Wednesday, June 21, 2023

FIRE DRAGON SHANTUNG MAPLE CHINESE ORIGIN 85. அழகு மரம் பயர் டிராகன் ஷேன்டங் மேப்பிள்

அழகு மரம்
பயர் டிராகன் மேப்பிள் 


பயர் டிராகன் ஷேன்டங் மேப்பிள் மரம்,  ஐம்பது மாநிலங்களைக் கொண்ட அமெரிக்காவில் 49 மாநிலங்களில் பயர் டிராகன் மேப்பிள் மரங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி,  வளர்க்கும் இடத்திற்கும், நடவு செய்யும் இடத்திற்கும், அழகினைக் கூட்டும் மரம்,  வட அமெரிக்காவிலும், ஐரேப்பாவிலும்,  அழகு மரமாக வலம் வரும் இந்த மரத்தை சீனாவின் கொடை என்று சொல்லுகிறார்கள்.

தமிழ்ப்பெயர்: பயர் டிராகன் ஷேன்டங் மேப்பிள் (FIRE DRAGON SHANTUNG MAPLE)

பொதுப் பெயர்கள்: பயர் டிராகன் ஷேன்டங் மேப்பிள் ,  பர்ப்பிள் மேப்பிள்,  பயர் டிராகன் மேப்பிள் (FIRE DRAGON SHANTUNG MAPLE, PURPLE MAPLE, FIRE DRAGON MAPLE)

தாவரவியல் பெயர்: ஏசர் டிரங்கேட்டம் (ACER TRUNCATUM)

தாவரக்குடும்பம் பெயர்: சேப்பிண்டேசி (SAPINDACEAE)

தாயகம்: வடக்கு சைனா (NORTH CHINA)> கொரியா (KOREA) 

நீங்கள் வாங்கும் செடி பயர் டிராகன் மேப்பிளா ? ன்று பார்த்து வாங்குங்க.  நீங்க வாங்கினது பயர் டிராகன் இல்லன்னா வாங்கின நர்சரியிலயே ரிட்டன் பண்ணுங்க.. என்று விளம்பரப் படுத்தும் அளவுக்கு இந்த மேப்பிள் பிரபலமானது.  அதனால்தான் ஐம்பது மாநிலங்களைக் கொண்ட அமெரிக்காவில் 49 மாநிலங்களில் பயர் டிராகன் மேப்பிள் மரங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

நார்வே சுகர் மேப்பிள் மரங்களைவிட பிரபலமானது

மேப்பிள் மரங்களில் ரொம்பப் பிரபலமானவை இரண்டு வகைகள்.  ஓன்று நார்வே மேப்பிள்.  இன்னொன்று சுகர் மேப்பிள்.  இந்த இரண்டு மேப்பிள் வகைகளைவிட இந்த பயர் டிராகன் மேப்பிள் மரங்கள் தற்போது பிரபலமாக உள்ள.

சைனா,  ஐப்பான் மற்றும் கொரியாவுக்கு சொந்தமான மரம்

ந்த மரம் முக்கியமான சைனாவுக்கு சொந்தமானது.  அதனால் தான் அதன் பெயரிலேயே டிராகன் சேர்ந்துள்ளது.  டிராகன் பாம்பு சைனாவின் கலாச்சார அடையாளம்.  இந்த மேப்பிள் ஒரு அழகு மரம்.  இலை உதிர்க்கும் மரம்.  இதன் மரம் இலைகள்,  பட்டை அத்தனையும் வளர்க்கும் இடத்திற்கும்> நடவு செய்யும் இடத்திற்கும்,  அழகினைக் கூட்டும் மரம் இது.

இலைகள்தான் இந்த மரத்தின் சிறப்பு

இலைகளை உதிர்த்த பின்னால் துளிர்விடும் பருவத்தில் இதன் துளிர்கள்> சிவப்பும் ஊதாவும் கலந்த நிறத்தில் துளிர்க்கும்.  இலைகள் முதிரும்போது இதன் நிறம் பளிச் சென்ற பசுமை நிறமாக மாறும்.  இலை உதிரும் பருவத்தில் இந்தப் பசுமை நிறம் மஞ்சள் நிறமாக மாறும்.  மேப்பிள் மரவகைகளில் இதற்கு இணையான அழகுடைய இலைகள் இல்லை என்று சொல்லுகிறார்கள்,  தாவரவியல் நிபுணர்கள்.

ஆனால் அடிப்படையில் பார்க்க ஆமணக்கு இலை மாதிரிதான் இருக்கும், இந்தியாவில் நிறைய இலைகள் அந்த மாதிரி இருக்கு. அமெரிக்காவில் மேப்பிள் இலையைப்போல ஐரோப்பாவில் ஓக் இலைகளைக் கொண்டாடுகிறார்கள்.

