Monday, June 19, 2023

KNOWN AYURVEDIC BAY TREE 46. ஆயுர்வேத மருத்துவ மரம் இருளி

ஆயுர்வேத மருத்துவ மரம்
இருளி

 

இருளி மரம், ஆயுர்வேத மருத்துவ உலகம் அறிந்த மரம்.  இந்தியாவிற்கு சொந்தமான மரம், மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு சொந்தமான மரம், தமிழ்நாட்டில், கோயம்புத்தூர்திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, தேனி,  ஆகிய இடங்களிலும் பரவியுள்ள மரம், இதன் பழங்களிலிருந்து எடுக்கும் ஒருவகை எண்ணெய் அழகு சானப் பொருட்கள் தயாரிக்கவும் அகர்பத்திகள் தயாரிக்கவும்   பயன்படுகிறது>        

தமிழ்: இருளி> கொலமாவு> கொலர் மாவு (IRULI, KOLAMAVU, KOLARMAVU)

பொதுப் பெயர்கள்: லார்ஜ் ஃப்ப்ளவர்டு பே ட்ரீ (LARGE FLOWERED BAY TREE)

தாவரவியல் பெயர்: பெர்சியா மக்ரந்தா (PERSEA MACRANTHA)

தாவரக்குடும்பம் பெயர்: லாரேசி (LAURACEAE)

தாயகம்: மேற்குத் தொடர்ச்சி மலை

பலமொழிப் பெயர்கள்:

மலையாளம்: குலமாவு, ஊரவு (KULAMAVU, URAVU)

மராத்தி: குலாம்பா (GULAMBA)

தெலுங்கு நாரா (NARA)

கன்னடா: சிட்டு தன்றி (CHITTU THANDRI)    

ஆயுர்வேத மருத்துவ உலகம் மூலிகை மரமாக அறிந்த மரம்.  இந்தியாவிற்கு சொந்தமான மரம்.  குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு சொந்தமானது.  இது ஸ்ரீலங்காவிற்கும் சொந்தமானது..

லாரேசி - பெரிய தாவரக்குடும்பம்      

லாரேசி தாவரக்குடும்பம் நிறைய தாவர வகைகளைக் கொண்டது.  சுமார் 2800 க்கும் மேற்பட்ட தாவரவகைகளை உள்ளடக்கியது.  இதில் கேசித்தா (CASSYTHA) என்ற தாவரஇனம் மட்டும் ஒட்டுண்ணி கொடிவகைகளை உள்ளடக்கியது.

நூடி உயரம் வளரும் மரம்      

இருளி மரங்கள் சுமார் நூறடி உயரம் வளரும்.  தனி இலைகளைக் கொண்டது.  கிளை நுனிகளில் பூக்கும்.  பூங்கொத்துக்களாகப் பூக்கும்.  கனிந்த இதன் பழங்கள் கருப்பு நிறமாக மாறும்.  இந்த மரங்கள் பசுமை மாறா காடுகளில் இருக்கும்.  தென் மாநிலங்களில் 1100 முதல் 1900 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் இருக்கின்றன. 

மரங்கள் பரவியிருக்கும் இடங்கள்    

மகாராஷ்ட்ரா மாநிலத்தில், கோலாப்பூர், பூனா, ரெய்காட், ரத்னகிரி, இந்துதுர்க் ஆகிய இடங்களில் இந்த மரங்கள் பரவியுள்ளன.  கர்நாடகாவில் சிக்மகளுர்கூர்க், ஹாசன்,  மைசூர், நார்த் கேனரா, ஷிமோகா ஆகிய இடங்களிலும், தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரிதேனி ஆகிய இடங்களிலும் பரவியுள்ளது.  கேரள மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும் பார்க்கலாம்.

மருத்துவப் பயன்கள்      

இருளி மரங்களைக் காலங்காலமாக மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக, ஆஸ்துமா மற்றும் முகப்பருவீக்கம்> மூட்டுப் பிடிப்பு மற்றும் மூட்டுவலியை குணப்படுத் இது பயனாகிறது

இதன் வேர்களில் போட்போஸ்டீரால்ஸ், கிளைகோசைட்ஸ்> ஆல்கலாய்ட்ஸ், ஆகியவை உள்ளன.  இவை எல்லாம்தான் இதற்கு மருத்துவ குணங்களைத் தருகிறது. 

இதன் இலைகளைப் பயன்படுத்தி, உடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தலாம்.  இருமல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடும்பு, கைகால் வீக்கம் ஆகியவற்றையும் குணப்படுத்தும்.

அழகு சானப் பொருட்கள் 

இதன் பழங்களிலிருந்து எடுக்கும் ஒருவகை எண்ணெயும் பயன்தருகிறது.  இதிலிருந்து அழகு சானப் பொருட்கள் தயாரிக்கிறார்கள். அகர்பத்திகள் தயாரிப்பதற்கும்    இது பயன்படுகிறது.

பெர்சியா இன மரங்கள் (PERSIA SPECIES TREES)   

பெர்சியா தாவர வகையில் சுமார் 150 மரவகைகள் இருக்கின்றன.  இந்த மரவகையில் நமக்குத் தெரிந்த பிரபலமான பழமரம் ஒன்று உள்ளது.  அந்த பழ மரத்தின் தாவரவியள் பெயர் பெர்சியா அமெரிகானா (PERSEA AMERICANA) என்பது.  இதன் பொதுப்பெயர் அகேடோ (AVACADO).  தமிழ்ப் பெயர் வெண்ணெய்ப்பழம்.  ஆங்கிலத்தில் பட்டர் புருட் (BUTTER FRUIT) இதன் சொந்த ஊர் மெக்சிகோ. பட்டர் ஃபுரூட் என்று கேட்டால் வாணியம்பாடியில் கூட அவ்கேடோ கிடைக்கும்.

திருத்தணி கன்னிக்கோயிலில் இருளி மரம்      

திருத்தணியில் கன்னிக்கோயில் என்று கோயில் இருக்கிறது.  அது ஒரு காலத்தில் மகா சித்தர்கள் வசித்த இடம். அங்கு ஞானசித்தி தரும் ஏழு மூலிகை மரங்களை பிரதிஷ்டை செய்து வளர்த்து வந்தார்கள். அதில் ஒன்றுதான் இந்த இருளி மரம். அங்க இருளி இன்னும் இருக்கா ? 

வேண்டுகோள்

அந்த ஏழு மரங்கள்.  ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து இன்றும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்,  அந்த ஏழு மூலிகை மரங்களில் ஒன்றுதான் இந்த  இருளி மரம்.  இதர ஆறு மூலிகை மரங்கள், அரசு, கல்லரசு,,கரும்பிலி, தேவஆதண்டம், வேம்பு, மற்றும் கார்த்திகம். திருத்தணிக்காரங்க யாராச்சும், பாத்துட்டு சொல்லுங்க        

FOR FURTHER READING

WWW.EN.M.WIKIPEDIA.ORG – “PERSEA MACRANTHA”

WWW.INDIABIODIVERSITY.ORG – “PERSEA MACRANTHA”

WWW.TANDF.ONLINE.COM/EFFECT OF PERSEA MACRANTHA ACUTE INFLAMATION AND ADJUVANT – INDUCED ARTHRITIS IN RATS – (RESEARCH ARTICLE)

WWW.HEALTHYLIFELIVE.ORG -PERSEA MACRANTHA

WWW.INNOVAREACADEMICS.IN /PHARMACOGNOSTICAL STIDIES ON PERSEA MACRANTHA.

WWW.TAMILANDVEDAS.COM /”VIYAPPOOTTUM  ATHISAYA MARANGAL”

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...