Thursday, June 15, 2023

GARUGA TREE 16. அரிநெல்லி

 

                                                                               

அரிநெல்லி என்றால் ஊறுகாய்

                       

அரிநெல்லி வீட்டுத் தோட்டத்தில் வளரவும், ஊறுகாய் போடுவதற்கும்  கிராமப்புற சிறார்களுக்கு  பழங்கள் தரவும், கைவைத்தியம் செய்யவும் அவதரித்த மரம். அதியமான் அவ்வைக்கு தந்தது அரிநெல்லியா பெருநெல்லியா ?

தாவரவியல் பெயர்: காருகா பின்னேட்டா (GARUGA PINNATA)

தாவரக் குடும்பம் பெயர்: பர்ஸரேசி (BURSERACEAE)

தாயகம்: இந்தியா> சைனா> இந்தோசைனா> மலேசியா

அரி நெல்லியி;ன் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: அநெல்லி> கருவேம்பு (ARUNELLI, KARUVEMBU)

இந்தி: கார்பெட் ;(KHARPAT)

மராத்தி: காகட் ;(KAKAD)

மலையாளம்: அன்னகாரா> காட்டுநெல்லி (ANNAKARA, KATTUNELLI)

தெலுங்கு: காருகா> கொண்டவேப்பா (GARUGA, KONDAVEPPA)

கன்னடா: அரநெல்லி> பிலிகட்டி> காஸ்தநெல்லி (ARANELLI, BILIGADDE, KASTHANELLI)

பெங்காலி:ஜும்> கபிலா (JUM, KAPILA)

ஒரியா: தேக போ கேட்சோ (KEKA DO GAT CHO)

கொங்கணி: குடாக் ;(KUDAK)

அசாமிஸ்: பாமா (PAMA)

குஐராத்தி: கேக்கட்> குசிம்ப் (KAKED, KHUSIMB)

மீசோ: புங்பு டுவாய்ரம் (BUNGBU TUAIRAM)

சமஸ்கிருதம்: கர்ணிகரா> கின்கிராத் (KARNIKHARGA, KINIKIRATH)

நேப்பாளி: டாட்டாபி> ரமாசின் ;(DABDABE, RAMASIN) 

பிசின் வடிக்கும் திசுக்கள்

பர்சரேசி குடும்பம் 540 வகையான பூக்கும் தாவரங்களைக் கொண்டது, ஒருவகையான பிசின் வடிக்கும் திசுக்களையும், வாசனை உடைய பட்டைகளையும்உடையது, சில மரங்களின் பிசின்களில் மெழுவர்த்தி மற்றும் அகர்பத்திகள் செய்கிறார்கள்.

சிறுவர்களின் விருப்பமான வேட்டை.

எனக்குத் தெரிந்து வீடுகளில் வளர்க்கும் மரங்களில் முக்கியமானது முருங்கை.டுத்து இந்த அரிநெல்லிதான். பள்ளியில் படிக்கும் சிறுவர்களின் மிக முக்கியமான தின்பண்டம்.

பெருநெல்லிக் காய்கள் கடலூர்> ண்ருட்டி பக்கமெல்லாம் அவ்வளவு பிரபலம் இல்லை. அநேகமாய் காடுகளுக்கு பக்கமான கிராமங்களில் காட்டு நெல்லி தெரிந்திருக்கலாம்.

ஊறுகாய் என்றால் அரிநெல்லி

ஊறுகாய் என்றால் மாங்காய்க்கு முதலிடம். அதற்கு அடுத்து எலுமிச்சை. மூன்றாவது இடம் கண்டிப்பாய் அது அரிநெல்லிக்குத்தான். இந்த மூன்றிலும் சாமானியர்களுக்கான ஊறுகாய்  அருநெல்லிதான்.

அரி நெல்லியா பெரு நெல்லியா

அதியமான் நெடுநாள் வாழவேண்டும் என்று வாழ்ந்து நெல்லிக் கனியை ஒளைவயார் பரிசாகத் தந்தார் என்று பள்ளிக் கூடத்தில் பாடம் நடத்தியபோது எனது ற்பனையில் நான் பார்த்தது இந்த ரிநெல்லிதான். 

அரிநெல்லியின் பூக்கள் சிறியவை. சந்தன நிறம்> வெண்மை அல்லது மஞ்சள் நிறமாக இருக்கும். கிளைகளின் நுனிகளில் இலை கணுக்களில் இருக்கும்.

