Friday, June 30, 2023

INDUSTRIES CAN BE PROMOTED BY CASHEW IN INDIA 177. இந்தியாவில் முந்திரிப்பழங்கள் மூலம் மதுத்தொழிற்சாலைகள்

 

முந்திரிப்பழம் மதுத்தொழில்
தொடங்க உதவும்


(MUNTHIRI KOTTAI MARAM, CASHEWNUT TREE, , ANACARDIUM OCCIDENTALE, ANACARDIACEAE )

தாவரவியல் பெயர்: அனாகார்டியம் ஆக்சிடெண்டேல் (ANACARDIUM OCCIDENTALE)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : கேஷ்யு நட் ட்ரீ (CASHEWNUT TREE)

 தாவரக்குடும்பம்  :  அனகார்டியேசி (ANACARDIACEAE)

தாயகம்: பிரேசில், தென் அமெரிக்கா

இந்தியாவில் எந்த சுவீட் கடைக்குப் போனாலும் அதிக விலைக்கு விற்பனை ஆவது என்ன சுவீட் ? ‘காஜூசுவீட்டுகள்தான். காஜூ கத்திலி, காஜூ அல்வா, காஜூ ரோல், மற்றும் காஜூ லட்டு. அது என்ன காஜூ ? கடைக்காரரிடமே கேட்டேன். முந்திரி கொட்டை சார்என்றார். அது என்ன மொழி சார் ?’ ‘அது தெரியாது சார்என்றார்.

சொந்த ஊர் பிரேசில்

அதற்குப் பிறகு ரொம்பப் பிரயாசைப்பட்டு நான் கண்டுபிடித்தேன். முந்திரி மரத்திற்கு சொந்த ஊர் பிரேசில். பிரேசில் நாட்டின் தேசிய மொழி போர்ச்சுக்கீசிய மொழி. அதனால் காஜூஎன்றால் போர்ச்சுக்கீசிய  மொழியில் முந்திரிகொட்டை. ஆனால் துருதுருவென எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்குப் பெயர் முந்திரிக்கொட்டைதானாம்.

எல்லா பழங்களுக்கும் கொட்டை பழங்களுக்கு உள்ளேதான் இருக்கும். முந்திரிப் பழத்தில் மட்டும்தான் கொட்டை வெளியே. கொட்டை முன்னால் இருக்கும் பழம் பின்னால் இருக்கும்.

ஆனால் இதெல்லாம் உண்மை இல்லை என்று எங்கள் அறிவியல் வாத்தியார் சொன்னார். நாம முந்திரி கொட்டை என்று சொல்வது உண்மையில் கொட்டை அல்ல. நாம் பழம் என்று சொல்வது பழம் அல்ல.

கொட்டை என்பதுதான் பழம். பழம் என்று நாம் சொல்வது உண்மையில் பழத்தின் காம்பு’.

அதிக உயரம் வளராமல் படர்ந்து வளரும் மரம். இன்னும் சொல்லப்போனால் அதன் கிளைகள் பல தரையில் படுத்துக் கிடக்கும். அதிகபட்சமாக 14 மீட்டர் உயரம் வரை வளரும்.

பிரேசிலுக்கு சொந்தமான மரம். 1550 ம் ஆண்டிலேயே பிரேசில் முந்திரியை ஏற்றுமதி செய்தது. ஆனாலும் இந்தியா, வியட்நாம், நைஜீரியா, ஐவரிகோர்ஸ்ட், பெனின், பிலிப்பைன்ஸ், கினியா பிஸ்சா, இந்தோனேசியா, பர்சீனாபாசோ ஆகிய நாடுகள் முந்திரியை அதிக அளவில் சாகுபடி செய்கின்றன.

உற்பத்தியில் நைஜீரியா ஏற்றுமதியில் இந்தோனேசியா

தற்போது உற்பத்தியில் நைஜீரியா முதலிடத்திலும் ஏற்றுமதியில் இந்தோனேசியா முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. முனைப்பும் முயற்சியும் இருந்தால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இரண்டிலுமே இந்தியா முன்னணியில் இருக்க முடியும் என்கிறார்கள் விஷயம் தெரிந்த சில விவசாய வல்லுநர்கள். உற்பத்தியில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். 

முந்திரியின்  பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: முந்திரி (MUNTHIRI)

இந்தி: காஜூ (KHAJU)

மலையாளம்: காசு மாவு (KASU MAVU)

தெலுங்கு: முந்தாமாமிடி (MUNTHAMIDI)

கன்னடம்: கோடம்பி (KODAMBI)

சமஸ்கிருதம்: அக்னிகிரிட்டா (AGNIGRITTA)

மணிப்புரி: காஜூ (KHAJU)

மராத்தி: காஜூ (KHAJU)

பெங்காலி: ஹஜ்லி பாதாம் (HAJLI BADAM)

 கொங்கணி: காசு (KASU)

முந்திரி மேல் ஓட்டு எண்ணைய்

இது ஒரு வாணிக மரம். பட்டையில் வடியும் பாலிலிருந்து கருமையான மை தயாரிக்கலாம். தழை, முந்திரி விதை மேல் ஓட்டிலிருந்து எடுக்கப்படும் சி.என்.எஸ்.எல். (CASHEWNUT TREE) முந்திரி எண்ணெய் தயாரிக்கலாம்.

இந்த எண்ணெய் மிக வேகமாக இயங்கும் ஏரோப்பிளேன் எஞ்சின் போன்றவற்றிற்கு  உயவு எண்ணெயாகப் பயன்படுத்தலாம். இது தவிர வாட்டர் புரூஃபிங், பெயிண்ட், போன்றவை தயாரிக்கவும் இது உதவுகிறது.

இதனை இரண்டாம் உலகப் போரின்போது நாஜி படைகளின் வாகனங்களைப் பழுதுபடச் செய்வதற்காக முந்திரி எண்ணெயைப் பயன்படுத்தியதாகச் சொல்லுகிறார்கள்.

போர்ச்சுக்கீசியர்கள் கொண்டுவந்த  முந்திரி  

உலகத்திலேயே மிகப்பெரிய முந்திரி மரம் பிரேசில் நாட்டில் நேட்டல் (NATAL) என்ற நகரத்தில் உள்ளது. ரியோ கிராண்டி டோ நாட்டி (RIO GRANDI  DO NATI) என்ற மாநிலத்தில் உள்ளது இந்த நேட்டல் நகரம்.

ஆச்சரியமான செய்தி என்னவென்றால் 70 மரங்களை ஒன்று சேர்த்தால் எவ்வளவு சைஸ் இருக்குமோ அந்த அளவு உள்ளதாம் அந்த ஒரு மரம். அதாவது 8400 சதுர மீட்டர் பரப்பில் பரவி உள்ளது, இந்த மரம்.

ஒரு ஏக்கர் என்பது 4000 சதுர மீட்டர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் வயது 1130 ஆண்டுகள். இன்னும் கூட ஓரு வருஷத்தில் 60000 பழங்கள் காய்க்கிறதாம். நம்ம ஊரில் என்றால் சுத்திப் போடலாம்.

பிரேசிலிலிருந்து, போர்ச்சுக்கீசியர்கள் முதன் முதலாக இந்தியா வந்தபோது சும்மா வரவில்லை. வரும்போது கொஞ்சம் முந்திரி செடிகளைக் கொண்டுவந்து கோவாவில் நட்டுவிட்டுப் போனார்கள். அங்கிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

திரும்பிய பக்கம் எல்லாம் முந்திரிப்பழ ஜூஸ்

இந்தியாவில் முந்திரிப்பழங்களைவிட கொட்டைகள் (பருப்பு) பிரபலம். பிரேசிலில் கொட்டைகளைவிட பழங்கள்தான் பிரபலம். பிரேசிலின் வடகிழக்குப் பகுதிதான் முந்திரி மரத்தின் சொந்த ஊர் என்கிறார்கள்.

அந்தப் பகுதிக்கு அதிர்ஷ்டவசமாக நானும் போயிருந்தேன். அங்கு எந்த ஓட்டலில் நுழைந்தாலும் ஒரு டஜன் ஜூஸ் வகைகள் இருக்கும். அதில் முந்திரி ஜூஸ்சும்  ஒன்றாக இருக்கும்.

கோவா மற்றும் காங்கோவின் முந்திரிப்பழ பீர்

கோவாவில் முந்திரிப் பழத்திலிருந்து தயாரிக்கும் பென்னி (FENNI) என்னும் மதுவகை மிகவும் பிரபலமானது. இதில் 43 முதல் 45 சதம் ஆல்கஹால் உள்ளது. இதேபோல தான்சானியாவில் ஒரு மதுவகை தயாராகிறது. அது பென்னியைவிட ரொம்ப ஸ்ட்ராங். அதன் பெயர் காங்கோ’. பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளிலும் இது மாதிரி மதுவகைகள் நிறைய இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் உற்பத்தி ஆகும் முந்திரி பழங்களைப் பயன்படுத்தி குறைந்தது நாலைந்து மதுத் தொழிற்சாலைகளைத் தொடங்க முடியும். விவசாயிகள் சிறு தொழிலாகத் தொடங்கக் கூட அனுமதிக்கலாம். முந்திரி விவசாயிகளுக்கு பழங்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். முந்திரி உற்பத்தியும்  கூடுதலாகும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...