Friday, June 30, 2023

KATTAMANAKKU DREAM TREE OF BIO-DIESEL 188. பயோடீசல் கனவு மரம் காட்டாமணக்கு

 

பயோடீசல் கனவு மரம்
காட்டாமணக்கு

தாவரவியல் பெயர் : ஜட்ரோபா கர்கஸ்   (JATROPHA   CURCAS)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : ஜட்ரோபா, பிசிக்நட், பார்படாஸ் நட்  (JATROPHA, PHYSICNUT, BARBADOS NUT)

தாவரக்குடும்பம் பெயர்:  யூபார்பியேசி (EUPHORBIACEAE)

தாயகம்: வெப்ப மண்டல அமெரிக்கா மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா

பயோடீசலில் ஓடவிருக்கும் கார்கள்

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 50 சதவிகித கார்களாவது காட்டாமணக்கு எண்ணெய் என்னும் பயோ டீசலில் (BIO-DIESEL) ஓடப்போகிறது என்று நம்பிக்கையில் ஏகப்பட்ட செடிகளை  நடவு செய்ய ஏற்பாடு செய்த அப்பாவிகளில் நானும் ஒருத்தன்.

காங்ரீட் மாதிரி உறுதியான ஒரு நம்பிக்கை ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம், அன்றைய இந்தியாவின் ஜனதிபதியாக இருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இதில் காட்டிய ஆர்வம்தான்.  அதனால் இன்றும் கூட எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது காட்டாமணக்கு கண்டிப்பாய் கார் ஓட்டுமென்று.

காட்டாமணக்கு டீசலில் ஏரோப்ளேன்கூட ஓடும்

இந்திய ரயில்வே கூட ரயில்வேக்கு சொந்தமாக சும்மாக் கிடந்த நிலங்களில் எல்லாம் கூட காட்டாமணக்கு நட்டார்கள். பல இடங்களில் டீசலுடன் காட்டாமணக்கு எண்ணெயும் கலந்து கார் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களை ஓட்டிய செயல் விளக்கங்கள் நாடு பூராவும் நடந்தன. ஆனால் திடீரென்று இந்தத் திட்டம் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனது.

 “காட்டாமணக்கு பயோடீசலில் கார்கள் ஓடும். பஸ்கள் ஓடும். ரயில்கள்; ஓடும். காட்டாமணக்கில் ஏரோப்ளேன்கூட ஓடும். வெளி நாட்டிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி குறையும். அதற்கான அந்நியச் செலாவணி குறையும்இப்படியெல்லாம் பேசி காட்டாமணக்கை பரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். 

அந்த சமயம். பயோடீசல் உற்பத்தி அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அளவு அதிகரித்துள்ளது என்கிறார்கள். அதில் சைனா மற்றும் இந்தியாவில் பயோடீசல் உற்பத்தி கணிசமாக கூடியுள்ளது என்கிறார்கள். 1992 ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் வணிக ரீதியில் பயோடீசல் உற்பத்தி செய்கிறார்கள். உலகின் மொத்த பயோடீசல் உற்பத்தியில் 80 சதத்தை ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன. 

காற்று மண்டலத்தை கலவரப்படுத்தும் கர்பண்டை ஆக்சைடு

அமெரிக்கா, சோயாமொச்சை எண்ணெய், ரேப்சீட் எண்ணெய், பிராணிகளின் கொழுப்பு, மீன் எண்ணெய்  போன்றவற்றிலிருந்து பயோடீசல் தயாரிக்கிறது. பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்கள் பயோடீசலைவிட 80 மடங்கு அதிகபட்சமான கர்பண்டை ஆக்சைடை வெளியிட்டு காற்று மண்டலத்தை கலவரப்படுத்துகின்றன.

இந்தியாவில் 2016 ம் ஆண்டில்; பெட்ரோலுடன் 5 சதம் எத்தனால் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அது 2017 ம் ஆண்டு 20 சதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த அளவு எத்தனால் உற்பத்தி நம்மிடம் இல்லை. ஐந்து சதவிகிதம் சேர்க்கவே நமக்கு 500 கோடி லிட்டர் எத்தனால் தேவை.

ஆனால்  இந்தியாவின் மொத்த எத்தனால் உற்பத்தி 265 கோடி லிட்டர் மட்டுமே. ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய 40 ரூபாய் ஆகும். எத்தனாலுக்குப் பதிலாக பெட்ரோலுடன் மெத்தனால் சேர்க்கலாம். ஒரு லிட்டர் மெத்தனால்  உற்பத்தி செய்ய 25 ரூபாய் ஆகும்  கணக்கிட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி ஒன்று தெரிகிறது.

காட்டாமணக்கு எத்தனை மொழிகளில் அழைக்கப்படுகிறது எனத் தெரிந்தால் எங்கெல்லாம் அது பரவி உள்ளது. புழக்கத்தில் உள்ளது எனத் தெரியும்.  

