1916 ஆம் ஆண்டு வந்த கறிப்பலா சினிமா |
(KARIPPALA,
BREAD FRUIT, ARTOCARPUS COMMUNIS, MORACEAE)
தாவரவியல்
பெயர் :
ஆர்ட்டோகார்பஸ் கம்யூனிஸ்
(ARTOCARPUS COMMUNIS)
தாவரக்
குடும்பம் : பேபேஸியே (FABACEAE)
பொதுப்பெயர் : பிரட் ப்ரூட் ட்ரீ (BREAD FRUIT TREE)
கறிப்பலா
என்றால் அது ஒரு காய்கறி என்றுதான் தெரியும்.
பலருக்கு அதுகூடத் தெரியாது.
ஆனால் அதற்குப் பின்னால் ஒரு அற்புதமான
சரித்திரம் ஒன்று உள்ளது.
டைட்டானிக் என்ற படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டு தயாரிக்கப்பட்டது. படமும்
சக்கைபோடு போட்டது. அதே போல
கறிப்பலா கன்றுகளை, தாகித்தி
என்னும் தீவிலிருந்து கப்பலில் கொண்டுவந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கப்பல் பயணத்தில் நிகழ்ந்த வீர தீர சாகசங்களை முன்னிருத்தி ஐந்து
ஆங்கிலப் படங்கள் வெளி வந்தன. அதில் ஒன்று மவுனப்படம். கடைசியாக வந்தது 'தி பவுண்டி" 1984 ன்
வெளியீடு.
‘ஹிஸ் மெஜஸ்டிஸ் ஆர்ம்டு பவுண்டீ" என்ற கப்பலின் லெப்டினன்ட், 33 வயது வில்லியம் பிளை (WILLIAM BLYY) என்பவர். அவர் 1787 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து, 'தாகித்தி" தீவிற்கு புறப்பட்டுச் சென்றார். கப்பல் 1788 ம் ஆண்டு அக்டோபரில், தாகித்தியை சென்றடைந்தது.
அங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு கறிப்பலா
கன்றுகளைக் கொண்டுவர வேண்டும். கன்றுகளை
வாங்கினார்கள். திரும்பும் போது பாதிக்கு மேற்பட்ட கப்பல் மாலுமிகள், 'நாங்க
வரல்ல" என்று சொல்லி அங்கேயே
தங்கிவிட்டார்கள்.
மீதிப்
பேரோடு கப்பல் திரும்பியது. நடுக்கடலில்
பயணம் செய்யும்போது, சில மாலுமிகள் கப்பலை, கைப்பற்றிக் கொண்டு வில்லியம் பிளை மற்றும் 18
மாலுமிகளை ஒரு படகில், நடுக்கடலில்
இறக்கி விட்டனர்.
அந்த
ஒற்றைப்படகில், 3,618. மைல் பயணம் செய்து ஊர் திரும்பினார்கள் அந்தப் பயணத்தின்போது அவர்கள்
பட்ட துன்பங்கள், துயரங்கள், இடர்ப்பாடுகள், இறுக்கங்கள், எல்லாம்தான் இந்த ஐந்து படங்களுக்கும் தீனி.
மனம் தளராத விக்கிரமன் மீண்டும் வேதாளத்தை வெட்டி வீழ்த்தி அதை சுமந்து
வருவதைப்போல, வில்லியம் 1792 ல் மீண்டும் புறப்பட்டுப் போய் 1200
கறிப்பலா கன்றுகளை, தாகித்தி தீவிலிருந்து கொண்டு
வந்து தன் தாகத்தைத் தணித்துக் கொண்டார்.
இந்த கதை
முதன்முதலாக, 1916 ஆம் ஆண்டு 'தி மியூட்டினி ஆப் தி பவுண்டி" என்ற பெயரில் ஒரு ஆஸ்திரேலிய மவுனப்படமாக வெளி வந்தது. இன் தி வேக் ஆப் பவுண்டி ( IN
THE WAKE OF BOUNTY) என்ற பெயரில் 1933ல் இரண்டாவது ஆஸ்திரேலியப் படமாக
வெளிவந்தது.
மூன்றாவதாக
வந்த பிரபலமான படம் ' மியூட்டினி ஆன் தி பவுண்டி "; நான்காவதாக வந்தது மூன்றாவதாக
வந்த படத்தின் ரீமேக் ; ' மார்லன்
பிராண்டோ " நடித்து 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது.
