Friday, June 30, 2023

HOLOSERICEA KARUVAI GREEN FODDER A BOON TO CATTLE 190. கால் நடை பசுந்தீவனம் ஹாலோசெரிசியா கருவை

 

கால்நடை பசுந்தீவனம்
ஹாலோசெரிசியா கருவை

 

(HOLOSERICEA KARUVAI)

தாவரவியல் பெயர் :  அகேசியா ஹாலோசெரிசியா (ACACIA HOLOSERICEA)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : சோப் புஷ் வாட்டில், ஸ்ட்ராப் வாட்டில், கேண்டல்ப்ரா வாட்டில், சிலவர் வாட்டில் (SOAP BUSH WATTLE, STRAP WATTLE, CANDELABRA WATTLE, SILVER WATTLE)

தாவரக்குடும்பம்  :  ஃபேபேசியே (FABACEAE)

தாயகம்: வடக்கு ஆஸ்திரேலியா

சாலைக்கு அழகு, நிழல் தர, பசுமை இல்ல வாயுக்களை அகற்றி சூழலை சுத்திகரிக்க, தோட்டங்களில் தோப்புகளில் காற்று தடுக்க, ஆடுமாடுகளுக்கு உலர் தீவனம் தர, பழுதுபட்ட பாழ்பட்ட நிலப்பகுதிகளை மேம்படுத்த, ஏரிக்க விறகு கரி தர, முள்ளில்லாத கிளையும் அடர்த்தியான தழையும் மங்களகரமான பூவும் தந்து வேகமாக 8 மீட்டர் வரை வளர்ந்து, எட்டு ஆண்டுகள் வரை வாழும் வறண்ட பிரதேசத்துக்குரிய ஆஸ்திரேலியாவின் ஹாலோசெரிசியா கருவை மரம்.

சாப்பிடக் கூடிய விதைகள்

இதன் விதைகளை மாவாக்கி ரொட்டி சுட்டு சாப்பிடுகிறார்கள். சிலருக்கு அதன் வாசைன பிடிக்காது. குறைவான சிலருக்கு  நச்சுத்தன்மையுடையது. ஆனாலும் சாப்பிடக் கூடிய விதைகள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

அருமையான கால்நடைத் தீவனம்

இந்த முள் இல்லாத கருவை மரத்தின் இலைதழை அருமையான கால்நடைத் தீவனம். கோடையில் கூட இலைகள் உதிராது. மாறாப் பசுமை மரம் (EVERGREEN TREEI). ஆதனால் கோடையில் ஏற்படும் தீவனப் பிரச்சினையை தீர்க்கும்.

ஆனால் இவற்றை உலர வைத்துதான் ஆடுமாடுகளுக்கு தர வேண்டும். உலர வைக்காத தழைகளை மறந்தும் ஆடுமாடுகளுக்குப் போடக் கூடாது. இந்த இலைகளில் கூடுதலாக டேனின் இருப்பதால் புசுந்தழைகள் தீவனத்திற்கு உதவாது. உலர்த்தி வைத்துக் கொண்டு நாட்பட ஊறுகாய் மாதிரி பயன்படுத்தலாம்.

விறகாக கரியாக பயன்படுத்தலாம்

விறகாக கரியாக பயன்படுத்த அற்புதமான மரம். வேகவேகமாக வளர்ந்து அதிக மரமும் கரியும் கொடுக்கும். மரத்தின் தலைப்பகுதியும் தழைப் பகுதியும் பந்துகட்டி வளர்வதால் தோட்டங்களில் காற்றுத் தடுப்பானாகப் (WIND BREAK) பயன்படும். சாலை ஓரங்களில் அழகுக்காக, தூசுகளையும் மாசுகளையும் வடிகட்டும் நிழல் தரும் மரமாக வளர்க்கலாம். 

தழைச்சத்தை நிலைப்படுத்தும்

தழைச்சத்தை நிலைப்படுத்தும் சக்தி உடையதால் நிலத்தின் வளத்தினைக் கூட்டும். ஆனால் இதன் வயது 4 முதல் 8 ஆண்டுகள். தோண்டிப்போட்ட சுரங்கப் பகுதிகளையும் மணல் வனங்கள்.  மேலும் பரவாமல் தடுக்கவும் இந்த மரங்கள் உதவும்.

வயிறு மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி உடையது இதன் பிசின். புண்கள் காயங்களைக் கூட ஆற்றும்.

தாராளமாய் செலவு செய்பவர்களை ஊதாரி என்பது மாதிரி மிக வேகமாக வளர்ந்து மிக அதிகமான விதைகளை உற்பத்தி செய்வதால் இதனைப் பார்த்து களை மரம் என்று கவலை கொள்ளுகிறார்கள்.

சமீப காலமாய் தமிழ்நாட்டில் பரவிவரும் முள்ளில்லா கருவை மரம்    ஆலோசிரிசியா  கருவை.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...