Wednesday, June 28, 2023

KUMIZH A TIMBER WITH MEDICINAL VALUES 143.மருத்துவப் பயன்கொண்ட கட்டை மரம் குமிழ்

 

மருத்துவப் பயன்கொண்ட
கட்டை மரம் குமிழ்

தாவரவியல் பெயர் :  மெலினா ஆர்பொரியா (MELINA ARBOREA)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : பென் டீக், மெலினா, ஸ்னேப் டிராகன், ஒயிட் டீக், மலாய் புஷ் பீச், கும்ஹார் (BEN TEAK, MELINA, SNAP DRAGON, WHITE TEAK, MALAY BUSH BEACH, KUMHAR)

தாவரக்குடும்பம் :  வேர்பனேசி (VERBANACEAE)

வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம். மரச் சாமான்களுக்கென்றால் பலமுறை மருத்தாம்பாக வளர்க்கலாம். பல நாடுகளில் பரவி இருக்கும் மரம்.

கொஞ்சம் கூடுதலாக ஈரப்பசை இருந்தால் கூட வேகமாக வளரும். முப்பது மீட்டருக்கும் மேல் மளமளவென வளரும்.

இதனை வெண்தேக்கு என்றும் குமிழ் தேக்கு என்றும்  சொல்லும் இந்த மரம் ஒரு இந்திய மரம்.

சீர் கேடடைந்த வனப்பகுதியை வளப்படுத்த சிறந்த மரம். மரங்களைத் துளைக்கும் வண்டுகள், மரங்களைத் தாக்கி பலவீனப்படுத்தும் பூசணங்கள், கரையான்கள் எதுவும் குமிழ் மரத்திடம் மூச்விடக்கூடாது.

பலமொழிப் பெயர்கள்:

தமிழ் : குமிழ் மரம், குமுளா மரம் (KUMIZH MARAM, KUMULA MARAM)

இந்தி: கும்கார் (KUMHAR)

மணிப்புரி: வாங் (WANG)

மராத்தி: சிவன் (SIVAN);

மலையாளம்: கும்பில் (KUMBIL)

தெலுங்கு: பெத்த குமுடு (BEDDA KUMUDU)

கன்னடம்: சிவானி (SIVANI)

சமஸ்கிருதம்: மதுமதி (MATHUMATHI)

மரத்தின் வகை :  அலங்கார அழகுமரம்

மரத்தின் பயன்கள் :

தழை : கால்நடைகளுக்கு தீவனமாகும். சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும். ஈரி பட்டுப்  புழுக்களுக்கு உணவாகும். மருந்துப் பொருளாகப் பயனாகிறது.

பூக்கள்: புத்தாண்டு தினத்தன்றுசில இடங்களில் பூக்களை அரிசியுடன் சேர்த்து ஒரு வகையாக கேக்குகளை தயாரித்து சுவைத்து கொண்டாடுகின்றனர்.

பட்டை: டேனின் நிறைந்தது. தோல்பதனிடலாம். மருந்துப் பொருளாகப் பயனாகிறது.

மரம் : தீப்பெட்டிகள் தீக்குச்சிகள் செய்ய, மேஜை நாற்காலி செய்ய, படகுகள், கட்டுமரங்கள் தயாரிக்க, ஒட்டுப்பலகை , பார்ட்டிகிள் போர்டு ஆகியவை செய்ய      மற்றும்       காகிதம் தயாரிக்க மரக்கூழும் தரும்.

சுரங்கங்களில் தூண்களாகவும், படகுகள், இசைக்கருவிகள், கடைசல் செய்து செய்யும் பொருட்கள் செய்யவும் அற்புதமாக ஒத்துழைக்கும் மரம்.

கோகோ பயிர் செய்யும் தோட்டங்களில் நழல்தரும் மரமாகவும், காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது. வேகமாக வளரும் இந்த மரங்கள் தோட்டங்களில் களைகளையும் வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது. 

கனி : சிறுவர்களுக்கும் கால்நடைகளுக்கும் உண்ணக் கனி தரும்.   

இலைகள், கிளைகள், மரம் : அடுப்பெரிக்க உதவும்.

மருத்துவப் பயன்: கேன்சர் கட்டிகள், ரத்தத்தில் ஏறபடும் கோளாறுகள், பாம்புக்கடி,                 எலிக்கடி, காலரா, வயிற்றுப் போக்கு, தலைவலி, காக்காய் வலிப்பு, ரத்தச்சோகை,                          தொழு நோய், மூலம், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்த             பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.     

மரத்தின் தாயகம் :  இந்தியா.

ஏற்ற மண் :  பரவலான மண் வகைகளில் வளரும்.

மிகையான அமிலத் தன்மை உடைய மண், உவர் மண், மற்றும் உப்பு மண்ணிலும் வளரும்.

மணல்சாரி மண், சற்று லேசான இருமண்பாடு மண் மற்றும் கடினமான களிமண் கண்டம் உள்ளது போன்ற எல்லாவகை  மணணிலும் நன்கு வளரும்.

ஈரச்செழிபாபான இடங்களில் நன்கு வளர்ந்தாலும் வறட்சியான சூழல்களிலும் நன்கு வளரும் என்கிறார்கள். ஆனால் சிலர் காய்ச்சல் தாங்காது சார். ஒலந்து போயிடும் சார்என்கிறார்கள். 

கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும்.

இந்தியாவிற்கு சொந்தமான இந்த மரம் சைனா, பங்களாதேஷ்;, பூட்டான், இந்தோநேசியா, மலேசியா, மியான்மார், நேப்பால், பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...