Tuesday, June 20, 2023

KAGITHAPOO SOUTH AMERICAN BEAUTY 71. தென் அமெரிக்காவின் அழகு தேவதை காகிதப்பூ

 

தோட்டங்களின் அழகு தேவதை
காகிதப்பூ 


தென் அமெரிக்காவில் பிறந்து, அழகுமரமாக அகிலம் முழுவதும் அறிமுகமானது காகிதப் பூ, பூக்கள்தான் இதன் கவர்ச்சிகரமான அம்சம்,  பூக்கள் காகிதத்தில் செய்தது போல இருக்கும்,  இதன் சிம்புகளில் மற்றும் கொம்புகளில் அம்புகள் போன்ற முட்கள் இருக்கும், ஆனாலும் அழாழகான வண்ணங்களில் அடுக்கடுக்கை ஆயிரமாயிரம் வகைகளை உருவாக்கி உள்ளார்கள், தாவரவியல் அறிஞர்கள்.

தமிழ்: காகிதப்பூ (KAGITHAPOO)

பொதுப் பெயர்கள்: பொகைன் வில்லா, வெஸ்ஸர் பொகைன் வில்லா (BOUGAINVILLEA, LESSER BOUGAINVILLEA, PAPER FLOWER )

தாவரவியல் பெயர்: பொகைன் வில்லியா கிளாப்ரா (BOUGAINVILLEA GLABRA)

தாவரக் குடும்பம் பொயர்:  நிக்டேஜினேசி (NYCTAGINACEAE)

தாயகம்: தென் அமெரிக்கா

பல மொழப் பெயர்கள் (VERNACULAR NAMES)

இந்தி: பூகன் பெல் (BOOGENBEL)

மணிப்புரி: சேரி (CHEREI)

பெங்காலி: பெகன் பிலாஸ் (BAGAN BILAS)

மராத்தி: பூகன் வெல் (BOOGANVEL)

கொங்கணி: பொகைன்விலா (BOUGANVILA)

தெலுங்கு: காகிதலப் புவ்வு (KAGITHALU PUVVU)

மெக்சிகோ பொகைன்வில்லா (BOUGAINVILLEAP)

ஸ்பெயின்: புகன் வில்லா (BUGAN VILLA)

பெரு: பேப்பர் (PAPER)

அர்ஜென்டினா: சான்டா ரிட்டா(SANTA RITA)

கொலம்பியா: ஆல்வேய்ஸ் அலைவ் (ALWAYS ALIVE)    

தென் அமெரிக்காவில் பிறந்து, அழகுமரமாக அகிலம் முழுவதும் அறிமுகமான பொகைன்வில்லா மூலிகை மரமாக அவதாரம் எடுப்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஒரு பிரான்சு நாட்டுக்காரர் அறிமுகம் செய்த தாவரம்

ஒரு பிரான்சு தேசத்தின் மாலுமியின் பெயரைத்தான் இதற்கு வைத்திருக்கிறார்கள்.  அவர் பெயர் லூயிஸ் டி பொகைன் வில்லா (LOUIS ANTONIE DE BOUGAINVILLE). 

தினெட்டாம் நூற்றாண்டில் ஒரு நாள் பிரேசில் நாட்டின் வழியாக பயணம் செய்தார் பொகைன் வில்லா.  அங்குதான் அவர் முதன்முதலாக இந்த மரத்தை, கொடியைப் பார்த்தார். 

அது அவரை வெகுவாகக் கவர்ந்தது. அவர்தான் அதனை பிரேசிலிருந்து வெளி உலகிற்குப் கொண்டு வந்தார்.  அதனால் நாம் பொகைன் வில்லா என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம் உலகம் முழுக்க.

இது மரமும் இல்லை செடியும் இல்லை.  இது ஒரு இரண்டும் கெட்டான் கொடி

இதன் பூக்கள்தான் கவர்ச்சிகரமான அம்சம்.  பூக்கள் காகிதத்தில் செய்தது போல இருக்கும்.  இதன் சிம்புகளில் மற்றும் கொம்புகளில் அம்புகள் போன்ற முட்கள் இருக்கும். 

இந்த மரங்கள் சராசரியாக 10 முதல் 12 அடி உயரம் வளரும்.  சில வகைகள் 30 அடி கூட வளரும். 

இதன் பூக்கள் வழக்கமாக கொத்துக்களாக இருக்கும்.  பெரும்பாலான காகிதப் பூக்கள் அடர்த்தியான ரோஜா நிறத்தில் இருக்கும். 

ஆனால் பூக்கள் பல நிறங்களில் இருக்கும்.  சிவப்பு, மஞ்சள்> வெள்ளை> ஆரஞ்சு என பல நிறங்களிலும் இருக்கும். 

வண்ணமயமா இருப்பவை இதன் பூக்களின் இதழ்கள் அல்ல.  அவை அந்த பூக்களின் புற இதழ்கள் என்னும் புல்லி வட்டம்.  இவை பல வடிவங்களில் பல அளவுகளில் இருக்கும்.

இதன் இலைகள் அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும்.

பதினெட்டு தாவரவகைகள் உள்ளன      

பொகைன்வில்லா தாவரக் குடும்பத்தில் சுமார் 18 வகையான இனங்கள் இருக்கின்றன.  அவை எல்லாமே கொடிகள், புதர்கள், மற்றும் மரங்களாக உள்ளன.  பொகைன்வில்லா பல நாடுகளில் பரவி உள்ளது.  அங்கெல்லாம் என்ன பெயர்களில் அழைக்கப்படுகின்றன எனப் பார்க்கலாம்.

அவசத் தேவை ஆய்வுகள்

வளரும் நாடுகளில் இன்றும் கூட 88 சதம் மக்கள்> தங்கள் உடல் உபாதைகளுக்கு மருந்தாக மூலிகைகளைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 

பொகைன்வில்லா போன்ற மூலிகைகளில் ஆண்டி ஆக்சிடெண்ட் (ANTI OXIDANT PROPERTIES) பண்புகள் அதிகம் உள்ளன.  பல நோய்களை குணப்படுத்தும் சக்தி இவற்றில் உள்ளன. 

முக்கியமாக இப்போது அவசிய மற்றும் அவசத் தேவை>  இவைப்பற்றிய மெய்யான ஆய்வுகள் தேவை என்பதுதான்.

நிறைய பேரின் வேண்டுகோளுக்கு ஏற்ப தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பு வ்வளவு இருக்கிறது என்ற தகவலை கீழே தந்துள்ளேன். 

அதுமட்டுமல்ல ஒரு நபர் எவ்வளவு மரம் நட்டால் வாழ்நாள் முழுக்க சுவாசிக்கலாம் என்ற புள்ளி விவரமும் தந்துள்ளேன்.

தமிழ் நாட்டின் வனப்பரப்பு:    

தமிழ் நாட்டின் மொத்த வனப்பரப்பு 24.16 சதம்,  1988 ம் ஆண்டு வனக் கொள்கையின்படி மொத்த நிலப்பரப்பில் 33 சதம்  வனங்கள் இருக்க வேண்டும். 

ஆனால் இந்த 24.16 சதம்  என்பது முள்ளும் முரண்டுமாக மரங்களே இல்லாத இடங்களும் புதர்க்காடுகளும் சேர்ந்ததுதான் என்றும் சொல்லுகிறார்கள். 

எது எப்படியோ இன்னும் நாம் பசுமையாக மாற்றவேண்டிய பரப்பு நிம்ப உள்ளது என்பதை புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும்.  நமது வாழ்நாளில் சுவாசிக்க மட்டுமே ஒரு நபர் 6 முதல் 8 மரங்கள் நட வேண்டும்

மருத்துவ குணங்களுக்கு அடிப்படையான தாவர ரசாயனங்கள் (CHEMICAL COMPOUNDS PRODUCED BY PLANTS- PHTOCHEMICALSP)    

ஒரு தாவரத்தில் இருக்கும் தாவர ரசாயனங்கள்தான் அதனுடைய மருத்துவ குணங்களுக்கு அடிப்படையானவை.   நிpறைய தாவர ரசாயனங்கள் இருந்தால் அது அதிக   நோய்களை கட்டுப்படுத்தும் என்று அர்த்தம்.

இப்போது பொகைன் வில்லாவில் எத்தனை தாவர ரசாயனங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம்.    

அவை அலிபேட்டிக் ஹைட்ரோகார்பன்கள், பேட்டி ஆசிட்கள்> பேட்டி ஆல்கஹால்கள், வாலட்டைல் காம்பவுண்டுகள், பினாலிக் காம்பவுண்டுகள், பெல்டோ கைனாய்டுகள், பிளேவனாய்டுகள், பைட்டோ ஸ்டீரால்ஸ்கள், டெர்பீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் பீட்டாலெய்ன்கள், அது பல்வேறு ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய மருத்துவ முறைகள்      

பாரம்பரிய மருத்துவ முறைகளில் பலநூறு ஆண்டுகளக பல நோய்களைக் கட்டுப்படுத்த யோகைன்வில்லா வின் இலைகள், பூக்கள், பட்டைகள், தண்டுகள், வேர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள்.  பொகைன் வில்லா வினால் கட்டுப்படுத்தப்படும் நோய்கள் ஆஸ்துமா மூச்சுத் குழல் அழற்சி வயிற்றுக் கடுப்பு முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் நுரையீரல் வலி புளுகாய்ச்சல் இருமல் தங்குவதன் இருமல் ஆகியவை.

நான் மூலிகை வளர்க்கிறேன்    

வெளிநாட்டு மரம் என்று தெரியாமல் அழகுக்காக தோட்டத்தில் வேலிகளில் வீட்டுகளின் முகப்பில் பின்புலத்தில் லுவலக.  வளாங்களில் தொட்டிகளில் பெட்டிகளில் சட்டிகளில் பொகைன்வில்லா வைத்திருப்பவர்கள் நான் மூலிகை வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.

இதை வாசியுங்கள்

இனிமேலாவது நாம் ஒசி யில் சுவாசிப்பதுபற்றி ஒரு முடி வெடுத்து நம் சொந்த மரங்களின் உதவியுடன் சுவாசிக்கத் தொடங்க வேண்டும். ஓசி சுவாசம் வேண்டுமா, யோசியுங்கள், அதற்குப்பிறகு சுவாசியுங்கள்.         

FOR FURTHER READING

WWW.TNTREEPEDIA.COM – “TAMILAGA MARAKKALANJIAM”

WWW.RESEARCHGATE.NET/”BOUGAINVILLEA GLABRA A NATIONAL ANTIONDANT”.

WWW.RESEARCHGATE.COM/ ”BOUGAINVILLEA GENUS – A REVIEW ON PHYTO CHEMISTY, PHARMACOLOGY, AND TOXICOLOGY “

WWW.EN.WIKIPEDIA.ORG/”BOUGAINVILLEA

WWW.PLANTS.USDA.GOT/”BOUGAINVILLEA GLABRA CHOOCY”

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...