Monday, June 12, 2023

HOW TO IMPROVE THE FLOWERING IN DRAGON FRUITS PLANTS ? டிராகன் பழச்செடிகளில் பூப்பதை மேம்படுத்துவது எப்படி ?

 

இரவில் பூக்கும் டிராகன் பழச்செடிகள்


டிராகன்பழ சாகுபடியில் ஆண்டு முழுவதும் அறுவடை செய்யலாம் என்று சொல்லுகிறார்கள். ஆண்டு முழுவதும் அறுவடை என்றால் டிராகன் செடிகள் எப்போது பூக்கும் ? எப்படி பூக்கும் ? எப்போது காய்க்கும் ? எப்போது அது முதிர்ச்சி அடையும் ? எப்போது அறுவடை செய்யலாம் ? இதுபற்றி எல்லாம் இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இதன் பூக்கள் இரவு நேரத்தில்தான் மலரும், பழ வாசனை வீசும். அதனால் இந்த பூக்களுக்கு மூன் ஃப்ளவர் என்றும் லேடி ஆஃப் தெ நைட் (MOON FLOWER, LADY OF THE NIGHT )

பூக்கத் தொடங்க கொஞ்சம் வறட்சி வேண்டும் (REQUIRES DRY CONDITION)

பூக்கள் பூக்கத் தொடங்குவதற்கு முன்னால் கொஞ்சம் வறண்ட சூழல் வேண்டும். அதற்காக வேர்ப்பகுதியை சுக்குமாதிரி காயவிடக்கூடாது.

செடிகள் பூக்கவில்லை என்றால் இன்னும் அந்த செடிகள் முதிர்ச்சி அடையவில்லை என்று அர்த்தம்.

பெரிய பூக்கள்  (BIG SIZE FLOWERS)

உலகின் பெரிய பூக்களில் இதுவும் ஒன்று, இதன் நீளம் மற்றும் அகலம் கிட்டத்தட்ட ஒரு அடி 25 முதல் 30 செ.மீ. இருக்கும். பூக்கள் அழகாக வண்ணமயமாக வாசமுடன் இருக்கும்.

நான்குமுறை பூக்கும் (FLOWERING 4 TIMES)

பொதுவாக நடவு செய்த 6 முதல் 8 மாதங்களில் பூக்கும். ஆனால் தொட்டியில் வளர்க்கும் செடிகள் பூக்க இரண்டு ஆண்டுகள்கூட ஆகும் என்கிறார்கள்.

இதன் பூக்கள் ஓர் ஆண்டில் 4 முதல் 6 முறை கூட  பூக்கும்.

பூக்காமல்கூட இருக்கும்

ஆனால் சில சமயங்களில் இரண்டு ஆண்டுகள்வரை பூக்காமல்கூட இருக்கும் என்கிறார்கள். அப்படி என்றால் செடிகள் சரியாக முதிர்ச்சி அடையவில்லை என்று அர்த்தம்.

இருபால் பூக்கள் (MALE & FEMALE FLOWERS)

ஒரே பூவின் ஆண் பெண் இருபால் பூக்களும் இருக்கும். இது கோவில்மணி போன்ற வடிவில் இருக்கும்.

கைகளினால் மகரந்தசேர்க்கை  (HAND POLLINATION)

ஒரே சமயம் இரண்டு பூக்கள் பூக்கிறது என்றால், ஒரு பூவில் இருக்கும் மகரந்தத்தூளை எடுத்து இன்னொரு பூவின் சூலகத்தில் தூவி அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவ முடியும் என்கிறார்கள்.

இது ஒரு கடினமான பணி, காரணம் இதன் பூக்கள் இரவில்தான் பூக்கும், இன்னொன்று ஒரே ஒரு நாள்தான் மலர்ந்திருக்கும். அடுத்த  நாள் சூரியன் தோன்றியதும் மூடிக்கொள்ளும்.

வவ்வால்கள் மற்றும் ஹாக் மாத்கள்  (BATS & HAWK MOTHS)

வவ்வால்கள் மற்றும் ஹாக் மாத் எனும் பூச்சிகள் மகரந்தசேர்க்கைக்கு உதவுகின்றன.

குறைவான வெப்பம்  (NO LOW TEMPERATURE)

சில சமயம் உங்கள் டிராகன் பழச்செடி பூக்கவில்லை எனில் அதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதலான வெப்பம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். உங்கள் இடத்தின் வெப்பநிலை 18 சென்டிகிரேடுக்கு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். 

பசுமைக் குடில்கள் (GREEN HOUSES)

வெப்பம் குறைவான இடமாக இருந்தால் அவற்றை பசுமை இல்ல குடில்களில் வளர்க்க சிபாரிசு செய்கிறர்கள். தேவையான அளவில் வெப்பத்தை கூட்டலாம், குறைக்கலாம்.

வெப்பம் கூட்ட இரவில் பல்புகள் (LIGHTING DURING NIGHTS)

குளிர்ச்சியான இடங்களில் இரவில் நேரத்தில் செயற்கையாக விளக்கு வைத்து தினமும் இரண்டு மணி நேரம் எரிய வைத்து அதன் வெளிச்சப் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்கிறார்கள். நாம் புரிந்துகொள்ள வேண்டியது அதற்கு கூடுதல் வெளிச்சம் வேண்டும், வெப்பம் வேண்டும்.

டிராகன் பழச்செடிகள், இரவில் பூக்கும், 4 முதல் 6 முறை பூக்கும், செயற்கை முறையில் மகரந்தசேர்க்கை செய்யலாம், வெப்பம் கூடுதலாக வேண்டும், பசுமை இல்லக்குடில்களில் எப்படி இதனை சரி செய்யலாம் எல்லாம் பார்த்தோம்.

டிராகன் பழச்செடிகளை அதிகம் பூக்கவைக்க உங்களுக்கு வேறு உத்திகள் ஏதும் தெரியுமா ?

படித்து முடித்தபின் மறவாமல் உங்கள் கருத்துக்களை “கமென்ட்ஸ்” பகுதியில் மறவாமல் பதிவிடுங்கள், நன்றி வணக்கம்.

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com

 

 

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...