Monday, June 12, 2023

HOW DRAGON FRUITS REDUCE BODY WEIGHT ? டிராகன் பழங்கள் எப்படி உடல் எடையைக் குறைக்கின்றன ?

 

டிராகன் பழங்கள் குண்டு  உடலை
குறைக்கின்றன

“ஒவ்வொரு மரமும் அதன் பழத்தினால் அறியப்படுகிறது, முட் செடியிலிருந்து அத்திபழங்களை அறுவடை செய்ய முடியாது. பிராம்பிள் புதரிலிருந்து திரட்சை கொத்துக்களை பறிக்க முடியாது” எனும் விவிலியத்தின் வாசகத்தைப்போல டிராகன் பழங்கள் அதன் பழத்தினால், அதன் மருத்துவப் பயனால் அறியப்படுகிறது.

மருத்துவ பயன்கள் (MEDICINAL VALUES)

டிராகன் பழங்களின் மருத்துவ பயன்கள் என்றால் ஐந்து பயன்களை குறிப்பாக சொல்லலாம். 

1. அதிகமான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து தருவதன் மூலம் உடல் எடையை (REDUCE BODY WEIGHT)குறைக்க உதவுகிறது.

2. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மூலமாக வயதாவதை கட்டுப்படுத்துகிறது,

3. குறைவான கலோரிச்சத்து (LESS CALORIES) உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

4. ரத்த சக்கரை (BLOOD SUGAR)அளவைக் கட்டுப்படுத்துகிறது.

5. இதில் உள்ள பீட்டா கரோட்டின் (BETA CAROTENE) மற்றும் லைக்கோ ஃபேன் (LYCOFEN)ஆகியவை கேன்சர் நோயாளிகளுக்கு அதனைக் கட்டுப்படுத்த உதவியாக உள்ளது.

இன்றைக்கு உலக அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது குண்டு உடல்தான். அதனைக் குறைக்கும் சக்தி டிராகன் பழத்தில் இருக்கிறது என்றவுடன் அதுபற்றிய சில சுவரஸ்யமான செய்திகளைப் பார்க்கலாம். 

முதலில் தமிழ் நாடுபற்றிப் பார்க்கலாம். தமிழ்  நாட்டில் குண்டுப்பெண்கள் மற்றும் குண்டர்கள் சேர்ந்து 9.5 சதம் என்கிறது ஒரு புள்ளவிவரம். இது பரவாயில்லை. பஞ்சாப்பில் குண்டுப்பெண்கள் மட்டும் 14.2 சதம், ஆண்கள் 8.3 சதம்தான். இந்தியாவிலேயே குண்டர்கள் இரு பாலரும் அதிகம் கொண்ட மாநிலம்  பஞ்சாப்தானாம். பஞ்சாப்கூட கவலைப்பட வேண்டாம். காரணம் அமெரிக்காவில், மேற்கு விர்ஜீனியா, மற்றும் கெண்டக்கியில் 40.6 சததினரும், 40.3 சதத்தினரும் அதிக எடை கூடியவர்களாக உள்ளார்கள்.

இப்போது நாம் டிராகன் பற்றிப் பார்க்கலாம்.  

யார் வைத்த பெயர் இது ?

அதன் மேலிருக்கும் செதில்களின் அமைப்பு மற்றும் தோற்றத்தை வைத்து அதற்கு டிராகன் பழங்கள் என்று வைத்திருக்கிறார்கள். எத்தனை பொருத்தமான பெயர் ? வித்தியாசமான பெயர். வித்தியாசமான பழம்.

கற்றாழைமர பழமா இது ? (MEMBER OF CACTACEAE FAMILLY)

ஒரு கற்றாழை செடியிலிருந்து இவ்வளவு அழகான, சுவையான, பயன்தரும் பழங்களா எனத் தோன்றுகிறது.

இந்த டிராகன் பழங்களில் இருக்கும் வைட்டமின்களை ஊட்டச்சத்துக்களைப் பார்த்தால் இன்னும் பிரமிப்பாக இருக்கிறது.

ஆண்ட்டி ஆக்சிடெண்டுகள் (ANTI OCCIDENTS)

ஆண்ட்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்த பழம் இது. இது நமது உடலின் பாதுகாப்பு மண்டலத்திற்கு பாதுகாப்பும் பலமும் தருகிறது. முக்கியமாக உடல் எடை குறைக்கும் சாதனமாகவும் உள்ளது.

இதன் அழகான சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களுக்கு காரணமான தாவர ரசாயனத்திற்கு பெயர் பீட்டாலைன்ஸ் (BETALAINS). இது கேன்சர் மற்றும் ஹெப்பட்டிஸ் அகியவற்றை கட்டுப்படுத்தும் பண்புகள் கொண்டது, மருந்து கம்பெனிகளுக்கு உபயோகமான செய்தி. 

பீட்டலயின்ஸ் (REDUCE BAD CHOLESTROL)

இந்த பழங்களில் இருக்கும் பீட்டாலயின்ஸ், எல் டி எல் கொலெஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. எல் டி கொலெஸ்ட்ரால் என்பது கெட்ட கொலெஸ்ட்ரால்.

புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சிக்கும் இந்த பீட்டாலைன்ஸ் உதவியாக உள்ளது.

வயசாகாமல் இருக்க மார்கண்டேயச் சத்து

டயட்ரி ஃபைஃபர் எனும் நரர்ச்சத்தும், பாலிபீனால்கள், கரோடினாய்டுகள், மற்றும் பீட்டா சயனின்கள் (DIETRY FIBRE, POLYPHENOLS, CAROTINOIDS, BETACYANINS) டிராகன் பழங்களில் அதிகம் உள்ளது.

வயது முதிர்ச்சி அடையாமல் இருக்க வேண்டிய ஆண்டி ஏஜிங் (ANTI AGEING) வைட்டமின் சி, மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் சத்துக்களும் இதில் உள்ளன. என்றும் பதினாறாக இருக்க உதவும் மார்கண்டேயச் சத்துக்கள் இவை.

நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்துகிறது, புற்று நோயைக் கட்டுப்படுத்துகிறது, உடலின் எடை சீராக வைக்க உதவுகிறது..

ரத்தத்தில்  சக்கரை அளவைக் கட்டுப்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.   

ஆரோக்கியமான பழம் (HEALTHY FRUIT)

சக்கரை நோய், மூட்டு வாதம், மற்றும் இதய நோய்களைத் தடுக்கும் வகையில் அமைந்தவை  இந்த டிராகன் பழங்கள்.

இவற்றில் ஏதும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள். இது தொடர்பான அண்மைக்கால செய்திகள் இருந்தால் சொல்லுங்கள். 

மறக்காமல் இந்தப் பதிவுபற்றிய கருத்துக்களை மறக்காமல் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள், நண்றி வணக்கம். 

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com   

 

 

 

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...