சர்வதேச மூலிகை மரம் எலும்புறுக்கி |
எலும்புறுக்கி மரம், தென்னிந்தியாவிற்கு சொந்தமான மரம், உலகம் பூராவும் அங்கீகரிக்கப்பட்ட மூலிகை
மரம், ஆயர்வேதம், சித்த மருத்துவம்,பாரம்பரிய மருத்துவம், சீன மருத்துவம், இப்படி எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தும் மரம், ஊதுவத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இதனை ஒட்டும் பொருளாகவும், முக்கியமாக எலும்பு
முறிவுக்கு ‘பிளாஸ்டர்” போடுவதற்கும் இது
அதிகம் பயன்படுத்தப்
பட்டது, இதன்
பட்டைகளை முறையாக அறுவடை செய்யாததால் அற்புதமான இந்த மூலிகை மரத்தை
அழித்து விட்டார்கள்.
தமிழ்ப்பெயர்: எலும்புறுக்கி, உரல்லி, மூச்செய்பெயட்டி (ELUMBURUKKI, URALLI, MUCHAIPPEYETTI)
பொதுப் பெயர்கள்:
இண்டியன் லாரெல் (INDIAN
LAUREL)
தாவரவியல் பெயர்:
லிட்சியா குளுட்டினோசா (LITSEA
GLUTINOSA)
தாவரக்குடும்பம் பெயர்: லாரேசியே (LAURACEAE)
தாயகம்: இந்தியா
பல மொழிப் பெயர்கள்:
தெலுங்கு: கனுக
நாலிக்கி> மேடா, நாரா நாலிக்கி (KANUGU
NALIKE, MEDA, NARA NALIKE)
சமஸ்கிருதம்: மேடசாகா (MEDASAKA)
மராத்தி: மெல்டாலக்டி> ரானம்பா (MEDALAKDI,
RANAMBA)
ஒரியா: காய்பலா கேட்சோ (GAIPHALA GATCHA)
உலகம் பூராவும்
அங்கீகரிக்கப்பட்ட மூலிகை மரம் இந்த எலும்புறுக்கி மரம். ஆயர்வேதம், சித்த மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், சீன மருத்துவம், இப்படி எல்லா மருத்துவ முறைகளிலும் இதனை பயன்படுத்துகிறார்கள்.
பரவியிருக்கும்
இடங்கள்
இந்தியா முதல்
ஆஸ்திரேலியா வரை பரவலாக பல நாடுகளில் பரவியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரம் உள்ள
இமயமலைப் பகுதிகளில் மற்றும் இதர
மலைப்பகுதிகளிலும் இந்த மரம் பரவியுள்ளது.
தென்னிந்தியாவிற்கு
சொந்தமான மரம்
இது
தென்னிந்தியாவிற்கு சொந்தமான மரம். அதனால்
தான் தெலுங்தகு மொழியில் இதற்கு 13 பெயர்கள் உண்டு.
தமிழில் ஏழு பெயர்களில் இதனை அழைக்கிறார்கள். அமா, எனம்பிரகி, எலும்புறுக்கி> மூச்சைப்பேயெட்டி, பிசின்பட்டி, உரல்லி, அத்தனையும் தமிழ்ப்பெயர்கள்.
ஆனால் இவற்றில்
ஒன்றுகூட கேள்விப்பட்ட மாதிரி இல்லை.
ஆனால் இது ஒரு முக்கியமான மூலிகை மரம்.
அநேகமாய் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு. தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அல்லது இந்த மரங்கள் இருக்கும் ஊர்களில் இதற்கு
உள்ளுரில் வேறு பெயர்கள் இருக்கக் கூடும்.
“லாரேசி” என்னும் தாவரக் குடும்பம்
“லாரேசி” என்பது மிகவும் பெரிய
தாவரக்குடும்பங்களில் ஒன்று. இதில்
இருக்கும் தாவரவகைகள் உலகம் பூராவும் பரவி உள்ளது. இதில் சுமார் 2850 பூக்கும் தாவர
வகைகள் உள்ளன. இவை வெப்பமண்டலம்> மற்றும் குளிர்ப்பிரதேசங்களிலும் பரவியுள்ளன.
இதில் “கேசித்தா” (CASSYTHA) என்பது மட்டும்; வித்தியாசமான தாவர
வகை. அதாவது இதில் உள்ளவை அனைத்தும்
ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த கொடிவகைக் தாவரங்கள் (PARASITIC VINES).
மரத்தின் மருத்துவப்
பயன்கள்
இந்த மரத்தின் இலை, கிளை, பூ பிஞ்சு பழம், விதை, மரம், பட்டை, வேர் அத்தனையும் மருந்தாக பயன்பட்டுவந்தது. பழங்குடிகன் காலங்காலமாக இவற்றைப் பயன்படுத்தி
வந்தனர். பலவிதமான நோய்களை குணப்படுத்த
பயன்படுத்தி உள்ளார்கள்.
முறையாக இதனை அறுவடை
செய்யாததால் அற்புதமான இந்த மூலிகை மரத்தை அழித்து விட்டார்கள். குறிப்பாக இது போன்ற செயல் அதிகம் நடந்தது
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில்.
ஊதுவத்தி செய்யும்
தொழிற்சாலைகளில் இதனை ஒட்டும் பொருளாகப் (BINDING
AGENT)
பயன்படுத்தினார்கள். முக்கியமாக எலும்பு
முறிவுக்கு ‘பிளாஸ்டர்” போடுவதற்கு இது
அதிகம் பயன்படுத்தப்
பட்டது.
இந்த மரத்தின் எல்லா
பகுதிகளும் பயன்படுகிறது.
ஆனாலும் இது மிகவும் மதிப்பு மிக்கப் பொருள், இந்த மரத்தின் பட்டைதான். இப்படி
இந்த மரங்களில் பட்டை சேகரிக்கும் தொழில், ஆந்திராவில், கிழக்குக் தொடர்ச்சி மலைப்பகுதியின் பழங்குடி, மக்களுக்கு சோறு போட்டது.
இதன் விளைவாக கிழக்குத்
தொடர்ச்சி மலைப்பகுதியில் வெகுவாக இந்த மரங்கள் அழிக்கப்பட்டன. இது இந்தியாவில் மட்டுமல்ல பிலப்பைன்ஸ்> பள்ளாதேஷ்; ஆகிய நாடுகளிலும் நடந்தது. இதன் விளைவாக> இந்தியா உப்பட மற்ற
இரண்டு நாடுகளிலும் கூட அழிந்துவரும் மரங்கள் என்ற பட்டியலில் (ENDANGERED TREE SPECIES LIST) இது
சேர்க்கப்பட்டுள்ளது.
பட்டைகள் சேகரிப்Pபில் நிபுணத்துவம்
கிழக்குத் தொடர்ச்சி
மலைப் பகுதியில் இருக்கும். பழங்குடிகள்
இந்தப் பட்டைகள் சேகரிப்பதில் வல்லவர்கள்.
முதல் எழு ஆண்டுகள் வயதுடைய மரங்களில்தான் பட்டைகள் சேகரிக்க
முடியும்.
1.5 முதல் 2.00 செ.மீ பருமன் உள்ள பட்டைகளை
சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு தனி மரத்திலிருந்தும் 4 முதல் 5 கிலோ பட்டைகளை
சேகரிக்க முடியும். ஒரு நபர் ஒரு நாளில் 15 கிலோ பட்டைகள்
சேகரிப்பார். இந்த வகையில் மாதத்தில்
அவருக்கு 3000 ரூபாய் வரை வருமானமாகக் கிடைக்கும்.
வரைமுறை இல்லாத பட்டைகள் சேகரிப்பு
கிழக்குத் தொடர்ச்சி
மலைப் பகுதியில் விசாகப்பட்டினம் பகுதியில் இதுபற்றிய ஆய்வு
ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி
இந்தியாவில் இருக்கும் அகர்பத்தி தயாரிக்கும் தொழிந்
கூடங்கள் காரணமாகத்தான்> இந்த மரங்கள் அழிக்கப்பட்டன.
“திரும்பத் திரும்ப வரைமுறை இல்லாம பட்டைகள்
சேகரிச்சதுதான். இவ்ளோ மரங்கள்
அழிஞ்சதுக்குக் காரணம்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்தப் பட்டைகள்
சேகரிப்பதை முறையாகச் செய்தால், மரங்களையும்
பாதுகாக்கலாம். இந்த மரங்கள் நமது
தொழிந்சாலைகளுக்கு உதவியாகவும் இருக்கும் என்றும் சொல்லுகிறார்கள், இந்த ஆராய்ச்சியாளார்கள்.
சகலகலா
வணிகமரம்
இந்த மரத்தில்
விவசாயக் கருவிகள் செய்யலாம். இதன்
வேர்களில் கயிறுகள் செய்யலாம். மரக்கூழ் தயாரித்து
காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தலாம், இதன் இளம் இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம்.
விதை எண்ணெயில்
மெழுவர்;த்தி செய்யலாம்> சோப்புகள் செய்யலாம்> இதன் பட்டைகளைப்
பயன்படுத்தி, பலவிதமான நோய்களை குணப்படுத்தலாம். முக்கியமாக எலும்பு முறிவை சரி
செய்யலாம். பாலுணர்வுத் தூண்டியாகவும் இது
பயனாகிறது. மருந்துகள் தயாரிப்பில் மாத்திரைகள்
செய்வதில் ஒட்டும்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மொத்தத்தில் இது ஒரு சகலகலா
வணிகமரம்.
FOR
FURTHER READING
WWW.ENVIS.FRLWT.ORG/PLANT
DETAILS FOR HTSEA GLUTINOSA.
WWW.EN.WIKIPEDIA.ORG
/LAURACEAE FAMILY
WWW.KERALAPLANTS.IN
/LITSEA.GLUTINOSA
WWW.RESEARCHGATE.NET/TRADITIONAL
AND COMMERCIAL USES OF LITSEA CLUTINOSA.
WWW.FLOWERSOFINDIA.NET/
SOFT BOLLY GUM – LITSEA GLUTINOSA
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS
ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE
SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT
WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU
CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D
(AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment