அழகு மருந்து மரம் ஜாவாக்கொன்றை |
(JAVAKONRAI,
APPLE BLOSSOM TREE, CASSIA JAVANICA, FABACEAE )
பொதுப்பெயர்: ஆப்பிள்
பிளாசம் ட்ரீ
(APPLE BLOSSOM TREE)
தாவரவியல் பெயர்: கேசியா
ஜவானிகா (CASSIA
JAVANICA)
தாவர குடும்பம்: பேபேசியே
(FABACEAE)
தாயகம்: தென்கிழக்கு
ஆசியா
அழகுப்பூமரம்
ஜாவாக்கொன்றையின் சொந்த ஊர் இந்தொனேசியா நாட்டின் ஜாவா தீவு, மலேஷியா
மற்றும் தாய்லாந்து. வீட்டுத் தோட்டங்கள,; பண்ணை வீடுகள், பள்ளி
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்கள், தொழிற்கூடத் தோட்டங்கள், பூங்காக்கள்,
சாலை ஓரங்கள் என எல்லா இடங்களிலும் நடலாம்.
தாய்லாந்து
நாட்டின் ஒரு மாநில அரசு மரம்
‘சாய்நெட்’
என்பது தாய்லாந்து நாட்டின் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தின் அரசு மரம்
இது. அதுமட்டுமல்ல தாய்லாந்து நாடடு மக்கள்; ஒன்பது
வகையான மரங்களை புனிதமானவை என்று வணங்குகிறார்கள். அப்படி வணங்கும் மரங்களில் நமது
ஜாவாக் கொன்றையும் ஒன்று.
மலச்சிக்கல்,
சிறுநீரகக் கோளாறுகள், சக்கரை நோய் ஆகியவற்றை குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகளும் நாட்டு
மருந்துகளும் இந்த மரத்திலிருந்து தயாரிக்கிறார்கள்.
ஜாவா கொன்றையின் பலமொழி பெயர்கள்
மரத்தின்
தமிழ்ப் பெயர்: கொன்றை, வாகை (KONRAI, VAGAI)
இந்தி: ஜாவா கி ராணி (JAVA KI RANI)
மராத்தி:
மசேலி (MAZELI)
சைனிஸ்: ஜி குவோ ஜூ மிங் (JI GUO JUE MING)
பிரென்ச்:
கேசி ஏ ஃப்லூர்ஸ் ரோசஸ் (CASSIE A FLEURS ROSES)
தாய்: கலாப்ரூக், கிலெக்
சாவா, கிலெக் யாவா, (KALALPHRUK,
KHILEK CHAWA, KHILEK YAWA)
மலாய்: பெபுசக், போபோண்டோலான்
(BEBUSOK,
BOBONDOLON)
இந்தோனேசியா:
செபுசாக்,
டிரெங்குலி (SEBUSOK,
TRENGGULI)
சுமத்ரா:
போக்கிங் போக்கிங் (BOKING
BOKING)
ஜாவா: புசோக் புசோக்,
டுலார் டுலாங், காஜு டுலாங் (BUSOK BUSOK, DULAR DULANG, KAJU DULANG)
மரத்தின்
பொதுப் பெயர்: ஆன்ட்சோன், பேகிரோரோ, டிண்டாலோ, ஆப்பிள் பிளாசம் ஷவர், ஜாவா கேசியா, ரெயின்போ ஷவர் (ANTSOAN,
BAGIRORO, TINDALO, APPLE BLOSSOM SHOWER,
JAVA CASSIA, RAINBOW SHOWER)
தாவரக்குடும்புத்தின்
பெயர்: சிசால்பினியேசி (CAESALPINEACEAE)
பரவலான மரச்
சாமான்களும் செய்யலாம்
25 முதல் 40 மீட்டர்
வரை ஓங்கி உயர்ந்து வளரும். முழுசாய் உதிர்க்காமல் பகுதியாய் இலை உதிர்க்கும்
மரம். அடர்த்தியான ஊதா நிறப் பூக்கள். பக்கக் கிளைகளில் பூங்கொத்துக்களாகப்
பூக்கும். ஏப்ரல் மேவில் பூத்து நவம்பர் டிசம்பரில் நெற்றுக்களை தயார் செய்யும்.
இந்த மரங்களில் சில லேசானதாகவும். சில கடினமாகவும் இருக்கும். கட்டுமான
வேலைகளுக்கும், பரவலான மரச் சாமான்களும் செய்யலாம். விசேஷமாக பெட்டிகள் (CABINETS) செய்யலாம்.
பட்டை,
தோல் பதனிட டேனின் தரும். உரல்கள், உலக்கைகள்,
கம்பங்கள்,தூண்கள், பந்தல்
கால்கள், மாட்டு வண்டி சாமான்கள், காகிதம் தயாரிக்க மரக்கூழ், இலைகள்,
கிளைகள், மரம், ஆகியவை விறகு ஆகியவை தரும்.
வீசும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியினை
வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும் மரம்.
சீனாவில்
மருந்தாகிறது
இந்தியாவைவிட
சீனாவில் ஜாவா கொன்றை அதிகம் மருந்தாகிறது. காய்ச்சல், மலச்சிக்கல், கேஸ்ட்ரிக் பெயின், ஜலதோஷம்,
மலேரியாக் காய்ச்சல், சின்னம்மை, மீசில்ஸ் போன்றவற்றிற்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.
மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இதனை மருந்தாக உபயோகப்படுத்துகிறார்கள்.
குறைவான
உயரம் கொண்ட இடங்கள், ஈரச்செழிப்பான வெப்ப மண்டலப் பகுதிகள், 400 மீட்டர்
உயரம் வரை உள்ள பகுதிகள், பரவலான மண் வகைகள், ஆகியவற்றில் நன்கு வளரும். ஜாவாவின் சதுப்பு
நிலங்கள், மணல்சாரி நிலங்கள், மற்றும் சுக்காம்பாறை உள்ள நிலங்கள் அனைத்திலும் இந்த கொன்றை மரம்
நன்றாக வளர்கிறது.
கந்தக
மஞ்சள் நிறம் கொண்ட சரக்கொன்றை, தக்காளி சிவப்பு நிறம் கொண்ட புரசு மரம், ஊதா
நிறம் உடைய ஆத்தி மரம் போன்றவற்றை ஜாவா கொன்றையுடன் மாற்றிமாற்றி நடவு செய்தால்
சாலைக்கு சேலை கட்டியது மாதிரி அழகாய் இருக்கும்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment