Friday, June 30, 2023

KANNIKKUNTHAL ZURASSIC PERIOD HERB 181. ஜுராசிக்காலத்து மூலிகை கன்னிக் கூந்தல்

ஜுராசிக்காலத்து  மூலிகை 
கன்னிக் கூந்தல்


(KANNI KOONTHAL MARAM, MAIDEN HAIR TREE, GINKO BILOBA, GINKGOACEAE)

தாவரவியல் பெயர் :    ஜிங்கோ பிலோபா (GINKO BILOBA)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :  (MAIDEN HAIR TREE)

தாவரக்குடும்பம்  :  ஜின்கோயேசி (GINKGOACEAE)

தாயகம்: சீனா

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தழிழ்க்குடி. மூத்த மரக்குடி இந்த ஜிங்கோ பிளாபா மரம். இது ஆங்கிலத்தில் மேய்டன் ஹேர் மரம் (MAIDEN HAIR TREE) கன்னிக் கூந்தல் மரம் என்று தமிழ் மாற்றம் செய்துள்ளார்கள்.

பழமையான மருத்துவ மரம்

சுமார் இருநுறு மில்லியன் ஆண்டுகளாக இந்த மரம் இந்த உலகில் புழக்கத்தில் இருக்கிறது. இதன் வயது 1000 ஆண்டுகள் என்கிறார்கள். ஆனால் சீனாவில் ஷண்டாங்என்னும் மாநிலத்தில் 3500 ஆண்டுகள் வயதுடைய மரம் இன்னும் உயிருடன் இருக்கிறதாம்.

மிகப் பழமையான மரம் என்பதால் இதனை; ஆங்கிலத்தில் பாசில் மரம் (FOSSIL TREE) என்கிறார்கள். புத்த மதக் கோவில்களில் புனிதமான மரமாக வளர்க்கப்படுகிறதுபல நூறு ஆண்டுகளாக சீனர்கள் மூலிகையாகவும்  பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இது ஒரு முக்கியமான மூலிகை மரம்.

இந்த மரத்தில் ஆண்பெண் பூக்கள் தனித்தனியானவை. இதன் பழங்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். பழங்கள் பழுத்தால் அந்த பக்கம் தலைவைத்துப் படுக்க முடியாது. அப்படி ஒரு துர் நாற்றம்.

சமையலுக்கு பயன்படும் எண்ணெய்

இதன் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தலாம். வேர் கடலையைப்போல இதன் விதைகளை உப்பிட்டு வறுத்தும் சாப்பிடலாம். சூப்பு வைத்தம் குடிக்கலாம்.

ஓவ்வாமை, ஆஸ்துமா, நினைவாற்றலை சரிசெய்யும்

குறிப்பாக மரத்தின் இலைகள் மற்றும் விதைகளில் பலவிதமான நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

ஓவ்வாமை, ஆஸ்துமா, நினைவாற்றலை மேம்படுத்துதல், ரத்த ஓட்டத்தை சீராக்குதல், வேரிகோஸ் வெயின் பிரச்சினை, ஆண் பெண்களின் பாலியல் ரீதியான பிரச்சினைகள், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகள்.

ஆல்சீமர் மற்றும் டிமென்ஷியா நோய்கள்

ஆல்சீமர் மற்றும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட (ALZHEMER DISEASE & DIMENTIA) மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களை சீராக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். நரம்புத் திசுக்களை சீராக்கும். ஜிங்கோவை மருந்தாக எடுத்துக் கொள்ளுவோர் அதிக தூரம் நடப்பார்கள்.

அலசீமியர் நோய் என்றால் என்ன ?

சிலர் எதையும் கற்றுக் கொள்ள கஷ்டப்படுவார்கள். சிலர் எதையும்; சிந்திப்பதில் சிரமப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி மறதி ஏற்படும். சிலர் தினசரி செய்த வேலைகளைச் செய்யவே தடுமாறுவார்கள். சிலருக்கு அடிக்கடி மன அழுத்தம் ஏற்படும். சிலருக்கு எதையும் தெளிவாகப் பார்க்க முடியாது. தெரிந்த இடங்களையே மறந்து போவார்கள். கோர்வையாக எழுத அல்லது பேசத் தடுமாறுவார்கள். தானே வைத்த பொருளை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தடுமாறுவார்கள். ஏப்போதாவது தனக்கே பிடிக்காத மாதிரி முடிவுகளை எடுப்பார்கள்.

