கொள்ளும்அதனால் ஆங்கிலத்தில் இதனை பேர்ட் கேட்சர் ட்ரீஎன்கிறார்கள்.

பறவை இறக்கை மூலம் பரவும்         

இந்தப் பசையில் சிக்கிக் கொண்ட பறவைகள் பறக்க முடியாமல் பலநாட்கள் பட்டினிகூட இக்க நேருமாம்.

 இறந்துபோன பறவைகளின் இறக்கைகளை கடலலைகள் அடுத்த தீவிற்கு அடித்துச் செல்லும்இறக்கைகளுடன் ஒட்டி இருக்கும் விதைகள் மூலம், னைத்துத் தீவுகளுக்கும்  இந்த  நச்சு கொட்டை மரங்கள் பரவும்.    

விதைகளை பரப்பும் உத்திகள்

தனது விதைகளைப் பரப்புவதற்கு செடிகளும், மரங்களும் பலவிதமான உத்திகளைக் கையாளுகின்றனன்னிடம் பழத்தின்ன வரும் பறவைகளின் சிறகுகளில் விதைகளை ஒட்டி அனுப்புகின்றன இந்த மரங்கள்.     

பசையோடு இருக்கும் இதன் விதைகள் பறவைகளின் இறக்கைளில் ஒட்டிக் கொள்ளும். ஒன்றிரண்டு விதைகள் என்றால் பறவைகளுக்கு உபத்திரவம் இருக்காது.

நிறைய விதைகள் ஒட்டிக் கொண்டால் அவற்றைப் பறக்க விடாதுமீண்டும் இந்தப் பிசினிலிருந்து அதன் சிறகுகள் விடுபட வேண்டும்.   

அந்தகாலத்து அந்தமான் மரம்

இந்த மரத்தை சில தாவரவியலாளர்கள் தானாக விதைத்துக் கொள்ளும் மரம் (SELF SEED TREE) என்பது வழக்கம்

இதற்கு சூரிய வெளிச்சம் ரொம்பப் பிடிக்கும் ஒரளவு சுமரான நிழலைக்கூட தாங்கி வளரும்ஆனால் வடிகால் வசதி வேண்டும். 

இந்த மரத்தை பீச் பிராக்கிரஸ் ட்ரீஎன்றும் சொல்லுகிறார்கள்ஒரு சமயத்தில் இந்த மரங்கள் அந்தமான் தீவுப் பகுதிகளில் கடலோரக் காடுகளில் அதிகம் இருந்ததாம்.

பறவைகளை சாப்பிடும் மரம்

 ஆங்கிலத்தில் இந்த மரத்தை பறவைகளை சாப்பிடும் மரம் என்று எழுதி இருக்கிறார்கள்ஆனால் உண்மைில் இந்த மரங்கள் சாப்பிடுவதில்லைஇந்த மரங்கள் தனது விதைகளை பறவைகள் ஒட்டி விடுகின்றனஅத்தப் சையிலிருந்து விடுபட முடியாத பறவைகளை இறந்து போகின்றன என்பதுதான் உண்மை.      

தனது விதைகளை பரப்புவதற்காக பறவைகளைக் கொல்லும் நச்சு கொட்டை மரத்தின் தாவரவியல் பெயா் பைசோனியா புரூனியோனா ( PISONIA BRUNIONA)

இந்த மரங்கள் எல்லாவகையான மண்ணிலும் வளரும்ஆனாலும் இதற்குப் பிடித்தமானது மணல்சாரி நிலங்கள்டற்கரை மணலில் கூட நன்கு வளரும். கிளைகளை வெட்டி நடலாம். 

பூச்சிகளை சாப்பிட வரும் பறவைகள்

பைசோனியாமர விதைகள் சுரக்கும் பாலில் ஏராளமான பூச்சி இனங்கள் சிக்கிக் கொள்ளும்பூச்சிகளை சாப்பிட வரும் கடல் பறவைகளின் இறக்கைகளும் இந்தப் பாலில் ஒட்டி சிக்கிக் கொள்ளும்இந்தப் பால்பசையில் சிக்கிய பறவைகளால் பறக்க முடியாதுஅந்தப் பறவைகள் தரையில் விழுந்து கிடக்க, பல பிராணிகளுக்கு அவை உணவாகும்.

கடற்பறவைகளின் கல்லறை   

இதன் பாலில் சிக்கி செத்துப்போன பறவைகள், ஆண்டுக்கணக்கில்மரங்களில் தொங்கிபடி இருக்குமாம்.     அதனால்தான் இந்த பைசோனியா மரங்களை, தாவரவில் வல்லுநா்கள், கடற்பறவைகளின் கல்லறை என வருணிக்கிறார்கள்.

TO READ FURTHER

1.         A PLEASING PLANTS FOR EYES AND MOUTH-HINDU-(JULY 17,2009)

2.         ‘நஞ்சுமுறிச்சான்’– WIKIMEDIA(WWW.COMMONS.M.WIKIMEDIA.ORG)

3.         WWW.YENSAMY ALARA.BLAGSPOT.COM – NACHUKOTTAI KARAKUZHAMBU

4.         WWW.STAURT EXCHANGE.ORG – MALUKO.PISONIA ALBA, LETTUCE TREE, JIAO SUO MU-

5.         WWW.TOPTROPICALS.COM-“PISONIA ALBA” (662 words)

PLEASE POST YOUR COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN D, (AUTHOR)

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...