ஜயண்ட் செக்கோயா உலகின் உயரமான மரம் |
(GIANT
SEQUOIA, SEQUIODENDRON GAIGANTEUM, CUPPERASSACEAE)
தாவரவியல்
பெயா:; செக்கோயா டெணட்ரான் ஜெய்ஜாண்டியம் (SEQUIODENDRON
GAIGANTEUM)
தாவரக்குடும்பம்:
குப்ரசேசியே (CUPPERASSACEAE)
பொதுப்பெயர்:
அமெரிக்க செம்மரம் (AMERICAN
REDWOOD)
உலகத்தின்
உயரமான மரம். முந்நூறு அடி
உயரம் வரை சாதாரணமாய் வளரும். இதனை ஆங்கிலத்தில் ‘ஜயண்ட்
செக்கோயா’ என்றாலும் இதுவும் ஒரு செம்மரம்தான். நம்ம ஊரில் ஒரு செம்மரம்
இருக்கிறது. இன்னொன்று பிரேசில் செம்மரம். எல்லா செம்மரங்களுக்கும் ஒரு ‘பிளாஷ்பேக்’
கதை உண்டு.
சிசால்பைனியா
சாப்பன், சாய்மிடா பெப்ரிபியூகா (CAESALPINEA
CHAPAN, SOYMIDA FEBRIFUGA) அஃபலோமிக்சிஸ் பாலிஸ்டேக்கியா
ஆகிய மூன்றையும் இந்திய
செம்மரங்கள் (INDIAN
REDWOODS) என்கிறார்கள்.
சிசால்பைனியா
சாப்பன் மரத்தை இண்டியன் பிரேசில் வுட் என்றும் இண்டியன் ரெட் வுட் என்றும்
சாப்பன் வுட் என்றும் அழைக்கிறார்கள். பூர்வீகம் தெரியவில்லை எனினும் மத்திய மற்றும்
இந்தியா, மலேஷியா மற்றும் சைனாவில் இந்த மரம் பிரபலம். இந்தியாவில் கேரளாவில்
அதிகம் பயன்படுத்துகிறார்கள். சமீப காலமாக மணிப்பூரில் அதிசய மரம் என்ற பெயரில்
பரவி வருகிறது.
செம்மரம்
என்ற பெயரில் கடத்தப்படுவது செம்மரம்
அல்ல. அது செஞ்சந்தனம். அதன்
தாவரவியல் பெயர் டெரோகார்ப்பஸ் சேன்டாலினஸ் (PTEROCARPUS
SANTALILUS)
ஒரு
மரத்தின் பெயரால் அமைந்த ஒரே நாடு
பிரேசில்
நாட்டின் செம்மரத்தின் பெயர் பிரேசில் வுட். இதன் தாவரவியல் பெயர் சிசால்பைனியா
எக்கினேட்டா (அ) பாப்ரசில்லா எக்கினேட்டா (CAESALPINEA
ECHINATA OR PAUBRASILLA ECHINATA) பிரேசில் என்றால் சிவப்பு என்று அர்த்தம். ஆக உலகிலேயே ஒரு மரத்தின்
பெயரால் அமைந்த ஒரே நாடு பிரேசில்.
முதன்
முதலாக தென்அமெரிக்கக்
கரையோரம் கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்களின் கண்களில் பட்டன இந்த
செம்மரங்கள். இந்த செம்மரங்களிலிருந்து சிவப்பு சாயம் எடுத்தால் பெரும்பொருள் ஈட்ட
முடியும் எனத் தெரிந்தது. அடுத்தது என்ன ?
அந்த
நாட்டை அப்போது ஆண்டுகொண்டிருந்த பழங்குடி அரசர்களை அடித்துவிரட்டிவிட்டு
போர்ச்சுக்கீசியக் கொடிகளை பறக்கவிட்டு அதன் அரசுக் கட்டிலில் அமர்ந்தார்கள்.
போர்ச்சுக்கீசியர்களுக்கு மர வேட்டையில் கிடைத்த மகோன்னதமான நாடு
பிரேசில்.
லண்டன் “கியூ
ராயல் பொட்டானிக்கல் கார்டன்
மீண்டும்
நாம் வட அமெரிக்க செம்மரத்திற்கு
வருவோம். மர வகைகளில் இது ஒரு
ஒட்டச்சிவிங்கி. அதிகபட்சமான உயரம்
வளரும். மரத்தின் குறுக்களவும் அதிகம். பட்டையின் தடிமனும் அதிகம்.
கொஞ்ச
நாட்களுக்கு முன்னால், உலகப் பிரசித்தி பெற்ற லண்டன் “கியூ
ராயல் பொட்டானிக்கல் கார்டன்”
(KEW ROYAL BOTANICAL GARDEN)போயிருந்தேன். இந்த தாவரவியல் பூங்கா தேம்ஸ் நதிக்கரையில் ‘ரிச்மாண்ட’ல்
அமைந்துள்ளது.
அங்குதான்
நான் முதன்முதலாகப் பார்த்தேன் ‘ஜெயண்ட் செக்கோயா’ செம்மரத்தை. என் மகன் எனக்கு போகிற போக்கில் இதனை அறிமுகப் படுத்தினான்.