காட்டாமணக்குவின் பல மொழி பெயர்

மரத்தின் தமிழ்ப் பெயர் : காட்டாமணக்கு (KATTAMANAKKU)

இந்தி: ஜமால் கோட்டா, ரட்டன்ஜாட், ஜங்லி ஆரண்டி (JAMAL GHOTA, RATANJOT, JANGLI ARANDI)

மணிப்புரி: அவா கேஜி (AWA KEGE)

மராத்தி: மோக்லி, எர்ரண்ட், மாரஹரரலு (MOGLI, ERRAND, MARAHARALU)

மலையாளம்: காட்டாமணக்கு, காட்டலவணக்கு (KATTAMANAKKU, KATTALAVANAKKU)

தெலுங்கு: நேப்பாலம், அடவி அமுதம் (NEPALAM, ADAVI AMUDAM)

கன்னடம்: காணநேரண்டா (KANANERANDA)

பெங்காலி: பாக்பெரண்டா, பெரண்டா, சாதாவெரண்டா (BAGBHERENDA, BHERENDA, SADA VERENDA)

ஒரியா: ஜகசிகாபா, தாலஜஹாஜி (JAHAZIGABA, DHALAJAHAJI)

கொங்கணி: மொக்லி எரண்டி (MOGLI ERANDI)

அசாமிஸ்: சாலிகா குண்ட், பொங்காலி பொத்ரா, பொங்காலி எரா (SALIKA KUND, BONGALI BOTORA, BONGALI ERA)

குஜராத்தி: ராதா குரங, ஜாமல்கோட்டா (RADAU KURUNG, JAMALGOTA)

சமஸ்கிருதம்: தர்வந்தி (DARVANTI)

மிசோ: கங்டம்டாவி, திங்தாவு (KANGDAMDAVI, THINGTHAU)

நேபாலி: சஜிவான், ஹடிகாணி, நிர்குணி, ஆரின் (SAJIWAN, HATTIKAANE, NIRGUNI, ARIN)

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காதான் காட்டாமணக்கின் சொந்த நாடு. ஆனாலும் லேட்டின் அமெரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆகியப் பகுதிகளில் பரவியுள்ளது. இந்தியாவில் அந்தமான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் காட்டாமணக்கு இயற்கையாக பரவி இருப்பதைப் பார்க்கலாம். சாகுபடி வயல் வரப்புகளில் காட்டாமணியை இயற்கை வேலியாக வளர்ப்பது பரவலான வழக்கமாக உள்ளது.

துணிகளுக்கு சலவைத் தொழிலாளர்கள் குறிபோட இதன் இலைப்பாலைத்தான்  பயன்படுத்துவார்கள். இதன் விதையிலிருந்து வார்னிஷ் தயாரிக்கலாம். எலிகளைக் கொல்லும்

எலிமருந்து செய்யலாம். சோப்பு தயாரிக்கலாம். விளக்கு எரிக்கலாம்.  மசகு எண்ணெய், மற்றும் மெழுகுவர்த்தி செய்யலாம்.

காட்டாமணக்கு பழத்தில் மூன்று விதைகள் இருக்கும். பார்க்க ஆமணக்கு விதை போலத் தோன்றும். பூக்கள் கருவுற்ற பின் விதைகளாக மாற ஏறத்தாழ 2 முதல் 4 மாதங்கள் ஆகும்.

காட்டாமணக்கு மிகவும் சாதாரணமான மண் வகைகளில் வளரும். ஊட்டச்சத்துக் குறைந்த சரளைமண், மணல்சாரி மண்ணிலும் நன்கு வளரும். மிகவும் குறைவான மழைபெறும் இடங்களிலும் வளரும்.

காட்டாமணக்கு பயோடீசல் திட்டத்தை ஏன் கைவிட்டுவிட்டார்கள் என்று கேட்டால் மகசூல் சரிவர கிடைக்கவில்லை. சாகுபடி செலவு அதிகம் பிடிக்கிறது. இதில் பயோ டீசல் உற்பத்தி செய்தால் செலவு டீசல் விலையைவிட அதிகமாகிறதுஎன்று சொல்லுகிறார்கள். இந்த கணக்கு பார்க்காமலா இந்த திட்டத்தை அனுமதித்தார்கள் ?’ என்று சாமானியர்கள் கூட கேட்கிறார்கள். ஒரு சிலர் இதில் ஏதோ சூது இருக்கிறதுஎன்கிறார்கள். எது இருக்கிறதோ இல்லையோ காட்டாமணக்கும் இல்லை. பயோடீசலும் இல்லை என்றாகிவிட்டது.

பயோடீசல், எத்தனால், மெத்தனால் போன்றவற்றை உற்பத்தி செய்ய நமக்கு நிறைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. மனமிருந்தால் மார்கம் உண்டு என்கிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...