Monday, June 12, 2023

HOW TO EARN MORE FROM DRAGON FRUITS ? டிராகன் பழங்கள் சாகுபடியில் அதிக வருமானம் எப்படி பெறலாம் ?

டிராகன் பழங்கள்  இந்தியாவின் புதியவரவு

சமீப காலமாக இந்தியாவில்  பழக்கடைகளில் புதிய வரவாக இருப்பது, வாடிக்கையாளர்களை கண்களைக் கவரும் பழமாக இருப்பது, “உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பழமாமே” என்று கேட்டு வாங்குவது, மலிவான விலைக்குக் கிடைப்பது, வருமானம் தருவதில் விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது, இப்படி டிராகன் பழம் என்றும் கமலம் பழம் என்றும் அறிமுகம் ஆகியிருக்கும் இதுபற்றிய பயனுள்ள பல செய்திகளை உங்களுக்காக தேடிப்பிடித்து தந்திருக்கிறேன், படியுங்கள். ஒருமுறை  நடவு செய்தால் 20 ஆண்டுகள் கவலைப்படாமல் வருமானம் எடுக்கலாம்.  

சொந்த நாடுகள் (NATIVE COUNTRIES)

இது பாரம்பரியமாக வடதென் அமெரிக்கா, தெற்கு மெக்சிகோ, கவ்டிமாலா, கோஸ்ட்டாரிகா நாடுகளுக்கும்  சொந்தமான பழ மரம்.

இறக்குமதி செய்யும் நாடுகள்  (IMPORTING COUNTRIES)

இன்று இந்திய மார்கெட்டுகளில் விற்கும் டிராகன் பழங்கள் வியட்நாம், தாய்லாந்து, மலேஷியா, ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் இவை.

வேறு பெயர்கள்  (DIFFERENT NAMES)

பிட்டாயா, பிட்டாஹயா, ஸ்ட்ராபெர்ரி பீயர், நோபிள் உமன், நைட் ஆஃப் தி உமன் என்பவை டிராகன் பழத்தின் வேறு பொதுப்பெயர்கள். 

இந்தியாவில் அறிமுகம் (HOME GARDENS)

இந்தியாவில் முதன் முதலாக வீட்டு தோட்டங்களில் 1990 ஆண்டு டிராகன் பழம் அறிமுகம் ஆனது.

வேகமாக பரவும் டிராகன் பழ சாகுபடி (FAST SPREADING)

இந்தியாவில் மகாராஸ்ட்ரா, கர்னாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, வெஸ்ட்பெங்கால், வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் டிராகன் பழ சாகுபடி வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி (SCOPE FOR EXPORT)

இந்தியாவில் இதுவரை 3000 முதல் 4000 எக்டர் வரை டிராகன் பழ சாகுபடி பரவி உள்ளது.

2021 ம் ஆண்டு ஜூலை மாதம் மகாராஷ்ட்ராவின் டிராகன் பழங்கள் துபாய்க்கு ஏற்றுமதி ஆனது.

இருபால் பூக்கள் (MALE & FEMALE FLOWERS)

து இரவு நேரத்தில்தான் மலரும், பழ வாசனை வீசும். அதனால் இந்த பூக்களுக்கு மூன் ஃப்ளவர் என்றும் லேடி ஆஃப் தெ நைட் (MOON FLOWER, LADY OF THE NIGHT ) என்றும் சொல்லுகிறார்கள்.

ஆச்சரியமான செய்தி ! இதன் பூக்கள் ஓர் ஆண்டில் 4 முதல் 6 முறை பூக்கும். அதனால்தான் இது ஆண்டு முழுவதும் அறுவடையும் வருமானமும் தருகிறது.

ஒரே பூவின் ஆண் பெண் இருபால் பூக்களும் இருக்கும். இது கோவில்மணி போன்ற வடிவில் இருக்கும்.

வவ்வால்கள் மற்றும் ஹாக்மாத் (BATS & HAWK MOTHS)ன்பவை இதன் மகரந்தசேர்க்கைக்கு உதவுகின்றன.

ஒவ்வொரு பழமும் 500 முதல் 700 கிராம் எடையுள்ள பழங்களாக உருவாகும்.

உலகின் பெரிய பூக்களில் இதுவும் ஒன்று, இதன் நீளம் மற்றும் அகலம் கிட்டத்தட்ட ஒரு அடி 25 முதல் 30 செ.மீ. இருக்கும். கிட்டத்தட்ட ஒரு அடி.

கிளைத்துண்டுகள் (STEM CUTTINGS)

புதிய மரங்களை உருவாக்க விதைகள் மற்றும் இதன் கிளைத் துண்டுகளை பயன்படுத்தலாம்.

விரைவாக வளர்ந்து பலன் தர கிளைத் துண்டிகளை நடுவதே சிறந்தது.

விலை (MARKETING PRICE)

மும்பை, பூனா, மற்றும் சூரத் மார்கெட்டுகளில், ஒரு கிலோ டிராகன் பழங்கள் 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

டிராகன் பழங்களின் தோலின் நிறம், தசையின் நிறம், அளவு ஆகியவை பழங்களின் விலையை தீர்மானிக்கின்றன.

நிழல் மரங்கள் (SHADE TREES)

மகாராஸ்ட்ராவில் டிராகன் பழ சாகுபடி வயல்களில் நிழலுக்காக பி கே எம் 1 ரக முருங்கையை சாகுபடி செய்கிறார்கள்.

அடிகப்படியான வெப்பத்தால் ஏற்படும்சன்பர்ன்இதனால் தடுக்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.

கவாத்து செய்தல் (TRAINING & PRUNING)

கவாத்து செய்வது கிளைகளை ஒழுங்கு செய்ய உதவும். கிளைகளின் ஊடாக காற்றோட்டம் ஏற்படுத்தும். இதனை வேகமாக வளர உதவும். ஆரோக்கியமான மற்றும் காய்ப்புக்கு உரிய கிளைகளை வைத்துக் கொள்ளலாம். அதிகப்படியான கிளைகளை அப்புறப்படுத்திவிடலாம்.

வேகமாக வளரும் (FAST GROWING)

இதன் கொடிகள் வேகமாக வளரும். ஒரு வாரத்தில் 8.2 செ.மீ வளரும்..

நடவு செய்த எட்டு மாதங்களில் பழங்கள் உருவாகும். நன்கு வளர்ந்த கொடி ஓர் ஆண்டில் 30 முதல் 50 கிளைகள் விடும். நான்கு ஆண்டுகளில் 100 கிளைகளை விடும்.

கொடிகள் படர உதவும் கம்பங்கள் (SUPPORTING PILLARS)

5 முதல் 6 அடி உயரமான கம்பங்கள் தேவைப்படும். இரண்டடி மண்ணுக்குள் சென்றால் 4 அடி மேலே இருக்கும்.

மரம், காங்கிரீட், பி வீ சி குழாய், இரும்பில் செய்தவைகளை பயன்படுத்தலாம்.

நடப்படும் கொடிகள் 4 அடி உயரம் வளர்ந்து பின்னர் வளைந்து கீழே தொங்கும்.

அந்த கொடிகள் படர்ந்து கீழே இறங்க வாகாக கம்பங்களின் உச்சியில் வட்ட வடிவில் அல்லது சதுரமான அல்லது ‘T’ வடிவத்தில்  செய்த ஸ்டேண்டுகளைப் பொருத்த வேண்டும்.

பல ஆண்டுகள் தாங்க வேண்டியிருப்பதால் காங்கிரீட் கம்பங்களை பயன்படுத்துவதுதான் சிறப்பு.

ஒருமுறை  நடவு செய்த கம்பங்களை இடையில் மாற்றுவதற்கு முடியாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

நீர்ப்பாசனம் (WATERING)

மிகவும் குறைவான மழை உள்ள பகுதிகளிலும் டிராகன் நன்கு வளரும்.

பலமாத வரட்சியினையும் சமாளிக்கும். நல்ல பழங்கள் உருவாக நல்ல நீர்ப்பாசனம் தேவை.ஆனால் தொடர்ந்த சீரான நீர்ப்பாசனம் மிகவும் அவசியம்.

அந்தமான் தீவுகளில் எட்டு மாதங்கள் தொடர்ந்து மழை கிடைப்பதால் வறட்சியான மாதங்களில் மட்டும் பாசனம் தந்தால் போதுமானது.

டிராகன் பழ மரங்களின் வேர்கள் ஒரு அடிக்குள் அடங்கிவிடுவதால் கோடையில் கவனமாக பாசனம் அளிக்க வேண்டும்.

வேர்ப்பகுதியில் அதிகபட்ச ஈரம் பூசண நோயைக் கொண்டுவரும், அதனால் குளிர் காலத்தில் கவனமாக பாசனம் அளிக்க வேண்டும்.

கோடையில் ஒரு வாரத்திற்கு ஒரு மரத்திற்கு இரண்டு முறை 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் தர வேண்டும்.

