Friday, June 30, 2023

HOW KURUK ATHI STRANGLES THE NEIGHBORING TREES 200. கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் குறுக்கத்தி மரம்






(KURUKKATHI MARAM, WHITE FIG TREE, FICUS VIRENS, MORACEAE)

தாவரவியல் பெயர்: பைகஸ் வைரன்ஸ் (FICUS VIRENS)

தாவரக்குடும்பம் பெயர்: மோரேசி (MORACEAE)

பொதுப்பெயர்: ஒயிட் ஃபிக் ட்ரீ (WHITE FIG TREE)

தாயகம்: இந்தியா 

நான் சமீபத்தில் ஆந்திராவில் பிச்சாட்டுர் என்ற கிராமத்திற்கு போய் இருந்தேன். அங்கு வட இந்திய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்.அவருடைய பண்ணையில் ஒரு இடத்தில் ஆண்லிங்கம் பெண்லிங்கம் உள்ளது என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கே தெய்வீகமான ஒரு மரமும் இருக்கிறது என்று சொன்னார்.

இரண்டு லிங்கங்களுக்கும் இரண்டு தனித்தனி கிணறுகள் தனித்தனியாக இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் பாதுகாக்க அங்கு ஒரு ராஜநாகம் இருக்கிறது என்றார. நல்லவர்கள் யாரையும் அது எதுவும் செய்யாது. குறுக்கே அல்லது அருகில் யாராவது வந்துவிட்டால் ஐந்து அடி உயரம் எழுந்து படமெடுத்து நிற்கும்.

நாம் அப்படியே நின்று விட்டால் அது  போய்விடும் என்றார். இதையெல்லாம் கேட்கும்போது எனக்கு திகிலாக இருந்தது. 

தொடர்ந்து நாம் இப்போது அங்கு போகலாம்என்று சொன்னார். பிறகு அந்த இடத்திற்கு போனோம். ராஜநாகம் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்த்தோம். அந்த மரத்தையும் பார்த்தேன.வித்தியாசமாக இருந்தது. என்ன மரம் என்று கேட்டேன் என்று ஹிந்தியில் சொன்னார். 

பார்க்க அந்த மரம் ஒரு சின்ன ஆலமரம் போல இருந்தது. இலைகள் ஆலமரம் மாதிரியே இருந்தது. ஆனால் காய்கள் வெள்ளையாக இருந்தது. காய்கள் எல்லாம் பட்டாணி சைஸில் இருந்தது. ஆனால் வெண்மையாக இருந்தது. அதன் வேர்கள் பட்டை பட்டையாக கிணத்துக்குள்ளே இறங்கி இருந்தது. அன்றைக்கு எனக்கு தெரியாது அதுதான் குறுக்கத்தி என்று.

குறுக்கத்தி மரத்தின் பலமொழிப் பெயர்

தமிழ்: குறுக்கத்தி மரம், சிற்றால், சுவி, இத்தி, கல்ஆல், குருக்கத்தி, மலை இச்சி (KURUKKATHTHI, SITRAL, SUVI, ITHTHI, KALAAL, KURUKKATHTHI, MALAI ICHI)

இந்தி: பிக்கான், பக்காட் (PIKKAN, PAKKAT)

மணிப்புரி: சிங் இபாங் (SING IBONG)

மராத்தி: பஸ்ஸாரி, கந்தாம்பரா (BASSARI, KANTHAMBARA)

மலையாளம்: செராலா (SERALA)

தெலுங்கு: படி ஜீவி, ஜட்டி (PADI JIVI, JATI)

கன்னடா: கரிபசாரிஇ ஜூவ்வி (KARIBASAARI, JUVVI)

குஜராத்தி: பெப்ரி (PEBRI)

சமஸ்கிருதம்: பிளாஸ்கா (PILASCA)

அசாமிஸ்: பக்கோரி(PAKKORI)

பெங்காலி: பக்கார் (PAKAR)

பர்மிஸ்: ஹயாங் பேன் (HAYONG PEN)

சைனீஸ: ஹ_வாங் கே ஷ_(HA VANG KE SHA)

ஜெர்மன்: ஜாவா வீய்டி (JAVA VEIDI)

மலாய்: அம்புலு (AMBULU)

இந்தோனேஷியா: அரா நாசி (ARA NASI)

ஜாவா: வுனுட் பாங்கு (VUNU PANGU)

நேப்பாளிஸ: சபேத் கப்ரா (ED KABRA)

ஒரியா: ஜாரி (JAARI)

பஞ்சாபி: ஜங்லி பிப்லி (JANGLI PIBLI)

உருது: பாக்ரையா (PAKRAIYA)

சிங்களிஸ்: கலகாய், காவுடுபோவா (KALAKAI, KAVUDUPOVA)

இன்னொரு முறை மரக் கன்றுகள் விற்பனை செய்யும் இடத்திற்கு போய் கல்ஆலம் என்று சொன்ன மரக்கன்றை வாங்கி வந்தேன். இந்த கல்ஆல மரத்தின் கிளைகளை யானைகள் விரும்பி சாப்பிடும். அப்போது எனக்குத் தெரியாது கல்ஆலம் என்பதும் வெள்அத்தி என்று. 

கல்ஆலம் என்பதும் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் சொல்லப்படும் குறுக்கத்தியும் வெள்அத்திதான். இவை எல்லாமே நம் மண்ணுக்குரிய மரங்கள். சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட அந்த மரங்கள் எல்லாம் சமகாலத்தில் வேறு பெயர்களில் உள்ளன.

சில இல்லாமலேகூட போய்விட்டன. இவற்றைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்புகளும் நமக்கு இல்லை. இவற்றை எல்லாம் தோண்டித் துருவி வெளிக்கொணரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

விழுதுகள் நேராக தரையில் இறங்காது

இன்னொரு சிறப்பும் இந்த மரத்திற்கு உண்டு. வித்தியாசமான மரங்களில் ஒன்றாகவும் இது பேசப்படுகிறது. காரணம் இதற்கும் விழுதுகள் உண்டு. ஆனால் அந்த விழுதுகள் நேராக தரையில் இறங்காது நேராக அடிமரத்தை நோக்கி இறங்கிச் சென்று அதனைக் கட்டிப் பிடித்து நெறிப்பதுமாதிரி சுற்றிக்கொள்ளும். அதனால் இதனை ஆங்கிலத்தில் ஸ்ட்ரேங்லிங் பிக் (STRANGLING FIG) என்கிறார்கள்.

இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் சொல்லுகிறேன். பறவைகள் குறுக்கத்திப் பழத்தை தின்றுவிட்டு பறந்துபோய் வேறு மரக்கிளைகளில் எச்சமிடும். இந்த கிளைகளில் மீது முளைக்க ஆரம்பிக்கும்.

முளைக்கும் விதைகள் தனக்கு வேண்டிய சத்துக்களை அந்த மரத்திலிருந்து எடுத்துக்கொள்ளும். இது வேறு மரங்களில் முளைத்தால்  இது ஒரு ஒட்டுண்ணியாக (PARASITE) செயல்படும்.

அது பெரிய மரமாக வளரும் போது நிறைய விழுதுகளை விட அந்த விழுதுகள். அந்தத் தாய்மரத்தின் அடிமரத்தில் இறுக்கமாக சுருக்குப்போடுவது போல சுற்றிக் கொள்ளும். வெளிச்சம், காற்றோட்டம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டு அந்த மரம் காலப்போக்கில் பட்டுப்போகும்.

தரையில் விழும் விதைகள் முளைத்து தனிமரமாகும். ப்போது தனது வேர்களின் மூலமாகவே நிலத்திலிருந்து நீரையும்  ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக்கொள்ளும். அது வளரத் தொடங்கிய பின்னர் அது ஆல் போல் தழைத்து பெரிய மரமாக வளரும். எவ்வளவு பெரிய இயற்கையின் அதிசயம் பாருங்கள்.

ஒரு நகரையே சுற்றுலாத் தலமாக மாற்றி இருக்கிறது

ஆஸ்திரேலியாவில் ஒரு குறுக்கத்திமரம்.  ஒரு நகரையே சுற்றுலாத் தலமாக மாற்றி இருக்கிறது. அந்த நகரின் முக்கிய காட்சிப்பொருளே  அந்த ஒரு குறுக்கத்தி மரம்தான். அதற்கு அங்கு வேறுபெயர் வைத்திருக்கிறார்கள். 

கர்ட்டன்பிக் (CURTAIN FIG) என்பது அதன் பெயர். திரைச்சீலை அத்திமரம். பிரம்மாண்டமான ஒரு ஜன்னலுக்கு கர்ட்டன் போட்ட மாதிரி அதன் விழுதுகள் வளர்ந்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த அந்த மரத்தைப் பார்த்து திறந்த வாயை மூடாமல் போகிறார்களாம்.

சில மரங்கள் அக்கம்பக்கத்தில் இருக்கும் மரங்களை வாழவிடாது. அப்படிப்பட்ட மரங்களை இன்வேசிவ் ஸ்பீசிஸ் (INVASIVE SPECIES) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். நான் அது பற்றி எழுதும்போது இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மரங்கள் என்று குறிப்பிடுவேன். ஆனால் அதற்கு பொருத்தமான மரம் இதுதான்.

இது பற்றி சில மதுரை நண்பர்களிடம் பேச்சு வாக்கில் சொன்னேன். இது போன்ற மரங்கள் பல இடங்களில் பனை மரங்களை சுற்றி வளைத்து இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அது போன்ற பனைமரங்களை  நானும் பார்த்திருக்கிறேன்.

குறுக்கத்தி மூலிகை மரமும் கூட

இந்தியாவில் இது புனித மரமாகக் கருதப்படுகிறது இந்த மரத்தை கட்டிடங்கள் கட்டவோ வேறு மரச்சாமான்களோ செய்யப் பயன்படுத்தக் கூடாது.  அப்படி செய்தால் அவர்களுக்கு ஏதாவது கெடுதல் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. 

மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு

இந்த மரத்தின் இலை பூ மரம் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பொருளாக பல நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மிகவும் வித்தியாசமான நோய்களை குணப்படுத்தும் சக்தி உடையது. இந்த இலை குறிப்பாக மூளையில் ஏற்படும் ரத்த கசிவு தலைசுசுற்றல் நோய் சித்தப்பிரமை போன்றவற்றை குணப்படுத்த இந்த உதவியாக இருக்கிறது. 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...