Tuesday, June 20, 2023

KONAGARAM HERBAL ORNAMENT TREE 62. மூலிகை அழகு மரம் கோணகரம்

 

மூலிகை அழகு மரம் கோணகரம் 


வைபர்ணம்
என்பது அமெரிக்கப்  பெயர் அமெரிக்கன் பியூட்டிஎன்ற பெயரில் அங்கு கொண்டாடுகிறார்கள். அது தமிழில் கோணகரம் மரம். அந்த காலத்தில் இது அம்புகள் செய்யும் கொம்புகள் தந்தது. இன்று ஏழெட்டு மீட்டர் உயரம் வளர்ந்து, தோட்டங்கள், பூங்காக்கள், சாலைகள், என வளரும்  இடங்களை எல்லாம் அழகுபடுத்துகிறது. ஏறத்தாழ ஒரு டஜன் தாவர ரசயனங்களை உள்ளடக்கியபடி  நோய் நீக்கும் மூலிகையாக பயன் தருகிறது.

தமிழ்: கோனகரா, கோணகரம் (KONAKARA, KONAKARAM)

பொதுப் பெயர்கள்: டாட்டட் வைபர்னம் (DOTTED VIBERNAM)

தாவரவியல் பெயர்: வைபர்னம் பன்க்டேட்டம் (VIBERNAM PUNCTATUM)

தாவரக் குடும்பம் பெயர்: அடோக்சேசி (ADOXACEAE)

தாயகம்: தென்கிழக்கு ஆசியா

பலமொழிப் பெயர்கள்

கன்னடா: கம்பாரி, எல்ல சுண்டி, நொன்னா (KAMBARI, ELLA SUNDI, NUNNA)

மலையாளம்: கோணக்கரா, கோணக்கரி மரம் (KONAKKARA, KONAKKARI MARAM)

சமஸ்கிருதம்: கோணக்கரா (KONAKKARA)

வைபர்ணம் தாவரப்பரிவு

வைபர்னம் தாவரப்பிரிவில் சுமார் 150 முதல் 175 வகையான செடிகளும்> மரங்களும் உள்ளன.  இவை அனைத்தும் அடாக்சேசி என்னும் குடும்பத்தின் கீழ் அடங்கும்.

பரவி இருக்கும் இடங்கள்      

சமீபத்தில் நான் பார்த்து சொக்கிப்போனது இந்தத் தாவரப் பிரிவைச் சேர்ந்த ஒரு செடியில் இருந்த பழங்களை. 

நானும் ஷேக்ஸ்பியரும்

பளிச்சென்று பளபளக்கும் அழுத்தமான ஊதா நிறப் பழங்கள்.  அமெரிக்காவின் டல்லஸ் நகர தாவரவியல் பூங்காவில், ஒரு நீளமான இரும்பு பென்ச்ஒன்றில் தனியாக, ஷேக்ஸ்பியர் உட்கார்ந்திருந்தார். 

உற்றுப் பார்த்தேன் ஷேக்ஸ்பியர்தான், உட்கார்ந்திருந்தார், சிலையாக.  பக்கத்தில் அமர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். 

அருகில் உண்ணிச் செடிகள் மாதிரி செடிகள் மண்டிக் கிடந்தன.  அதில்தான் அந்த அழகான பழங்கள் கொத்துக் கொத்தாக இருந்தது.  உண்ணிச் செடியில் ஒரு வகையோ என்று கூட எண்ணினேன். 

பெயர்ப்பலகையில்; “அமெரிக்கன் பியூட்டிஎன இருந்தது.  அதில் வைபர்னம்என்பது மட்டும் நினைவில் இருந்தது.  இந்த வைபர்னம் பிரிவில் உள்ள செடிகள் நம்ம ஊரிலும் இருக்கின்றன எனத் தெரிந்து கொண்டபோது ஆச்சரியாக இருந்தது.  இந்தப் பழங்கள் வேறு வேறு நிறங்களில் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த குழுவின் தாவரங்கள், தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா, ஆகிய இடங்களில் பரவியுள்ளன.  ஆப்ரிக்காவில் அல்டஸ் மலைகளில் மட்டும் காணப்படுகின்றன.

அம்புகளுக்கான கம்புகளானது

மயிர் கூக் செரியும் ஒரு செய்தியிகளை உங்களுக்கு சொல்லப் போகிறேன் உலகிலேயே இயற்கையாக ம்ம்மி” (MUMMY) ஆன மணிதனை ஆட்சி த ஐஸ்மென் (OTZI THE ICE MAN) என்கிறார்கள்.    

அவன் ஐரோப்பியாவின் காப்பர் - ஏஜ்;’ (CHALKOLITHIC) என்ற காலகட்டத்தில் வாழ்ந்தவன்.  அவன் உடலை எடுத்து இத்தாலியில் உள்ள மியூசியம் ஒன்றில் வைத்துள்ளார்கள். 

அவன் உடலோடு ஒரு அம்பும் கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த அம்பும் அவன் உடலோடு வைக்கப்பட்டுள்ளதாம்.  அந்த அம்புக்கான அடிக்கம்பு வைபர்னம் மரத்தில் செய்தது என்பதுதான் அந்தச் செய்தி.    

ஆட்சல் ஆல்ப்ஸ்என்ற பனிமலைப் பகுதி ஆஸ்திரியா மற்றும் இந்தாலிக்கு இடையே உள்ள மலைப்பகுதி.  அங்குதான் அந்த ஐஸ்மனிதனின் உடலை 1991 ம் ஆண்டு, ஒரு ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள்தான் கண்டுபிடித்தனர்.

பூவழகா ? பழம் அழகா ?

இந்த மரங்கள் 8 – 12 மீட்டர் உயரம் வரை வளரும்.  தோட்டங்கள், பூங்காக்கள், சாலைகள் மற்றும் பல இடங்களை அழகுபடுத்தும் மரங்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

இந்த மரத்தின் பூ வழகா பழம் அழகா?” என்று பட்டி மன்றம் நடத்தும் அளவிற்கு இரண்டுமே அழகானவை.  ஓர் ஆண்டின் அதிகபட்சமான நாட்களில் பூக்கும் காய்க்கும்.    

தமிழில் கோகர்ணம்

மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை சுமார் 200 முதல் 250 நாட்களுக்கு பூக்கும் காய்க்கும்.  தமிழில் கோகர்ணம்என்னும் வைபர்னம் பன்க்டேட்டா என்னும் தாவரவியல் கொண்ட இவை பசுமை மாறாத சிறுமரங்கள் (EVERGREEN TREES)

கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மரம்      

இந்த வகை கோகர்ணச் செடிகள் மற்றும் மரங்கள், கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு உரிய மரம்.  உண்ணிச் செடிகள் மாதிரியே இலையும் புதர்மண்டி வளர்கின்றன. அழகாய்ப் பூக்கின்றன, அம்சமாய் காய்க்கின்றன.   

தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, சேலம், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கோகர்ணம் மரங்களைப் பார்க்கலாம். 

கேரளாவில் பாலக்காடு

இதுபோக கேரளாவில் பாலக்காடு, கோட்டையம், கொல்லம், இடுக்கி, பத்தனம்திட்டாவிலும், கர்நாடகாவில் சிக்மகளுர், கூர்க், ஹாசன், மைசூர் ஆகிய பகுதிகளிலும்,; இந்த மரங்கள் பரவியுள்ளன.

மோயார் ஆற்றுப் பகுதி

கோணகரம் செடி மோயார் ஆற்றுப் பகுதிக்கு உரிய மரம்.  ஆயினும், இந்தியா உட்பட பூடான், கம்போடியா, சைனா, இந்தோனேசியா, மியான்மர், நேப்பால், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான மரம்.

மருத்துவ உபயோகம்       

கோணகரம் செடி கேப்ரிபோலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.  அதுமட்டுமல்ல, இது மருத்துவப் பயன் மிக்கது.  அதன் குரிய தாவர ரசாயனங்கள் இதில் உள்ளன.  இதனை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

அவை அல்கலாய்ட்ஸ், பிளேவனாய்ட்ஸ், கார்போஹைட்ரேட்டுகள், கிளாகோசைட்டுகள்,  பினாலிக் காம்பவுண்டுகள், மேனின்கள், புரோட்டீன்கள், அமினோ அசிட்கள், சேப்பனின்கள், ஸ்டிராய்டுகள் டர்பினாய்டுகள், குய்னோன்கள் மற்றும் கவ்மேரின்கள்.    

இன்னும் கூட உலக சுகதார நிறுவனம்  80 சதவிகித மக்கள், மூலிகைகளைத்தான் நம்பி உள்ளார்கள்.  அதற்குக் காரணமாக இருப்பவை கோணகரம் போன்ற மூலிகைகள்தான்.

FOR FURTHER READING

WWW.EN.WIKIPEDIA.ORG/OTZI

WWW.INDIABIODIVERSITY/ VIBERNUM PUNCTATUM

WWW.FLOWERSOFINDIA.NET/DOTTED VIBURNUM

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

          

 

          

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...