Monday, June 5, 2023

KALLARU A PERAMBALUR RIVER கல்லாறு பெரம்பலூர் மாவட்ட ஆறு


கல்லாறு, பெரம்பலூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையின் (EASTERN GHATS) ஒரு பகுதியான, பச்சைமலையில் உற்பத்தியாகி கொல்லி மலையில்  பிறக்கும் சுவேதா ஆற்றுடன் சங்கமம் ஆகும் ஒரு சிறிய ஆறு. 

ஆறு மாதம் ஓடும் மறு (SEASONAL RIVER)

ஒரு ஆண்டில் ஆறு மாதமே டும் கல்லாறு ஆற்றின் மூலமாக 10000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன இது மட்டுமல்ல 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதியும் அளிக்கிறது கல்லாறு. 

பச்சை மலையில் (ORIGIN PACHAMALAI)

அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ளது பச்சை மலைத்தொடர்.  இந்த மலைத்தொடரின் அடர்ந்த சரிவுகளில், பல சிற்றோடைகளை இணைத்தபடி கீழே இறங்குகிறது கல்லாறு.

கல்லாறு பாயும் இடங்கள் (ENROUTE OF KALLARU RIVER)

தொண்டமாந்துறை, வடகரை, பெரம்பலூர், திருவாலந்துறை, வடகளத்தூர்,  ஆகிய ஊர்களின் வழியாக பாய்கிறது கல்லாறு. 

கல்லாறு பெயர்க்காரணம் (RIVER HAS MORE STONES)

இந்த ஆற்றில் சிறிதும் பெரிதுமாக கற்கள் நிறைந்து இருப்பதால் இதனை கல்லாறு என பெயரிட்டார்கள். தமிழ்நாட்டில் இப்படி கல்லாறு என்ற பெயரில் இரண்டு மூன்று ஆறுகள் ஓடுகின்றன. 

விசுவக்குடி அணை (VISUVAKKUDI DAM)

இது பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ளது. விசுவக்குடி. இந்த ஊருக்கு அருகில் கல்லாற்றின் மீது ஒரு அணை கட்டி இருக்கிறார்கள்.

பச்சைமலை மற்றும் செம்மலை பகுதியில், 5.6 சதுர மைல் நீர்வடிப் பகுதியில் சேகரமாகும் நீர் அனைத்தும் கல்லாறு வழியாக இந்த அணைக்கு வந்து சேருகிறது.

பாசனம் மற்றும் குடிநீர் (IRRIGATION AND DOMESTIC WATER SUPPLY)

விசுவக்குடி அணையின் நீளம் 665 மீட்டர் மற்றும் ஆழம் 10.3 மீட்டர். இதில் 41 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம். இந்த அணை பாசனத்திற்கும் குடிநீருக்கும் உதவுகிறது. சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இந்த அணை பாசன நீர் அளிக்கிறது.

இந்த அணையின் ஒவ்வொரு நீர் லாடபுரம் ஏரி வெண்கலம் வெண்பாவூர் வடகலை பண்டகப்பாடி மறவநத்தம் என்.புதூர் விகளத்தூர் என்ற ஊர்களின் வழியாக ஓடி சுவேதா ஆற்றுடன் கலக்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கேட்கிறேன், கல்லாறு பற்றிய சுவாரஸ்யமான செய்தியை எனக்கு அனுப்புவீர்களா? 

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...