Sunday, June 18, 2023

JACKAL JUJUB A LIVE FENCE TREE SPECIES 35. சூரை இலந்தை உயிர்வேலி மரம்

 

சூரை இலந்தை
உயிர்வேலி மரம்

சூரை இலந்தை அது ஒரு முள் மரம் மற்றும் சிறு பழ மரம் அதுதான் அதன் உண்மையான முகம்.  ஆனால் அது நோய்களை, உடல் உபாதைகளை நீக்கும் மூலிகை என்பது அதன் புதுமுகம், இந்தியாவில் எல்லா இடங்களிலும்  பரவியுள்ள குறுமரம், கேரளாவில் மட்டும் வஞ்சனையில்லாமல்  எல்லா மாவட்டங்களிலும் இந்த மரங்களைப் பார்க்கலாம், உயிர் வேலி அமைக்கவென்றே அவதாரம் எடுத்த மரம்

பொதுப் பெயர்கள்: ஜாக்கால் ஜுஜுPப், சுமால் பூரூட்ட் ஜுஜுPப், ஒயில்ட் ஜுஜுPப் (JACKAL JUJUBE, SMALL FRUITED JUJUBE, WILD JUJUBE)

தாவரவியல் பெயர்: சிசிபஸ் ஈனோபிலியா (ZIZIPHUS OENOPLIA)

தாவரக் குடும்பம் பெயர்: ராம்னேசி (RHAMNACEAE)

தாயகம்: இந்தியா, சைனா மற்றும் ஆஸ்திரேலியா

பல மொழிப் பெயர்கள்:

தமிழ்: சூரை முள்ளு> சூரை இலந்தை (SOORAI MULLU, SOORAI ILANTHAI)

இந்தி: மக்காய் (MAKKAY)

மராத்தி: புர்ஜி (BURGI)

மலையாளம்: டூடாலி,  செரியாலண்டா (TUTALI, CHERIALANDA)

தெலுங்கு: பராகி,  பரிங்கி (P PARAKI, PARINGI)

கன்னடா: பர்ஜி,  கரிசூரி முள்ளு,  ஹா சூராலி (BURGI, KARISURI MULLU, HASURALI)

பெங்காலி: சயாகுல் (SAYAKUL)

சமஸ்கிருதம்: கற்கண்டா (KARKANDAH)

பரவியிருக்கும் இடங்கள்

ஆசியாவின் குளிர்ப்பிரதேசமான சைனாவில், குவாங்கி மற்றும் யுன்னான் பகுதி வெப்பமண்ட ஆசியப் பகுதியான, இந்தியா, நேப்பாளம், ஸ்ரீலங்காஇந்தோசைனா, மியான்மர், ,தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிபபைன்ஸ், மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லை மற்றும் குயின்ஸ்லாந்து பகுதியிலும் இந்த சூரல் மரங்கள் பரவியுள்ளன.

மலைச்சரிவுகள்

இந்தியாவில் ஈரச் செழிப்பான மற்றும் வறண்ட பகுதிகளில் எல்லாம் பரவியுள்ள குறுமரம்.  ம வெளிப் பகுதிகளில் மற்றும் மலைச் சரிவுகளில் 1200 மீட்டர் வரை இந்த மரங்கள் வளர்ந்திருக்கும். சாலையோரப் முட் புதர்களில் சாதாரணமாகப் பார்க்கலாம்.

புதர்க்காடுகள்

குறிப்பாக புதர்க்காடுகள் (SCRUB JUNGLE) இருக்கும் இடங்களில் எல்லாம் இந்த மரங்களைப் பார்க்கலாம்.  கேரளா மாநிலத்தின் சுவீகாரப்பிள்ளை மாதிரி பரவலாக எல்லா மாவட்டங்களிலும் சூரல் மரங்களை சுற்றிசுற்றிப் பார்க்கலாம்.

முள்ளுடைய சிறு பழ மரம்

சூரை இலந்தை என்றால் அது ஒரு முள் மரம் மற்றும் சிறு பழ மரம் என்பது அதன் பழைய முகம்.  ஆனால் அது நோய்களை> உடல் உபாதைகளை நீக்கும் மூலிகை என்பது அதன் புதுமுகம்.

சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும்; சூரல் முள்

தமிழில் சூரல் முள் என்றும் சூரல் இலந்தை> நரி இலந்தை என்னும் சொல்லப்படுகிறது.  சங்க இலக்கியக் காலத்தில் சூரல் என்றே சொல்லப்பட்டது.   

 குரங்கின் தலைவன் குரு மயிர்க் கடுவன்

  சூரல் அம் சிறுகோல் கொண்டு> வியல் அறை

  மாரி மொக்குள் புடைக்கும் நாட !

  யாநின் நயந்தனம் எனினுமெம்

  ஆய் நலம் வாடுமோஅருளதி யெனினே ?

கடுவன் என்றும் ஆண்குரங்கு> சூரல் என்னும் முள் மரத்தின் கோல் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு> மலைப்பக்கம் தேங்கியிருக்கும் மழை நீரை  மொட்டுக்களாக சிதர அடித்துப் புடைத்தும் விளையாடியது> என்று சொல்லும் பாடல். மாரி மொக்கு என்றால் மழைத்திவலை, மழைத்துளி  என்று பொருள்.

ஐங்குறுநூறு என்ற சங்க இலக்கிய  நூலில் வரும்  275 வது பாடல் இது.

வாங்கண் விரிந்த பகல் மருள் நிலவின்

சூரல் மிளை இல சாரல் அர் ஆற்று

ஓங்கல் மிசைய வேங்கை ஒள்வீப்

புலிபொறி கடுப்பத் தோன்றலின், கயவாய்

இரும்பிடி இரியும் சோலைப்

பெருங்கல் யாணர்த்தம் சிறுகுடி யானே (அக நானூறு 228 வது பாடல்) 

பகல்போல நிலவு காயும் இரவு, ஆற்றுவழிப் பாதையில் சூரல் முள்மரங்கள் நிறைந்த காவல்காடு, மலையிலிருந்து சந்தன மரங்களின் மீது விழுந்து நனைத்து ஓடும் அருவி, வேங்கை மரங்களின் பூக்களைப் பார்த்த பெண் யானைகள்  புலி என மிரண்டு ஓடும். ஆபத்தான பாதைகள்இப்படிப்பட்ட வழியில் தலைவன் உன்னைப்பார்க்க வருவது சரியல்ல என தோழி தலைவிக்கு சொல்லுவதாக அமைந்த பாடல். 

அகநானூறு என்ற சங்க இலக்கிய  நூலில் 228 வது பாடல் இது. 

கொடு முள் ஈங்கை சூரலோடு மிடைந்த வான்முகை இறும்பு

(அகம் 357) என்பது அகநானூற்றுப் பாடல்

காடுகளைக் கடந்து செல்ல வழிவிடாமல் ஈங்கை முள்ளும்> சூரல் முள்ளும் பின்னிப் பிணைந்து இடக்கும் எனச் சொல்லுகிறது இந்தப் பாடல்.

சூரல் மரத்தைக் கொண்டு உயிர் வேலி போட்டுவிட்டால் அதைத் தாண்டி ஒரு ஈ காக்கா கூட அப்படி இப்படி அசையாது.

மருத்துவப் பயன்கள்

இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக இதன் வேரை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரிகணீப் பகுதியில் உள்ள மக்கள் உடலில் எற்படும் காயங்களை குணப்படுத்த இதன் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள். 

இதன் இலைகளைப் பறித்து எச்சில்கூட்டி மென்று அந்த இலைச் சாந்தினை எடுத்து காயத்தின் மீது தடவுகிறார்கள்.  அது காயத்தின் மீது அப்படியே ஒட்டிக் கொள்ளுமாம்.  காயம் ஆறிய பின்னர் உலாந்துபோன இலைச் சாந்து அதிலிருந்து உதிர்ந்து போகும்.

தொண்டைப்புண், வயிற்றுக் கடுப்பு, கருப்பை வீக்;கம் இப்படி எது வந்தாலும்  இந்த சூரல் மரத்தின் பட்டைகள்தான் எங்களுக்கு சஞ்சீவி மூலிகை  என்கிறார்கள் பர்மாக்காரர்கள்.

இந்த சூரல் மரத்திலிருந்து எடுக்கும் சாற்றினை தாய்லாந்து நாட்டினர் மலேரியாவை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள்.

ஆளுக்கு 422 மரங்கள்

உலகில் எவ்வளவு மரங்கள் இருக்கு ? எவ்வளவு மனிதர்கள் இருக்காங்க.  ஒரு ஆளுக்கு கணக்கு போட்டா எவ்வோ மரம் இருக்கும்? இந்த கட்டுரை எழுதும்போது இப்படி ஒரு கேள்வி கேட்டு ஒரு போன் வந்தது. 

இதை யோசிக்கறதுக்குள்ள திக்பிரமை பிடிச்சிருச்சி.  இருக்கவே இருக்கு கூகிள்! மாதா பிதா கூகிள் தெய்வம் ! தெய்வமேன்னு தேடினேன்.  வீண்போகவில்லை என் தேடல்!

இந்த பிரபஞ்சத்தில், இந்தப் பூவுலகில், இந்த பூமியில் இருக்கும் மொத்த மரங்கள் 3.04 டிரில்லியன்.  ஒரு ஆளுக்கு கணக்கு போட்டால் வரும் மொத்த மரங்கள் 422..

ஒரு டிரில்லியன் என்றால் ஒன்றுக்கு பக்கத்தில் 12 முட்டைகள் போட வேண்டும், கோடியின் சொன்னால் ஒரு லட்சம் கோடிகள் அல்லது  ஆயிரம் பில்லியன் ஒரு டிரில்லியன் அல்லது ஒரு மில்லியன் மில்லியன் சேர்ந்தால் ஒரு டிரில்லியன்.

குழம்புவது மாதிரி இருந்தால்  ஒன்றுக்கு பக்கத்தில் 12 முட்டைகள் போட வேண்டும் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் டிரில்லியன்.

ஒரு மனிதன் உயிர் வாழ எத்தனை மரங்கள் வேண்டும்?

ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் வாழ்த்திருக்க, சுவாசிக்க 7 முதல் 8 மரங்கள் வேண்டும். 

ஒர் ஆண்டில் ஒர் மனிதன் சுவாசிக்க தேவைப்படும் காற்று 9.5 டன்> அதில் உள்ள ஆக்ஸிஐன் 21  சதம் மட்டுமே. 

தோராயமாக ஒரு முறை இழுக்கும் மூக்சுக் காற்றில் இருக்கும் ஆக்ஸிஐன் அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. 

ஒர்; ஆண்டில் ஒரு மனிதனுக்கு தேவைப்படும்.  ஆக்ஸிஐன் 740 கிலோ மட்டுமே.

சூரல் ஒரு உயிர்வேலி மரம்

சூரல் மரம் அதன் முட்களுக்கு பெயர்போனது.  கிளைச் சிம்புகளில் முட்கள் இரண்டிரண்டாய் ஜோடிகளாய் இருக்கும்.  ஒரு முள் நேராக இருக்கும்.  இன்னொரு முள் வளைந்திருக்கும். 

வேலிகளில் நடுவதற்கு மிகவும் பொருத்தமான மரம்.  இந்த மரங்களைக் கொண்டு உயிர் வேலிகள் அமைக்கலாம்.  முட்புதர்க் காடுகளில் இரண்டு வகையானவை மிகவும் பிரபலமான முட்கள். 

ஒன்று இண்டுக் கொடிகளின் முட்கள்.  இன்னொன்று நம் சூரல் முள்.  இண்டுக் கொடிகளும், சூரை மரத்தின் கிளைகளும் வழிகளைத் தடுத்து நின்றன என்று ஒரு சங்க இலக்கியப்பாடல் இந்த இரண்டு முள்மரங்கள் பற்றியும் சொல்லுகின்றன.

கொசுறு

இண்டுக் கொடிகளின் முட்கள் இன்றும் மோசம்.  ஆபத்தானவை கூட.  சிறுமலையில் ஒரு முறை நான் இண்டுக் கொடியின் முட்களின் வசமாய் மாட்டிக் கொள்டேன். 

என்னுடன் வந்த இரண்டுபேர், சிறிய சட்டைக் கிழிசல்களுடனும், இரண்டு சொட்டு ரத்தம், ஒரு சிறிய காயம் இவற்றுடன் என்னை மீட்டு எடுத்தனர்.

ஆக இண்டுக்கொடி முட்களின்  ஞாபகம் இன்னும் என் நினைவுகளில் கூர்மையாக குத்திக்கொண்டு இருக்கின்றன.

TO READ FURTHER

WWW.SCIENCE FOCUS.COM/ HOW MANY TREES DOES IT TAKE TO PRODUCE OXYGEN FOR ONE PERSON.

WWW.TA.WIKPEDIA.ORG/”SOORAL

WWW.EN.WIKIPEDIA.ORG/ZIZIPHUS OENOPLIA

WWW.NOPR.NISCAIR.RES.IN/MEDICINAL PLANTS USED BY KOKANI TRIBALS OF NASIK DISTRICT MAHARASTRA TO CURE CUTS & WOUNDS”

WWW.NP GS WEB.ARS.GRIN.GOV/US.

PLEASE POST A COMMENT ON THE WEBSITE, GNANASURIA BAHAVAN D (AUTHOR).

99999999999999999999999

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...