செய்துகொண்டிருக்கும் சில நல்ல காரியங்களை திடீரென வேண்டாம் என முடிவெடுப்பார்கள். தேவையில்லாமல் அடிக்கடி குழம்பி அடுத்தவர்களையும் குழப்பி விடுவார்கள், அடிக்கடி சந்தேகப்படுவார்கள். அடிக்கடி மன இறுக்கத்தால் பாதிக்கப்படுவார்கள், தேவையில்லாமல் பயப்படுவார்கள். இவை எல்லாமே அல்சீமியர்களின் அறிகுறிகள்தான்.

ஆனால் இதை எழுதும்போது எனக்கு என்னுடைய புரொபைல் எழுதுவது மாதிரி ஞாபகத்தில் வந்தது. எங்களைப்போல அல்சீமியர்களுக்கென ஒரு சங்கம் கூட சிகாகோவில் உள்ளது. இந்த அட்ரஸ் தேவைப்பட்டால் எனக்கு போன் பண்ணுங்கள்.

ஆல்சீமியர்  நோய்க்கு ஒன்றுவிட்ட பங்காளி

டீமென்ஷியாநோய்பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். டீமென்ஷியா நோய், ஆல்சீமியர்  நோய்க்கு ஒன்றுவிட்ட பங்காளி மாதிரி;. இதிலும் ஞாபக மறதி ஏறபடும். கணவனே மனைவியைப் பார்த்து நீங்க யார் என்று கேட்கலாம். அடிக்கடி மாறுபட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாகலாம். விக்ரம் மாதிரி. அது என்ன சினிமா ?

இந்த இரண்டு நோய்களை தெளிவாகப் படித்தால் இரண்டு மூன்று சினிமாவுக்கான நல்ல கதைகளை கஷ்டப்படாமல் எழுதலாம்.    

மனதை ஒருமுகப்படுத்துவதையும் நினைவாற்றலையும் மேம்படுத்துவதால்; ஜி.பி.யின் பெயர் பிரெய்ன் ஹெர்ப்;.

சீனாவுக்கு சொந்தமான இந்த மரம் இந்தியாவில் பல இடங்களில் இருக்கக் கூடும்.

சைபீரியன் ஜின்செங் மற்றும் ஜிங்க்கோ பிலோபா கேப்சூல் (SIBERIAN GINZENG & GINKO BLOBA CAPSULES) என்ற வியாபாரப் பெயர்களில் ஜிங்க்கோ நம்மை வந்தடைகிறது. அமேசான் (அ) அலிபாபாவில் தட்டிவிட்டால் ஒரே வாரத்;தில் ஜிங்க்கோ உங்கள் வீடு தேடி வந்துவிடும். ஆனால் ஒரு தகுதியான மருத்துவரின் சிபாரிசுடன் ஜி.பி.யை எடுத்துக் கொள்ளுங்கள்.

காதுகளின் உள்ளே விதவிதமான சப்தங்கள் கேட்கிறதா ?

டீனிட்டஸ் (TINNITUS) என்ற நோயைக் கேள்விப்பட்டிருக்கிறீhகளா ? சிலருக்கு காதுகளின் உள்ளே விதவிதமான் சப்தங்கள் கேட்டபடி இருக்கும். அதற்கு காரணம் என்ன என்று தெரியாது. சில சமயம் காதுக்குள் சிறு பூச்சிகள் உள்ளே போய் ஆராய்ச்சி செய்யும். அது இல்லை இது. பூச்சிகள் போகாமலே இது நடக்கும். அதுதான் இந்த டின்னிட்டஸ். இதற்குக் காரணம் ரத்தக் குழாய்கள் மற்றும் நரம்பு மண்டலங்களில் ஏற்படும் கோளாறுகள். ரத்த ஓட்டத்தை சரி செய்தால இது சரியாகிவிடுமாம். இதைக் கூட நம் ஜி.பி. சரி செய்துவிடுமாம்.

