Saturday, June 17, 2023

KAL THEKKU TREE HERB 30. சிறுதேக்கு மரம்

கல்தேக்கு எனும்
சிறுதேக்கு மரம்


சிறுதேக்கு மரம்
, தமிழ்நாட்டில் கோவை நீலகிரி மாவட்டங்களிலும் குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையின், இலை உதிர்க்காடுகளிலும் காணப்படும் மரம், இந்த வகை மரங்களில் தாவரவகைக் கூட்டுப்பொருட்கள்  இருப்பதனால் பல நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துப் பொருட்களை தயார் செய்ய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.  கல்தேக்கு என்பதும் கள்ளித்தேக்கு என்பதும் இதுதான்.

பொதுப்பெயர்கள்: கல்தேக்கு, சிறுதேக்கு (KAL THEKKU, SIRU THEKKU)

தாவரவியல் பெயர்: டில்லனியா பிராக்டியேட்டா (DILLENIA BRACTEATA)

தாவரக் குடும்பம் பெயர்: டில்லனியேசி (DILLENIACEAE)

தாயம்: இந்தியா

சிறுதேக்கு மரத்தின் பல மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

தமிழ்: கோலிகாய், கல்தேக்கு (KOLIKAI, KALTHEKKU)

கன்னடா: பெத்தடாக்கனிகலா, கணிகலு (BETHADAKKANIKALU, KANIKALU)

தெலுங்கு: கள்ளதேக்கு, சிறுதேக்கு கல்தேக்கு (KALLATHEKKU, SIRUTHEKKU, KALTHEKKU)

தமிழில் இந்த மரத்தை கோலிகாய், மற்றும் கல் தேக்கு எனவும், தெலுங்கில் கள்ளதேக்கு, மற்றும் சிறுதேக்கு என்றும் அழைக்கிறார்கள்.  இந்தவகை மரங்களில் ழுவகையான மரங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

மரங்கள் காணப்படும் இடங்கள்     

இந்த மரங்கள் பெரும்பாலும், பசுமைமாறா காடுகளில் 3300 அடி உயரம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.  இந்தியாவில் தென்பகுதிகளில் கல்தேக்கு மரங்கள் உள்ளன.  குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளன.   

கர்நாடகாவில், மைசூர், மற்றும் கேரளாவில், கண்ணூர் கொல்லம், கோழிக்கோடு, பாக்காடு, விநாடு ஆகிய பகுதிகளிலும் தமிழ் நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் கல்தேக்கு மரங்ளைப் பார்க்கலாம்.

கல்தேக்கு, சிறுதேக்கு எனவும், அழைக்கப்படுவதால், இந்த மரம் அநேகமாய் உறுதியான, மற்றும் உயோகமான மரமாக இருக்கும்.  இதே வகையைச் சேர்ந்ததுதான் உவா மரம்.  இதன் தாவரவியல் பெயர் டில்லனியா இண்டிகா (DILLENIA INDICA)

கல்தேக்கு மரம், தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ளன.  மேலும் குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையின், இலை உதிர்க்காடுகளில் (DECIDUOUS FORESTS) காணப்படுகின்றன.

கல்தேக்கு மரம் 20 மீட்டர் வரை உயர்ந்து வளரும்.  மரத்தின் மேற்புப் பட்டை சாம்பல் மற்றும் காவி நிறமாக இருக்கும்.  இலைகள் தனி இலைகள்.  பூக்கள் இருபாலின பூக்கள்.  மஞ்சள் நிறப் பூக்கள் 2 முதல் 7 பூக்களை உடைய கொத்துக்களாக இருக்கும், பழங்கள் முட்டை வடிவத்தில் அடர்த்தியான செங்காவி நிறத்தில் இருக்கும்.

இதன் இருபாலினப் பூக்கள் டிசம்பர் மாதவாக்கில் பூக்கும்.  ஜூன் மாத வாக்கில் அவை பழங்களாக மாறும்.  பூச்சி இனங்கள் இதன் மகரத்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கின்றன.

இதன் பழங்களை சாப்பிடும், சிறு பிராணிகள் மற்றும் பறவைகள், இதன் விதைகள் பல்வேறு இடங்களில் விழுந்து முளைக்குமாறு, பரவுமாறு செய்கின்றன.  

கல்தேக்கு மரத்தின் மருத்துவப் பண்புகள் குறித்த ஆய்வுகள் ஏதும் செய்யப்பட்டதாகக் தெரியவில்லை. ஆனால் இந்த வகையில் ஐந்து மரங்களை மட்டும் தேர்வு செய்து ஆய்வுகள் செய்துள்ளனர்.  ஆந்த ஆய்வில் இந்த மரங்கள் சிறந்த மருத்துவப் பண்புகளைக் கொண்டவை என நிருபிக்கப்பட்டுள்ளன.

     புற்றுநோய், சக்கரை நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளைவக் குறைத்தல், ஆன்டி ஆக்சிடெண்ட் பண்புகளைப் பெற்றிருத்தல், கேடு செய்யும் நுண்ணுயிர்களையும் கட்டுப்படுத்துதல், போன்றவை இந்த மரங்களின் முக்கியமான மருத்துவ குணங்களாகக் கண்டறிந்துள்ளனர்.

     குறிப்பாக இந்த மரங்களில் லூபியோல், மற்றும் பெட்டுலினிக் ஆசிட் (LUPEOL AND BETULINIC ACID) என்னும் தாவரவகைக் கூட்டுப்பொருட்கள்  இருப்பதனால் பல நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துப் பொருட்களை தயார் செய்ய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

TO READ FURTHER

WWW.SITES.GOOGLE.COM – EFFLORA INDIA- ‘DILLENIA INDICA’

WWW.INDIABIODIVERSITY.ORG-‘DILLENIA BRACTEATA’

WWW.FRLHT.ORG – ENVIS CENTRE ON MEDICINAL PLANTS – PLANT DETAILS FOR ‘DILLENIA BRACTEATA’

WWW.CATALOGUEOFLIFE.ORG.’WORLD PLANTS’ – DILLENIA BRACTEATA’

WWW.TANDFONLINE.COM ‘DILLENIA SPECIES’ – A REVIEW OF TRADITIONAL USES, ACTIVE CONSTITUENTS AND PHARMOLOGICAL PROPERTIES FROM PRE-CHEMICAL STUDIES.

PLEASE POST A COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

99999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...