இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் அயலகப் பழம் |
கொய்யா, வெளிநாட்டு பழ மரமாக இருந்தாலும் உலக அளவில் உற்பத்தியில் இந்திய நாட்டில்
கொடிகட்டி பறக்கும் மரம், விரைந்து காய்ப்புக்கு வந்து,
விவசாயிகளை
உற்சாகப்படுத்தும் மரம், ஆக்சிடெண்ட்டுகளையும் ஊட்டச்சத்துக்களையும்
அபரிதமான அளவு மலிவாக அள்ளித் தரும் மரம். மகத்துவம் மிக்க பழங்களைத் தரும் எளிமையான மரம்.
தமிழ்: கொய்யா,
செங்கொய்யா, சிவப்புக்
கொய்யா,
பெருங்கொய்யா, வய்ய கொண்டான் (KOYYA, SENKOYYA, SIVAPPU KOYYA, PERUN KOYYA,
VAYYAKONDAN)
பொதுப்
பெயர்கள்: கோவா (GUAVA)
தாவரவியல்
பெயர்: சிடியம் குஐவா (PSIDIUM
GUJAVA)
தாவரக்
குடும்பம் பெயர்: மிர்ட்டேசி (MYRTACEAE)
தாயகம்:
தென்
அமெரிக்கா, பிரேசில் (SOUTH AMERICA, BRAZIL)
கொய்யா
மரத்தின் பல மொழிப் பெயர்கள்
பெங்காலி:
பயாரா (PAYARA)
குஜராத்தி:
ஜாம்ருக், ஜாம் பால் (JAMRUKH, JAM PHAL)
கொங்கணி:
பேர்,
பேரான் (PAER, PERON)
ஒரியா: பிஜுலி (PIJULI)
பஞ்சாபி:
அம்ரூத் (AMRUTH)
துலு: பேரங்கி
(PERANGI)
இந்தி: அம்ருத்,
ஜம்பால் (AMRUTH, JAMPHAL)
மலையாளம்:
மலாக்கா-பீலா,
பீலா (MALACKA-PELA, PELA)
மராத்தி:
ஜம்பா, பெருஞ்சாம்,
டூப்கெல் (JAMBA, PERUNJAAM, TUPKEL)
சமஸ்கிருதம்:
அம்ருதா.பலம்,
அம்ரித்தாக்வச்சா,
பாகு-பிஜா-பாலம்,
மன்சாலா (AMRUTHA-PHALAM, AMRITHAKVACHA, BAHU-BIJA-PHALAM,
MANSALA)
தெலுங்கு:
எா்ரஜாமா,
கோவா,
கொய்யா,
ஜாமா, பாண்டு,
ஜாமசேட்டு, தெல்லா ஜாமா (ERRAJAMA, GOVA, GOYYA, JAMA PANDU, JAAMA CHETTU,
THELLA JAAMA)
சிறு பழமரம்
உலகம்
முழுவதும் விரும்பிப் பயிரிடப்படும் சிறுபழமரம். தென் அமெரிக்கா,
மத்திய
அமெரிக்கா, மற்றும் கரிபியன் தீவுகளுக்கு சொந்தமான மரம். வெப்பமண்டலம், மற்றும்
மித வெப்பமண்டல பகுதிகளில் எல்லாம் பயிரிடும் மரம்.
உப்புத்
தன்மை
உள்ள நிலங்கள்
கடல்மட்டத்திலிருந்து,
1500 மீட்டர் உயரம்வரை உள்ள பகுதிகளில் நன்கு வளரும்.
பரவலான
மண்வகைகளில் வளரும்.
கூடுதலான உப்புத் தன்மை
உள்ள நிலங்களில் கூட நன்கு வளரும். 4.5 முதல் 8.2 கார
அமில நிலை உள்ள மண் வகைகளில்
கூட வளரும்.
லக்னோ 46 லக்னோ 49
தமிழ்நாட்டில்
வீட்டுத் தோட்டங்களில் இருப்பவை எல்லாம் நாட்டுக்கொய்யா ரகங்கள்தான். நாட்டுக் கொய்யாவிலும்,
வெள்ளை
மற்றும் சிவப்புதசை இருக்கின்றன.
கொய்யா
சாகுபடி செய்யும் விவசாயிகள், லக்னோ.46,
மற்றும்
லக்னோ.49 ஆகிய
ரகங்களைப் பயிரிடுகிறார்கள். இவை தவிர அலகாபாத்,
அர்க்கா
அமுல்யா,
அர்க்கா
மிருதுலா,
பனாரஸ்
போன்ற ரகங்களையும் பயிர் செய்கிறார்கள்.