டேப்லட், கேப்சூல்ஸ், சிரப், களிம்பு, பவுடர் எந்த வடிவில் வேண்டும் ? எல்லாம் கிடைக்கிறதாம். ஆனால் நல்ல டாகடரிடம் கேட்டு சாப்பிடுங்கள். சில இடங்களில் கம்பவுண்டராக இருந்தே புரமோஷன் ஆகிவிடுகிறார்கள். பார்த்து கேட்டு விசாரித்து சாப்பிடுங்கள்.

ங்கள் பகுதியில் ஒரு டாக்டருக்கு ரோரிங் பிராக்டிஸ். ன்ன படித்தார் ? எங்கே படித்தார் ? என்று கேட்டேன். ஒரு 5 வருடம் கால்னடை மருத்துவர் ஒருவரிடம்உதவியாளராக இருந்தாராம்.

எனக்குக் கவலையாக இருந்தது. சின்ன வயசில் இதெல்லாம் தெரியாமல் போய்விட்டதே என்று. இதெற்கெல்லாம் ஒரு மச்சம்  வேண்டும்.

கன்னிக்கூந்தல் மரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: கன்னிக்கூந்தல் மரம் (KANNI KOONTHAL MARAM)

நேப்பாளி: பால் குமாரி (BAL KUMARI)

சைனா: யின் சிங் (YIN ZING)

நடிகையின் கைவிசிறி  

இதன் இலைகள் வித்தியாசமான வடிவத்தில் இருக்கும். அதனைக் கொண்டு இந்த மரத்தைக் கண்டுபிடித்துவிடலாம். அந்தகாலத்து நடிகைகள் எப்போதும் கையில் வைத்துக் கொண்டு விசிறிக் கொண்டிருப்பர்களே ! கைவிசிறி ! அதைப்போல, ஆனால் அளவில் சிறுசாய் இருக்கும்.

கனிகள் மஞ்சள் நிறமாக இருக்கும்.  கனிந்த  பழங்கள் அருவறுப்பான வாடை வீசும்; விதைகள் சமையலுக்கு எண்ணெய் தரும்; வறுத்த விதைப் பருப்பை வேர்கடலை போல சாப்பிடலாம். அதில் எந்த வீச்சமும் இருக்காது. 

செக்ஸ் விவகாரங்களுக்கு சஞ்சீவி மூலிகை

ஆழமான ஈரப்பசை உள்ள, மணற்பாங்கான மண் ஏற்றது. பரவலான கார அமிலநிலை உள்ள மண்ணிலும் நன்கு வளரும். ஆண் பெண் மரங்கள் தனித்தனியாக உள்ளன. கிளைகளை வெட்டி நட்டால் வளரும். ஆனால் ஆண் மரங்களில் வெட்டி நடச் சொல்லுகிறார்கள்.

காதைக் காட்டுங்கள் ! ரகஸ்யமான விஷயம் ! சீனாவில் ஆண் பெண் இரு பாலருக்கும் செக்ஸ் சம்மந்தமான விவகாரங்களுக்கு சஞ்சீவி மூலிகை இதுதானாம். சீன வீடுகளில் உப்பு, புளி, மிளகாய் இல்லை என்றாலும் கண்டிப்பாய் ஜிங்க்கோடப்பா இருக்குமாம்.

கவலைப்படாதீர்கள் ! இந்த மரங்கள் இந்தியாவில் கூட இருப்பதாகத் தெரிகிறது. இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த மரங்கள் பரவி உள்ளன.

காஷ்மீரில் இதுபோன்ற மூலிகைச் செடிகளை அறிமுகப்படுத்தி கொஞ்சம் காசு பார்க்கிறார்கள். ஒரு செடி 250 ரூபாய். ஆனால் ஒரே சமயத்தில் நீங்கள் 500 செடிகளை வாங்க வேண்டுமாம். முகவரியைக் குறித்துக் கொள்ளுங்கள். வாங்கினால் மறக்காமல் எனக்கு ஒரு செடி ! காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறேன்.

ஜம்மு காஷ்மீர் மெடிசினல் பிளாண்டஸ் இன்டரடக்க்ஷன் சென்டர்(KANNI KOONTHAL MARAM) தொலைபேசி எண்: 09858986794.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...