லண்டனில் டார்வின் சமாதி |
உலகில் முதல்முறையாக மண்புழுபற்றி பூர்வாங்கமான ஆராய்ச்சி செய்த ஒரே விஞ்ஞானி சார்லஸ்
டார்வின். டார்வின் என்ற பெயரைவிட குரங்கிலிருந்து மனிதன் பிறந்த அவருடைய பரிணாமக்
கொள்கை பிரபலமானது.
1809 ம் ஆண்டு முதல் 1882 ம் ஆண்டுவரை மண்புழு பற்றி ஆராய்ச்சி செய்த இயற்கை விஞ்ஞானி. அவருடைய 39 ஆண்டுகால ஆராய்ச்சியை அப்படியே பிழிந்து ஒரு புத்தகம் எழுதினார். அந்த புத்தகத்தின் தலைப்பு த பார்மேஷன் ஆப் வெஜிடபிள் மோல்ட் துரு த ஆக்ஷன் ஆப் வோர்ம் (THE FORMATION OF VEGETABLE MOULD THROUGH THE ACTION OF WORM).
ஒரு நாள் அதுபற்றிய ஒரு சிறுகுறிப்பை படித்துவிட்டு அப்படியே படுக்கையில் சாய்ந்தேன். படுத்த சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். அன்று என் கனவில் வந்தார் டார்வின.; என்னோடு மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தார் அவர். நான் என்ன கேட்டேன் அவர் என்ன சொன்னார் ? கீழே படியுங்கள்.
லண்டனில் தேம்ஸ் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. விடிந்தும் விடியாத காலைப்பொழுது. அதற்கு குறுக்காக கட்டியிருந்த பாலத்தில்> பிக்பென்கடிகாரத்தை (BIG BEN CLOCK) பார்த்துக்கொண்டே நடந்தேன். அதற்குப் பக்கத்தில் இருந்த பார்லிமெண்ட் கட்டிடத்தின் எதிரில் கையடக்கமான ஒரு பூங்கா இருந்தது.
உலகத்தின் பிரபலமான அரசியல் தலைவர்களின் சிலைகள் எல்லாம் இருந்தன. பூங்காவில் ஒரு மானுடம்கூட இல்லை. மண்டேலா சிலைக்கு அடியில் போய் உட்கார்ந்தேன். சொல்லி வைத்ததுபோல அங்கு ஒரு கோட்சூட் போட்ட பெரியார் மாதிரி ஒரு வெள்ளைக்கார தாடிக்காரர் வந்து உட்கார்ந்தார். வரும்போதே என்னைப் பார்த்து சிரித்தபடி ‘வணக்கம்’ என்றார்.
‘தமிழில் வணக்கம் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு தமிழ் தெரியுமா ? பார்க்க எங்க பெரியார் மாதிரியும் இயற்கை விவசாயப் பெரியார் நம்மாழ்வார் மாதிரியும் இருக்கிறீர்;;கள்’. என்றேன்.
‘எனக்கு தமிழும்; தெரியும். நீங்க சொன்ன இரண்டு பெரியார்களையும் எனக்கு தெரியும். ஒருத்தர் சமூக விவசாயத்தின் தந்தை இன்னொருத்தர் இயற்கை விவசாயத்தின் தந்தை ’ என்று சொல்லி சிரித்தார்.
‘ஆமாம் நீங்கள் யார் என்றே சொல்லவில்லை’
‘சரி நான் யார் என்று உங்களால் சொல்லமுடியுமா ?’
‘எங்கள் நாட்டில்; தாடி வைத்தால் சாமியார். உங்க நாட்டில் தாடி வைத்தால் விஞ்ஞானி என்று அர்த்தம.; நீங்கள் யார் என்று சொல்லுங்கள் ஐயா’
‘என்னோட பெயர் சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை கண்டுபிடித்த விஞ்ஞானி நான்தான்.; மண்புழுபற்றி 39 வருஷம் ஆராய்ச்சி செய்தவனும் நான்தான்'
‘ரொம்ப மகிழ்ச்சி ஐயா ..உங்கள நான் சந்திப்பேன் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை’
‘கனவில் நினைக்கவில்லை என்றால்கூட சந்திக்கலாம் அல்லவா ?. அதில் எந்த சிரமமும் இல்லை. இப்போது கூட அப்படித்தான் நாம் சந்திக்கிறோம்.’
‘நீங்கள் எதாவது எனக்கு சொல்லலாம். என்னிடம் ஏதாவது கேட்பதாக இருந்தால் கேட்கலாம்;. நான் இன்னும் கொஞ்சநேரம் மகிழ்ச்சியோடு உங்களோடு இருப்பேன்;’’
‘உங்கள் 39 ஆண்டுகால ஆராய்ச்சியில் மண்புழுபற்றி பல உண்மைகளை கண்டுபிடித்திருப்பீர்கள். அவற்றில் முக்கியமான கண்டுபிடிப்புகளைச் சொன்னால் உபயோகமாக இருக்கும்’
‘ மண்புழுக்களால் பார்க்க முடியாது. கேட்க முடியாது. காரணம் அதற்கு கண் இல்லை காது இல்லை. ஆனால் இரவு பகலை உணரும். தொட்டால் தெரியும். வாசனையை லேசாய் உணரும். தோலால் சுவாசிக்கும். நுரையீரல் இல்லை. அது இரவு நேரத்தில்தான் சுற்றித் திரியும். பகல் ஆனால் அது தன் வளைக்குள் படுக்கப் போய்விடும்’
‘டார்வின் சார்.. வெஜிட்டபிள் மோல்ட் என்று உங்கள் புத்தகத்தில் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படி என்றால் என்ன ?’
‘அதைப் புரிந்துகொள்ள அது எப்படி வளை செய்கிறது என்று சொல்ல வேண்டும். மண்கண்டத்தில் மண்ணை துளைத்துக் கொண்டே அதனை சாப்பிடவும் செய்கிறது.
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய். வளைக்கு வளையுமாச்சி. மண் சாப்பாடுமாச்சி. மண்ணில் இருக்கும் சத்துக்கள் அதற்கு உணவாகிறது. வளைகளோட கூரைக்கு இலைத்துண்டுகளால லைனிங் குடுக்குது.’
‘சின்னசின்ன கற்கள்> விதைகள் இதையெல்லாம் கொண்டுபோய் வளையின் அடிப்பகுதிக்கு லைனிங் குடுக்குதுங்;க. தன்னோட கழிவுகளால அந்த வளை முழுசையும் நிரப்புது. இதைத்தான் நான் அந்த காலத்துல வெஜிட்டபிள் மோல்ட்’ன்னு சொன்னேன். நீங்க அதைத்தான் மண்புழு உரம்ன்னு சொல்றிங்க..
‘டார்வின் சார் நாங்க மண்புழு உரம் தயார் செய்யறதப்பத்திக் கூட தெரிஞ்சி வச்சிருக்கிங்க..’
‘ ஆமா…எனக்கு தெரியும். தமிழ்நாட்டுல இப்போதான் நீங்க தீவிரமா இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சி இருக்கிங்க. ஆனா சிக்கிம் மாநிலத்துல முழுக்க இயற்கை விவசாயமா மாத்திட்டாங்க. அதுகூட எனக்குத்தெரியும்..’
‘ அதே மாதிரி நீங்க உங்க புத்தகத்துல பல இடங்கள்ல தமிழ்நாட்டு மண்புழுக்களப்பத்தி எழுதியிருக்கிங்க.. அதப்பாத்தப்போ எனக்கு ஆச்சரியமா இருந்திச்சி..’
‘ உலகத்துல தமிழ்நாட்டுல நீலகிரி> சிக்கிம்> கல்கத்தா - இந்த பகுதிகள்ல இருக்கற மண்புழுக்கள் சிறந்த மண்புழுக்கள்..நிறைய மண்புழு உரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மண்பழுக்கள்..’
‘ ஒரு நிலத்துல எவ்வளவு மண்புழுக்கள்; இருக்கலாம் அல்லது இருக்கணும். அப்பிடி ஏதாச்சும் ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிங்களா ? ’
‘ நான் சொல்றதை நல்லா கவனிங்க..ஒரு மண்புழு எவ்வளவு மண்பரப்பை வளமாக்க முடியும்னு கண்டுபிடிச்சேன். 200 சதுரஅடி பரப்புள்ள நிலத்தை வளப்படுத்த சுமார் 250 மண்புழுக்கள் வேண்டும். துல்லியமா கணக்குபோட்டு சொல்லணுமுன்;னா..ஒரு சதுரஅடி நிலப்பரப்புக்கு ஒண்ணேகால் மண்புழு வேணும்..’ என்று சொல்லி சிரித்தார் டார்வின்.
‘ ஒரு மண்புழு ஒரு வருஷத்துல எவ்ளோ மண்புழு உரம் உற்பத்தி செய்ய முடியம் ?
‘ எண்பது பவுண்டு. கிலோவுல சொல்றதா இருந்தா 36.32 கிலோ. ஒரு மண்புழு ஒரு வருஷத்துல உற்பத்தி செய்யக்கூடிய அளவு இது. சரி எனக்கு நேரமாச்சி வரட்டுங்களா மிஸ்டர் தமிழ் ? ’
‘கடெய்சியா ஒரே ஒரு கேள்வி ஐயா ..இப்போ நீங்க எங்க இருக்கிங்க?’
‘சொன்னா நம்ப மாட்டிங்க..கல்லறையில தான். என் கல்லறை லண்டன்ல ‘வெப்மின்ஸ்டர் அப்பே’ என்ற மாதா கோவில்ல இருக்கு. அங்க பாருங்க’
என்றார் டார்வின.; அவர் கை நீட்டிய திசையில் கூப்பிடு தூரத்தில் ஒரு மாதாகோயில் தெரிந்தது.
நான் ஆச்சரியப்பட்டு முடிப்பதற்குள் அவர் ஆவியாகப் பறந்து சென்று மிக அருகில் அந்த பழமையான மாதாகோவிலில் நுழைந்து மறைந்து போனார். அங்கு செல்லும் வழியில் ஒரு அம்புக்குறி போட்டு ‘வெஸ்ட் மின்ஸ்டர் அப்பே’ என்று போட்டிருந்தது.
அதற்குள் என் கனவு கலைந்தது. நான் தெக்குப்பட்டு கிராமத்தில் கட்டிலில் படுத்திருந்தேன்.
(குறிப்பு: லண்டனில் உள்ள ‘வெப்மின்ஸ்டர் அப்பே’ என்ற சர்ச்சில்தான் நான் அவரை சந்தித்தேன். அங்குதான் அவருடைய கல்லறை
உள்ளது. 2015 ல் லண்டனில் உள்ள ‘வெப்மின்ஸ்டர் அப்பே’ சென்று டார்வின் கல்லறையில் அவரை சந்தித்தேன். அவர் உள்ளே நான் வெளியே ! அவருக்கு மரியாதை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ஆச்சரியமும் பெருமையும் தரும் தருணமாக இருந்தது அது)
டார்வின் சமாதி உள்ள இடம் வெப்மின்ஸ்டர் அப்பே |
உலகத்தின் மிக முக்கியமான உயிரினம் எது ? இந்த கேள்விக்கு “மண்புழு” என்று சொன்னார், உலகின் பிரபலமான விஞ்ஞானி சார்லஸ் டார்வின்.
தகுதியானவை நிலைத்து வாழும் என்னும் பரிணாமக் கொள்கைக்கு சொந்தக்காரர் - சார்லஸ் டார்வின்.
39 ஆண்டுகள் “மண்புழுக்கள்” பற்றிய ஆராய்ச்சியை செய்தவர் அவர் என்பது ஆச்சரியமான செய்தி.
200 சதுர அடி நிலப்பரப்பில் சுமார் 250 மண்புழுக்கள் அந்த மண் பரப்பை வளப்படுத்தும் என்பது சார்லஸ் டார்வின் கண்டுபிடிப்பு.
ஓவ்வொரு மண்புழுவும் ஒரு ஆண்டில் 80 பவுண்டு உயர் தரமான உரத்தை உற்பத்தி செய்யும் என்பதும் அவருடைய கண்டுபிடிப்புதான்.
1809 முதல் 1882 வரை வாழ்ந்த சார்லஸ் டார்வின் மண்புழு பற்றி எழுதிய
புத்தகத்தின் பெயர் “THE FORMATION OF VEGETABLE MOULD THROUGH THE ACTION OF
WORM”.
GNANASURIA
BAHAVAN D
No comments:
Post a Comment