Sunday, June 18, 2023

IXORA HELP TO LOSE WEIGHT 33. வெட்சிப் பூ மரம் – உடல் எடை குறைக்கும் உத்தரவாதம்

 

உடல் எடை குறைக்கும் 
வெட்சிப் பூ மரம்

வெட்சிப் பூ மரம்,  பைட்டோ கெமிகல்ஸ் எனும் தாவர ரசாயனங்கள் நிறைந்துள்ள தாவரம் இது.  அதனால் இது பல நோய்களை குணப்படுத்தும் சத்தி உடையது, தமிழ் கலாச்சாரம் ஆநிறைக்கவர்தல்  எனும் போர் நிகழ்வுக்கு வெட்சித்திணை, இந்த சிறு பூமரம் தென்னிந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் வங்கான தேசத்துக்கு சொந்தமானது, இதில் பல நோய்களை குணப்படுத்தும் சத்தி உள்ளது, வெட்சி மரங்களின் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் பருமனாதல்  மற்றும் சர்க்கரை நோயும் சரியாகும்.

பொதுப் பெயர்கள்: இக்சோரா, ஐங்கிள் ஜெரானியம், ருக்மிணி, வெட்சி (IXORA, JUNGLE GERANIUM, RUKMINI) வெஸ்ட் இண்டியன் ஜேஸ்மின், பிலேம் ஆப் வுட்ஸ்,.

தாவரவியல் பெயர்: இக்சோரா சாக்சினியா (IXORA COCCINIA)

தாவரக் குடும்பம் பெயர்: ரூபியேசி காப்பி குடும்பம் (RUBIACEAE – COFFEE FAMILY)

பல மொழிப் பெயர்கள்

தமிழ்: இட்லிப் பூ, வெட்சி (IDLI POO, VETCHI)

இந்தி: ருக்மிணி (RUGMINI)

பெங்காலி: ரங்கன் (RANGAN)

மலையளம்: சேத்தி (CHETHI)

இக்சோரா காக்சினியா என்ற மரம்பற்றிப் பார்க்கலாம்.  இது தாவரவியல் பெயர்.  அதைச் சொன்னால் நமக்குத் தெரியாது.  இட்லிப் பூ என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.  இதன் செடியில் இருக்கும் போது கொத்தாக வெள்ளை நிறத்தில் இதன் பூக்களைப் பார்த்தால் இது இட்லி மாதிரியும் தெரியும்.  அதனால் அப்படி ஒரு பெயரை வைத்துவிட்டார்கள். 

இட்லி சாம்பார் காலைச் சிற்றுண்டியில் இரண்டும் நட்சத்திர அஸ்தஸ்து உடையவை.  ஆனால் யாரையாவது பார்த்து இட்லி என்றோ சாம்பார் என்றோ சொன்னால் அதன் அர்த்தம் வேறு.  வெட்சிப் பூவைத்தான் நாம் இட்லிப்பூ என்ற சொல்லுகிறோம் என்று தெரிந்த போது எனக்கு சங்கடமாக இருந்தது.  வருத்தமாக இருந்தது.  யார் இந்தப் பெயரை வைத்திருப்பார்கள் என்று எனக்கு கோபம் கூட வந்தது.

சங்க இலக்கிய காலத்தின் பிரபலம்

சங்க இலக்கிய காலத்தில் அரசு மரியாதை பெற்ற அரிய பூ மரம்> இந்த வெட்சி. 

ஆநிறைக் கவர்தல் என்பது தமிழனின் போர் முறையில் ஒன்று.  அந்தப் போரில் போர்புரியும் வீரர்கள்> கைகளில் வாள்ந்தி இருப்பார்கள்.  தோளில் வெட்சிப் பூ மாலை ந்தி இருப்பார்கள்.  தமிழ் கலாச்சாரம் இந்தப் போர் நிகழ்வுக்கு ந்திருந்த பெயர் வெட்சித்திணை.    

ஒரு  நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பினால் அந்த அரசன் அவன் செய்யும் முதல் காரியம் ஆநிறைக் கவருவதுதான்.  ஆநிறைக் கவருது என்பது எதிரி நாட்டின் மீது நடத்தும் பொருளாதரத்தடை.  இது ஒரு வகையான பொருளாதாரக் தாக்குதல்.  மெரிக்கா தன் எதிரி நாடுகளின் மீது இப்போதுதான் பொருளாதாரத் தடை கொண்டு வருகிறது.  ஆனால் இது தமிழனுக்கு பால பாடம்.  பால பருவத்தில் விளையாடிய கோலிக்குண்டு.

ஆநிறை கவருதல் என்றால் எதிரிநாட்டு கால்நடைகளை கவர்ந்து கொண்டு வருதல். அந்த பகை நாட்டினை வம்புக்கிழுக்கும் காரியம்.

அழகான செடிகள் அழகான பூக்கள்

ங்கிள் ஜெரானியம் என்பதும் ரெட் இக்சோரா என்பதும் இட்லி செடியின் பொதுவானப் பெயர்கள்.  இலைகளை உதிர்க்காமல்> எப்போதும் பசுமையாக இருக்கும். 

இவை காப்பி செடிகளின் குடும்பத்தைச் சேர்ந்ததால்> இதன் இலைகளின் சாயல் ஏறத்தாழ அதுபோலவே இருக்கும்.  ஆனால் இட்லி பூச் செடியின் இலைகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். காப்பிச் செடி இலைகள் கரும் பச்சை நிறமாக இருக்கும்.    

இதன் பூக்களை நான் பல நிறங்களில் பார்த்திருக்கிறேன்.  ஆனால் வெள்ளையும் சிவப்பும் அதிகம்.  சிவப்பில் கூட இளஞ்சிவப்பு, ஆழமான சிவப்பு, ஆரஞ்சு நிறம் எல பல நிறங்களில் இருக்கின்றன.  நூற்றுக் கணக்கான பூக்களின் தொகுப்புதான் இந்த இட்லி பூ. 

இட்லிப்பூ ஒரு பூ அல்ல.  பூங்கொத்துக்கள்.  நூற்றுக் கணக்காக பூக்கள் இருந்தாலும் பூக்கள் எல்லாமே ஒரே மட்டத்தில் இருக்கும்.  பூங்கொத்தின் நடுப்பகுதி பூக்களின் காம்புகள் சிறுசாய் இருக்கும்.  விளிம்பில் இருப்பவைக்கு காம்புகள் நீளமாய் இருக்கும்.  ஆனால் பூக்களின் மேல்பக்கம் பார்த்தால் ஒரே மட்டமாக இருக்கும்.

தென்னிந்தியாவிற்கு சொந்தமான மரம்

இந்த வெட்சிப்பூ மரம், தென்னிந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் வங்கான தேசத்துக்கு சொந்தமானது.  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக் காரர்கள் இதனைப் பெருமளவில் அழகுமரமாகப் பயன்படுத்துகிறார்கள்.  சூரினாம் என்ற நாட்டில் தேசியப் பூ (NATIONAL FLOWER) என்னும் அங்கீகாரம் பெற்றுள்ளது இந்த  வெட்சிப் பூ.

மருத்துவப் பண்புகள் கொண்ட தாவர ரசாயனங்களைக் கொண்டது (RICH IN PHYTO CHEMICALS) இது.    

பைட்டோ கெமிகல்ஸ் எனும் தாவர ரசாயனங்கள் இதில் நிறைந்துள்ள தாவரம் இது.  அதனால் இது பல நோய்களை குணப்படுத்தும் சத்தி உடையது.  பாரம்பரிய மருத்துவம்> இந்த மருத்துவம் அந்த மருத்துவம் என மொத்த மருத்துவ முறைகளுக்கும்> மூலிகையாக உதவுகிறது, இந்த வெட்சி மரம்.  இதன் பூக்கள், இலைகள், வேர்கள், தண்டுகள் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது.  

இதில் லூப்பியால், உள்சோலிக் அமிலம்> ஒலியோனிக் அமிலம்> சைட்டோஸ்டிரால், ரூட்டின்பலியூகோசயனின், ஆன்தோசயனின்கள்புரோஆன்தோ சயனின்கள், மற்றும் கிளைகோசைட்ஸ், இதில் அடங்கியுள்ளன,  என ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

பாலியல் நோய்களை குணப்படுத்தும்      

பெண் உறுப்பில் ஏற்படும் வெள்ளைப்படுதல், சூதகவலி, மற்றும் புற்றுநோய் உட்பட பலநோய்களைக் கட்டுப்படுத்தும் சத்தி இதில் உள்ளது.  இவை தவிர ரத்தவாந்தி ரத்த அழுத்தம் வயிற்றுக் கடுப்பு ஆகியவற்றையும் ஆச்சரியப்படும் வகையில் குணப்படுத்தும் சக்தி உடையவை இதன் பூக்கள்.

     தோல் நோய்கள் குறிப்பாக ஸ்கேபிஸ் என்று சொல்லப்படும் சிரங்குநோய் மற்றும் நுண்ணுயிர்களுக்கு என்கிறால் கிருமிநாசினியாக, கட்டுப்படுத்தவும் (ANTISEPTIC AND ASTRINGENT), புண்களை> காயங்களை குணப்படுத்தவும் உதவுகிறது> வெட்சியின் வேர்கள்.

     இக்சோரா தாவரக்குழுவைச் சேர்ந்த பல தாவரவகைகள் சிறப்பான மூலிகைகளாக உள்ளன என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. 

சங்க இலக்கியங்கள் பேசும் வெட்சி

இதன் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி என்று அகநானூறு 133 வது பாடலில் (14-18) நிலம் பற்றிய வர்ணனையில் வெட்சி பற்றி சொல்லுகிறது.     

காடை என்ற பறவையின் கணுக்காலில் ஒரு முள் இருக்கும். அது பார்க்க அசப்பில் வெட்சியின் அரும்புகள் மாதிரி இருக்கும். அதைப் பார்த்தால் இதைப் பார்க்க வேண்டாம். அதைத்தான் சொல்லுகிறது இந்தப் பாடல்.

இன்னொரு பாட்டு இது., புறநானூற்றுப் பாட்டு.

 “வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட

கட்சி காணாக் கடமா நல் ஏறு

கடறு மணி கிளர சிதறு பொன் மில்ர.

(புறநானூறு 202 / 1-5)

     

வெட்சி மரங்கள் நிறைந்த ஒரு மலைக்காடு.  அதற்கு வெட்சிக்காடு என்று பெயர்.  அதன் ஊடாக மேய்ந்து கொண்டிருந்த மானைத்துரத்த அது அகப்பிடாமல் தப்பி ஒடியது.  அப்போது அங்கிருந்த மானில் கால்பட்டு பொன்னும் மணியும் சிதறின என்கிறது மேலே இருக்கும் பாடல். 

உடல் பருமனாதல்

வெட்சி மரங்களின் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் பருமனாதல் சரியாகும்.  அத்தோடு சர்க்கரை நோயையும் இது சரிசெய்யும்.  மேலும் ஆஸ்துமா, தோல் சம்மந்தமான நோய்கள், குடற்புண், வயிற்றுப்போக்கு, செரிமானப் பிரச்சினைகள்,  புண்கள்காயங்கள் போன்ற பலவற்றையும் குணப்படுத்தும்.

TO READ FURTHER

WWW.IJRPC.COM/”A REVIEW ON PHYTO CHEMICAL AND PHARMACOLOGICAL ACTIVITY OF GENUS IXORA”

WWW.RESEARCHGATE.NET  / IXORA COCCINIA – TRADITIONAL USES.

WWW.GREENLAND.COM  / –JUNGLE GERANIUM /  IXORA COCCINIA.

WWW.EN.M.WIKIPEDIA.ORG / IXORA COCCINEA

WWW.COMFSM.FM / IXORA COCCINEA

WWW.CONSERVATORYOFFLOWERS.ORG/ IXORA COCCINEA

PLEASE POST A COMMENT, GNANASURIA BAHAVAN D, (AUTHOR)

99999999999999999999999999

 

   

 

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...