Thursday, June 29, 2023

KASTHURIVELAN BASE FOR PERFUMES 163. வாசனைத் திரவியமாகும் கஸ்தூரி வேல மரம்

 

வாசனைத் திரவியமாகும் 
கஸ்தூரி வேலமரப் பூக்கள்

(KASTHURI VELA MARAM, IRON WOOD TREE, KESI, NEEDLE BUSH, MIMOSA BUSH, SWEET WATTLE, ACACIA FERNISIANA, MIMOSACEAE )

தாவரவியல் பெயர்  : அகேசியாஃபெர்னீசியானா (ACACIA FERNISIANA)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : கேசி. நீடில் புஷ், மைமோசா புஷ், சுவீட் வேட்டில்  (KESI, NEEDLE BUSH, MIMOSA BUSH, SWEET WATTLE)

தாவரக்குடும்பம் :  மைமோசாசி (MIMOSACEAE)

தாயகம்: மெக்சிகோ, மத்திய அமெரிக்கா.

பூக்கள் வாசனைத் தைலம் தரும். ‘கேசிஎன்னும் வாசனைத் தைலம் தயாரிக்கிறார்கள். ஐரோப்பாவின் வாசனைத் திரவிய தொழிலகங்களில் இது பிரபலம். இந்தியாவில் வாசனைக் களிம்புகள் தயார் செய்கிறார்கள். வாசனைத் திரவியங்கள் தயார் செய்ய ஆண்டு முழுவதும் பூக்கள் தருவதால் பரவலாக பயிர் செய்யும் மரம்.

கஸ்தூரி வேல மரத்தின் பலமொழி பெயர்கள்

தமிழ்: கடிவேல், கஸ்துர்ரிவேல், பீக்கருவேல் (KADIVEL,KASTHURI VEL, PEE KARUVEL)

தெலுங்கு: நகாத்தும்மா (NAGATHUMMA)

கன்னடா: கஸ்தூரிகிபாலி (KASTHURIKI PALI)

மலையாளம்: சிகாங் லீ (SIKONG LEE)

இந்தி: குஹ் பாபுல், குக்கிகார், கந்த்பாபுல் (KUH BABUL, KUKKIHAR, GANTH BABUL)

ஒரியா: கபூர் (KAPUR)

பெங்காலி: குயாபாபுலா (KUYA POPULA)

மராத்தி: குக்கிகார் (KUKKIKAR)

அசாமிஸ்: தருவா கடம் (THARUVA KADAM)

வகை :  குறு மரம்,  1 முதல் 1.5 மீட்டர் உயரம் புதராக வளரும். சாதகமான சூழலில் 8 மீட்டர் கூட வளரும்.

பரவி உள்ள பகுதிகள்: ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆசியர் ஆஸ்திரேலியாவில் பரவலாக மேய்ச்சல் நிங்களில் எல்லாம் இதனை களைய முடியாக் களையாகக் கருதுகிறார்கள்.

யு.எஸ.;, கியூபா, பியூஜி தீவு. பியூஜித் தீவிலும் இது தொல்லை தாங்க முடியலைடா சாமிஎன்று புலம்புகிறார்கள். எலிங்டன் சாபம்(ELINGTON CURSE)

பாரம்பரிய மருத்துவம்:

கம்போடியாவில் மலேரியாவை குணப்படுத்துகிறது. ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் தோல் சம்மந்தமான நோய்களையும் வயிற்றுப் போக்கையும் கட்டுப்படுத்த பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளை உடல் தோலின் மீது தடவினால் போதும். எப்பேர்பட்ட தோல் சம்மந்தமான பிரச்சினைகளும் சரி ஆகி விடுமாம்.

ஆயர்வேத மருத்துவம்

ஆயர்வேத மருத்துவம்: இலையை அரைத்து பற்று போட வலி நீக்கி, வீக்கத்தை குணமாக்கும்; இலகளில் டிக்காஷன் எடுத்து  வாய் கொப்பளித்தால் பல் ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் போக்கும் இருமலும் சரியாகும்.

வயிரப் பகுதி மரத்தை பொடியாக்கி  பூச உடல் வீக்கமும் வண்டுக் கடியும் சரியாகும்.  விதைகளைப் பொடித்து பசையாக்கி தடவுவதன் மூலம் பாலியல் தொடர்பான புண்களைக் கட்டுப்படுத்தும்; காயங்களின்  ரத்தக் கசிவை நிறுத்தும்பாக்டீரியல் நோய்களையும்  சுவாச மண்டல பிரச்சினைகளும் சரி செய்யும்.

பல்லுயிர் ஓம்பும் பண்பு:

தேனீக்களுக்கு, தேவையான மகரந்தத்தை வாரி வழங்குகிறது தரும் மரம். இதற்கு தேன் பந்து (HONEY BALL) என்ற பெயரும் உண்டு.

காற்றின் வேகத்தை தடுக்கும். தூசிகளை வடிகட்டி காற்றைத்  தூய்மைப்படுத்தும்.

தழை, 18 சதம் புரதம் உள்ள கால்நடைத் தீவனமாகும்.  

நெற்றுக்கள் இனிப்பு மற்றும் காரவகை உணவு தயாரிக்கிறார்கள்ஆடு  மாடுகளுக்கும் தீவனமாகிறது.  இதில் 23 சதம் வரை இருக்கும் டேனின் தோல் பதனிட உதவுகிறது.

இதன் பட்டை மற்றும் நெற்றுக்களில் கருப்பு நிற சாயம் தயாரிக்கிறார்கள்.

ஏற்ற மண் :   வறண்ட ஆற்றுப்படுகை மண்.

நடவுப் பொருள் : விதை /  நாற்று /  வேர்க்குச்சி

மரத்தின் உயரம் :  நான்கு  மீட்டர்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...