வளர்க்க ற்ற ரகங்கள்

இந்த பயர் டிராகன் மேப்பிள் கத்தை உருவாக்கிவர் ஒரு விவசாயிதான்.  இதனை அறிமுகம் செய்தவர், டெக்சாஸ்,  போர்ட் வொர்த்தில் வசிக்கும்,   ஒரு ஐப்பான் நாட்டுக்கார்.  தற்போது இந்த மேப்பிள் வகையில் பல புதிய ரகங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள்.    

அவை கிரிம்சன் சன்செட் மேப்பிள், பசிபிக் சன்செட் மேப்பிள்> நார்வீஜிpயன் சன்செட் மேப்பிள்,  மற்றும் ரூபி சன்செட் மேப்பிள். இவை எல்லாம் அப்படி உருவான மரங்கள்தான்.

இலைகளின் வடிவம்   

மேப்பிள் இலைகளின்; வடிவம் ஒர் அழகான் வடிவம்தான்.  அடிப்படையில் இந்த இலைகள்.  பருத்தி இலைகள் போல> ஆமணக்கு இலைகள் போல> மரவள்ளி இலைகள் போல இருக்கும்.  அமெரிக்காவில் மேப்பிள் மர இலைகள் மற்றும் ஒக் மரங்களின் இலை வடிவங்களைக் கொண்டாடுகிறார்கள்.

தேசியக் கொடியில் மேப்பிள் இலை

கனடா நாட்டின் தேசியக் கொடியில் ஒரு இலையின் வடிவம் இருக்கும்.  அதுகூட மேப்பிள் மரத்தின் இலைதான்.  அப்படி ஒரு இலைவடிவத்தை நாம் கொண்டாடுகிறோமா  என நினைத்துப்பார்க்கிறேன்.  ஆனால் இந்த ஒக் மற்றும் மேப்பிள் மர இலைகளை விட அழகான இலைகள் எல்லாம் நம்மிடையே உள்ளன. 

பொதுவாக இவர்கள் ஒரு சிறிய வெற்றியை> ஒரு சிறிய அழகை> ஒரு சிறிய செயலைக் கூட கொண்டாடுகிறார்கள்.  நம்மிடையே கொண்டாட நிறைய இருக்கும்.  கொண்டாடும் வழக்கம் தான் நமது குரோமோசோம்களில் இல்லாமல் போய்விட்டதா என்ன ?

பூக்களும் பழங்களும்

பூக்கள் பற்றி அதிகம் சொல்ல எதுவும் இல்லை.  கவர்ச்சிகரமான செய்திகள் எதுவும் இல்லை.  பூக்கள் மஞ்சளும் பச்சையும்  கலந்த நிறத்தில் இருக்கும்.  ஏப்ரல்,  மே மாதங்களில் பூக்கும்.  இதன் பழங்களுக்கு சமரா என்று பெயர்.  இதன் விதைகளுக்கு இரண்டு பக்கத்திலும் இரண்டு இறக்கைகள் இருக்கும்.  இந்த விதைகள் காற்றில் பறந்து சென்று தொலை தூரத்திற்குச் சென்று பரவுகின்றன.  விதைகள் சிறிய பறக்கும்தட்டுகள்போல (FLYING SAUCERS) இருக்கும்.

எங்கு வளரும்?

இந்த மரங்களுக்கு நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும்.  ஒரளவு சூரிய வெளிச்சம் இருந்தால் கூட வளரும்.  ஈரப்பசை உள்ள மண் ற்றது.  அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.  ஆனால் நல்ல வடிகால் வசதி வேண்டும்.  இது அதிகபட்சமான வெப்பத்தையும் தாங்கும்.  வறட்சியையும் தாங்கும்.  சில மரங்கள் வெப்பத்தைத் தாங்கினால் குளிரைத் தாங்காது.  ஆனால் இந்த மரம் அதிகமான வெப்பத்தையும் தாங்கும்.  அத்தோடு வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே 25 டிகிரி இருந்தாலும் அதனையும் தாங்கும் மரவகை இது.    

வட அமெரிக்காவிலும்,  ஐரேப்பாவிலும்,  அழகு மரமாக வலம் வருகிறது இந்த பயர் டிராகன் மேப்பிள் மரம்.  இதனை சீனாவின் கொடை என்று சொல்லலாம்.

FOR FURTHER READING

WWW.EN.WIKIIPEDIA.ORG/ACER TRUNCATUM

WWW.MISSOURIBOTANICALGARDEN.ORG /ACER TRUNCATUM

WWW.DARROLSSHILLINGBURG.COM /SHANTUNG MAPLE

WWW.MORTONARB.ORG/SHANTUNG MAPPLE

WWW.HORT.VCONN.EDU.ACER TRUNCATUM

WWW.LANDSCAPEPLANTS.OREGON STATE.EDU/ACER TRUNCATUM

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

     

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...