Wednesday, June 28, 2023

KODUKKAPULI SCHOOL CHILDREN’S FAVORITE 151. பள்ளிக்குழந்தை திண்பண்டம் கொடுக்காய்ப்புளி


பள்ளிக்குழந்தை திண்பண்டம்
கொடுக்காய்ப்புளி


(MADRAS THORN TREE, PITHECELLOBIUM DULCE, MIMOCEAE)

பொதுப் பெயர்: மணிலா டேமரிண்ட், மெட்ராஸ் தார்ன், ஸ்வீட் டேமரிண்ட்(MANILA TAMARIND, MADRAS THORN, SWEET TAMARIND)

தாவரவியல் பெயர்:  பித்தசெல்லோபியம் டல்ஸ்  (PITHECELLOBIUM DULCE)

தாவரக் குடும்பம்: மைமோஸியே   (MIMOCEAE)

தாயகம்: மெக்சிகோ

பள்ளிக் குழந்தைகளுக்கு திண்பண்டமாகும் பழம். ஆடுகளுக்கு தீவனமாகும்  தழைதோலை பதனிட உதவும் டேனின் பொருந்தியுள்ள பட்டைதேனீக்களுக்கு உபயம் செய்யும்  மகரந்தம்மேஜை, நாற்காலி, உத்திரம், சட்டங்கள், தூண், ஆகியன தர உதவும் மரம். மணலிலும் வளரும் திறன்,   எண்ணெய் தரும் கொட்டை, எந்த சூழலிலும் வளரும் தன்மைஅத்தனையும் நிறைந்தது கொடுக்காய்ப்புளி  மரம்.

பீர் தயாரிக்க உதவும் தீவன மரம்

நிழல், தீவனம், சிறுகனி மற்றும் மருந்துப் பொருட்கள் தரும் மரம். இந்தியா, காபியன் தீவுகள், புளோரிடா, பங்ளாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் ஹவாய் தீவுகளில் அதிகம் பரவியுள்ள மரம். பசிபிக் கோஸ்ட், மெக்சிகோ, சென்ட்ரல் அமெரிக்கா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றிற்கு சொந்தமான மரம்.

நாம் சீமைக் கருவையைப் பார்த்து பயப்படுவது மாதிரி கொடுக்காய்ப்புளியைப் பார்த்து பயப்படுகிறார்கள் ஜாவா தீவு மக்கள். அங்கு அவர்கள் இதனை இன்வேசிவ் ஸ்பீசிஸ்  (INVASIVE SPECIES) என்கிறார்கள். அப்படி என்றால் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரம் என்று அர்த்தம்.

இந்த மரம் ஏறத்தாழ நமது உள்ளுர் மரம் என்றே நினைக்கிறார்கள்.  ஆனால் இது உண்மையில் வெளிநாட்டு மரம்மெக்சிகோவில்  இந்தப் பழத்தின் தசையிலிருந்து தயாரிக்கும் பீர் மாதிரி ஒரு வகை  பானம், மிகவும் பிரபலமானது.

ஆனால் இந்தியாவில் மெட்ராஸ் தார்ன் என்றே அழைக்கிறார்கள். அதற்கு ஏதாச்சும் காரணம் இருக்கும். குவைத் நாட்டிலும் இது மெட்ராஸ் தார்ன் தான். அரபி மொழியில் கூட இதன் பெயர் சௌகத் மெட்ராஸ் (SOWKAT MADRAS).

கொடுக்காய் புளியின் பலமொழிப் பெயர்கள்

தமிழ்: கொடுக்காய்ப்புளி (KODUKKAIPULl)

மராத்தி:  விளையாட்டி சின்ச்சி (VILAYATI CHINCHI)

கன்னடம்: சீம் ஹனேஸ் (SEEM HANESE)

இந்தி: ஜங்கல் ஜலேபி (JUNGLE JALEBI)

குஜராத்தி:  விளையட்டி அம்ப்லி (VILAYATI AMBLI)

கனிகள்: பெண்களின் பெரிய காது வளையத்தைப் போன்றவை.  இதன் பழங்கள் சிறு குழந்தைகளை வெகுவாக  கவரும்சிவப்பு நிறம்கலந்த வெண்ணிற தசை. ஒரு வித்தியாசமான சுவையுடன் விளங்கும்.  துவர்ப்பும் இனிப்பும் சுவை கலந்த தசை.  

தசை இப்பழங்களின் பழத்தின் பெரும்பகுதியை நிறைத்திருக்கும். கொட்டைகளின் மேற்பக்கம் அகன்றும், கீழ்ப்பக்கம் குறுகியும் இருக்கும். 

மரம் சுமார் 20 மீட்டர் உயரம்வரை வளரும். நிறைய கிளைகளை விட்டு அடர்ந்த தழையுடன் காணப்படும். இலைகள் அவ்வப்போது உதிர்ந்தாலும் , முழுவதுமாக அவற்றை உதிர்ப்பதில்லை.

எப்போதும் பசுமை மாறாத  மரமாக  தென்படும். வட அமெரிக்காவில், வறண்ட மாநிலங்களில், இதன் கனியும் தழையும்  மிகவும் பிரபலமானவைதழையை கால்நடைகளுக்கு போடுகிறார்கள்.   கனியை மனிதர்கள் உண்ணுகிறார்கள்.

தீவனத் தோட்டம் போடலாம்

இப்போதெல்லாம் வெள்ளாடுகளை, கொட்டில்களில் கட்டிப் போட்டு  வளர்க்கிறார்கள்.

இப்படி வளர்ப்பவர்கள் தங்கள் நிலத்திலேயே ஏக்கர் கணக்கில், இந்த மரங்களை நெருக்கி நடுவதன் மூலம் தீவனப் பிரச்சனையை  முழுவதும் தீர்க்கலாம்.

இப்படி தீவன தோட்டத்தை உருவாக்கிய பின்னர் ஆடுகள்  வளர்ப்பதால்,து  உறுதியான லாபகரமான தொழிலாக இருக்கும்.

பிண்ணாக்கு, எண்ணெய்

இந்த மரங்களை தோப்பாக வளர்த்தால், இதன் விதைகளிலிருந்து 13 சதவீதம் எண்ணெய் எடுக்கலாம்.  

எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம்சோப்பு தயாரிக்கலாம். எண்ணெய் எடுத்ததுபோக மீதமுள்ள பிண்ணாக்கில், கணிசமான அளவு  புரதம் இருப்பதால், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம்.  

இதன் பிண்ணாக்கில் 37 சதவீதமும்  சதையில் 25 சதவீதமும் புரதச்சத்து  அடங்கி உள்ளது.

கடலோரப் பகுதிகளிலும் வளரும் ?

வன்னி மரம், சீமைக்கருவை  மரம்இவைகளைப்போல  கொடுக்காய்ப்புளி மரங்களையும், மணல் மிகுந்ததேரிப்பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுக்க கொடுக்காய்ப்புளி மரக்கன்றுகளை நடவு செய்யலாம். 

தரிசான நிலங்களில் நடவு செய்தும், மண் அரிமானத்தை  தடுக்கலாம்கடலோரப் பகுதிகளிலும், உவர் நிலங்களிலும் இது வளரும்.

போத்துக்களை வெட்டி நடலாம்

போத்துக்களாக வெட்டி நடுவதற்கு ஏற்ற மரம் இது. விதைகளை நேரடியாக விதைக்கலாம்வேர்க்குச்சிகள் தயாரித்தும் நடவுசெய்யலாம்.

இதன் பழங்களிலிருந்து விதைகளைப் பிரித்தெடுத்து  உடனடியாகவும் விதைக்கலாம். ஆறு மாதம் வரை சேமித்தும் விதைக்கலாம். 

ஒரு கிலோ எடையில், 5,500 முதல் 8,800 விதைகள்  வரை  இருக்கும்இதன் முளைப்புத் திறன் அதிகபட்சமாக 65  சதவீதம் வரை  இருக்கும்;.

மோசமான மண்வகைகளிலும் வளரும். தரிசு நிலங்கள், களிமண், மற்றும் காரஅமிலநிலை 8.3 இருக்கும் நிலங்களில் கூட நன்கு வளரும். தழைச்சத்தை நிலைப்படுத்தக் கூடியது. காடுகளைப் பெருக்க பயன்படுத்தலாம்.

கருச்சிதைவைக் கட்டுப்படுத்தும்

பல்வலி, ரத்தப்போக்கு, சீதபேதி, வயிற்றுப்போக்கு, தொழுநோய், ஆகியவற்றைக் குணப்படுத்த பழத்தசை மற்றும் பட்டை பயன்படுகிறது.

இலைச்சாற்றினால் கருச்சிதைவைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

விதைகளை அரைத்துக் கொடுத்து குடற் புண்ணை குணப்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் சீதபேதி, பெப்ரிபியுஜ், தோல் நோய்கள், கண் வீக்கம் மலச்சிக்கல், தொண்டை வலி, ஜுரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இது மருந்தாகப் பயனாகிறது.

புற்று நோயை குணப்படுத்தும்

மெக்சிகோவில் காதுவலி, தொழுநோய், பல்வலி, புழுத்தொல்லை ஆகியவற்றைக் குணப்படுத்த இதன் இலைக் கஷாயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

பிரேசிலில் இதனைப் பயன்படுத்தி புற்றுநோயைக் குணப்படுத்துகிறார்கள்.

கயானாவில் இதன் வேர்ப் பட்டைகளை பயன்படுத்தி சீதபேதி மற்றும் காய்ச்சலை குணப்படுத்துகிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் வேப்ப மரத்தை கிராம மருந்துக் கடை (VILLAGE PHARMACY)என்று சொல்லுகிறார்கள். ஆனால் ஆய்வு செய்து பார்க்கும்போது ஒவ்வொரு மரமும் ஒரு மருந்துக் கடையாக இருக்கிறது என்பது தெரிகிறது.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...