சீக்கிரம்
காய்ப்புக்கு வரும்
தற்போது,
கிராமங்களில்
வயல்களில் வேலைபார்க்க ஆட்கள் கிடைப்பதில் பிரச்சினை இருப்பதால்,
விவசாயிகள்
பழப்பயிர்களைச் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். பிற பழப்பயிர்களை விட சீக்கிரமாக காய்ப்புக்கு வருவதால்,
கொய்யா
மரங்களை நடுவதில் மிகுந்த உற்சாகம்
காட்டுகிறார்கள்.
குழந்தையின்மை
பிரச்சினை
சக்கரை
நோய்,
ரத்தக்கொதிப்பு,
புற்றுநோய்,
மூளை
மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகள், குழந்தையின்மை,
பார்வை
சம்மந்தமான கோளாறுகள், இருமல்,
ஜலதோவும், போன்றவற்றை
சரிசெய்யும் மருத்துவப் பண்புகளைக் கொண்டது,
கொய்யாப்பழம்.
ஆன்டி
ஆக்சிடெண்ட்ஸ்
வைட்டமின்’சி’,
நார்ச்சத்துக்கள்,
பாலி
சேச்சுரேட்டட் பேட்டி ஆசிட்ஸ்,
பொட்டாசியம்,
மக்னீசியம்,
கரோட்டினாய்ட்ஸ்,
பாலிபீனால்ஸ்,
ஆன்டி
ஆக்சிடெண்ட்ஸ், போன்றவை கொய்யாக்கனியில் அபரிதமான அளவு
உள்ளன.
இந்தியாவின்
மிக முக்கியமான பழப்பயிர்களில் ஒன்று. இந்தியாவின் மொத்தப் பழப்பயிர் சாகுபடிப்
பரப்பில் 3.3 பரப்பில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.
கொய்யாவை,
மதிப்புக் கூட்டுதல் மூலமாக,
ஜாம், ஜெல்லி,
நெக்டார்,
ஜூஸ், கோவாகேக்,
பீயூரி
போன்றவைளை தயார் செய்யலாம்.
இறைச்சியை
புகையிடலாம்
கொய்யா
மரக்கட்டைகள் உறுதியானவை, ஹவாய் தீவுகளில் இறைச்சியை புகையிடவும்,
நைஜீரியாவில் கூரைக் கொம்புகள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.
ஆந்திரப்பிரதேசம்
மத்தியப்பிரதேசம்
இந்தியாவில்,
ஆந்திரப்பிரதேசம்,
மத்தியப்பிரதேசம்,
சத்தீஷ்கர், மகாராஷ்ட்ரா,
குஐராத்,
கர்நாடகா,
தமிழ்நாடு,
ஜார்கண்ட்,
வெஸ்ட்
பெங்கால்,
உத்தரப்பிரதேசம்
ஆகிய மாநிலங்களில் கொய்யா பயிர் செய்யப்படுகிறது.
மதுரை
திண்டுக்கல்
தமிழ்நாட்டில்,
மதுரை,
திண்டுக்கல்,
சேலம்
ஆகிய மாவட்டங்களில் அதிகம் சாகுபடியாகிறது. தமிழ்நாட்டில், அனக்காபள்ளி,
பனாரசி,
பேங்களூரா, சித்திதார்,
நாக்பூர்
சீட்லெஸ்,
ஸ்மூத்
கிரீன் போன்ற ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
முதலிடத்தில்
இந்தியா.
உலக
அளவில் மாம்பழம் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது இந்தியா.
ஆனால்
மாம்பழத்திற்கு சொந்தநாடும் இந்தியாதான்.
கொய்யாவைப்
பொறுத்தவரை சொந்தமண் பிரேசில். ஆனால் கொய்யாவிலும் அகில உலக அளவில் அதிக
உற்பத்தி செய்வது இந்தியா என்பது பெருமைக்குரியது.
இந்தியாவுக்கு
அடுத்து சீனா
அமெரிக்கா,
யுனைட்டட்
அராப் எமிரேட்ஸ், சவுதி அரேபியா,
நெதா்லேண்ட்ஸ், குவைத்,
மற்றும் ஜோர்டான்,
ஆகிய
நாடுகள் இந்தியாவிற்கு அடுத்த நிலையில் உள்ளன. உலக
அளவில் கொய்யா உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருப்பது,
சீனா.
