Tuesday, June 20, 2023

KANAIPIRANDAI TREE CURES CATTLE DISEASES 52. கணைப்பிரண்டை மரம் கால்நடை நோய்களை குணப்படுத்தும்

 

கால்நடைகளை காக்கும்
கணைப்பிரண்டை மரம்

கணைப்பிரண்டை, கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு சொந்தமான  மரம், இலை உதிரும் காடுகளில் இருக்கும் மரங்கள், இந்த மரங்களின் இலைகள், மற்றும் பட்டைகள் பரம்பரியமாக ஆடுமாடுகளுக்கு நோய்களை குணப்படுத்த உதவும்.

கரிஞ்சிக்கடா, மஞ்சாயா, முணமரம், தும்பாரா என்பவை கணைப்பிரண்டயின் பழந்தமிழ்ப்பெயர்கள். இதில் இருக்கும்,  ஆல்கலாய்ட்ஸ்,  பினால்கள் ஆகிய தாவர ரசாயனங்கள் மருந்துகள் செய்யப் பயன்படும்.

அனைத்து விதமான மரச்சாமான்களும் செய்வதற்கு ஏற்ற உயர்தரமான மரக்கட்டைகள் தரும். இதன் இலைகள்,  மற்றும் பட்டைகள் பரம்பரியமாக ஆடுமாடுகளுக்கு வரும் நோய்களை கட்டுப்படுத்தும் மருந்தாகப் பயன்படும்.

ன்னும் இந்த மரம் குறித்த  கூடுதலான ஆராய்ச்சிகள் தேவை.  

சில முக்கிய விவரங்கள்

தமிழ்: கணைப் பிரண்டை, கரிஞ்சிக்கடா, மஞ்சாயா, முணமரம் (KANAIPIRANDAI, KARINJIKADA, MANJAYA, MUNAMARAM)

பொதுப் பெயர்: கணைப்பிரண்டை(KANAIPPIRANDAI)

தாவரவியல் பெயர்: அல்சியோடேப்னி செமிகார்ப்போலியா (ALSEODAPHNE  SEMICORPIFOLIA)

தாவரக் குடும்பம் பெயர்: லாரேசி (LAURACEAE)

தாயகம்: வெஸ்டன் காட்ஸ், ஸ்ரீலங்கா

பிற மொழிப் பெயர்கள்:

மலையாளம்: மூலக் நாரி (MULAK NARI)

தெலுங்கு: நாராமாமிடி (NARAMAMIDI)

கன்னடா: தெல்தேறி (NELTHARE)

சிங்களம்: லேவராணி (LEVARANIL)

மராத்தி: புட்குஸ் (PHUDGUS)

கொங்கணி: ராணி (RANI)

கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மரம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் ஸ்ரீலங்காவில் மறைந்து வருகின்ற மரம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு சொந்தமான  மரமும் கூட.   

பசுமை மாறாத பெரிய மரம்: 18 மீட்டர் அல்லது 50 முதல் 60 அடி உயரம் வளரும்.    

இலை உதிரும் காடுகளில் இந்த மரங்கள் இருக்கின்றன.  இந்த காடுகள்> கடல் மட்டத்திற்கு மேல் 800 மீட்டர் உயரம் வரை வளரும்.  

தமிழில் கணைப்பிரண்டை என்கிறார்கள்.  எதனால் இந்த மரத்திற்கு இந்தப் பெயர்கள் வைத்தார்கள் என்று ன்னமும் துழாவிக் கொண்டிருக்கிறேன்.  எதுவும் சிக்கவில்லை. 

கேரளாவில் பரவியிருக்கும் இடங்கள்     

இந்த மரங்கள் கேரளா மாநிலத்தில் அதிகம் உள்ளன.  காசர்கோடு, பத்தனம்திசா, கோழிக்கோடு, மலப்புறம், விநாடு, இடுக்கி, ஆகிய மாவட்டங்களில் இந்த மரங்கள் பரவியுள்ளன. 

அது மட்டுமில்லாமல் பனம்புழா, மஞ்சேரி, சொக்கம்பட்டி, மலைப்பகுதிகள், எழிமலா, தாளிப்பரம்பா, முள்ளேரியா ஆகிய இடங்களிலும் இந்த மரங்கள் காணப்படுகின்றன.

கர்நாடகாவில் பரவியிருக்கும் இடங்கள்

ஹாசன், உடுப்பி, உத்தர கன்னடா மற்றும் தட்சிண கன்னடாவில் இந்த மரங்களை பார்க்க முடியும்.      

தாவர ரசாயனங்கள்

இதன் இலைகளில், உள்ள தாவர சாயங்கள் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டன.  இதில் இருக்கும், ஆல்கலாய்ட்ஸ், பினால்கள் மருந்துகள் செய்யப் பயன்படும் எனவும் தெரிகிறது. ஆனால் இது குறித்த இன்னும் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பழங்குடிகள் பலகாலமாக பலவிதமான நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி வந்துள்ளார்கள். சமீப காலமாக புற்று   நோயைக் குணப்படுத்த உபயோகப்படுத்தி வருகிறார்கள்.

உயர்தரமான மரம்

இந்த மரத்தின் தண்டுப்பகுதி, இலைகள் மற்றும் பட்டை ஆகியவை அனைத்தும் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

மரத்தின் வயிரப்பகுதி மஞ்சள் கலந்த காவி நிறமாக இருக்கும், அதிக எடையுள்ள, கடினமான  நடுத்தரமான உறுதியான மரம், அனைத்து விதமான மரச்சாமான்களும் செய்வதற்கு ஏற்ற உயர்தரமான மரம்.

மரங்களில் ஒட்டுப்பலகைகள் செய்யலாம்      

இந்த மரத்தை எப்படி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என்ற தகவல்கள் அதிகம் இல்லை.  ஆனால் இதில் ஒட்டுப்பகைகள், தேயிலைத்தூள் பேக் செய்யும் பெட்டிகள் போன்றவற்றைச் செய்யலாம்.

கட்டைகள் பட்டைகள் இலைகள்

இந்த மரங்களின் இலைகள், மற்றும் பட்டைகள் பரம்பரியமாக ஆடுமாடுகளுக்கு வரும் நோய்களை கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். 

இதிலிருந்து முக்கிய எண்ணெய் (ESSENTIAL OIL) எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது என கண்டுள்ளார்கள்.  அதற்கும் இன்னும் கூடுதலான ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் தேவை என்கிறார்கள் வனத்துறை நிபுணர்கள்.

FOR FURTHER READING

WWW.BOOKS.GOOGLE.COM/FLORISTIC PLANTS OF THE WORLD

WWW.WIKIWAND.COM/ALSEODAPHNE SEMECARPIFOLIA

WWW.SEMANTIC SCHOLAR.ORG/ESSENTIAL OIL CONSTITUENTS OF ALSEODAPHNE  SEMECARPIFOLIA

WWW.FLOWERS OF INDIA.NET / ALSEODAPHNE SEMECARPIFOLIA.

WWW.INDIA BIODIVERSITY.ORG/ALSEODAPHNE SEMECARPIFOLIA. 

A REQUEST 

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...