Tuesday, June 27, 2023

KATHAKAMBU SHIP BUILDING TREE 133. கப்பல் கட்ட உதவும் மரம் கத்தக்காம்பு

 

கப்பல் கட்ட உதவும் மரம்
கத்தக்காம்பு 


(RED KUTCH TREE/ KARANGALI, KATHTHAKKAMBU- ACACIA CHUNDRA)

தமிழில் கத்தக்காம்பு என் சொல்லும் இந்த மரத்தின் வயிரக்கட்டைகள் வெற்றிலைப்பாக்கு மற்றும் பான் மற்றும் பீடா பாக்குக்கு சிவப்பு வண்ணம் தரும்தழை விளை நிலங்களுக்கு உரமாகும்,   பட்டைகள்  தோல் பதனிட டேனின் தரும், இதன் பிசின்  கோந்து தயாரிக்க  உதவும், மரம் கப்பல் கட்ட, வீட்டுத்தூண், உத்திரம்மரச்சாமான்கள்,   கருஞ்சிவப்பு வண்ண உலக்கை, உரல், மேஜை நாற்காலி செய்ய மரக்கட்டைகள் தரும், காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும், புற்று நோய், பல்வலி, எலும்பு தேய்மான நோய், வெண்குஷ்டம், ரத்தச் சோகை,உட்பட பல நோய்களுக்கும் குணம் தரும், அடுப்பெரிக்க விறகு தரும், அனைவரும் விரும்பி இந்த மரத்தை வளர்த்தால் இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்,  இந்த மரத்தின் ஆங்கிலப்பெயர் ரெட் கட்ச் ட்ரீ (RED KUTCH TREE), தாவரவியல் பெயர் அக்கேசியா சுன்ட்ரா (ACACIA CHUNDRA).

பாக்கு  மற்றும் பான்னில் உள்ள சிவப்பு நிறம்

கப்பல் கட்டுமானப்பணிகளில் கத்தக்காம்பு மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கத்தா அல்லது கேட்டிச்சு  என்னும் ஒரு வகையான சிவப்பு சாயம் இதன் வயிரக் கட்டைகளீலிருந்து  எடுக்கப்படுகிறது. தமிழில் பாக்கு என்பதை இந்தியில் பான் என்று சொல்லுகிறார்கள்.

வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் தெற்கு ஆசிய நாடுகளின் மிக முக்கியமான கலாச்சார அடையாளமாக உள்ளது. பாக்குல் உள்ள விதியாசமான சிவப்பு நிறம் இந்த கத்தக்காம்பு மரத்திற்கு சொந்தமானதுதான்.

இது தேனீக்களுக்கு உணவாகிறது. ஸ்கேலி பிரஸ்டெட் முனியா எனும் புள்ளி மார்பு முனியா என்ற பறவை இந்த மரங்களில் விரும்பி கூடு கட்டும் என்னும் சிறப்புக்கு உரியது.

இந்தியாவில் இந்த மரங்களை வெட்ட அரசு அனுமதி வேண்டும். அழிந்துவரும் மரவகையாக இத்னை சொல்லுகிறார்கள்.

கத்தக்காம்பு மரத்தின்  பலமொழிப் பெயர்கள் :

தமிழ்: கரங்காலி, கோடாலி முருங்கை (KARANGALI, KODALI MURUNGAI)

தெலுங்கு: சந்த்ரா, நல்ல சந்த்ரா, சுந்தரா (CHANDRA, NALLACHANDRA,CHUNDARA)

கன்னடா: கச்சு, கக்லி, கெம்ப்பு ஜாலி, கெம்ப்பு கக்லி, கய்ரடா ஜாலி (CACHU, KAGGLI, KEMPU JAALI, KEMPU KAGGLI, KHAIRADA JALI)

மராத்தி: லால் கய்ரா (LAL GHAIRA)

சமஸ்கிருதம்: கதிரா (KATHIRA)

தாவரவியல் பெயர் : அகேசியா சுந்தரா (ACACIA  CHUNDRA)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் :  ரெட் கட்ச் (RED CUTCH)

தாவரக்குடும்பம் :  மைமோசி (MIMOCEAE)

மரங்கள் நடுத்தர உயரமாக. 12 முதல் 15 மீட்டர் வளரும். அழிந்து வரும் மரவகை. இந்தியாவில் அதனை வெட்ட அனுமதி வேண்டும். இதன் தாயகம் இந்தியா.

தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மாராஷ்ட்ரா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் பரவியுள்ளது.

மருந்தாகக் கட்டுப் படுத்தும் நோய்கள்:

தோல் நோய்கள், புற்று நோய்கள், ரத்தச் சோகை, பல்வலி, வெண்குஷ்டம் எலும்பு தேய்மான நோய், மூக்கு மற்றும் தொண்டை வீக்கம், தொண்டைப்புண், வாய்ப்புண், ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ள மரம் இது.

மருத்துவப் பண்புகள்:

குடும்பக் கட்டுப்பாட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம் (ABORTIFACIENT)

வயிற்றுப் போக்கை சரி செய்யலாம் (ANTIDIARRHOEAL)

உடல் ஜுரத்தைக் குறைக்கலாம் (ANTIPYRITIC)

10.4. ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் தோலின் மீது வழியும் எண்ணெய்ப் பிசுபிசுப்பைப் நீக்கலாம் (HAEMAOSTATIC)

10.5. ரத்தத்தை உறைய வைப்பதன் மூலம் ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தலாம்  (ர்யநஅயழளவயவiஉ)

வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம் (ANTIHELMINTHIC)

உடல் வலியைக் கட்டுப்படுத்தலாம் (ANTIINFLAMATORY)

உடலில் தசைப் பிடிப்பை சரி செய்யலாம் (ANTIPASMODIC)

உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை நீக்கலாம். (DEOXICANT)

மரத்தில் இலை, பட்டை, வேர்  ஆகியவற்றை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தலாம்:

பல்லுயிர் ஓம்பும் பண்பு: மூனியா (SCALY BREASTED MUNIYA) என்னும் பறவை கூடுகட்ட விரும்பும். தேனீக்கள் விரும்பும் பூக்கள். தேன், மகரந்தம்  தரும்.

பரவி உள்ள இடங்கள் : தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கேரளாவில் இடுக்கி, பாலக்காடு, தக்காண பீடபூமி, இலங்கை,  மற்றும் பர்மா.

ஏற்புடைய சூழல் : வெப்பமண்டலப்  பகுதிகள். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர்  உயரமுள்ள பகுதிகள்.

நேரடியாக  விதைகளை விதைத்து கன்றுகளை உருவாக்கலாம். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...