Thursday, June 15, 2023

KADAM TREE 21. கடம்ப மரம்

 

         

மீனாட்சி அம்மன் கோயில் மரம்
கடம்பம்

கடம்ப மரம், இந்திய மரம்> இந்திய அஞ்சல் துறையினால் ஸ்டாம்பு வெளியிட்டு பெருமைப்படுத்தப்பட்ட மரம், கிருஷ்ணபரமாத்மாவின் திருவிளையாட்டுக்கு உதவிய மரம்> கடம்பவனம் என்ற மதுரையின்> பழைய பெயருக்குக் காரணமான மரம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் தல விருட்சம், சதய நட்சத்திரக்கார்ர்களின் நட்சத்திர மரம்பழங்குடி மக்களின் உடல் உபாதைகளுக்கு குணம் அளித்த மருத்துவ மரம். 

பொதுப் பெயர்கள்: கடம். கடம்பா, பர் ஃபிளவர் ட்ரீ, லாரன், லீச்ஹார்ட் பைன் (KADAM, KADAMBA, BUR FLOWER TREE, LARAN, LEICHHART PINE)

தாவரவியல் பெயர்: நீயோலாமார்கியா கடம்பா (NEOLAMARCKIA CADAMBA)

தாவரக் குடும்பம் பெயர்: ரூபியேசி (RUBIACEAE)

தாயகம்: இந்தியா

கடம்ப மரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: கடம்ப மரம்> வெள்ளைக் கடம்பு (KADAMBA MARAM, VELLAIKADAMBU)

இந்தி: கடம்ப் (KADAMB)

மலையாளம்: கடம்பு (KADAMBU)

கன்னடா: கடுவாவாலடிகி (KADUVALADIKI)

தெலுங்கு: ருத்ராக்ம்பா (RUDHRAKSHAMBA)

மரம் அழகு இலை அழகு பூ அழகு

மரங்கள் 45 மீட்டர் வரை உயரமாய் வளரும்.  அடிமரம் 160 செ.மீ. விட்டம் உடையதாய் பருமனாகும்.  மரத்தின் தலைப்பகுதி> தழையும் தாம்புமா குடை விரித்தபடி இருக்கும். கடம்பம் இலைகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம். உங்கள் கண்கள் உங்களுக்கு நன்றி சொல்லும் ! அவ்வளவு அழகு ! அவ்வளவு குளிர்ச்சி !

இலைகள் 13 முதல் 32 செ.மீ. வரை கூட நீளமாக இருக்கும்.  பூக்கள் ஆரஞ்சு நிறத்தில் பேட்மின்டன் பந்துகள் போலத் தென்படும்.  விதைகள் மிகவும் நுட்பமானவை.  ஒரு கிராம் எடையில் 20000 விதைகள் இருக்கும்.

பூக்கள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில், மனதை மயக்கும் வாசத்துடன், சிறிய பூப்பந்தை நினைவுபடுத்திய வண்ணம் துல்லியமான உருண்டை வடிவத்தில் பூக்கும். ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த நிறத்தில் காய்த்து சுமார் 8000 விதைகளைக் கொண்ட கனியாக மாறும்.  

உங்க பிறந்த நட்சத்திரம் தெரியுமா ?

தங்களின் பிறந்த நட்சத்திரங்களுக்கு உரிய மரத்தை நட்டு வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்>  பொல்லாதது போய்ச் சேரும்>  தோங்கள் நீங்கும்> என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. 

கடம்ப மரம் சதய நட்சத்திரத்திற்கு உரிய மரம்.  சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வீடுகளில் கடம்ப மரம் நட்டு வளர்க்கலாம்.

சதய நட்சத்திர மரம்      

இந்திய பாரம்பரியத்தின் படி சொல்லப்படும் பிறந்த நட்சத்திரங்கள் 27 ராசிகள் 12 மற்றும் கிரங்கள் ஒன்பது.  ஒருவர் பிறக்கும் நேரத்தின்படி நட்சத்திரம் மற்றும் ராசிகள் அமையும். 

பிறந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நட்சத்திர மரம் உண்டு.  அந்த மரங்கள் அனைத்தும் தெய்வீக சக்தி படைத்தவை    

இந்திய அஞ்சல் துறையினால் ஸ்டாம்பு வெளியிட்டு பெருமைப்படுத்தப்பட்ட இந்திய மரம். இந்தியர்களால் தெய்வீக மரமாக கருதப்படும் மரம். 

இந்து புராணப்படி கிருஷ்ணபரமாத்மா தனது பாலபருவத்தில் ஏறி விளையாடிய மரம்.  கடம்பவனம் என்ற மதுரையின்> பழைய பெயருக்குக் காரணமான மரம். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் தல விருட்சம்.  சதய நட்சத்திரத்திற்கு உரிய மரம்.   

மீனாட்சி அம்மன் கோவிலின் தலமரம்     

ஒரு காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்தது மதுரை.  தனால்தான் அதன் பழைய பெயர் கடம்ப வனம் என இருந்தது.  அத்தொடு அங்கமைந்த மீனாட்சி அம்மன் திருக் கோவிலுக்கும்> கடம்ப மரம் தலமரமாக ஆனது. 

மீனாட்சி .அம்மன் கோவிலில் இன்றும் கூட பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கடம்பமரம் வெள்ளித் தகட்டல் போர்த்தப்பட்டு பார்வைக்கு உள்ளது.   

அது மட்டுமல்ல> கடம்பவனவாசினி> கடம்பவனப் பவை என்ற திருப்பெயர்களும் மீனாட்சி அம்மனுக்கு உரியவை.    

கடம்ப மரம் திருமாலுக்கு உரியது போல முருகனுக்கும் உரிய மரம் என்கிறது> சங்கத் தமிழ் இலக்கியம் பரிபாடல்.

உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்டு எடுத்த

 முருகு கமழ் புகை நுழைந்த வளியும்…”

 -பரிபாடல் - 21-50

 உருள் இணர்க் கடம்பு என்பது ஆரஞ்சு நிறத்தில் பூப்பந்து போல காட்சி தரும் கடம்ப மலர்களைப் பார்த்தால் புரியும்.    

இந்தியா மட்டுமின்றி இதர நாடுகளையும் சொந்த மண்ணாகக் கொண்டது கடம்ப மரம்.  அவை பங்களாதேஷ்> நேப்பாளம்> ஸ்ரீலங்கா> கம்போடியா> லாவோஸ்> மியான்மர்> தாய்லாந்து> வியட்நாம்> இந்தோனேசியா> மலேசியா> பப்புவா நியூகினியா> மற்றும் ஆஸ்திரேலியா.

மரக்கட்டைகளின் உபயோகம்      

சுமாரான தரமுள்ள மரக்கட்டையாகவும்> பேப்பர் செய்யவும் பயனாகிறது. இந்த மரக் கட்டைகளைப் பயன்படுத்தி ஒட்டுப் பலகைகள். திக கடினமில்லாத கட்டுமானச் சாமான்கள். மரக்கூழ்> பெட்டிகள்> ஒரு மரப் படகுகள் (CANOE BOATS) மேஜை நாற்காலிகள் போன்றவை செய்யலாம்.  மரத்தில் சுலபமாக வேலை பார்க்கலாம்.  கருவிகளையும் பயன்படுத்தலாம்.  மரத்தினை உலர்த்துவது மற்றும் பதப்படுத்தவதில் (DRYING AND SEASONING OF WOODS) எவ்வித சிரமம் இல்லை.

ஆன்மிக ரீதியாக போற்றப்படும் மரம் (RELIGIOUSLY RECOGNIZED TREES)   

பாகவதப் புராணத்தில் கடம்ப மரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.  தென்னிந்தியாவில் பார்வதி தேவிக்கு உரிய மரமாகக் கருதுகிறார்கள். வட இந்தியாவில் கடம்ப மரம் என்றால்> அது ராதை மற்றும் கிருஷ்ணனின் காதல் அடையாளம்.   

ஆறுகள்> குளங்கள் போன்ற நீர் நிலைகளில் உடலில் துணி இல்லாமல் குளிக்கக் கூடாது என்பது கடல் தெய்வத்தின் கட்டளை.  அதை சட்டை செய்யாதவர்களுக்கு பாடம் சொல்லித்தர கிருஷ்ணன் குளத்தில் குளிக்கும் பெண்களின் ஆடையை மறைத்து வைத்தார் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த கதை. 

அப்படி அந்த பெண்களின் வஸ்திரங்களை ஒளித்து வைத்ததோடு தானும் ஒளிந்து கொண்டது யாருக்கும் தெரியாது.  அப்படி அவர் ஒளிந்து கொண்ட அந்த குளக் கரையில் இருந்தது ஒரு கடம்ப மரம்.

மருத்துவப் பயன்கள்      

நன்கு உலர்த்திய பட்டைகளைப் பயன்படுத்தி காய்ச்சலை கட்டுப்படுத்துகிறார்கள்.  உடலுக்கு உரமூட்டும் டானிக் காகவும் தருகிறார்கள். 

இலைகளிலிருந்து எடுக்கும் இலைச் சாற்றினை வாயிலிட்டு கொப்பளிக்க> வாயில் இருக்கும் புண்கள்> பல்வலி மற்றும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு ஆகியவை சரிப்படும்.

செரிமானத்தை மேம்படுத்த> குடற்புழு நீக்கியாக> குடற்புண்கள்> செரிமானப் பிரச்சினைகள் மற்றும் உடல் காய்ச்சலை; சரி செய்வது போன்றவற்றிற்கு இலைகள்> பட்டைகள் ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம்.    .

பட்டைகள்> பழங்கள்> பூக்கள்      

மரத்தின் வேர்ப்பட்டைகளில் மஞ்சள் நிற சாயம் தயாரிக்கிறார்கள்.  கடம்ப மலர்களை> வாசனைத் திரவியம்அத்தர் தயாரிக்க உபயோகப்படுத்துகிறார்கள்.  பல இடங்களில் இதன் பூக்கள்> மற்றும் பழங்களைச் சாப்பிடுகிறார்கள்.

சாலை ஒர மரங்களாக நடலாம்      

வெப்பமான பகுதிகளில் எல்லாம் வளரும்.  சாலை ஒரங்களில் நிழல் தரும் மரங்களாக நடலாம்.  கிராமம்> நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல் நடலாம். 

நலிந்து மெலிந்த காடுகளை மேம்படுத்தும் பணிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.  தோப்பாக அல்லது வனங்களாக உருவாக்கும் இடங்களின் (REFFORESTATION) மண்வளத்தை மேம்படுத்துகிறது.

சீக்கிரம் மரமாக வேண்டும ?

நாம் நட்ட மரம் சீக்கிரம் மரமாக வேண்டுமா ? உங்கள் தோட்டத்தில் வீட்டில் கடம்பம் நடுங்கள், பார்த்துக்கொண்டிருக்கும்போதே வளர்ந்துவிடும்.

REFERENCES

WWW.FLOWERS OF INDIA. NET ‘KADAM’

WWW.EN.M.WIKIPEDIA.ORGNEOLAMARCKIA CADAMBA”

WWW.TROPICAL.THEFERNS.INFONEOLAMARCKIA CADAMBA” – USEFUL TROPICAL PLANTS

WWW.VIKASPEDIA.INNEOLAMARCKIA CADAMBA”

WWW.EN.M.WIKIPEDIA.ORGNEOLAMARCKIA CADAMBA”

PLEASE POST YOUR COMMENTS, REARDS- GNANASURIA BAHAVAN D (AUTHOR)

999999999999999999999999999999999999999

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...