Tuesday, June 20, 2023

KANNIRMARAM SNAKE BITE SAVING TREE 56. பாம்புக்கடியிலிருந்து பாதுகாக்கும் கண்ணீர்மரம்

பாம்புக்கடிச்சா பாதுகாக்கும்
கண்ணீர்மரம்

 

கண்ணீர்மரம், பசுமை மாறாத பெரிய மரம், ஆண்டு முழுவதும் பூக்கும், காய்க்கும், பாம்புகடி வித்தைக்கூட முறிக்கக்கூடிய மூலிகை மரம், இதன் மரக்கட்டைகள் ஒரளவு நீடித்து உழைக்கக் கூடியது, கிழக்கு ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா,  நேப்பாளம்,  பூட்டான்,  கம்போடியா,  இந்தோனேசியா,  ஆகிய இடங்களில் பரவியுள்ளது. மன நோயினை குணப்படுத்தும். தேனீக்கள் கூடுகட்டும் மரம். பிராணிகள் மற்றும் பறவைகள் இதன் பழங்களை விரும்பி சாப்பிடும்.

தமிழ்: கண்ணீர் மரம், கருவாலி (KANNIR MARAM, KARUVALI)

தாவரவியல் பெயர்: கேசினி கிளாகா (CASSINE GLAUCA)

தாவரக் குடும்பம் பெயர்: செலஸ்ட்ரேசியே (CELASTRACEAE)

பொதுப் பெயர்: சிலோன் டீ மரம் (CEYLON TEA TREE)

தாயகம்: இந்தியா

பிற மொழிப் பெயர்கள்:

இந்தி: ம்ராசி, மல்காக்னி, கொண்டாகைட், டெப்ரி (JAMRASI, MALKAKNI, KONDAGAIDH, DHEBRI)

மராத்தி: மோத்தா புத்யா, புத்கஸ் (MOTHYA BHUTYA, BUTKUS)

தெலுங்கு: நீரிஜா, நூரிஜிpயா, பூட்டான் – குசுமா (NEERIJA, NOORIJIA, BHUTAN-KUSUMA)

கன்னடா: கண்ணீரி, முக்காரிவி, ஹக்கேரலு, மூக்கார்த்தி (KANNIRE, MUKKARIVE, MUKKARIKE, HAKKERALU, MOOKARTI)

மேற்குத் தொடர்ச்சி மலை மரம்   

பசுமை மாறாத பெரிய மரம். அதிகபட்சம் ஐந்து மீட்டர் உயரம் வளரும்.  பழங்கள் முட்டை வடிவில் இருக்கும். பூக்கள் வெள்ளை அல்லது மஞ்சள் கலந்த பசுமையாக இருக்கும்.  பழங்கள் பசுமையாக இருக்கும். பிப்ரவரி மார்ச் மாதங்களில் பூக்கும். மரங்களை மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளில் அதிகம் பார்க்கலாம்.

இந்த கண்ணீர்மரம், கிழக்கு ஆசியாவில், இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, நேப்பாளம், பூட்டான், கம்போடியா,  இந்தோனேசியா,  ஆகிய இடங்களில் பரவியுள்ளது.       

ஆண்டு முழுவதும் பூக்கும்    

ஆண்டு முழுவதும் பூக்கும், காய்க்கும், மரங்களின் இலைகளும், அடர்த்தியான பச்சை நிறத்தில் ஆண்டு முழுவதும் இருக்கும்: இந்த இரண்டு காரணங்களுக்காக, இந்த மரத்தை அழகு மரமாகவும் நட்டு வளர்க்கிறார்கள்.

கண்ணீர் மரத்தின் இலை மற்றும் வேர்கள் மருந்தாகப் பயன்படுகிறது: மரக்கட்டைகளில் கடைசல் செய்து, பாத்திரங்கள் மற்றும் வண்டிகளுக்கான அச்சுக்கள் மற்றும் இதர மரச் சாமான்கள் செய்யலாம். ஆனாலும் கூடுதலாக மருத்துவ மரம் அல்லது மூலிகை மரம் என்று சொல்லலாம்.

பாம்புகடி வித்தை முறிக்கும்    

இதன் இலைகள், பட்டைகள், மற்றும் விதைகள் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.    

பாம்புகடி வித்தை முறிக்க இதன் பட்டைச் சாந்தினை உள்ளுக்குக் கொடுக்கிறார்கள்.  கடிவாயிலும் இந்தச் சாந்தினைப் பூசி விடுகிறார்கள்.  துவர்ப்பு சுவை உள்ள வேர்ச்சாற்றினை, சீதபேதிக்கு மருந்தாகவும், விஷக்கடிகளுக்கு விஷமுறிப்பு மருந்தாகவும் பயன்படுத்துகிறர்கள்.

இலைகள் மற்றும் பட்டைகளிலிருந்து எடுக்கும் சாற்றினைத் தடவுவதன் மூலம் வெட்டுக் காயங்களையும் புண்களையும் குணப்படுத்துகிறார்கள். 

இதன் இலைகளை கீரையைப்போல சமைத்து சாப்பிடுவதன் மூலம்  வாயுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.  உலர்ந்த இலைகளின் தூளினை மூக்குப் பொடி போல பயன்படுத்துவதன் மூலம் எப்படிப்பட்ட டுமையான தலைவலியையும் குணப்படுத்தலாம்.  இதன் இலைகள் மற்றும் மரத்தின் சாற்றினை ஒரிரு துளிகள் நாசித் துவாரத்தில் விட தலைவலி குணமாகும்.

