இருமண் பாடான களிமண் & மணல்சாரி டிராகன் பழத்தின் தேவை |
ஒரு கட்டிடத்திற்கு
அஸ்திவாரம் எப்படியோ அப்படித்தான் ஒரு பயிருக்கு மண். எந்த பயிருக்கும்
மிக முக்கியமானது அதனைப் பயிர் செய்ய இருக்கும் மண் கண்டம்.
அந்த மண் கண்டம் பொருத்தமானதாக இருக்க வேண்டும். டிராகன் பழமரங்களுக்கு எப்படிப்பட்ட மண் தேவை என்று பார்க்கலாம்.
1.டிராகன் பழங்களுக்கு
அங்ககச்சத்துக்கள் நிறைந்த மண் (RICH IN ORGANIC MATTER) வேண்டும்.
2.மணற்பாங்கான இருமண்பட்டு மண் முதல் களிமண் பாங்கான இருமண் பாட்டு மண் வகைகளில் (SANDY LOAM & CLAY LOAM) நன்கு வளரும்.
இந்த பழப்பயிர் கற்றாழை
வகையாக (CACTUS
FRUIT)இருப்பதால் பரவலான மண் வகைகளிலும் நன்றாக வளரும். இது ஒரு முரட்டுப் பயிர். கிராமத்து ஆசாமி மாதிரி.
டிராகன் பழ மரங்களுக்கு ஏற்ற மண் தன்மை (SUITABLE SOIL FOR DRAGON FRUIT)
மெக்சிகோ தென் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சொந்தப் பயிர் டிராகன் பழமரங்கள். தற்போது உலகமே டிராகன் பழத்திற்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. . டிராகன் பழமரங்களை வெற்றிகரமாக பயிரிட எந்த விதமான மண் தேவை என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒரு பயிருக்கு மண் என்பது ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் மாதிரி.
பொதுவாக சொல்வதென்றால் டிராகன் பழப் பெயர் சாகுபடி செய்ய இருமண் பாடான மணல்சாரி மண்ணும், இருமண் பாடான களிமண்ணும் தேவை என்று சொல்லுகிறார்கள்.
இருமண் பாடான மணல்சாரி மண் என்றால் என்ன ? (SANDY LOAM SOIL)
1. இதில் மணல் அதிகமாக இருக்கும்.
2. இதர வகை மண்ணூம் கலந்திருக்கும்.
3. இது தண்ணீரை அதிகம்
பிடித்து வைத்துக் கொள்ளாது.
4. இதில் ஊட்டச்சத்துக்கள்
அதிகம் இருக்காது.
5. இதுதான் இருமண்
பாடான மண்.
6. ஆனாலும் இது தோட்டம் அமைக்க, பயிர்கள் சாகுபடி செய்ய, புல் தரைகள் அமைக்க ஏற்ற மண்.
இருமண் பாடான
களிமண் (CLAY LOAM SOIL)
1.இருமண் பாடான
களிமண் என்றால் களிமண் கூடுதலாக இருக்கும்.
2. அத்துடன் இதர வகை
மண்ணும் கலந்திருக்கும்.
3. களிமண்ணின்
துகள்கள் மிகவும் சிறுசாக நுண்ணியதாக இருக்கும்.
4. இதர மண்ணுடன்
ஒப்பீட்டளவில் ஒரு உயர்வான மண் என்று சொல்லலாம்
5.இதில் வண்டல்
மண்ணும் அங்ககப் பொருட்களும் சேர்ந்து இருக்கும்.
6. மண் ஈரத்தை பிடித்து வைத்துக்கொள்ளும்.
7. பயிர் ஊட்டச் சத்துக்கள் அதிகம் கொண்டது
விவசாயத்திற்கு பொருத்தமான மண் என்பதை மூன்று வகையாக பிரிக்கிறார்கள் (MAJOR SOIL TYPES)
1. இருமண் பாடான மணல்
சாரி (SANDY LOAM) – இதில் மணல் அதிகம்
இருக்கும்
2. இருமண் பாடான
களிமண் (CLAY LOAM) – இதில் களிமண்ண் அதிகம்
இருக்கும்.
3. சரளைமண் (LATERITE) – சரளை கற்கள் அதிகம் இருக்கும்.
ஆங்கிலத்தில் அடிக்கடி லோமி சாயில் (LOAMY SOIL) என்று சொல்லுகிறார்கள். அதன்
அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட மண்ணின் சேர்க்கை (MIXURE OF DIFFERENT SOIL)என்று சொல்ல வேண்டும்.
களிமண் மணல்சாரி மற்றும் வண்டல் மண் (SILT) ஆகியவற்றின் கூட்டு தான் இந்த லோமிசாயில் அல்லது இருமல் பாட்டு மண் என்பது.
டிராகன் பழப்பயிருக்கு
தேவைப்படும் கார அமில நிலை (SOIL PH)
1.டிராகன் பயிருக்கு மண்ணின் கார அமில நிலை 5.5 முதல் 7 வரை இருக்க வேண்டும்
2. மண்ணின் கார அமில
நிலை 5.5க்கு கீழ் இருக்கக் கூடாது.
3.கார அமில நிலை 7.0 க்கும் மேல் இருக்கக்கூடாது.
4. இது உங்களுக்கு
தேவை இல்லை தான் . ஆனால் தெரிந்து கொள்வது தவறு இல்லை. பி.எச் என்றால்
பொட்டன்ஷியல் ஹைட்ரஜன் (POTENTIAL HYDROGEN) என்று அர்த்தம்.
5. பி எச் 7க்கு கீழ் இருந்தால் அது அமில மண்.
6. பி எச் 7 க்கும் அதிகமாக இருந்தால் அது கார மண்.
முடிவுரை இப்போது நாம் டிராகன் பழக சாகுபடி பயிருக்கு என்ன மண் தேவை என்பதை தெரிந்து கொண்டோம். முக்கியமாக, இருமண்பாடான மணல்சாரி மண், மற்றும் இருமன் பாடான களிமண் வேண்டும்.
அத்துடன் அதில் கூடுதலாக அங்ககச் சத்துக்கள் இருக்க வேண்டும். முக்கியமாக வடிகால் வசதியும் இருக்க
வேண்டும். மண்ணின் பிஎச்
என்னும் காரஅமிலநிலை 5.5 முதல் 7.0 க்கும் இடையே இருத்தல் அவசியம்.
காரமஅமில நிலையை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிக்க வேண்டும். உங்கள் நிலத்து மண்ணை பரிசோதனை செய்யுங்கள், அவர்கள் உங்கல் மண்ணின் பி.எச் எவ்வளவு என்று பார்த்து சொல்லிவிடுவார்கள்.
நீங்கள் டிராகன் பழப்பயிர் சாகுபடி செய்ய விரும்பினால் பூமி
நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com
No comments:
Post a Comment