“அங்க
பாருங்க ..உலகின் பெரிய மரவகை இதுதான். தெரியுமா
..? ஜெயிண்ட்
செக்கோயா என்று பெயர்” நான்
அப்படியா ..? என்றேன் சாதாரணமாக. அது
எவ்வளவு பிரம்மாண்டமானது என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
ஒரு
பக்கம் உலகின் ராட்சச மரம் ஜெயிண்ட் செக்கோயா மரத்தைப் பர்த்தது மிகப் பெரிய
சமாச்சாரம. அது எனக்குத் தாமதமாகத்தான் புரிந்தது. வாழ்க்கையில் சிலவற்றை
குடுப்பனை என்பார்கள். எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் ‘கியூ
கார்டன்’ ஐ பார்த்த போது அது எனக்குக் கிடைத்த குடுப்பினை என்றே தோன்றியது.
உலகத்தின்
அத்தனை மரங்களும் ‘கியூ’ தோட்டத்தில் ‘கியூ’
வரிசையில் நின்றுகொண்டு ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என்று
சொல்லாமல் சொல்லுகின்றன.
300 ஏக்கர்
பரப்பில் 250 வருஷமாக. மூன்றாம் ஜார்ஜ் மன்னனின் அன்றைய ‘ராயல்
பேலஸ்’ ன் தோட்டம்தான் இன்றைய கியூ கார்டன், 1759 ல்
தொடங்கியது. ஓர் ஆண்டில் சராசரியாக 10 லட்சம் பேர் வந்து போகக் கூடிய தாரவியல் பூங்கா. மூவாயிரம் தாவர இனங்களை உயிருடன் வைத்திருக்கும்
உலகின் பெரிய தாவரவியல் பூங்கா.
பட்டையே மூன்றடி தடிமன்
அதிகபட்சமான
இதன் வயது 3,500
ஆண்டுகள். வளரும் உயரம் 300 அடி. வளர்ந்த கிளைகளின் அடி
விட்டம் 18 அடி. மரப்
பட்டைகளின் தடிமன் மூன்று அடி.
உயரத்தை விடுங்கள். விட்டத்தை விடுங்கள். பட்டையின் தடிமனே மூன்று அடி என்றால் யோசித்துப் பாருங்கள். பட்டையைக் கிளப்புவது என்று
சொல்லுகிறார்களே, அது இதுதான் போல.
கலிபோர்னியா
மாநிலத்தில் சிரா நெவாடா மலைப் பகுதியில் மட்டும் சுமார் 36,000 ஏக்கர்
பரப்பில் இந்த ராட்சச மரங்கள் உள்ளன.
காட்டுத்தீ- டவுக்ளஸ்
அணில் – நீண்ட கொம்பு வண்டு
பயிர்ப்
பரவல்: விதை மூலம்தான் இந்த மரம் பரவும். இதன்
கனிகள் வெடித்தால்தான் விதைகள் வெளியே
சிதறும். கடினமான இதன் பழங்கள் இயற்கையாக வெடிக்க காட்டுத்தீ வேண்டும்.
இல்லையென்றால்
'டவுக்ளாஸ்" (DOUGLAS) என்னும்
அணில்கள் வேண்டும். இவை அதன் காய்களை கடித்து கடித்துத் தின்று விதைகளை
வெளிப்படுத்தும். இதே வேலையைச் செய்கின்றன,
‘லாங் ஹார்ன் பீட்டல்’; என்னும் கொம்பு நீண்ட ஒருவகை
வண்டுகள் (LONG HORN BEETLES) பிறகுதான்
இந்த விதைகள் முளைக்கும்.
பயன்:
இந்த மரம் அழுகாது. வேலிக் கம்பங்களாகவும், தீக்குச்சிகள் செய்யவும் பயன்படும். மரங்களை
வெட்டிச் சாய்க்கும் போது கூட விழுந்து நொறுங்கி விடும். கட்டுமானப் பணிகளுக்கு உதவாது. மற்றபடி செக்கோயா மரங்கள் சுற்றுலாத்
தலங்களின், வசூல் மன்னன். நிறைய பேர் வேடிக்கை பார்க்க வருகிறாhர்கள்.
டிக்கட் போட்டு காசு வசூல்பண்ணலாம். மரம்தான் உசரம் !
பிள்ளையார்
சுழி போட்டவர் ஆபிரஹாம் லிங்கன்.
அமெரிக்காவில்
தேசியப் பூங்கா: கலிபோர்னியாவில் மரிப்போசா (MARIPOSA)
நகரில் 1890 ஆண்டு இதற்கென்றே தேசியப் பூங்கா ஒன்றினை அமைத்துள்ளார்கள்.
யோஷிமிட்டி
நேஷனல் பார்க் (YOSHIMITTI
NATIONAL PARK), இதன் மொத்தப் பரப்பளவு 7.47 லட்சம் ஏக்கர். வேர்ல்ட்
ஹெரிட்டேஜ் சைட் (WORLD
HERRITTAGE) என அங்கீகரிக்கப் பட்டது.
முக்கியமாக.
இங்குள்ள செக்கோயா மரத் தோப்புகள், கிரேனைட் மலை முகடுகள், தெள்ளிய
நீருடைய ஓடைகள், ஏரிகள், மலைகள், பனிப்பறைகள் அத்தனையும் ஆண்டுக்கு 50 லட்சம்
பேரை சுற்றுலாப் பயணிகளாக ஈர்க்கிறது.
இது
பற்றி இன்னொரு செய்தி ஆச்சரியம் அளித்தது. 1890 ல்
தொடங்கிய இந்த தேசியப் பூங்காவிற்கான நிதியை 1860 ம்
ஆண்டே ஒதுக்கி பிள்ளையார் சுழி போட்டவர்
ஆபிரஹாம் லிங்கன்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment