அச்சிநறுவிலி SCARLET CORDIA CORDIA SABESTINA |
GRACEFUL
FLOWERING TREE SCARLET CORDIA
அழகு
பூமரம் அச்சி நறுவிலி
நடுத்தரமான அளவுள்ள மரம்; 7 முதல் 10 மீட்டர் உயரம் வளரும்; அழகான ஆரஞ்சு நிற பூக்களைக் கொண்டது;
5 முதல் 7 இதழ்களைக் கொண்ட புனல் வடிவ பூக்களாக
மலரும்; நான்கு
செ.மீ. நீளமுள்ள பூக்கள், கிளை
நுனிகளில் பூக்கும்; பழங்கள்,
வெள்ளை நிறத்தில்
கூம்பு வடிவத்தில், 2 - 4
விதைகள் கொண்டதாக இருக்கும் பழங்களை சாப்பிடலாம்.
18. அச்சி நறுவிலி என்றும் கார்டியா மரம்
(SCARLET CORDIA
TREE)
தாவரவியல்
பெயர்;: கார்டியா
செபஸ்டினா (CORDIA SABESTINA)
தாவரக்
குடும்பம் பெயர்: போரோஜினேசியே (BOROGINACEAE)
தாயகம்:
கரிபியன் தீவுகள், மத்திய
மற்றும் வட அமெரிக்கா, கியூபா
(CARIBBEAN ISLANDS,
CENTRAL & NORTH AMERICA, CUBA)
அழகான பூ மரம் என்பது இதன் சிறப்பு. பூங்காக்களில் மற்றும் தோட்டங்களில் நட
ஏற்றது.
ஆண்டு முழுவதும் இலைகளை உதிர்க்காமல், ஆழ்ந்த பச்சை நிற இலைகளில் பின்னணியில்,
ஆரஞ்சு நிறப்
பூக்களைப் பார்க்க அம்சமாக இருக்கும்;
நிறம், கனகாம்பரம் பூக்களை நினைவு படுத்தும்;
ஆனால் அளவில் பெரியவை;
பூக்கள் ஏறத்தாழ
ஆண்டு முழுவதும் கொத்துக்களாகப் பூக்கும்: கோடையில் கூடுதலாய் பூத்து களைகட்டும்.
1. அச்சி நறுவிலியின் பலமொழிப் பெயர்கள்:
1.1. தமிழ்:
அச்சி நறுவிலி (ACHINARUVILI)
1.2. பெங்காலி:
கம்லா புகல் ரக்டாரக் (KAMLA BUGAL RAKTARAG)
1.3. இந்தி:
லால் லசோரா, போகாரி
(LAL LASORA, POKARI)
1.4. கன்னடா:
சல்லி கெண்டலா (CHALLE KENDALA)
1.5. தெலுங்கு:
விரிகி (VIRIGI)
1.6. ஆங்கிலம்:
லசோடா (LASODA)
1.7. அரபிக்: டாலெக் (DALEK)
1.8. மியான்மர்: லாசுரா,
தானாட் (LASURA, THANAT)
1.9. பொதுப் பெயர்கள்: பாகுபரா, பர்குண்ட், சின்னா, லாசுரா, நறுவிலி, ஷீவண்ட், அலோ வுட், ஜெரானியம் ட்ரீ, லார்ஜ் லீஃப் ஜீஜர் ட்ரீ, ஆரஞ்சு ஜீஜர் ட்ரீ, சீடிரம்பட், செபஸ்டியன் பிளம் ட்ரீ, ஸ்பேனிஷ் கார்டியா, டெக்ஸாஸ் ஆலிவ், சிர்கோட்டி,(BAGUBARA, BARGUND, CHINNA, LASURA,
NARUVILI, SHEEVANT, ALOE WOOD, GERANIUM TREE, LARGE LEAF GEIGER TREE, ORANJE
GEIGER TREE, SEA TRUMPHET, SEBESTIAN
PLUM TREE, SPANISH CORDIA, TEXAS OLIVE, ZIR KOTE)
ஆரஞ்சு நிற பூக்கள்
நடுத்தரமான அளவுள்ள மரம்; 7 முதல் 10 மீட்டர் உயரம் வளரும்; அழகான ஆரஞ்சு நிற பூக்களைக் கொண்டது;
5 முதல் 7 இதழ்களைக் கொண்ட புனல் வடிவ பூக்களாக
மலரும்; நான்கு
செ.மீ. நீளமுள்ள பூக்கள், கிளை
நுனிகளில் பூக்கும்; பழங்கள்,
வெள்ளை நிறத்தில்
கூம்பு வடிவத்தில், 2 - 4
விதைகள் கொண்டதாக இருக்கும் பழங்களை சாப்பிடலாம்.