கொய்யா
நாடுகள்
உலக
அளவில் அதிகம் கொய்யா உற்பத்தி செய்யும் நாடுகள், இந்தியா,
னசனா,
தாய்லாந்து,
பாக்கிஸ்தான்,
மெக்சிகோ,
இந்தோனேசியா,
பிரேசில்,
பங்ளாதேஷ்,
பிலிப்பைன்ஸ்,
மற்றும்
னநஜீரியா.
அதுபோல
உலக அளவில், கொய்யா, மா,
மற்றும்
மங்குஸ்தான் போன்ற பழங்கள் ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருக்கும் நாடு
மெக்சிகோ.
இரண்டு மூன்று நிலைகளில் இருப்பது தாய்லாந்து மற்றும் பிரேசில். இந்தியா, ஐந்தாவது
இடத்தில் உள்ளது.
பழங்கள்
ஏற்றுமதி
நாடுகள்
மேலே
குறித்த மூன்று பழங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகள்,
மெக்சிகோ,
தாய்லாந்து,
பிரேசில்,
பெரு,
இந்தியா,
பிலிப்பைன்ஸ்,
நெதர்லேண்ட்ஸ், ஸ்பெயின்,
ஈக்வேடர்,
மற்றும்
பாக்கிஸ்தான்.
இந்தியாவுக்கு
அதிக
வாய்ப்புகள்
கொய்யாவைப்
பொருத்தவரை, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னேற்றம்
அடைய மற்ற நாடுகளைவிட இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
மதிப்புக்
கூட்டும் தொழில்கள்
புதியதாக
வேளாண்மை பார்க்க வரும் இனளஞர்கள், இதுபோன்ற
பழ உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு மதிப்புக்
கூட்டும்படியான தொழில்களை கிராமங்களில் தொடங்கும் வாய்ப்புகள்,
பிரகாசமாக
உள்ளது.
ஏற்கனவே
நமது விவசாயிகள்.
உலகத்தின் அதிக உற்பத்தி என்னும்
ராஐபாட்டையை போட்டு வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற முயற்சிகள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல
விலை கிடைக்க உதவும்.
கிராமப்புறங்களில்,
வேலை
வாய்ப்பும், பொருளாதாரமும் நிச்சயம் மேம்பட இந்த முயற்சிகள்
சிவப்புக் கம்பளம் விரிக்கும்.
பதினான்கு
பழங்களில் சிறந்த பழம்
இந்தியாவில்
விளையும் பழங்களில் அதிகமான ஆன்டிஆக்சிடென்ட்ஸ்
நமது உடல் ஆரோக்கியத்திற்கு அதிகபட்சம் உறுதுணையாக இருப்பது,
கொய்யாப்பழம்,
என
சமீபத்தில் செய்த ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த
ஆய்வில் 14 வகையான
பழங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் கொய்யாவில் 100 கிராம்
பழத்தில் 496 மில்லிகிராம் ஆன்டிஆக்சிடெண்ட்ஸ் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த 14 பழங்களில்
மிகவும் குறைவான அளவில் ஆன்டிஆக்சிடெண்ட் இருந்தபழம் அன்னாசிப் பழம்.
தினம்
ஒரு கொய்யா, வேண்டாம் டாக்டர் ஐயா
இந்த
ஆய்வில் என்னென்ன பழங்கள்
உட்படுத்தப்பட்டன ? இதையும் தெரிந்து கொள்வது நல்லது. அவை, கொய்யா,
அன்னாசிப்
பழம்,
இண்டியன்
பிளம்,
மாம்பழம்,
ஆப்பிள்,
சப்போட்டா,
வாட்டர் மெலான், சீத்தாப்பழம்,
திராட்சை,
ஆரஞ்சு,
பப்பாளிப்பழம்,
மாதுளை,
ஸ்வீட் லைம்,
மற்றும்
வாழைப்பழம்.
‘தினம்
தினம் ஒரு ஆப்பிள் தேடி நீயும்
சாப்பிட்டால் ஒடி நீயும் போக வேண்டாம்
எந்த ஒரு டாக்டரையும் நாடி’ என்பது
பழ மொழி.
“ஒரு
கொய்யா ஒரு நாளைக்கு சாப்பிட்டால் ஒரு நாளும் வேண்டாம் டாக்டர் அய்யா”
என்பது
புது மொழி.
TO
READ FURTHER
www.mediindia.net – THE FRUIT IN NEWS
www.flowersofindia.net
– Guava – Psidium gujava
www.feedipedia
– Guava – Psidium gujava
www.fitnesspell.com
– Guava – Scientific Name, Common Names In Different Languages
www.newworldencyclopedia.org
– Guava
PLEASE POST YOUR COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN
D, (AUTHOR)
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment