கிளைரிசிடியா உயிர் வேலிக்கும் அழகு பூவுக்கும் உத்திரவாதம் |
(SEEMAI
KONRAI, MEXICAN LILAC, MATHER OF COCOA, GLIRICIDIA SEPIUM, FABACEAE)
பொதுப்
பெயர்: மெக்சிகன் லிலாக், மதர் ஆப் கோகோ (MEXICAN
LILAC, MATHER OF COCOA)
தாவரவியல்
பெயர்: கிளைரிசிடியா செப்பியம் (GLIRICIDIA
SEPIUM)
தாவரக்குடும்பப்
பெயர்: பேபேசி (FABACEAE)
தாயகம்:
மெக்சிகோ, தென் அமெரிக்கா
மரங்களில்
இது ஒரு சகலகலா வல்லவன். இயற்கையான பசுமைவேலி,
தீவனம், விறகு, பசுந்தாள் உரம், ஊடுபயிர், தேயிலை காபி கோகோ போன்ற பயிர்களுக்கு நிழல் மரம், எலிக்கொல்லி
என பலவகைகளில் பயன்படும் மரம் இந்த கிளைரிசிடியா என்னும் சீமைக்கொன்றை.
பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
சீமை அகத்தி (SEEMAI
AGATHI)
மலயாளம்:
சீமக்கொன்னா (SEEMAKKONNA)
கன்னடம்:
கொப்பர்டர் மரா, (KOBBARDER
MARA)
தெலுங்கு:
மத்ரி (MADRI)
பெங்காலி;:
சாரங்கா (SARANGA)
சமஸ்கிருதம்:
சர்ப்பதந்தி (SARPADANDI)
‘சூபாபுல்,
குதிரைமசால் போன்ற தீவன இலைகள் புரதம் மற்றும் ஊட்டச் சத்துக்கள்
ரீதியாக கிளைரிசிடியா அருகில் கூட நிற்க
முடியாது’ – என்கிறார் டாக்டர்.சுப்பையா
எனும் ஆராய்ச்சியாளர்.
மிக
வேகமாக நம் நாட்டில் பரவி தழை உரமாக, கால்நடைத் தீவனமாக அறிமுகமாகி
சக்கைப் போடு போடும் மரம்.
சாக்லட் நாடு நிகராகுவா
‘கோகோ’
சாகுபடி ஓகோ என்று நடைபெறும் மத்திய அமெரிக்க நாடு நிகராகுவா. உலகில்
கோகோ செய்யும் பத்து
நாடுகளில் முன்னணி வரிசையில் உள்ளது நிகராகுவா. அதிக நிலப்பரப்பில் ‘கோகோ’ சாகுபடி செய்யும் சாக்லட் நாடு இது.
நிகராகுவா
பொருளாதாரத்திற்கு ஆதார சுருதி கோகோ.
கோகோவின் ஆதார சுருதி, அதற்கு
நிழல் தரும் கிளைரிசிடியா மரம். அங்கு அதன் பெயர் மதர் ஆப் கோகோ (MOTHER OF COCOA)
நிழல் தரும் நிகரில்லா மரம்
கோகோவுக்கு மட்டுமல்ல காப்பி, தேயிலை, வேனிலா,
கருமிளகு பல பயிர்களுக்கும் பல நாடுகளில் நிழல் தரும் நிகரில்லா மரம் கிளைரிசிடியா.
நிலத்தில் நிறைய தழை உதிர்த்து
இலைமக்கு சேர்க்கும். சீர் கேடடைந்த மண்ணில் ஊட்டம் சேர்க்கும். நிலவளம் நீர்வளம்
பாதுகாக்கும். காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்தும்.
பால் உற்பத்தியை அதிகரிக்கும்
கிளைரிசிடியா
தழைகளை மாடுகளுக்குப் போடுவதன் மூலம் பசுந்தீவனச் செலவைக் குறைப்பதோடு பால்
உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று
இந்தியாவின் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவர்கள்
பரிந்துரைக்கிறார்கள்.
‘ஒரு
பத்து பதினஞ்சி கிலோ கிளைரிசியா தழைங்கள போட்டா அடர் தீவனத்தை பாதியா
குறைச்சிக்கலாம். ஆடு, மாடு, எருமை எல்லா கால்நடைகளுக்கும் கொடுக்கலாம். சிலதுங்க சாப்பிடாதுங்க.
“அதுங்கள
நாமதான் பழக்கப் படுத்தணும். கொஞ்சம் லேசா
உணத்திப் போடலாம். இல்லன்னா அதோட உப்பு, வெல்லப்பாகு கலந்து குடுத்தா மக்கார் பண்ணாது. இலைங்கள துண்டுதுண்டா
நறுக்கி அடர் தீவனத்தோட கலந்தும் கொடுக்கலாம்’ என்கிறார்
இது குறித்து ஆய்வுசெய்த ஒரு ஆராய்ச்சியாளர்..
குதிரை
மற்றும் இதர பிராணிகளுக்கும் நச்சுத்தன்மை உடையது
கால்நடைகளுக்கு
சிறந்த தீவனம் என்றாலும் குதிரை மற்றும் இதர பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் இதன் இலைகள் நச்சுத் தன்மை உடையது என்கிறது,
ஒரு ஆராய்ச்சி.
சீமைக்கொன்றை
என தமிழில் பெயர் வைத்திருந்தாலும் எல்லோருக்கும் அறிமுகமான பெயர் கிளைரிசிடியா. இதன் தாவரவியல் பெயர் கிளைரிசிடியா செப்பியம் (GLIRICIDIA
SEPIUM) இது பேபேசியே (FABACEAE) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. வேலி மரம், தீவன
மரம், தழை உர மரம், நிழல் மரம். அழகுமரம் என கிளைரிசிடியாவுக்கு பல அவதாரங்கள் உண்டு.
இந்த
மரத்தின் மூலதனமே இதன் தழைதான். விளை நிலங்களுக்கு தழை உரமாகும். கால்நடைகளுக்கு
தீவனமாகும்.
பிப்ரவரி,
ஏப்ரல் மாதங்களில் பூக்கும். கொத்துக் கொத்தான ஊதாநிறப்
பூக்கள் தேனீக்களுக்கு தேனும் மகரந்தமும் தாராளமாய்த் தரும்
இருமல் காய்ச்சலை சரிசெய்யும்.
புழு
வெட்டினால் ஏற்படும் தலைமுடி இழப்பு, கட்டி, சிராய்ப்பு,
சளி, தலைவலி, இருமல், காய்ச்சல், எலும்பு முறிவு, கேங்ரின், பம்ஸ், மூட்டுவலி, தோல் புற்று நோய், குடற்புண்; ஆகியவற்றைக்
குணப் படுத்தும் சக்தி உடையது
கிளைரிசிடியா.
காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும். சேரும் தூசுகளை மட்டுப் படுத்தும்; செவிப்பறைகளை
சேதம் செய்யும் ஒலி அலைகளை வடிகட்டும்.
எந்த
மண்ணும் எனக்கு சொந்த மண்தான் என மண்வகை
பலவற்றிலும் பூத்துக் குலுங்கும் இந்த மரத்தின் பிறந்த மண் மெக்சிகோ. ஆறு மீட்டர் உயரம் வரை அயராமல்
வளரும் அழகு மரம்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment