Monday, June 12, 2023

LAVENDER BEAUTY FLOWERS OF JACRANDA TREE - வசிகரமான பூமரம் ஜக்ரந்தா

ஜக்ரந்தா - JACRANDA 
JACRANDA MIMOSIFOLIA

ஜக்ரந்தா அழகான பூ மரம்இதன் சொந்த ஊர் தென் அமரிக்கா.  குறிப்பாக பிரேசில் நாட்டைச் சேர்ந்தது. உலகத்தில் உள்ள மிக அழகான பூ மரங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவில் சில இடங்களில் பூப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் பிரியாணி நகரம் வாணியம்பாடி அருகில் உள்ள எங்கள் தோட்டத்தில் பூப்பது எங்கள் அதிர்ஷ்டம்.

11. அழகு பூமரம் ஜக்ரந்தா

(JACRANDA TREE)

8888888888888888888888888888888888888888

தாவரவியல் பெயர்: ஜக்ரந்தா மைமோசிபோலியா (JACRANDA MIMOSIFOLIA)

தாவரக்குடும்பம் பெயர்: பிக்னோனியேசி (BIGNONIACEAE)

தாயகம்: பிரேசில்

பொதுப்பெயர்கள்: ஜக்ரந்தா, பிரேசிலியன் ரோஸ்வுட், புளு ஜக்ரந்தா, புளு டிரம்பட் ட்ரீ  (JACRANDA, BRAZILIAN ROSEWOOD, BLUE JACRANDA, BLUE TRUMPET TREE)

ஜக்ரந்தா அழகான பூ மரம்இதன் சொந்த ஊர் தென் அமரிக்கா.  குறிப்பாக பிரேசில் நாட்டைச் சேர்ந்தது. உலகத்தில் உள்ள மிக அழகான பூ மரங்களில் இதுவும் ஒன்று.

வாணியம்பாடியில் பூக்கும் ஜக்ரந்தா

இந்த மரங்களை முதன்முதலாக பெங்களுர் நகரத்தில்தான் நான் பார்த்தேன். இதன் லேவண்டர் நிறம் எனக்குப் பிடித்திருந்தது. விசாரித்துப் பார்த்ததில் அதன் பெயர்  ஜக்ரந்தா என தெரிந்து கொண்டேன். அதன்பிறகு ஊரில் ஹொசூர் சுவாமி நர்சரிக்குச் சென்று ஐந்தாறு ஜக்ரந்தா கன்றுகளை வாங்கி கொண்டு நடையைக் கட்டினேன். கையோடு அவற்றை  என்னுடைய தோட்டத்தில் நட்டும் வைத்தேன். இப்போது கிட்டத்தட்ட நான்கைந்து மரங்கள் எனது தோட்டத்தில் உள்ளன. ஒரு மரம் மட்டும் பெரிய மரமாக வளர்ந்துள்ளது. அந்த மரம் பூக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் ,இருப்பது போல், மரமே பூவாக இல்லை. ஆனால் மனதை சுண்டி இழுக்கும் அதே லேவண்டர் நிறம். ஜக்ரந்தாவில் லேவண்டர் மட்டுமின்றி மஞ்சள் நிற பூக்களும் இருக்கின்றன.

இந்தியாவில் சில இடங்களில் பூப்பதில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் பிரியாணி நகரம் வாணியம்பாடி அருகில் உள்ள எங்கள் தோட்டத்தில் பூப்பது எங்கள் அதிர்ஷ்டம்.

சொந்த ஊர்

இந்த மரத்தின் சொந்த ஊர் அர்ஜென்டினா மற்றும் பிரேசில். பரவி உள்ள நாடுகள் அன்டிகுவா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காகியூபாசைப்ரஸ், எத்தியோப்பியா, பிரெஞ்சு கினியா, கானா, கிரெனடா, கௌத்திமாலா, இந்தியா, கென்யா, நெதர்லாந்து, நிகராகுவா, பனாமா, டோகோ, சவுத் ஆபிரிக்கா, செயின்ட் கிட்ஸ், நெவிஸ் செயின்ட் லூசியா, சூரினாம், டிரினிடாட், டொபாகோ உகாண்டா, வெனிசுலா, சாம்பியாசிம்பாப்வே மற்றும் வெனிசுலா. 

