Thursday, June 22, 2023

FLOWERING DOG WOOD STATE TREE IN AMERICA 103. அமெரிக்காவின் அரசு மரம் டாக்வுட் பூ மரம்

டாக்வுட் - மூன்று மாநில
அரசு மரம்


வட அமெரிக்காவில் மூன்று மாநிலங்களின் அரசு மரம்
மட்டுமல்ல அழகு மரமும் கூட, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கு சொந்தமான மரமும் கூட, அமெரிக்கப் பழங்குடி மக்கள் பலவிதமாக பயன்படுத்தி வந்த மரமும் கூட, ராசரி மரங்களைவிட தரமானவை கூட,  உறுதியானவை கூட.  உபயோகமானவை கூட, இந்த மரத்திலிருந்து எடுக்கும் மருந்தை பயன்படுத்தி நாய்களைக் தாக்கும் மேஞ்ச் என்ற நோயைத் குணப்படுத்தலாம் கூட, இதன் இலைகள் இலையுதிர் காலத்தில் அழகான, அடர்த்தியான செங்காவி நிறத்தில் மாறி மனதை மயக்கும் கூட, இதன் பழங்கள் பார்க்கும் அனைவரையும்,  பழங்களைச் சாப்பிட பறவைகளையும்  கவர்ந்து இழுக்கும் கூட.    

தமிழ்ப்பெயர்: டாக்வுட் பூமரம் (FLOWERING DOG WOOD)

பொதுப் பெயர்கள்: அமெரிக்கன் டாக்வுட், புளோரிடா டாக் வுட், இந்தியன் ஆரோ வுட்,  கமீலியன் ட்ரீ,  ஒயிட் கோமல்,  ஒயிட் டாக்வுட்,  பால்ஸ் பாக்ஸ், பால்ஸ் பாக்ஸ் வுட் (AMERICAN DOG WOOD, FLORIDA DOG WOOD, INDIAN ARROW WOOD, COMELIAN TREE, WHITE COMEL, WHITE DOG WOOD, FALSE BOX, FALSE BOX WOOD)

தாவரவியல் பெயர்: கார்னஸ் புளோரிடா (CORNUS  FLORIDA)

தாவரக்குடும்பம் பெயர்: கார்னேசி (CORNACEAE)

தாயகம்: கிழக்கு மற்றும் மத்திய அமெரிக்கா (EASTERN AND CENTRAL USA)

வீடுகள் மற்றும் பொது இடங்களில் அழகு மரமாக வளர்க்கப்பட்டு வரும் மரம் இது.  அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கு சொந்தமானது இந்த மரம்.  இந்த மரத்தின் தாவரவியல் பெயர் கார்னஸ் புளோரிடா.  வட அமெரிக்காவில் மூன்று மாநிலங்களின் அரசு மரம் இது.  அவை விர்ஐPனியா> மிசவுரி மற்றும் நார்த் கரோலினா.

மலேரியாவை குணப்படுத்தும் (CURES MALARIA)    

இந்த மரத்தினை அமெரிக்கப் பழங்குடி மக்கள் பலவிதமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.  எழுதுவதற்கான இங்க், துணிகளுக்கு மற்றும் இதர ஆடை ஆபரணங்களுக்கு ஏற்றும் சாயம்,  தயாரித்து உள்ளார்கள்.  அது மட்டுமல்ல> இதனை மலேரியா காய்ச்சலை குணப்படுத்துவதற்காக மருந்தாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.  இதனை குனைன் மருந்திற்குப் பதிலாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.

மரக்கட்டைகள் கடினமானவை உறுதியானவை

அதுமட்டுமல்ல இதன் மரக்கட்டைகள் கடினமானவை.  ராசரி மரங்களைவிட தரமானவை, அவ்றறைவிட உறுதியானவை.  அவற்றைவிட உபயோகமானவை.  இதிலிருந்து விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் செய்யலாம்.  நகைப்பெட்டிகள் செய்யலாம்.  பலவகையான கருவிகள் செய்யலாம்.  மரச்சுத்திகள் செய்யலாம். கருவிகளுக்கான கைப்பிடிகள் செய்யலாம்.

மேஞ்ச் நோயை குணப்படுத்தும் மரம்      

இந்த மரத்திலிருந்து எடுக்கும் மருந்தை பயன்படுத்தி நாய்களைக் தாக்கும் மேஞ்ச் என்ற நோயைத் குணப்படுத்தலாம்.  இந்த நோய் குறிப்பாக வளர்ப்புப் பிராணிகளைத் தாக்கும் நோய்.  இந்த நோய் ஒரு வகையான தோல் நோய்.  இந்த நோயை ஒரு வகையான சிலந்திகள் ஏற்படுத்திகின்றன.  இந்த மேஞ்ச் நோயை குணப்படுத்தும் மரம் என்பதனால்தான் இந்த மரத்தை டாக்வுட் (DOG WOOD) என அழைக்கிறார்கள்.

