Monday, June 12, 2023

KERALA CELEBRATES DRAGON FRUIT கேரளா டிராகன் பழப்பயிரைக் கொண்டாடுகிறது

 

கேரளா கொண்டாடும் டிராகன்பழம்


ஒரு சமயம் கேரள விவசாயிகளுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய பேசினோம். ஆனால் குறிப்பக நான் ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டேன். “உங்க பகுதியில நெல் நல்லா வரும் ஆனா அதை நீங்க வெளி மானிலத்துல ..வாங்கிகிட்டு வேற பயிரெல்லாம் போடுறீங்க.. அதுக்கு என்னா காரணம் ?” அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்..”நாங்க போடறது..வியாபாரப் பயிர்.. நெல் வியாபாரப்பயிர் இல்ல” என்று சொன்னார்கள். இது நடந்தது கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு முன்னாடி.

இப்போ அவுங்களுக்கு டிராகன் பழம்மாதிரி ஒரு வியாபாரப் பயிர் கிடைச்சி இருக்கு சும்மா விடுவாங்களா ? அதனாலத்தான் இப்போ கேறள மாநிலத்துல ஒரு பஞ்சாயத்துக்கு டிராகன் பழ பஞ்சாயத்துன்னு பேரு வச்சிருக்காங்க..

வியாபார ரீதியாக மாறுகிறது (COMMERCIAL CROP DRAGON FRUIT)

வியாபார ரீதியான டிராகன் பழ உற்பத்தி கேரள மாநிலத்தில் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை வீட்டுத்தோட்டங்கள், மாடித்தோட்டங்கள் என்றிருந்த டிராகன் பழ சாகுபடி கேரள மாநிலத்தில் விவசாயிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சுலபமான வளர்ப்பு முறை (EASY GROWING DRAGON)

மிகவும் குறைவான பராமரிப்பு, குறைவான நீர் தேவை, குறைவான ஊட்டச்ச்த்துக்கள் தேவை, ஒரு ஆண்டில் பலமுறை காய்ப்புக்கு வருவது, இருபது ஆண்டு வயது, பழங்களின் மருத்துவ குணங்கள், நல்ல மார்க்கெட் எல்லாம் சேர்ந்து கேரளாவில் டிராகன் பழங்களை பிரபலமாக்கியுள்ளது என்கிறார்கள், கேரளாவாசிகள்.

அழகான பூக்கள் (BEAUTIFUL FLOWERS)

மஞ்சளும் பச்சையும் கலந்த வண்ணத்தில் தோன்றும் இதன் பூக்களும், அதன் அம்சமான வாசனையும் இவர்களை வெகுவாக்க் கவர்ந்துள்ளது. முக்கொம்பு ஹுசேன் தனது மாடியில் 400 செடிகளை 3400 சதுர அடியில் வைத்திருக்கும் இவர் ட்ராகன் பழ சாகுபடியைப் பிரபலமாக்குவது தனது குறிக்கோள் என்கிறார்.

அதிக சூரிய ஒளி குறைவான நீர் (MORE SUN LIGHT LESS WATER)

டிராகன் பழங்களுக்கு மிகவும் தேவைப்படுவது  நல்ல சூரிய ஒளி, பூசண  நோய் வராதபடிக்கு குறைவாக அளவாக அளிக்கும் பாசனம், இவை இரண்டும்தான் மிக முக்கியம் என்கிறார், வெள்ளையானை வேளாண்மைக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர்.

கேரளாவில் ஒரு கிலோ டிராகன் பழங்கள் 200 முதல் 250 ரூபாய்க்கும் டிராகன் பழக் கன்றுகள் ஒன்று 100 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

நல்ல வருமானம் (GOOD INCOME & PROFIT)

கேரளாவின் மாநில தோட்டக்கலை மிஷன் டிராகன் பழ சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு முப்பதாயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாகத் தெரிகிறது. ஏற்கனவே டிராகன் சாகுபடி தொடங்கியவர்கள் நல்ல வருமானம் பார்க்கிறார்கள். 

டிராகன் பழ பஞ்சாயத்து (DRAGON  FRUIT PANCHAYAT)

ஒரு ஆச்சரியமான செய்தி ! திருவனந்தபுரத்தில் பங்கோடு என்ற பஞ்சாயத்தை (PANGODU PANCHAYAT) டிராகன் பழப் பஞ்சாயத்து என பெயரிட்டிருக்கிறார்கள். காரணம், இங்குள்ள ஒரு விவசாயி 15 ஏக்கரில் டிராகன் பழ மரங்களை சாகுபடி செய்துள்ளார்.

ஆமா, உங்க ஊர்ல எப்போ டிராகனை கொண்டுவரப் போறீங்க ?

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...