அரிநெல்லி காய்பிடிக்கும் சமயம் பார்த்தால் அவ்வளவு அழகாய் இருக்கும். கொத்துக் கொத்தாகக் கணக்கில்லாமல் காய்க்கும். காய்கள் பசுமையாக இருக்கும். கனியாக முற்றினால் மஞ்சள் நிறமாக மாறும். கனிகள் கொஞ்சம் தட்டையான உருண்டை வடிவில் இருக்கும்.

பெரு நெல்லி எனும் காட்டுநெல்லி

பெரு நெல்லியை காட்டுநெல்லி என்று சொல்லுகிறார்கள்: இதன் தாவரவியல் பெயர் பில்லாந்தஸ் எம்பிலிகா (PHYLLANTHUS EMBLICA) என்பது. இது பில்லாந்தியேசி (PHYLLANTHACEAE)  தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

அரிநெல்லி ஆசியாவி;ல் இந்தியா உட்பட சீனா> மியான்மர்> தாய்லாந்து> மலேசியா> இந்தோனேசியா> வியட்நாம்> பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

அரிநெல்லி சிறிய மரங்கள். நல்ல சூழலில் 18 மீட்டர் உயரம் கூட வளரும். கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் வரை உள்ள எல்லா இடங்களிலும் வளரக் கூடியது. வெட்டி விட்டால் நன்கு துளிர்த்து வளரும்;.

ரிநெல்லி மரங்கள் வளர நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும்> மண்ணில் நல்ல வடிகால் வசதி வேண்டும்> சுமாரான ஊட்டச் சத்துக்களாவது இருக்க வேண்டும்> கார அமில நிலை பி.எச்.” ஆறு முதல் ஏழு இருந்தால் நன்கு வளரும்.

மிளகுக் கொடிகள் படர உதவும்

மிளகுத் தோட்டங்களில் மிளகுக் கொடிகள் படருவதற்காக இதனை வளர்க்கிறார்கள். கொடிகளும் இதில் ஏறும். அதற்கு நிழலும் தரும்.

அரிநெல்லி பழங்களும் தரும். அதிக உயரம் வளர்ந்து அறுவடைக்கு சிரமம் தராது.

மரத்தில் நிறைய பிசின் சுரக்கும். பிசின் பசுமையான மஞ்சள் நிறத்தில் கண்ணாடி போல இருக்கும். சூரிய வெளிச்சத்தை திருப்பி வீசும்.

இதன் பட்டையில் டேனின் சத்து உள்ளது. முற்றிய வயதான மரங்களின் கட்டைகளை பயன்படுத்தலாம். மரத்தின் வயிரக் கட்டைகளில் மேஜை நாற்காலி செய்யலாம்.

ஆனால் சுமாரான தரத்தில்தான் இருக்கும். மரங்கள் விறகாகக் கூட சரிவர எரியாது.

பெருநெல்லியில் பல விதமான மருந்துகள் தயாரிக்கிறார்கள்.  அரி நெல்லியில் ஊறுகாய் மட்டுமே போட்டு வந்தோம்.  தற்போது அதையும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். 

ஒரு நல்ல எலி டயபெட்டிஸ் எலி

ஒரு நல்ல எலி> இன்னொன்று டயபெட்டிஸ் எலி - இரண்டிலும் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். 

சக்கரை நோயை குணப்படுத்தும் சக்தி அரிநெல்லி பட்டைகளில் சகட்டுமேனிக்கு இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

இனி ஊறுகாய் அரிநெல்லி மருந்து அரிநெல்லியாக  புதிய அவதாரம் எடுக்கலாம்.

அரி நெல்லியா பெரு நெல்லியா ?

னக்கு இன்னும்கூட சந்தேகம் உண்டு> ஒளவைக்கு அதியமான் கொடுத்தது காட்டு நெல்லியா வீட்டு நெல்லியா ?  தெரிந்தால் சொல்லுங்கள்.

TO READ FURTHER

WWW.FLOWERS OF INDIA.NET/GARUGA PINNATA

WWW.EN.WIKIPEDIA.ORG/”GARUGA PINNATA’

WWW.SCIENCEDIRECT.COM/- EFFECT OF AQUEOUS BARK EXTRACT OF GARUGA PINNATA

WWW.TROPICAL.THE FERNS.INFO/ GARUGA PINNATA – USEFUL TROPICAL PLANTS. (493 words)

PLEASE WRITE, WHAT YOU FEEL ABOUT THIS ARTICLE, REGARDS – GNANASURIA BAHAVAN (AUTHOR)

999999999999999999999999999999999999

 



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...