Thursday, June 15, 2023

HENNA TREE 11. மருதாணி மரம்

 

பெண்களின் அழகு சாதனம் 
மருதாணி


மருதாணி
அல்லது  மருதோன்றி, இந்தியாவின் தொன்மையான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அழகு சாதனம், இந்து மதம், புத்தமதம், மற்றும் இஸ்லாமிய மதத்திலும் மதரீதியான சடங்குகளில் இடம் பெறும் புனிதமான பொருள்,  ஆயுர்வேத சித்த வைத்தியங்களில் பயன்படும் அரிதான  மூலிகை, சிவன் கோவில்களில் தலமரம் மற்றும்  வீட்டுத் தோட்டத்தின் பச்சிலை.  

பொதுப் பெயர்கள்: மைகா மிக்னோனட்டி, அல் ஹென்னா, ஈஜிப்ஷியன் பிரிவெட், ஹென்னி, மெந்தி, ஸ்மூத் லாசோனியா, ஹென்னா பஸ்கி, ஹென்னா ஸ்ட்ராச் (JAMAICA MIGNONETTE, AL HENNA, EGYPTIAN PRIVET, HENNE, MEHNDI, SMOOTA LAWSONIA,HENNA BUSKE, HENNA STRACHE)

தாவரவியல் பெயர்: லாசோனியா இனர்மிஸ் (LAWSONIA INERMIS)

தாவரக்குடும்பம் பெயர்: லித்ரேசியே (LITHRACEAE)

தாயகம்: மருதாணி மரத்திற்கு சொந்த ஊர், தெற்கு ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா, மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா, வெப்ப மண்டல மற்றும் மிதமான வெப்ப நிலை உள்ள பகுதிகளில் பரவியுள்ளதுஅதிகமான குளிரைத் தாங்காது.

மருதாணி மரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: மருதோன்றி, மருதாணி, அழவன இலை மரம் (MARUTHONRI, MARUTHANI, AZHAVANA ILAI MARAM)

அராபிக்: யோரன்னா, ஹென்னா (YORANNA, HENNA)

பர்மிஸ்: டான் (DAN)

பிலிப்பினோ: சினாமோமே (CINAMOMO)

பிரென்ச்: ஜாலோசி, ஹென்னி (JALOUSIE, HENNE)

இந்தி: மெஹந்தி (MEHANDHI)

இந்தோனேசியா: இனாய், பகார், கூக்கூ (INAI, PAKAR, KUKU)

ஜவானிஸ்: பகார், கூக்கூ (PAKAR, KUKU)

லாவோ: சைனோ-திபேத்தன் (SINO - TIBETAN)

மலாய்: இனாய், பக்கார் (INAI, PACAR)

சமஸ்கிருதம்: மெண்டிகா, ரகாங்கி (MENDIKA, RAGANGI)

சொமாலி: எரிப் (ERIP)

ஸ்பேனிஷ்; ரெசிடா, ஹென்னா (RESEDA, HENNA)

ஸ்வாகிலி: மேனி, மீனா (MHENI, MHINA)

தாய்: தியென் டான்ஸ் (THIEN DAENS)

வியட்நாமிஸ்: நுவோம் மாங் டாய் (NHUOM MONG TAY)

மருதாணி ஒரு பிரபலமான மரம்

மருதாணி, ஒரு பிரபலமான சிறு மரம். அதிகபட்சமாக 7.5 மீட்டர் உயரம். நிறைய கிளைகள் விட்டு வளரும். சிறு சிம்புகளின் நுனியில் சிறிய மெல்லிய முள் ஒன்று இருக்கும். இலைகள் சிறியவை. பசுமையாக இருக்கும். பூக்கள் வெள்ளை சிவப்பு நிற கொத்துக்களாக இருக்கும். மருதாணி காய்கள் சிறிய காவி நிற மணிகள் போல இருக்கும். ஒரு காயில் 32 முதல் 49 விதைகள் வரை இருக்கும்.    

மருதாணி வைத்துக் கொள்வது இளம் பெண்களுக்கு பிடித்தமானதுஒரு காலத்தில் கிராமங்களில், ஏதாவது விசேஷம் என்றால் உடனே கைகளில் மருதாணி வைத்துக் கொள்ளுவார்கள்ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மருதாணி செடியாவது இருக்கும்.

அழவனம் வைத்துக் கொள்ளுதல்

எங்கள் ஊர்ப்பக்கம், நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இதனை அழவனம்இலைஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்அழவனம் வைத்துக் கொள்ளுதல் என்றும் சொல்லுவார்கள்.

பொதுவாக பெண்கள்தான் மருதாணி வைத்துக் கொள்ளுவார்கள்முக்கியமாக உள்ளங்கை மற்றும் விரல்களில் வைத்துக் கொள்ளுவார்கள்மாலை நேரத்தில் மருதாணி இலைகளைப் பறிப்பார்கள்

பறித்த இலைகளை சுத்தம் செய்து அரைத்து, விழுது பதத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுவார்கள்கால்களில் விரல் நகங்களில் மற்றும் பாத விளிம்புகளில் வைக்கும் பழக்கம் உள்ளது.

அடுத்தநாள் காலையில் எழுந்ததும் வைத்த அழவனத்தை கழுவி விடுவார்கள்மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாய் மாறி இருக்கும்.

கடைகளில் விற்பனை ஆகும் மெகந்தி

பொங்கல், தீபாவளி, கார்த்திகை இப்படி எந்தப் பண்டிகையாக இருந்தாலும் பெண்கள் அழவனம் வைத்துக் கொள்ளுவார்கள்இப்போது மெகந்திஎன்ற பெயருக்கு கடைகளில் விற்பனை செய்கிறார்கள்இப்போது நிச்சயத்தாம்பூலம், திருமணம் போன்றவைகளில், மெகந்தி அலங்காரம் என்பது சிறப்பான ஒரு அம்சமாகிவிட்டதுஆனால் கோன்ஐஸ்மாதிரி கடையில் விற்கும் மெகந்தி ஒரிஜினல்சரக்கா என்று தெரியவில்லை.

நரை முடிக்கான சாயம்

இந்த மருதாணி இலைகளில், நரைத்த முடிகளில் அடிப்பதற்கான சாயம், எற்கனவே தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்பனை ஆகின்றனமருதாணி இலை சாயம் எடுத்து சில்க் துணிகளுக்குப் போடுகிறார்கள்.  கம்பளித் துணிகளுக்குப் போடுகிறார்கள்தோலால் செய்யப்படும் பொருட்களுக்கும் போடுகிறார்கள்.

நரைத்த வெள்ளை தலைமுடியை கருப்பாக்க டை அடிக்கிறார்கள்கருப்பு முடிக்காரர்கள் அதனை வெள்ளயாக்க டை அடிக்கிறார்கள்சிவனேஎன்று எதுவும் இருக்க விடமாட்டார்கள்.

அதன் சிறிய கிளைகளின் நுனிகளில் சிறிய முட்கள் காணப்படும். பறவைகள் இதன் பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் வசதிக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் விதைக்கும்.

ஏற்ற நிலம் மண்

ண்ட நிலப்பகுதிகள், கடற்பகுதி தரிசு நிலங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகள், ஆற்றுப் படுகைகள், மலைச்சரிவுகள், கற்களும் பாறையும் நிறைந்த மண்பரப்பு ஆகியவற்றில் நன்கு வளரும். 

மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்கள் ஏற்றவை. எல்லாவகையான மண்ணோடும் ஒத்துப் போகும்ஆனால் இது அநியாயத்திற்கு அதிகப்படியான பயிர்ச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளுமாம்

சிலருக்கு, எல்லாமே எப்போதுமே அதிகமாய் வேண்டும்அது அவர்களின் சுபாவம்மருதாணியும் அந்த வகைபோல சுபாவம் உள்ள மரம்.

இருவகைப் பூக்கள்

மருதாணி மரங்களைப் விவசாயப் பயிராக சாகுபடி செய்கிறார்கள்இரண்டாம் ஆண்டிலிருந்து தழை கொடுக்கும்தழைதான் இதன் அறுவடைஇதில் வெள்ளைப் பூ, சந்தன நிறப்பூ என இரண்டு வகை உண்டு

இரண்டு பூக்களுமே வாசனையில் பட்டையைக் கிளப்பும்ஆண்டு முழுவதும் பூக்கும்.

ஆயுர்வேத சித்த வைத்திய மூலிகை

மருதாணியை மூலிகையாகவும் பயன்படுத்துகிறார்கள்ரத்தப்போக்கை கட்டுப்படுத்த, பாக்டீரியல் கொல்லியாக ஆயுர்வேத மருத்துவம் இதனைப் பயன்படுத்துகிறது

அவை தவிர, அமீபிக் டிசெண்ட்ரி, வயிற்றுப் போக்கு, மாதவிடாய் பிரச்சினைகள், தொண்டைப்புண், தோல் சம்மந்தமான நோய்கள், தொழுநோய், நகச்சுத்தி, குடற்புண், பல்வலி போன்றவற்றையும் கட்டுப்படுத்தவும் சக்தி உடையது.

சிவன் கோவில் தலமரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாங்கூர் என்ற இடத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  மருதனல்லூரில் உள்ள சிவன் கோவிலிலும்  ஸ்தல  விருட்சமாக உள்ளது மருதாணி..

விதைகள் கடினமானவை.

இதன் விதைகள் கடினமானவைநேடியாக விதைக்க முடியாதுஅதனை 3 முதல் 7 நாட்கள்  நீரில் முக்கி வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும்.

கிளைகளை, குச்சிகளை, நடவு செய்தால் சுலபமாக முளைக்கும்ஆனால் அவற்றில் 6 முதல் 8 பருக்கள் இருக்க வேண்டும் பதியன்கள் போட்டும் நடலாம்.

 

 

கொசுறு

ஒரு காலத்தில் மருதாணி இடுவது பெண்கள் சமாச்சாரமாக இருந்தது என்று வேண்டாம் என்று சொல்லிவிடுவேன்ஆனால் இன்று ஹேர் டையாகவும், அப்படி சொல்ல முடியாது, காரணம் இன்று  இது ஆண்கள் சமாச்சாரமும் கூட !

READ FURTHER

WWW.EN.M.WIKIPEDIA.ORG / LAWSONIA INERMIS

WWW.TROPICAL.THEFERNS.INFO /  LAWSONIA INERMIS)

WWW.CABI.ORG / LAWSONIA INERMIS (EGYPTIAN PRIVET)

WWW.SCIENCEDIRECT.COM / LAWSONIA INERMIS – AN OVERVIEW / SCIENCE DIRECT TOPICS

WWW.WORLDAGROFORESTRY.ORG / LAWSONIA INERMIS – LYTHRACEAE L WORLD AGRO FORESTRY

POST A COMMENT PLEASE, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...