Monday, June 12, 2023

HOW TO TRAIN AND PRUNE TO ENHANCE THE FRUIT YIELD ? கவாத்து செய்து டிராகன் பழமகசூலை அதிகரிப்பது எப்படி ?

 

கவாத்து செய்த டிராகன் 
பழக்கொடிகள்


டிராகன் பழச்செடிகள் நல்ல மகசூல் தரவேண்டும், நல்ல வருமானம் தர வேண்டும், நல்ல லாபம் தர வேண்டும் என்றால், அதன் கிளைகளை ஒழுங்கு செய்ய வேண்டும், நெருக்கியபடி இருக்கும் கிளைகளை சிம்புகளை நீக்கி, பழமரங்களுக்கு நல்ல வெளிச்சம் வேண்டும், நல்ல காற்றோட்டம் வேண்டும், அதனைத் தருவது எப்படி என்று சொல்லுவதுதான் இந்தப் பதிவு, மேலே படியுங்கள்.

கவாத்து என்றால் என்ன ? (PRUNING)

கவாத்து என்றால் கிளைகளை ஒழுங்கு செய்தல் என்று அர்த்தம்.

நல்ல சூரிய ஒளி, நல்ல காற்றோட்டம் (SUNLIGHT & AERATION)

ஒரு மரம் அல்லது செடிகள்  நன்றாக வளர அதற்கு போதுமான சூரிய ஒளி வேண்டும், நல்ல காற்றோட்டம் வேண்டும். இவற்றை ஏற்பாடு செய்வதுதான் கவாத்து.

இதனை டிராகன் பழச்செடிகளுக்கு எப்படி செய்யலாம் என்று யோசியுங்கள் டிராகன் பழம் தரும் இதனை கொடிகளால் ஆன மரம் எனலாம்.

இது ஒரு அழகான செடியாக வளர்ந்து, அழகான பூக்களைப் பூத்து, அழகான பழங்களைத் தரும் ஒரு கற்றாழை. அதனால் இதில் கவாத்து செய்வதை கவனமாக செய்ய வேண்டும்.

இதற்கு நல்ல கிளைகளை, கொப்புகளை வைத்துகொண்டு நன்கு வளராத ஒல்லிபிச்சான் கிளைகள், ஒரு கிளையின் மீது சவாரி செய்வது மாதிரி படுத்திருக்கும் கிளைகள், ஒரு திசையில் தோன்றி மறு திசைக்கு குறுக்காகச் செல்லும் கிளைகள், உலர்ந்த கிளைகள், அடி மரத்தில் தோன்றும் கிளைகள் ஆகியவற்றை தயவு தட்சண்யம் இல்லாமல் நீக்க வேண்டும்.

இது பொதுவான கவாத்து முறை. இதில் கிளை என்ற இட்த்தில் எல்லாம் கொடி என்று மாற்றிக்கொண்டால் இந்த அழகான கற்றாழைக்கு அழகாக கவாத்து செய்யலாம்.

நான்கு கொடிகளுக்கு ஒரு கம்பம் (CONCRETE PILLARS)

டிராகன் பழச்செடிகள் வேகமாக வளரக்கூடியது, அதற்கு நான்கு கொடிகளுக்கு ஒரு ஆறடி காங்கிரீட் கம்பங்களைப் பொருத்த வேண்டும்.

 

20 ஆண்டுகள் உழைக்க வேண்டும்

டிராகன் பழச்செடிகளின் வயது 20 ஆண்டுகள் என்பதால் அவற்றிற்கு உறுதியான கம்பங்களை நட வேண்டும்.

ஆறடி கம்பங்களை நான்கடி தரைக்கு மேலிருக்குமாறு இரண்ட்டி ஆழத்தில் நட வேண்டும்.

டிராகன் பழச்செடிகளின் கொடிகளை அல்லது கிளைகளை ஒழுங்கு செய்ய இந்த கம்பங்கள் மிகவும் அவசியம்.

வட்ட வடிவ பிளேட்டுகள் (CIRCULAR OR SQUARE FRAMES)

இந்த கம்பங்களின் உச்சியில் சதுர, செவ்வக மற்றும் வட்ட வடிவ பிளேட்டுகளை பொருத்த வேண்டும்.

மோட்டார் சைக்கிள் டயர்கள் (TWO WHEELER WHEELS)

இதற்கு பதிலாக மோட்டார் சைக்கிள் டயர்களைக்கூட பயன்படுத்துகிறார்கள்.

நான்கடி வரை கொடிகள் நீளமாக வளர அனுமதிக்க வேண்டும். கொடிகளுக்கு சேதம் ஏற்படாதவாறு அவற்றை கம்பத்துடன் இணைத்து கட்ட வேண்டும். 

கொடிகள் வளைந்து கீழிறங்க வேண்டும் (VINES TO BE TRAINED)

கொடிகள் கம்பத்தின் உச்சியை அடைந்தவுடன் அவற்றை வளைத்து வட்ட வடிவ டயருடன் கட்டி கீழிறங்குமாறு செய்ய வேண்டும். இந்த கம்பங்கள் வாங்குவதற்கு, நடுவதற்கு, கம்பத்தின் உச்சியில் பிளேட்டுகள் அல்லது டயர்களை பொருத்த என்று கொஞ்சம் கூடுதலாக செலவாகும்.

இந்தப்பதிவு மிக முக்கியமானப் பதிவு. இதில் டிராகன் பழச்செடிகளில் சீராக வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கிடைக்க எப்படி கவாத்து செய்ய வேண்டும், என்பதுபற்றியும், இதன் கொடிகள் படர எப்படி ஏற்பாடு என்றெல்லாம் பார்த்தோம்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள், புதிய தகவல் ஏதேனும் உங்கள் வசம் இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.

AGRI GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

  

 

 

 

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...