1. ஜக்ரந்தா மரத்தின் பலமொழிப் பெயர்கள்

1.1. தமிழ்: ஜக்ரந்தா மரம் (JACRANDA TREE)

1.2. இந்தி: நீலி குல்மோஹர் (NILI GULMOHAR)

1.3. பெங்காலி: நீல்காந்த் (NEELGANTH)

1.4. நேப்பாளி: பங்கேரி பூல் (PANGERI POOL)

1.5. ஆப்ரிகன்ஸ்: ஜக்ரந்தா (JACRANDA)

1.6. டேனிஷ்: மைமோஸ் ஜெகரேண்டா (MIMOS JACRANDA)

1.7. பின்னிஷ்: ஜகரண்டா (JACRANDA)

1.8. பிரென்ச்: ஜகரண்டா அ பில்லஸ் டி மைமோசா (JACRANDA A BILLUS D MIMOSA)

1.9. இத்தாலியன்: ஜகரண்டா புளு (JACRANDA BLUE)

1.10. போர்ச்சுகீஸ்: கரோபா குவாசு (KAROBA-KUVASU)

1.11. ஸ்பேனிஷ்: ஜக்ரண்டா (JACRANDA)

1.12. ஸ்வீடன்: ஜக்ரண்டா (JACRANDA) 

குளிர் தாங்கா மரம்

ஜக்ரந்தா பனி தாங்காதுகுளிரும் தாங்காது; ஆனால் உலகம் முழுவதும் பரவலாக இந்த மரங்களை வளர்க்கிறார்கள்; வட அமெரிக்காவில் கலிபோர்னியா, நெவாடா, அரிசோனா, டெக்ஸாஸ், புளோரிடா ஆகிய இடங்களில் அதிகமாக இந்த மரங்களை பார்க்கலாம.;

பூவழகு இலையழகு மரமழகு

இந்த மரங்கள் 20 மீட்டர் உயரம் வளர்கின்றன் பூக்காத இடங்களில் கூட இலைகளின் அழகுக்காக வளர்க்கிறார்கள்தென் ஆப்பிரிக்காவில் சில பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் ஜக்ரந்தாவை  களை மரமாக பார்க்கிறார்கள்; “நெல் வயலில் பூ பூக்கும் ரோஜா கூட களைதான்என்ற கங்கைகொண்டானின் கவிதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது. ஜக்ரந்தாவும் அப்படித்தான். 

வயலட் ஷவர்

மரங்களை அறுத்தால் அதனுடைய உட்பகுதி வெளிர் சாம்பல் நிறம் அல்லது வெண்மை நிறத்தில் இருக்கும்; மரங்கள் மிருதுவானவை; அறுக்கும் மரங்களை சுலபமாக உலர்த்த முடியும்; மரங்கள் பச்சையாக இருக்கும் போதும் உலர்த்திய போதும், இழைப்பு மற்றும் கடைசல் வேலைகளை சுலபமாகச் செய்யலாம்.

பூக்கள் பூக்கும் போது வெளிநாடுகளில் அந்த மரத்தில் ஒரு இலை கூட பார்க்க முடியாது. ஆனால் நம்ம ஊரில் அதுபோல பார்க்க முடிவதில்லை. வெளிநாடுகளில் இருக்கும் மரங்கள் நீலநீர்ஊற்று பீய்ச்சி அடிப்பது மாதிரி தெரியும். அந்த அளவுக்கு மரங்கள் பூக்களால் மூடியிருக்கும். இதனை வயலட் ஷவர் மரம் என்றுகூட சொல்ல்லாம்.

ஜக்ரந்தா சிட்டி

ஆப்பிரிக்காவில் பிரிட்டோரியா என்ற நகரத்தின் புனைப்பெயர் ஜக்ரந்தா சிட்டி. காரணம், அங்கு திரும்பிய பக்கமெல்லாம் ஜக்ரந்தாதான். சாலைகள,; பூங்காக்கள,; வீடுகள், தோட்டங்கள், பாக்டரிகள், இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் ஜக்ரந்தா தான்.

ஆஸ்திரேலியாவிலும் இதே கதைதான். இங்கு கிராம்ப்டன் என்னும் நகரில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் வரை ஜக்ரந்தா பெஸ்டிவல்என கொண்டாடுகிறார்கள். அன்று அதிகாரப்பூர்வமான அரசு விடுமுறை அறிவித்து விடுவார்கள். அனேகமாக உலகத்திலேயே ஒரு மரத்திற்கு திருவிழா எடுத்து அதற்கு  அரசு விடுமுறையும் அளிப்பது அனேகமாக ஜக்ரந்தாவுக்கு மட்டுமாகத்தான் இருக்கும். கூட்னாமற்றும் கிராப்டன்நகர்களில் அக்டோபர் மாதத்தில் ஜக்ரந்தா திருவிழாஎன ஜமாய்க்கிறார்கள்.  

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்ரேல் நாட்டில் இந்த மரங்களை அறிமுகம் செய்தார்கள். தற்போது இஸ்ரேல் நாட்டில் பல நகரங்களில் இந்த லேவண்டர் மரங்களைப் பார்க்கலாம்; மெக்ஸிகோஅமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளிலும் இதே நிலைதான். சீன நாட்டில் இ,ந்த இலைகளைப் பயன்படுத்தி அதில் ஒரு வகையான ஊதாநிற சாயங்களை தயார் செய்கிறார்கள்.

அனுமதி வேண்டும்

உள்ளுர்  மர வகைகளை எல்லாம்  ஓரங்கட்டிவிட்டது ஜக்ரந்தா என்ற குற்றப்பத்திரிக்கையை வாசிக்கிறார்கள், ஆப்ரிக்கா மற்றும்  தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாக்காரர்கள்.  இனி இந்த மரத்தை நட வேண்டும் என்றால் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலை அங்கெல்லாம் நிலவுகிறது.

இந்த மரத்தின் பட்டைகள் இலைகள,; பழங்கள், பூக்கள் ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம.; பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய மேகவெட்டை நோய் மற்றும் சிபிலிஸ் பால்வினை நோயையம் கட்டுப்படுத்தலாம.; இன்னொரு முக்கியமான விஷயம,; உலகில் வசிக்கும் மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் பெனிசிலின் மருந்துக்கு அலர்ஜிக்கு உள்ளவர்கள்.  அப்படிப்பட்டவர்களுக்கு ஜக்ரந்தாவில் தயாரிக்கும் மருந்து எந்தவித அலர்ஜியும் ஏற்படுத்தாது.

விதைகளை சேகரித்த உடனே கூட விதைக்கலாம். அவற்றை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பிறகு விதைத்தால் 10 முதல் 12 நாட்களில் 50 முதல் 92 சதம் முளைக்கும். முளைத்த கன்றுகளை 8 முதல் 10 மாதங்கள் வளர்த்து புதிய இடங்களில் நடலாம். ஜக்ரந்தா  விதைகள் ஆன்லைனில் 10 விதைகள் 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஊதாநிற சங்கடம்

மரங்கள் வெண்மை கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும்; ஓரளவு கடினத்தன்மையுடன் கூட இருக்கும்; இதில் சுலபமாக வேலை செய்யலாம்இதன் மரங்களை கடைசல் வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; கருவிகளுக்கு கைப்பிடிகள் போடலாம்; கட்டிட வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; விறகாகவும் பயன்படுத்தலாம்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள மாணவர்கள் இதற்கு ஊதா நிற சங்கடம்என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது இந்த மரம் பூக்கும் போது தான் பரிட்சைகள் வரிசையாக வர ஆரம்பிக்கும். அதனால் பரிட்சைக்கு மாணவர்கள் வைத்திருக்கும் பெயர் ஊதா நிற சங்கடம்’.

PLEASE POST YOUR COMMENTS, REGARDS - GNANASURIA BAHAVAN D (AUTHOR) 

8888888888888888888888888888888888888888

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...