இலைகள்: பெரியவை. அடர்த்தியான பச்சை நிறம். சொரசொரப்பான மேற்புறம்;
உப்புக்
காகிதங்களுக்குப்பதிலாக இதன்
இலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
பிரமிடு பெட்டிகள் செய்த மரம்
இதன் மரம் மிருதுவானது; பெட்டிகள் செய்வதற்கு பொருத்தமான மரம்;
இப்போதும்கூட
பெட்டிகள் செய்கிறார்கள்; ஒரு
காலத்தில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகளில் ‘மம்மி’கள் வைப்பதற்கான பெட்டிகளைக்கூட நறுவிலி
மரத்தில் செய்திருக்கிறார்கள்; ஆச்சரியமான
செய்தி.
பிரமிடுகளின், மம்மிப்பெட்டிகளைச்
செய்ய ஒரு சில மரங்களை மட்டுமே பயன்படுத்துவார்கள்; அவ்வகையில் அச்சி நறுவிலியின் மரங்களை
பயன்படுத்தி இருக்கிறார்கள்; அத்தோடு ‘சைகாமோர் அத்தி (SYCOMORE FIG) மற்றும் லெபானான் நாட்டு செடார் (CEDAR
OF LEBANON) மரங்களிலும், இந்தப் மம்மிப் பெட்டிகளைச் (MUMMY
CASES) செய்துள்ளனர். இதில் முதலிடம் செடார் மரங்களுக்கு, இரண்டாவது மூன்றாவது இடங்கள், சைகாமோர் அத்தி மற்றும் அச்சி நறுவிலி மரங்களுக்கு.
கடினமான தோலுள்ள விதைகள்
பழங்களை உலர்த்தி, உடைத்து அதிலிருந்து விதைகளை எடுக்க வேண்டும். விதைகள் கடினமான தோலுடன் இருப்பதால், நேர்த்தி
செய்து விதைக்க வேண்டும். இதற்கு கொதிக்கும் நீரில், விதைகளை 24 மணிநேரம் முக்கி வைத்திருக்க
வேண்டும். அதன் பின்னர் விதைகளை, ஒரளவு நிழலாக இருக்கும் இடத்தில்
விதைத்தால், 100
க்கு 80 விதைகள்
பழுதில்லாமல் முளைக்கும். முளைத்து வந்த
செடிகள் 6
முதல் 10
செ.மீ. வளர்ந்த பின்னால் அவற்றை
பாக்கட்டுகளில் எடுத்து நடலாம். சுமார் 7 மாதங்கள் வளர்ந்த கன்றுகளை எடுத்து
தேவையான இடங்களில் நடவு செய்யலாம்.
45 செ.மீ. நீள, அகல ஆழமுள்ள குழிகளை எடுக்க
வேண்டும். குழிகளை எடுத்த பின்னர் ஒரு
வாரம் ஆறவிடுவது நல்லது. பின்னர் 10 கிலோ மக்கிய குப்பை உரம் மற்றும் ஒரு
கிலோ வேப்பம் பிண்ணாக்கை, குழியிலிருந்து
எடுத்து மேல் மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். குழியில் முதலில் அடியில் இருந்து எடுத்த மண்ணை
நிரப்ப வேண்டும். தொழு உரம் கலந்த மேல்
மண்ணை நிரப்ப வேண்டும். குழியினை
முழுமையாக நிரப்பக் கூடாது. அரையடி முதல்
முக்கால் அடி குழியை மூடக் கூடாது.
பின்னால் குழியில் நடுவில் கன்றுகளை நட வேண்டும்.
பழங்களை சாப்பிடலாம்
பழங்கள், சிறியவை;
வெண்மையானவை; சாப்பிடலாம்; இந்தியா மற்றும் சில நாடுகளில்
பச்சையாகவும் சமைத்தும் சாப்பிடுகிறார்கள்; ஊறுகாய் போடுவது பரவலாக நடைமுறையில்
உள்ளது; பழத்தசையில்
ஒரு விதமான பசை தயாரிக்கும் பழக்கம் காலம் காலமாக உள்ளது.
வணிகரீதியிலான மரங்கள்
இதன் மரங்கள் வணிகரீதியில் பயனாகிறது. குறிப்பாக கதவுகள்,
மேஜை நாற்காலி போன்ற மரச் சாமான்கள் செய்ய
மத்திய மற்றும் தென் அமெரிக்காவில், உபயோகமாகிறது. ‘அக்வஸ்டிக் கிட்டார்’ (ACOUSTIC
GUITAR) போன்ற இசைக்
கருவிகள், செய்யவும்
பயன்படுகிறது. இசைக் கருவிகள், மற்றும் அதற்கான உதிரிபாகங்களைச் செய்ய
தரமான மரவகை வேண்டும். மேலும் கடைசல்
வேலைக்கு உதவும் மரங்களில் மட்டுமே இவற்றைச் செய்ய முடியும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 185 மீட்டர் உயரம் வரை இந்த மரங்கள் நன்றாய் வளரும்.
பறவைகள், பட்டாம் பூச்சிகள் மற்றும் இதர பூச்சிவகைகளை அ.ந, தேனும் மகரந்தமும் தந்து கவரும்: அதற்கு பிரதி உபகாரமாக, அவை மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கின்றன.
ஈரச்செழிப்பான மண்கண்டம்
ஈரச் செழிப்புடைய மண், வடிகால் வசதி உள்ள மண், மணற்பாங்கான, பாறைகள் நிறைந்த கடற்கரைப் பிரதேசங்கள் ‘அ.ந’வுக்கு ஏற்ற மண்வகைகள். பரவலான மண்வகைளில் வளரும்: பிரச்சினையான
மண்கண்டத்தைக் கூட ஒரளவு சமாளிக்கும்; கடுமையான வறட்சியைத் தாங்கும்; வெள்ளத்தையும் தாங்கும்; நிறைய சூரிய வெளிச்சம் தேவை; பனிப் பொழிவைத் தாங்காது; அமில
மண் மற்றும் காரத் தன்மை உள்ள (ACIDIC AND ALAKALINE SOILS) மண்ணிலும் நன்கு வளரும்.
பாலியல் நோய்கள்
விதைகளிலிருந்து எண்ணெய் (ESSENTIAL OIL) எடுக்கலாம்; இதனை பலவிதமான நோய்களை குணப்படுத்தும்;
பல நூறு ஆண்டுகளாக
பயன்படுத்தி வருகிறார்கள்; நாட்டுப்புறங்களில் தங்கள் வாழ்க்கை
அனுபவங்களின் அடிப்படையில், இதன்,
பட்டைகள், பூக்கள், மற்றும் பழங்களை மருந்துப் பொருட்களாக
உபயோகப் படுத்துகிறார்கள்.
இருமல் மற்றும் சுவாசமண்டலம் தொடர்பான (BRONCHIAL
AILMENTS)நோய்கள் மற்றும்
பாலியில் தொடர்பான நோய்களை (VENERAL DISEASES) நோய்களை குணப்படுத்த, இதன் பூக்களிலிருந்து தேனீர் தயாரித்து
அருந்துகிறார்கள்; மரத்தின்
பட்டை சாற்றினை காயங்களில் மீது தடவுவதன் மூலம் அதனை குணப்படுத்துகிறார்கள்;
இலைகளின் வடிநீர்
மற்றும் எண்ணெயை, வெதுவெதுப்பான
நீரில் கலந்து ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தலைவலி, சுளுக்கு போன்றவற்றை சரிசெய்கிறார்கள்.
ஆய்வுகள் வேண்டும்
அழகுக்காக அ.ந. மரங்களை வளர்ப்பவர்கள் சிறுசிறு உடல்
உபாதைகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம்.
நிறைய மருத்துவ குணங்களும், ஆன்டி
ஆக்ஸிடெண்ட்களும் கொண்ட இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டால் பயனுடையதாக இருக்கும்.
POST A COMMENT PLEASE, REGARDS – GNANASURIA BAHAVAN (AUTHORS)
88888888888888888888888888888888888888888
No comments:
Post a Comment