ஒதியன்மரம், மிகவும் சிறப்பாக தீக்குச்சிகள்
செய்யப் பயன்படுகிறது> மரப்பெட்டிகள் வண்டிச் சக்கரங்கள் ஏர்க்கலப்பைகள் உலக்கைகள் சிலேட் சட்டங்கள், காகிதத் கூழ் ஆகியவை செய்கிறார்கள், இந்த மரத்திலிருந்து
வடியும் பிசினிலிருந்து ஜிங்கோ மற்றும்
கம்பீனா கம் என்னும் உயர்வகை கோந்துகளை (ஒட்டுப் பிசின்) தயார் செய்கிறார்கள். இதனை மாத்திரைகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
பொதுப் பெயர்:
இண்டியன் ஆஷ்; ட்ரீ (INDIAN
ASH TREE)
தாவரவியல் பெயர்:
லேன்னியா கொரமேண்டலிகா (LANNEA COROMANDELICA)
தாவரக் குடும்பம்
பெயர்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)
தாயகம்: இந்தியா
பிற மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)
தமிழ்: ஒதியன் மரம், உதிமரம், உலவை மரம் (OTHIAN MARAM, UTHIMARAM, ULAVAI MARAM)
இந்தி: மோஹின் (MOHIN)
மணிப்புரி: ஆமென்(AAMAN)
மராத்தி: மோயி (MOYI)
மலையாளம்: ஒதியன்
மரம் (OTHIYAN MARAM)
தெலுங்கு: அசய்மீகி (AJASMIGI)
கன்னடா: கொட்டா, கும்பினா, குரட்டிகி, உடிமரா (GODDA,
GUMPINA, KURATIGE, UDIMARA)
பெங்காலி: ஜியோலா (JIOLA)
ஒரியா: இன்ட்ராமய், மொய் (INDRAMAI,
MOI)
கொங்கணி: மொய் (MOI)
கூர்க்: கொட்டானா மரா (GODDANAMARA)
ஆசாமிஸ்: ஜியா (JIYA)
குஐராத்தி: மாவெடி (MAVEDI)
சமஸ்கிருதம்: ஜிங்கினி (JAINGHINI)
ஆடுகளுக்கு நல்ல
தீவனம் (BEST FODDER)
பரவி இருக்கும்
இடங்கள் (DISTRIBUTION)
இந்தோமலேஷியா மற்றும் சைனா
ஆகிய இடங்களில் இந்த மரம் அதிகம் பரவியுள்ளது.
இந்தியாவில் கேரளா மற்றும் அசாம்
மாநிலங்களில் எல்லா மாவட்டங்களிலும் பரவியுள்ளது.
அத்துடன் அந்தமான் நிகோபார் தீவுகள்,ஆந்திரப்பிரதேசம், பீஹார், மகாராஷ்ட்ரா, மந்தியப்பிரதேசம், ஒரிசா, பஞ்சாப்,,உத்தரப்பிரதேசம் ஆகிய
இடங்களிலும் இந்த ஒதிய மரம் அதிகம் பரவியுள்ளது.
எங்கள் வீட்டிற்குப்
பின்னால் ஐந்தாறு ஒதியன் மரங்கள் இருந்தன. வாரத்தில் குறைந்தது இரண்டு
நாட்களுக்காவது ஆட்டுக்காரப் பையன்கள் ஆடுகளுக்கு இதில் தழை உடைத்துப்
போடுவார்கள்.
ஆடுகள் இதன் தழைகளை
விரும்பிச் சாப்பிடும்.
சாப்பிட்டுவிட்டுப் போன பின்னால் இலை தழை
இல்லாத குச்சிகளும் அவற்றின் ஊடாக ஆட்டில் புழுக்கைகளும்
இறைந்து கிடக்கும். அடி மரத்தில் நிறைய
பிசின் தள்ளி இருக்கும்.
மரத்தை லேசாகக்
காயப்படுத்தினால் கூட ஊதா நிறச் சாறு “சொள சொள” வென வடியும். பூக்கும் காய்க்கும் பருவத்தில் நிறைய
பூக்களும் காய்களும் மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும். ஆடி மாதக் காற்றில்
அடிக்கடி கிளைகள் முறிவது ஒதியன் மரத்தின் தான் நடக்கும்.
எனக்கு இப்போதும் கூட
ஒதியன் மரங்களைப் பார்த்தால் ஊளச்சதை போட்ட மனிதர்களைப் பார்ப்பது போல
இருக்கும்.
தீக்குச்சிகள்
செய்யலாம்
இதன் மரம் பல்வேறு
வகைகளில் பயன்படுகிறது மிகவும் சிறப்பாக தீக்குச்சிகள்
செய்யப் பயன்படுத்துகிறார்கள். அத்தோடு மரப்பெட்டிகள் வண்டிச் சக்கரங்கள் ஏர்க்கலப்பைகள் உலக்கைகள் சிலேட் சட்டங்கள் காகிதத் கூழ் ஆகியவை
செய்யப் பயன்படுத்தப் படுகின்றது.
அரசாணிக்கால்
மரம்
இதன்
மரப்பட்டைகளிலிருந்து சாயம் எடுக்கிறார்கள்.
இந்த மரத்திலிருந்து வடியும் பிசினிலிருந்து உயர்வகை கோந்து ஒன்றினைத் தயார்
செய்கிறார்கள். அதன் பெயர் ஜிங்கோ.
ஆனால் ஒதியன் மரங்கள்
மிகவும் மென்மையானவை. ஒதி பெருத்து உத்தரத்துக்கு
ஆகுமா?
என்று ஒரு தமிழில் ஒரு
பழமொழி உண்டு.
திருமணங்களில் அரசாணிக்கால் நட இந்த
மரத்தைப் பயன்படுத்துவார்கள்
இந்த மரங்களின் கிளைகளை வெட்டி நட்டால்
சுலபமாக துளிர்த்து வளரும்.
திருமணம் நடக்கும்போது அரசாணிகால் நடுவது
வழக்கம். அதில் ஒரு மூங்கில் மற்றும் ஒதியன் மரத்தின்
குச்சிகளையும் சேர்த்து நட்டு சடங்கு செய்வார்கள். இதற்கு அர்த்தம் மூங்கில்போல நிறைய குழுந்தைகள் பெற்று தங்கள் குலம் விளங்கச்
செய்வார்கள். எங்கு நட்டாலும்
துளிர்விட்டு வளரும். ஒதியன்போல மணப்பெண் தன் வம்சம்
பெருக்க உதவுவாள் என்பது ஐதீகம்.
ஓதியன் பிசின்
மாத்திரை
மருந்து மாத்திரைகளை, உருண்டையாக> கட்டையாக, கோள வடிவில் எனச் செய்வதற்கு அதன் இம்மிகள் அல்லது
துகள்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்ட வேண்டும்.
அதற்கு ஒரு வகையான செயற்கையான ஒட்டும் பசையை உபயோகப்
படுத்துகிறார்கள்.
அதற்கு பதிலாக
தற்போது ஒதியன் மரப்பிசின் உபயோகமாகிறது.
உதாரணமாக 200 மில்லி கிராம் மாத்திரை செய்ய 20 மில்லி கிராம் ஒதியன் பிசினைப் பயன்படுத்துகிறார்கள். ஒதியன் பிசின் இயற்கையானது. பக்க விளைவுகள் இல்லாதது. விpலை மலிவானது. சுலபமாக உற்பத்தி செய்யலாம். இதனை கம்பீனா கம் (GUMPENA
GUM)
என்று சொல்லுகிறார்கள.;
ஆந்திரப் பிறதேசத்தில் ஸ்ரீகாகுளம் விசாகப்பட்டினம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில்
உள்ள காடுகளில் அதிகமான கம்பீனா கம் உற்பத்தி
செய்கிறார்கள். ராஐஸ்தான் மாநிலத்தில்
ரவாட்பட்டா (RAWATBHATA) என்ற இடத்திலும்
கம்பீனா பெருமளவு உற்பத்தி ஆகிறது.
இயற்கை வனங்கள்
இயற்கை வனங்களைப் பெற்றுள்ள
மாநிலங்களில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். இந்தியாவில் உள்ள மொத்த பூக்கும் தாவரங்களில்
மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டது தமிழ்நாடுதான்.
இந்தியாவில்
இருக்கும் மொத்த பூக்கும் தாவரங்கள் 17672.> இவற்றில் தமிழ் நாட்டில் இருப்பவை மட்டும் 5640 தாவரவகைகள். இவற்றில் மூலிகைகள் 1559> மறைந்து வருபவை 533 வகைகள்> 260 வகை காட்டினங்கள் (சாகுபடி செய்து வரும் ரகங்களுடன் தொடர்புடையவை). மறைந்து போனவை என சிவப்புப் பட்டியலில்
இருப்பவை (RED LIST) 230 தாவரவகைகள். ஆக மொத்தம் 2582 வகைகள் மீதம்
இருக்கும் மரவகைகள் 3058.
ஓதியன் ஒரு மருந்து
மரம்
ஓதியன் ஒரு நோய்களை
குணப்படுத்தும் மருந்துகள் செய்ய உதவும் மூலிகை மரமும் கூட. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
அவை உடலில் ஏற்படும்
புண்கள் அல்லது காயங்களை குணப்படுத்துதல் பாலியல் உணர்வுத்
தூண்டியாக செயல்படுதல் குடற்புண்கள் காலரா வயிற்றுப்போக்கு> வயிற்றுக்கடுப்பு கண்ணோய், தொழுநோய்.> யானைக்கால் நோய்> பாம்புக்கடி> வயிற்றுவலி> பெண்குறிகளில்
எற்படும் உபாதைகள்> செரிமான மின்மை (DYSPEPSIA)> உடல் சோர்வு (DEBILATY)> கீல்வாதம் (GOUT) மற்றும் ஆஸ்துமா.
அதுமட்டுமில்லாமல்
நுண்ணுயிர்க்கொல்லி மற்றும் பூசணக் கொல்லியாகவும் (ANTI MICROBIAL & ANTI FUNGAL ACTIVITY) செயல்படக்கூடியது.
வேண்டுகோள், இனி நமது மரம் நடும் திட்டங்களில் எல்லாம் மறக்காமல் ஒதியன் மரங்களை சேர்க்க
வேண்டும், காரணம் இந்த மரம் ஒரு தொழில் மரமாக வளர்ந்து வருகிறத
TO
READ FURTHER
1. WWW.EN.M.WIKIPEDIA.ORG/”TAMILNADU”
2. WWW.TA.M.WIKIPEDIA.ORG/”OTHIYA
MARAM”
3. WWW.FLOWERS
OF INDIA.NET/”INDIAN ASH TREE”
4. WWW.IJPSOM
LINE.COM/ ISOLATION AND EVALUATION OF BINDING PROPERTY OF LANNEA COROMANDELICA GUM.
PLEASE
POST YOUR COMMENTS, REARDS- GNANASURIA BAHAVAN D (AUTHOR)
999999999999999999999999999999999
No comments:
Post a Comment