இதன் இலைகளை எரித்து புகை உண்டாக்கி அதனை சுவாகிக்க வைப்பதன் மூலம் ஹிஸ்டீரியா என்று சொல்லக் கூடிய மனநோயை குணப்படுத்தலாம். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இவ்வித மனநோயை சிறப்பாகக் குணப்படுத்தும் என்று சொல்லுகிறார்கள்.

பட்டைகளில் நச்சுத்தன்மை    

துவர்ப்பு சுவை உள்ள இதன் பட்டைகள் நச்சுத்தன்மை உடையவை. இதன் வேர்ப்பட்டைகளை அரைத்துக் கூழாக்கி அதனை வீக்கங்களின் மீது தடவ அவை விரைவாக குணமாகும்.  இதனுடைய வேரினை முக்கியமாக பாம்புகடிக்கு சிகிச்சையாகப் பயன்படுத்துகிறார்கள்.

அது மட்டுமல்ல, குளிர்ந்த நீரில் வேர்ச்சாந்து கலந்து வடிகட்டிய பின் அதனை குடிக்கத் தருவதன் மூலம் வாந்தி எடுக்க குமட்டும் உணர்வினைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரளவு நீடித்து உழைக்கும் மரம்

மரத்தின் வயிரப்பகுதி அழுக்கு செங்கல் நிறத்தில் இருக்கும். மரம் ஒரளவு நீடித்து உழைக்கக் கூடியது: ஆனால் மரத்தில் சுலபமாக வேலை செய்யலாம்: ஆனால் சிறிய அளவு கட்டைகள்தான் கிடைக்கும். ஆனால் இதில் பெட்டிகள்> மற்றும் போட்டோ பிரேம்கள் செய்யப் பயன்படும்.    

இதன் மரத்திலிருந்து மிகவும் தரமான பிசின் கிடைக்கும். ஆனால் போதுமான அளவு கிடைக்காது.         

பிஸ் செரானா தேனீக்கள்     

பிப்ரவரி முதல் ஜூPன் வரையான 5 மாதங்களில் பூக்கும்.  மே முதல் நவம்பர் வரை இதன் பழங்கள் கனித்து விதைகள் சேகரிப்புக்கு தயார் ஆகும்.   

மருந்துகள் தயாரிப்பு காற்றுத் தடுப்பு மரச்சாமான்கள் செய்ய வேளாண் கருவிகள் மற்றும் எரிபொருளாக இந்த மரங்களைப் பயன்படுத்தலாம்.    

இதன் மரப்பொந்துகளில் எபிஸ் செரானா (APHIS CERANA) என்னும் ஒருவகை தேனீக்கள் கூடு கட்டுகின்றன.  வழக்கமான தேன் கூடுதளைவிட அதிக தேனை சேமிக்கின்றன.  இதற்குக் காரணம் இதன் பூக்களில் இருக்கும் கூடுதலான தேன்தான்.  கிளிகள், குயில்கள், இதன் பழங்களை விரும்பிச் சாப்பிடுகின்றன.  இவை தவி ஆடு மாடுகள், மான்கள், மயில்கள் ஆகியவை இதன் பழங்களை சாப்பிடுகின்றன.    

இந்தியாவில், ம்மு காஷ்மீர், ஹிமாச்சல்ப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஆகியவை தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பரவலாக இந்த மரங்களைப் பார்க்கலாம்.   

ஆயுர்வேதம், சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதனை பயன்படுத்துகிறார்கள்.         

கண்ணீர் மரங்கள் கடலோரச் சூழலுக்கு ஏற்ற மரம். ஈரச் செழிப்பான மழைக்காடுகளிலும்  நன்கு வளரும்.  வயல்களில் வரப்புகளில் நடலாம்.  சாலை ஒரங்களில் நிழல் மரமாக நடலாம்.    

விதைகளை நேரடியாக விதைத்து கன்றுகளை உருவாக்கலாம்.  மெதுவாக வளரும்: சுமாரான வறட்சியைத் தாங்கும்: சுமாரான வடிகால் வசதி வேண்டும்.   

களிமண் நிலங்கள் ஏற்றது: விதைகளை விதைப்பதன் மூலம் புதிய கன்றுகளை உருவாக்கலாம்.  இந்தோனேசியாவின் தேக்குக் காடுகளில்> 300 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் இந்த மரங்கள் நன்றாக வளரும்.

FOR FURTHER READING

WWW.FLOWERSOFINDIA.NET-“CEYLON TEA- CASSINE GLAUCA

WWW.EFLORAS.ORG. -CASSINE GLAUCA IN FLORA OF PAKISTAN

WWW.PENINSULA-INDIA- CASSINE GLAUCA KUNTZ HERBARIUM

WWW.GBIF.ORG - CASSINE GLAUCA

WWW.ENVIS.FRLHT.ORG-“CASSINE GLAUCA”

WWW.PICHANDIKULAM-HERBARIUM.ORG/ CASSINE GLAUCA

WWW.TROPICAL.THEFERNS.INFO / ELAEODENDRON GLALICUM

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

          

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...