Sunday, June 18, 2023

INDIAN ELM HERB TREE 31. மூலிகை மரம் ஆயா



ஆயா மூட்டுவலி மூலிகை மரம்


வடக்கு தமிழ் நாட்டின் உள்ளூர் சரக்கு, சக்கரை நோய், தொழு நோய் முடக்கு வாதம் ஆகிய அசாதாரண நோய்கள் உட்பட அரை  டஜன் சாதாரண நோய்களை குணப்படுத்த கட்டை முதல் பட்டை வரை கைகொடுக்கும் மரம், மேலும் ஆராய்ச்சிகள் செய்தால் அபூர்வமான மூலிகையாய் அவதாரம் எடுக்க இருக்கும் மரம், இந்த ஆயா மரம். மற்றபடி ஆயாக்களுக்கும் இந்த மரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

தாவரவியல் பெயர்: ஹாலோப்டீலியா இன்டெக்ரிஃபோலியா (HOLOPTELIA INTEGRIFOLIA)

தாவரக் குடும்பம் பெயர்: உல்மேசியே (ULMACEAE)

பொதுப் பெயர்கள்: இண்டியன் எல்ம், என்டயர் லீவ்டு எல்ம் ட்ரீ, ங்கிள் கார்க் ட்ரீ, சவுத் இண்டியன் எல்ம் ட்ரி (INDIAN ELM, ENTIRE LEAVED ELM TREE, JUNGLE CORK  TREE, SOUTH INDIAN ELM TREE)

ஆயா மரத்தின் பல மொழிப் பெயர்கள்.

இந்தி: சில்பில் (CHILBIL) காஞ்சு, பாப்ரி (KANJU, PAPRI)

மராத்தி: அயிவு சாதடா வாவலா (AINA SADHADA, VAVALA)

தமிழ்: ஆயா, தம்பச்சி, ஆவி மரம் (AYA, THAMBACHI, AAVI MARAM)

மலையாளம்: ஆவல் (AVAL)

தெலுங்கு: நாலி (NALI)

பெங்காலி: நாட கரஞ்சு (NADA KARANJU)

ஒரியா: தாரஞ்சன் (THARANJAN)

குஐராத்தி: சாரல்> கஞ்சோ (SARAL, KANJO)

சமஸ்கிருதம்: சிர்விவா (SIRVIVA)

நேபாளி: சனோ பாங்ரோ (SANO BANGRO)

இருளா: ஆயி மரம் (AYI MARAM)

கன்னடா: தப்ஸி, தவசி (THAPSI, THAVASI)

இறக்கை முளைத்த விதைகள்

ஆயா மரங்கள் இலை உதிர்க்கும் மரங்கள்.  அடிமரம் சாம்பல் வண்ணத்துடன் இருக்கும்.  இலைகள் கூம்பு> மற்றும் கோள வடிவத்தில் அடர்பச்சை நிறத்தில் ரம்பம் மாதிரி பற்களை உடையதாய் இருக்கும்.  இதன் விதைகள் வித்தியாசனமாவை.  கரிய உருண்டையான விதைகளைச்சுற்றி வட்ட வடிவில் மெல்லிய சருகுபோன்ற இறகுகளுடன் இருக்கும்.

அழகான நிழல் மருந்து மரம்

நிழல் மரமாக, அழகு மரமாக, மரக்கட்டைகள் மற்றும் மரச்சாமான்கள் செய்ய, மருந்துகள் செய்ய ஏற்றவை இந்தஎல்ம்வகை மரங்கள்.

இதன் பட்டைகள், இலைகள் பலவிதமான மருந்துகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.  முக்கியமாக முடக்குவாதம், சக்கரை நோய், நீர்கட்டி வீக்கம், தொழுநோய் உட்பட பல்வேறு தோல்சம்மந்தமான நோய்கள், மூல நோய்கள், வயிறு சம்மந்தமான உபாதைகள், வெப்ப மண்டலப் பகுதிகளில் ஏற்படும் வாந்தி போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

வேலூர் வாணியம்பாடி.

வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, தும்பேரி, சிக்கனாங்குப்பம், தெக்குப்பட்டு, மல்லகுண்டா, நாயனசெருவு, நாட்றம்பள்ளி பகுதிகளில் எல்லாம், அதனை தப்புச்சி மரம் என்று சொல்லுகிறார்கள்.  இங்கு துரிஞ்சி மரம்போல இயற்கையாக பரவி உள்ளது.  இதனை தமிழ் நாட்டில் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.  அவை ஆயா, ப்புச்சி, ஆவி மரம், அவில்தோல், அயில் பட்டை மற்றும் வெள்ளைஆயா.

மூட்டு வீக்கம் மூட்டு வலியா

இதன் பட்டையை கொதிக்கவைத்து> கொழகொழப்பான அதன் சாற்றினைப் பிழிந்து மூட்டு வீக்கத்தின் மீது தட வீக்கமும் வலியும் குணமாகும்.

இலைகளிலிருந்து கஷாயம் தயாரித்து> அதனை தோல் நோய்களால் பாதிக்கப்;பட்ட இடங்களில் தடவிவர சுலபமாக நோய்கள் குணமாகும்.

நகசுத்தி வந்தால்> இந்த மரத்தின் பட்டையை நன்கு அரைத்து கூழாக்கி அதன் மீது தடவ> வலிகுறைந்து விரைந்து குணமாகும்.

மலேரியா ஜுரம்

மலேரியா ஜுPரத்திற்கு ஒரு வித்தியாசமான சிகிச்சை சொல்லுகிறார்கள்;  இதன் பட்டையை, பழைய ஒரு ரூபாய் காசு அளவிற்கு வட்டமாக நறுக்கி எடுத்து அதனை, இடது கையில் தோள்பட்டைக்குக்  கீழே கட்டிக் கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான்.

ஓவ்வொரு மரத்தைப் பற்றியும் எழுதும் போதும் இதில் தரப்படும் சிகிச்சை முறைகள் நீங்கள் அவற்றை கடை பிடிப்பதற்காக அல்ல. 

டாக்டரிடம் கேளுங்க

சிகிச்சை முறைகளை ஒரு மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே கைக்கொள்ள வேண்டும்.  ஆனால் இவை பாரம்பரியமாக இயற்கையோடு இயற்கையாக நமது முன்னோர்கள் கடைபிடித்தவைதான். 

இந்த அனுபவங்கள்  மறைந்துவிடாமல் மறந்து விடாமல் இருப்பதற்காக மட்டுமே இந்தச் செய்திகளை இங்கு பதிவு செய்கிறேன்.

சாம்பல் நிற பட்டை

மரத்தின் பட்டை வெண்மையான சாம்பல் நிறமாக இருக்கும்.  மரம் லேசாக, மஞ்சளும் காவியும் கலந்த நிறமாக, புதியதாக வெட்டிய மரத்தில் ஒரு விதமான வாடை வீசும்.  காய்ந்ததும்  அது காணாமல் போய்விடும்.

இமயமலை வரை

ஆயாமரம் சமவெளிகளில் அதிகம் வளரும்.  மலையடிவாரங்களில் அதிகபட்சமாக 1100 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் நன்கு வேகமாக வளரும்.  இந்தியா, இமயமலை, ஸ்ரீலங்கா, பர்மா, இந்தோ சைனா, ஆகிய இடங்களில் ஆயாமரம் பரவலாக வளர்ந்துள்ளன.

ஆராய்ச்சிகள் வேணும்

ஆயா மரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சொல்லும்போது, இது  சகலவல்லமை பொருந்திய மூலிகை மரம் என்கிறார்கள்.  ஆனால் ஆங்கில மருந்துகள் தயாரிக்க தேவையான ஆராய்ச்சிகளை செய்வது அவசியம்.     

என்னுடைய தோட்டத்தில் நான்கைந்து மரங்கள், சுயம்புவாக வளர்ந்தவை> யாரும் விதைபோட்டு, கன்று நட்டு வரவில்லை.  தானாக வளர்ந்தவை. 

தழைய தழைய வளரும்

இவற்றின் மருத்துவப் பண்புகள் பற்றி எல்லாம் உள்ளூர் மக்களுக்கு தெரியவில்லை.  நிலத்துக்கு தழை வெட்டிப் போடலாம்.. தழைய தழைய வளரும் சார்  என்கிறார்கள். 

தாவது தழைஉரமாகப் பயன்படுத்துகிறார்கள்> ம்புட்டுதான்.

உலக சுகாதார நிறுவனம் சொல்லுது

தாவரங்கள் நோய்களை குணப்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.  உலகம் முழுக்க உள்ளவர்களில் பெரும்பகுதி மக்கள் இன்னும் மூலிகை மருந்;துகளைத்தான்  பயன்படுத்தி வருகிறார்கள். 

உலகம் முழுக்கவே அந்தந்த நாட்டில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளை பதிவு செய்யத் தொடங்கி உள்ளனர்.  இந்த பூமியில் சுமார் 2.5 முதல் 5 லட்சம் தாவரவகைள் (PLANT SPECIES) உள்ளன.  இவற்றில் இந்தியாவில் இருப்பவை 47000 தாவர வகைகள் மூலிகைகள் என்கிறார்கள். இந்தியாவில் சுமார் 800 வகைகளை மட்டுமே நாம் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்துகிறோம்.

அறிவியலுக்கு உதவுவது அனுபவ அறிவுதான்.  அது கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களிடையேதான் அபரிதமாய் உள்ளன.  அது வழிக்கொழிந்து போகாமல் காப்பாற்றும் கடமை நாம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தப்புச்சி மரங்கள் செப்டெம்பர் முதல் ஐனவரி வரை இலைகளை உதிர்க்கும்>  ஐனவரி-பிப்ரவரி மாதங்களில் பூக்கும்>  ஏப்ரல்-மே மாதங்களில் காய்க்கும், பழுக்கும்> விதைகள் இறக்கை கட்டி பறக்கும்.

இந்த மரம் பற்றி கிராமங்களில் ஒருவகையான நம்பிக்கை இன்றும் உள்ளது.  பேய்கள் மற்றும் ஆவிகளுக்கு இந்த மரங்களில் தங்கி இருக்க ரொம்பவும் பிடிக்குமாம்.  

பேயோட்டுபவர்கள், பேய் பிடித்தவர்களின் தலை முடியைக் கொண்டுவந்து இந்த மரத்தில் வைத்து, ஆணி அடித்துவிட்டு போய் விடுவார்கள்.  அதற்குப் பிறகு அந்தப் பேய் அந்த நபரை விட்டுவிட்டு அந்த மரத்தையே பிடித்து உலுக்கிக் கொண்டிருக்குமாம்.

ஆயாவை மறக்காதீர்கள்

சிறுவனம் அமைப்பதில் பெரும் கவனம் கொண்டுள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! உங்கள்  நடவு மரங்களின் பட்டியலில் அன்புகூர்ந்து ஆயா மரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள் !

TO READ FURTHER

1. Biomed Research International – Holoptelia Integrifolia: A review of its ethnobotany, Pharmacology & Phytochemistry

2. Holoptelia integrifolia: An overview – European Journal of Applicable Science – BN college of Pharmacy, Raipur, Rajasthan, Geethanjali Institute of Pharmacy, Dabok, Raippur, Rajasthan, India

3. www.opendata.keystone- Foundation.org / Holoptelia integrifolia

4. Senthu Herbals.blogspot.co, /  Holoptelia integrifolia

5. Indiabiodiversity.org - Holoptelia integrifolia – India Elm

PLEASE POST A COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

9999999999999999999999999

  



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...