ஐந்தாவது
வந்த படம்தான் ' தி பவுண்டி " (
THE BOUNTY); மெல் கிப்சன் நடித்து 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது; கடைசியாக வந்த படம் இது. சினிமா
மூலமாக, உலகம்
முழுவதும் பிரபலமான ஒரே காய்கறி மரம் கறிப்பலா மட்டுமாகத்தான் இருக்கும்.
கறிப்பலாவின் பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
கறிப்பலா, ஈரப்பலா (KARIPPALA, EERAPPALA)
இந்தி:
பக்ரி சஜார் (BAKRI SAJAR)
கொங்கணி:
ஜீவி கட்கி (JEEVI KATKI)
கன்னடம்:
குஜ்ஜிகாய் (KUJJIKAI)
சமஸ்கிருதம்:
நாகதமனி (NAGATHAMANI)
மரவகை: இது ஒரு காய்கறி மரம். இதனை காய்கறி தர, அழகூட்ட, நிழல்தர, வாயு மண்டலத்தின் தூசியை வடிகட்ட, ஓங்கி வீசும்
காற்றைத் தடுக்க, இறைச்சலைக்
குறைக்க, மற்றும் தோட்டங்களில்
கிராமங்களில் மற்றும் நகரங்களில் அழகு மரமாகவும் வளர்க்கலாம்.
தழை:
தழைகளை ஆடுமாடுகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்.
மரம்:
உத்திரம், தூண்கள் செய்யலாம்;
பட்டை,
பிசின் ஆகியவற்றில் மருந்துகள் செய்யலாம்.
காய்கள்: காயில் ஏகப்பட்ட வைட்டமின்களும், தாது
உப்புக்களும், அடங்கி உள்ளன.
வைட்டமின்
' ஏ " சி " தையமின், ரிபோபிளவின், நயாசின் உள்ளன.
கால்சியம்,
பாஸ்பரஸ்;, இரும்பு குளோரைடு, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது
உப்புக்களும், 4.2 % மாவுச்சத்தும், 1.7 % புரதமும், 0.3 % கொழுப்பு சத்தும்
அடங்கியுள்ளன.
ஏற்ற மண்;
வடிகால் வசதியுடைய மண்கண்டம், ஆழமான கொஞ்சம் அதிகமான ஈரப்பதம், செம்புறை
மண், கரிசல் மண், மற்றும் கடலோரப் பகுதி மண், 6.1 முதல் 7.4 வரை
உள்ள கார அமில நிலை ஏற்றது.
எங்கு
நடலாம் ?: இதன்
வேர்ப் பிரதேசத்தில், தொடர்ச்சியாக ஈரம் இருக்க வேண்டும்.
நட்ட 5 - 6 ஆண்டுகளில் கறிப்பலா காய்க்கத் தொடங்கும்.
தாயகம்:
தெற்கு பசிபிக்
ரகங்கள்:
நூற்றுக் கணக்கான ரகங்கள் உள்ளன. சுமார் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் இதனை பயிர் செய்கிறார்கள்.
ஏற்ற
மண்: மணல், இருமண்பாடு, களி மணல், சுண்ணப்பாறை மணல் இது அமிலத் தன்மை மற்றும் கரையக் கூடியதாக
இருக்கும்.
200 முதல் 250 செ.மீ.
மழை உள்ள பகுதிகளில்
நன்கு வளரும்.
பூக்கள்: ஆண் பூக்கள் முதலில் பூக்க பெண் பூக்கள் சற்றுத் தாமதமாகப்
பூக்கும். மூன்று நாட்கள் கழித்து மகரந்த சேர்க்கைத் தொடங்கும்.
பெரும்பாலும்
வவ்வால்கள்தான் இதனைச் செய்யும். ஆனால் வவ்வால்கள் இல்லாமலே கூட இது நடக்கும்.
ஒரு பழம்;
உருவாக கிட்டத்தட்ட 1500 முதல் 2000 பூக்கள்
தேவைப்படும். ஒரு காய் 0.25 கிலோ முதல் 6 கிலோ வரை இருக்கும். ஒரு மரத்தில் சராசரியாக 50 முதல் 150 காய்கள்
காய்க்கும்.
பயிர்ப்
பரவல்: வேர்த்துண்டுகள்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment