1.டிராகன் பழங்களிலிருந்து விதைகளை எடுத்து பயன்படுத்த முடியுமா?
கனி இருப்ப காய் கவர்ந்தற்று.கொடித் துண்டுகளை நடுவது தான் சிறந்தது. கொடித் துண்டுகளை குழந்தைகள் கூட தயாரிக்கும்.
2.டிராகன் பழ மரத்தின் கொடிகளை நட்ட பின்னர் எத்தனை மாதங்கள் கழித்து பழங்கள் முதல் அறுவடைக்கு வரும்?
12 முதல் 15 மாதங்களில் பழங்களை அறுவடை செய்யலாம்.
3.டிராகன் பழ மரங்கள் பூத்த பின்னர் எவ்வளவு நாட்களில் பழங்களை அறுவடைக்கு தயார் ஆகும்?
25 முதல் 35 நாட்களில் அறுவடை செய்யலாம். அதற்குள் பூக்கள் பழங்களாகிவிடும்.
4.எந்த பருவத்தில் டிராகன் பழ மரக் கன்றுகளை நடவு செய்யலாம்?
கோடையில் நடுவது தான் சிறந்தது.மார்ச் ஏப்ரல் மே
5.டிராகன் பழ மரங்கள் எப்போது பூக்கும்?
ஜூலை முதல் அக்டோபர் வரை
6.எந்த மாதங்களில் டிராகன் பழ மரங்கள் வேகமாக நன்கு வளரும்?
அதற்குப் பிடித்தமான பருவம் கோடை தான்.
7.டிராகன் பழ மரங்களில் கொடித்துண்டுகளை எடுப்பது எப்படி?
அ. நன்கு முற்றிய கொடிகளில் இருந்து கொடித் துண்டுகளை எடுக்க
வேண்டும்.
ஆ.கொடிகளின்
நுனிப்பகுதியில் அல்லது நடுப்பகுதியில் எடுக்க வேண்டும்.
இ. கொடித்துண்டுகள்
நான்கு முதல் ஐந்து அங்குள்ள நீளம் இருக்க வேண்டும்.
ஈ.ஒரே ஒரு கொடியில் இருந்து பல துண்டுகளை வெட்டி எடுக்கலாம்.
8. டிராகன் பழ மரங்களின் வயது என்ன?
இருபது ஆண்டுகள், இது பல ஆண்டு பழப்பயிர்.
9.ஒரு டிராகன் பழ மரக்கொடியிலிருந்து ஒரு ஆண்டில் எத்தனை கிலோ பழங்கள் கிடைக்கும் ?
சராசரியாக 100 கிலோ, ஒரு கம்பத்தைச் சுற்றி இருக்கும் நான்கு கொடிகளில், ஒரு ஆண்டில்.
10.டிராகன் பழங்களில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன?
அ. டிராகன் பழங்களில் பல வகைகள் உள்ளன.
ஆ.அவற்றில் முக்கியமானவை இரண்டு ஒன்று வெள்ளை தசை உடையவை. இரண்டாவது சிவப்பு மற்றும் பிங்க் நிறம் உடையவை.
இ. முதல் ரகத்தின் தாவரவியல் பெயர் ஹைலோ செரியஸ் அண்ட்டேட்டஸ், இன்னொன்று ஹைலோசெரியஸ் பாலி ரைசஸ்.
ஈ. உள்ளிருக்கும் தசைதான் கணக்கு. வெள்ளையாய் இருந்தால் அண்டேட்டஸ். சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் இருந்தால் அது பாலிரைசஸ்.
எ. மஞ்சள் நிறத்திலும் ஒன்று இருக்கிறது. அதன் தசை வெள்ளையாய் தான் இருக்கும். அதிக இனிப்பும் சாறும் உடைய ரகம். இதன் தாவரவியல் பெயர் ஹைலோசெரியஸ் மெகலான்தஸ்.
ஏ. அநியாயமான அழகு நீல நிறத்தில் ஒரு ரகம் உண்டு, அதன் தசையும் முதிர்ச்சி அடைவதற்கு முன்னால் அதுவும் நீலமாய் இருக்கும்.
11.பழ தசையின் நிறத்திற்கும் அதன் சுவைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?
உண்டு நன்றாக கவனியுங்கள். கலர் கம்மி என்றால் சுவையும் கம்மி. அடிக்கும் பிங்க் மற்றும் சிவப்பு பழங்கள் என்றால் சுவையும் ஜாஸ்தி.
12.நீல நிறத்தில் கூட டிராகன் படங்கள் இருக்கிறது என்று சொல்லுகிறார்களே ?
ஆமாம். மிகவும் அரிதானது. ஆனால் ரொம்ப அழகு. ஆனால் இதற்கும் ஹைலோசெரியஸ் அண்ட்டேட்டஸ் என்பதுதான் தாவரவியல் பெயர்.
13.டிராகன் பழமர கொடிகளை நடும்போது எவ்வளவு இடைவெளி விட வேண்டும் ?
செடிக்கு செடி 6 முதல் 8 அடியும் வரிசைக்கு வரிசை 12 அடி.
14.ஒரு ஏக்கரில் டிராகன் பழ செடிகளை நடும்போது எத்தனை சிமெண்ட் கம்பங்கள் வேண்டும் ?
ஒரு ஏக்கருக்கு 450 முதல் 600 கம்பங்கள், ஒரு கம்பத்திற்கு நான்கு செடிகள்.
14.ஒரு ஏக்கரில் மகசூலாக எவ்வளவு டிராகன் பழங்கள் கிடைக்கும் ?
ஆரம்ப காலத்தில் ஏக்கருக்கு 4 முதல் 6 டன், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் 6 முதல் 8 டன்.
14. டிராகன் பழ செடிகளுக்கு ஊடாக நிறுத்தும் காங்கிரீட் கம்பங்கள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்?
ஏழு முதல் எட்டு அடி உயரம் இருக்கலாம்.
15.ஒரு ஏக்கர் டிராகன் பழப்பயிர் சாகுபடி செய்ய எவ்வளவு செலவாகும்?
மூன்று முதல்
நான்கு லட்ச ரூபாய் ஆகும். கொஞ்சம் கூட குறைய ஆகும்.
GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com
No comments:
Post a Comment