மண்ணின் தன்மைக்கு ஏற்ப பாசனத்தை கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

பழங்களின் தரம் (QUALITY OF FRUITS)

பழங்கள் அற்புதமான சுவை கொண்டவை. வெண்மை தசை கொண்ட பழங்களின் சராசரி எடையைவிட சிவப்பு தசையுடைய  பழங்களின் எடை குறைவாக  இருக்கும்.

ஆனால் ஒரு மரத்தில் வெண்மை தசை கொண்ட பழங்களைத் தரும் ரகத்தைவிட சிவப்பு தசை கொண்ட பழங்களைத் தரும் ரகம் அதிகம் காய்க்கும்.

அறுவடை (HARVESTING)

12 முதல் 15 மாதங்கள் வயதுடைய மரங்கள் காய்க்கத் தொடங்கும். பசுமையாக இருக்கும் காய்கள் பழங்களாக முதிர்ச்சி பெறும்போது சிவப்பு மற்றும் ஊதா நிறமாக மாறுகின்றன.

ஜூன் முதல் செப்டெம்பர் வரை நான்கு மாதங்கள் பழங்களை அறுவடை செய்யலாம். பல இடங்களில் ஆண்டு முழுவதும் அறுவடை செய்கிறார்கள்.

பழங்கள் 300 முதல் 800 கிராம் வரை இருக்கும். ஒரு கம்பத்தை சுற்றியுள்ள மூன்று வயது டிராகன் கொடிகளிலிருந்து  30 முதல் 35 கிலோ பழங்கள் கிடைக்கும்.

எப்படி சாப்பிடலாம் ? (HOW TO EAT)

கனிந்த கனிகளை பச்சையாக சாப்பிடலாம். ஃபிரிஜ்ஜில் குளிரவைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். பழச்சாறு, சர்பத், ஃபிலேவர்டு ட்ரிங்க், மிட்டாய்கள், ஜாம், ஜெல்லி, ரொட்டிகள், கலர் பேஸ்ட்ரிஸ் போன்றவைகளாகவும் தயாரித்து சாப்பிடலாம். விரியாத மொட்டுக்களை காய்கறிகளைப்போல சமைத்து சாப்பிடலாம்.

(DRAGON FRUIT BY TULAJA, NAIDU RATNALA AND NOR-AFIDAH ABD RAHMAN – www.eresources.nib.gov.sg - A Singapore Government Agency Website)

சன்பர்ன் எனும் சூரியனின் மிகை வெப்ப பாதிப்பு (SUN BURN EFFECT)

சூரியனின் மிகுதியான வெப்பத்தால் ஏற்படும்சன்பர்ன்பாதிப்பு இந்தியா முழுவதும் காணப்படுகிறது. மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்தசன்பர்ன்ஏற்படுகிறது. வெப்பம் 38 டிகிரி சென்டிகிரேடை தாண்டும் போதெல்லாம்சன்பர்ன்ஏற்படும். பகல்நேர  வெப்பத்திற்கும் இரவுநேர வெப்பத்திற்கும் இடைவெளி அதிகம் இருக்கும் நாட்களிலும் இந்தசன்பர்ன்சகஜமாக வரும்.

பூச்சிகளும் நோய்களும் (PEST AND DISEASES)

பூச்சி நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. எறும்பு, செதில்பூச்சி, மாவுப்பூச்சி, ஆகியவை, பூசண நோய்கள், பழமழுகல், தண்டழுகல், இலைப்புள்ளி நோய் மற்றும் வாடல் நோய் ஆகியவை அரிதாகத் தாக்கும்.

விற்பனை (MARKETING)

தேவை அதிகம் உற்பத்தி குறைவு இந்தியாவில் இதன் விலை கிலோவுக்கு 100 முதல் 250 ரூபாய்  நிலவுகிறது.

உற்பத்தி அதிகரிக்கும்போது இந்த விலை கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

விற்பனை போக மீதமுள்ள பழங்கள் ஜாம் ஜெல்லி என்று பழப்படுத்தலுக்கு போகும்.

இனி விவசாயிகள் எப்படி மதிப்புகூட்டி விற்பனை செய்யலாம் என்று யோசிக்க வேண்டும், அப்போதுதான் விவசாயம் பொன் முட்டை இடும்.

இன்னும் கூடுதலாகப் படிக்க

1. Dragon Fruit Country Report From India By G.Karunakaran, Principle Scientist, I/C, Head Experimental Farm, Hirehalli, India, M.arivalagan, ICAR, Indian Institute of Horticultural Research, India, .Sriram, ICAR, Indian Institute of Horticultural Research, India.

 HOW TO EARN MORE

FROM DRAGON FRUITS ?

டிராகன் பழங்கள் சாகுபடியில்

அதிக வருமானம் எப்படி பெறலாம் ?

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...