சீமை ஆல மரம். அழகுக்காக
பொதுப் பெயர்கள்:
ரப்பர் பிக்> இந்தியன் ரப்பர் புஷ், இந்தியன் ரப்பர் ஃபிக் (RUBBER FIG, INDIAN RUBBER BUSH, INDIAN RUBBER TREE)
தாவரவியல் பெயர்:
பைகஸ் எலாஸ்டிகா (FICUS
ELASTICA)
தாவரக் குடும்பம்
பெயர்: மோரேசி (MORACEAE)
தாயகம்: இந்தியா உட்பட தெற்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா ((INDIA INCLUDING SOUTH ASIA & SOUTH EAST ASIA)
பல மொழிப் பெயர்கள்
தமிழ்: சீமை ஆல மரம், ரப்பர் மரம் (SEEMAI
ALAMARAM, RUBBER MARAM)
மராத்தி: ரப்ராச்சோ வாட் (RABRACHO VAD)
மலையாளம்: சிமாயல் (SIMAYAL)
தெலுங்கு: ரப்பரு (RABBARU)
கன்னடா: கோலி (GOLI)
அசாமிஸ்: அதா போர் (ATHA BHOR)
ரப்பர் மரம்
ஓர் அழகு மரம்
வணிக ரீதியான ரப்பர்
மரமல்ல இது. அழகுக்காக வளர்க்கும் ரப்பர்
மரம்> இது அதேகமாய் இந்தியா முழுவதும்
வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்க்கும் அழகு மரம்.
பாலெடுத்து ரப்பர்
தயாரிக்கும் மரம் இதுவல்ல. இது உண்மையாக
ஆல அரசமரம் குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால்தான் தமிழில்
இதனை சீமை ஆல மரம் என்கிறார்கள்.
இவை எல்லமே
அத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. இனி நாம் சீமைஅத்திமரம் என அழைக்க வேண்டும்.
இந்தியாவிற்கு
சொந்தமான மரம்
வடகிழக்கு இந்தியா, இமயமலையின் கிழக்குப் பகுதி> மற்றும் தென்கிழக்கு
ஆசிய நாடுகளையும் சொந்தமாகக் கொண்ட மரம் இது.
அதனால் தான் இதனை இண்டியன் ரப்பர் என அழைக்கிறார்கள்.
இலைகள்தான் இதன் அழகு
இந்தச் செடிகள்
இல்லாத செடி விற்பனை நர்சரிகளே இல்லை எனலாம். பெரிய இலைகள், முட்டை வடிவ இலைகள், கருப்பச்சை நிறத்தில்
லேமினேஷன் செய்தது போன்ற இலைகள். செயற்கை இலைகள் போல தென்படும் இயல்பான இயற்கை இலைகள்.
இளம் மரங்களில்
இலைகள் பெரியதாக இருக்கும்> பெரிய மரங்களில்
இலைகள் சிறுசாக இருக்கும். இலைகள் தடிமனாக
இருக்கும். அவ்வளவு சீக்கிரம் அவை
வாடாது. அவை காயுமே தவிர
அவ்வளவாக வாடாது.
பெரிய இலைகள் 35 செ.மீ. நீளம் வரையும் அகலம் 15 செ.மீ. வரையும் இருக்கும். அந்தி மரம், ஆலமரம், அரசமரம் எல்லாம் ‘மோரேசி’ தாவரக் குடும்பத்தைச்
சேர்ந்தவைதான். ஆதனால்தான் இதன் பழங்கள்
சட்டெனப் பார்த்தால் அத்திப்
பழங்கள் மாதிரியே இருக்கும்.
இதுவும் பெரிய மரமாக
வளரும். உயரம் கூட 40 மீட்டர்வரை
வளரும். இதுவும் பால் வடிக்கும், இந்தப் பாலிலும் ரப்பர் தயார்
செய்யலாம்.
ரப்பர் மரம் என்பது
வேறு>
ரப்பர் பால்
எடுக்கும் மரம் என்பது வேறு> அதன் தாவரவியல் பெயர்
ஹெவியா பிரேசிலன்சிஸ் (HEVEA BRASALIENSIS). இது ஈப்பார்பியேசி (EUPHORBIACEAE) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
ஆல மரத்தைப்போல இந்த
மரமும் விழுதுவிட்டு இறங்கி பூமியில் நிலைகொள்ளும். சில விழுதுகள் தனிமரம் போலவே பருத்துக்
காணப்படும்.
மகரந்த சேர்க்கைக்கு
எற்பாடு செய்யும் குளவி
அத்தி பூக்காது காய்க்காது
என்பது சரியல்ல, என்று நாம் எற்கனவே தெரிந்து கொண்டுள்ளோம். அந்தி பூக்கும். அத்தி காய்க்கெல்லாம். அத்தி பூக்களின்
மகரந்தசேர்க்கைக்கு உதவுவது ஒரு வகைக் குளவி என்பதை மறந்திருக்க மாட்டீர்கள்.
அதுபோல இந்த
சீமை ஆலம் பூக்களிலும் மகரந்த
சேர்க்கைக்கு ஏற்பாடு செய்வதும் ஒரு வகையான குளவிகள்தான்.
உயிர் வேர்ப்பாலங்கள் தெரியுமா? (
WHAT IS LIVING ROOT BRIDGES)
உலகத்திலேயே அதிக
மழைப் பொழிவைத் தரும் இந்திய மாநிலம் மேகாலயா.
ஆண்டுக்கு சராசரி மழையாக 11872 மி.மீ பெய்யும் ‘மான்சிராம்’ என்ற ஊர் இருக்கும் மலைக்கு காசி மலைத்
தொடர் என்று பெயர்.
காசி மற்றும் ‘ஜெய்ன்ஷியா’ பழங்குடி மக்கள்
இங்கு வசிக்கும் காசி மற்றும் ஜைன்ஷியா’ இது என்னும் பழங்குடி மக்கள்
இந்த உயிர் வேர்ப் பாலங்கள் கட்டுவதில் கில்லாடிகள். இதனை கைகளினால் செய்யப்படும் வேர்ப் பாலம் (HAND MADE ROOT BRIDGE) என்றும்
சொல்லுகிறார்கள். காடுகளில் ஊடாக ஒடும்
ஒடைகளைக் கடக்க இது போன்ற பாலங்களை அமைக்கிறார்கள். அதற்கு உதவியாக இருப்பது தனது
வேர்களைத் தரும் இந்த சீமை ஆல மரங்கள்தான்.
இந்த ரப்பர்பால்
உபயோகமாகுமா?
இந்த மரத்தில் எல்லா
பாகங்களிலும் பால் வடியும். இதனை லேடக்ஸ் (LATEX) என்று சொல்லுகிறார்கள். இந்தப்பாலில் ரப்பர்
செய்யலாம். ஆனால் வணிக ரீதியில் பயன்படாது என்கிறார்கள்.
காரணம், இந்தப்பால் கண்கள் மற்றும் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். அதனை உட்கொண்டால் நச்சுத் தன்மை உடையது.
பரவியிருக்கும்
இடங்கள் (DISTRIBUTION)
நேப்பாளம் முதல்
இந்தோனேசியா வரை, பூட்டான், இந்தியா வின்
வடகிழக்குப் பகுதிகள், பர்மா, சைனா, மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளில் இந்த
மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில், வெப்பமண்டலப் பகுதிகளில், உதாரணமாக ஹவாய்,வெஸ்ட் இண்டிஸ் போன்ற இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு காலகட்டத்தில் இந்த மரங்கள் ஐரோப்பிய நாட்டு அழகு மரமாக
அடியெடுத்து வைத்தது.
மருத்துவப் பயன்கள்
இதன்
விழுதுகளிலிருந்து எடுக்கும் சாற்றை மருந்தாகப்
பயன்படுத்தி உடலில் ஏற்படும் காயங்கள், புண்கள் ஆகியவற்றை
குணப்படுத்தலாம். ‘விப் வேர்ம்’ (WHIP
WORM)
என்று சொல்லப்படும், புழுக்களால் ஏற்படும்
அசௌகரியத்திற்கு டிரைசூரியாசிஸ் (TRICHURIASIS) என்று பெயர், இதனைக் கட்டுப்படுத்தும், அல்லது
குணப்படுத்தும் சக்தியும் இந்த மரத்தில் உள்ளது.
இதிலும் எல்லா ரப்பர்
பொருட்களும் செய்யலாம் (THIS
RUBBER MAY BE USED)
இந்த மரத்தின் ரப்பர்
பாலிலும் எல்லாவிதமான ரப்பர் பொருட்களும் செய்யலாம் எனத் தெரிகிறது. வாகனங்களில் பயன்படுத்தும் பலவகையான டயர்கள், கார்கள் மற்றும் இதர எஞ்சின்களில் உபயோகமாகும் ரப்பர் பொருட்கள், காலணிகள், விளையாட்டு சாமான்கள், பொம்மைகள்> கையுறைகள் அத்தனையும்
செய்யலாம்.
இதன் பாலில்
இருக்கும் நஞ்சினை நீக்குவது என்பது பெரிய காரியம்
இல்லை.
சுமாரான தரம் கொண்ட
மரங்கள்
இந்த மரங்கள் சுமாரான
தரம் உள்ளவைதான். போர்டுகள்> கம்பங்கள்> படகுகள்> மற்றும் எரிபொருளாக இதன் மரங்களை பயன்படுத்தலாம்.
50 சத விதைகள் முளைக்கும்
விதைகள் சேகரித்த
மூன்று மாதங்களில் இதன் முளைப்புத் திறன் குறையாது. புதிய விதைகள் 20 முதல் 50 சதம் வரை நன்கு முளைக்கும். இந்தியாவில் இளஞ்செடிகள் தாமதமாக
வளர்கின்றன.
நன்கு முற்றிய
கிளைகளை வெட்டி நடலாம். விண்பதியன்
முறைகளிலும் கன்றுகளை உற்பத்தி செய்து நடலாம்.
மலைக் காடுகளில்> மலை உச்சிப்
பகுதிகளில்> மற்றும் சுண்ணாம்பு மலைக் குன்றுகளில் இந்த
மரங்கள் நன்கு வளரும்.
கொசுறு
சிலர் இதனை வணிக ரீதியில் பயன்படுத்த முடியும் என்கிறார்கள், சிலர் முடியாது என்கிறார்கள், எதுசரி ? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
TO
READ FURTHER
WWW.TA.WIKIPEDIA.ORG/”SEEMAI
AAL”
WWW.FLOWERSOFINDIA.NET/FLCUS
ELASTICA
WWW.EN.WIKIPEDIA.ORG/FICUS
ELASTICA
WWW.TROPICALTHE
FERNS.INFO/FICUS ELASTICA
WWW/HOUSEPLANTSEXPERTS.COM
/ FICUS ELASTICA
WWW.OURPLANTS.COM/ /FICUS
ELASTICA
POST
A COMMENT PLEASE, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)
99999999999999999999999999999999999999
No comments:
Post a Comment