சிறிய இலை உதிர்க்கும் மரம்    

மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு என்பது போல மரங்கள் சிறியவைதான்.  ஆனால் அழகான மரங்கள்.  அதிகபட்சமாக 33 அடிக்கு மேல் வளராது.  சாதாரணமாக பசுமை நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் இலையுதிர் காலத்தில் அழகான, அடர்த்தியான செங்காவி நிறத்தில் மாறி மனதை மயக்கும்.  

இதன் பூக்கள் சிறியவை.  ஆனால் பூங்கொத்துக்கள் பெரியவை.  ஒரு பூங்கொத்திகள் சராசரியாக 20 பூக்களாவது இருக்கும்.  ஒவவொரு பூவும் ஐந்து அழகான வண்ணமயமான இதழ்களைக் கொண்டிருக்கும்.  சில வெள்ளை நிறத்தில் இருக்கும்.  இதன் பூக்கள் பார்க்க நம்ம ஊர் பட்டிப் பூ மாதிரி இருக்கின்றன.  இவை ஏப்ரல் - மே மாதங்களில் பூக்கும்.

பறவைகளுக்கு பிடித்தமான பழங்கள்

இந்த மரத்தின் பழங்கள் கவர்ச்சிகரமாவை.  கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.  ஒரு கொத்தில் 2 முதல் 10 பழங்கள் இருக்கும்.  பழங்கள் பல வண்ணங்களில் இருக்கும்.  சிவப்பு மஞ்சள் மற்றும் இதர நிறங்களில் இதன் பழங்கள் பார்க்கும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.  பழங்களைச் சாப்பிடும் பறவைகள் இதன் விதைகளை பல இடங்களுக்கும் எடுத்து சென்று விதைக்கும்.

சாகுபடி செய்ய பல ரகங்கள் தயார்    

அழகான மரங்கள் என்றால் அவற்றை ஒட்டுகட்டி பல ரகங்களை உருவாக்குகிறார்கள், அது போன்ற ஒரு மரம்தான் இந்த டாக்வுட் மரம்.  இதனை குளிர்ச்சியான தட் வெப்பச் சூழல் (TEMPERATE ZONES) உள்ள பல இடங்களிலும் இதனை விரும்பி நடுகிறார்கள்.      

உதாரணத்திற்கு சில வற்றை மட்டும் சொல்லுகிறேன். அவை அமெரிக்கன் டச், அப்பலாச்சியன் ஸ்பிரிங், ஆட்டம் கோல்ட் பார்ட்டன், பே பியூட்டி, செரோக்கி சீ.ப், செரோக்கி டே பிரேக் மற்றும் செரோக்கி பிரின்சஸ்.

விதைகள் மூலம் கன்றுகளை உருவாக்கலாம்    

விதை மூலமாக புதிய கன்றுகளை உருவாக்கலாம்.  இளம் போத்துக்களை வெட்டியும் நடலாம்.  ஆனால் விதைகள் மூலம் கன்றுகள் தயாரிப்பது சுலபம்.  தேவைப்படும் விதைநேர்த்தி செய்து விதைத்தால் நூற்றுக்கு நூறு விதைகள் முளைக்கும். 

இதன் கன்றுகள் அதிகம் தேவைப்படுவதால், திசு வளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்யும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள்.

கொசுறு

1915 ம் ஆண்டு செர்ரி மரக்கன்றுகளை அமெரிக்காவுக்குப் பரிசாகத் தந்து கவுரவித்தது ஜப்பான்.  அந்த நிகழ்வின் 100 வது ஆண்டு நிறைவினை கொண்டாடும் விதமாக,  ஐப்பானுக்கு 3000 டாக்வுட் பூ மரங்களை அனுப்பி கவுரவித்தது அமெரிக்கா. 

FOR FURTHER READING

WWW.EN.WIKIPEDIA.ORG – “CORNUS FLORIDA”

WWW.MISSOURIBOTANICALGARDEN.ORG/ - “CORNUS FLORIDA”

WWW.WILDFLOWER.ORG – “CORNUS FLORIDA”

WWW.GARDENIA.NET/ CORNUS FLORIDA – FLOWERING DOG WOOD

WWW.CABI.ORG/ CORNUS FLORIDA – FLOWERING DOG WOOD

WWW.GARDEN.LOVETOKNOW.COM/ CORNUS FLORIDA – FLOWERING DOG WOOD

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

  

        

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...