Friday, June 30, 2023

ETTI TREE HERB CONTROL DOZEN DISEASES ATLEAST 193 . எட்டி பழுத்தென்ன லாபம் ?

 

எட்டி பழுத்தென்ன லாபம் ?


(ETTY MARAM, STRYCHNINE TREE, NUX VOMICA, POISON NUT, SEMEN STRYCHNOS, QUAKER BUTTONS, STRYCHNOS NUX-VOMICA, LOGANACEAE )

தாவரவியல் பெயர்: ஸ்டிக்னாஸ் நக்ஸ்வாமிகா

(STRYCHNOS NUX-VOMICA)

தாவரக்குடும்பம் பெயர்: லோகனியேசி (LOGANACEAE)

பொதுப் பெயர்கள்: நக்ஸ் வாமிகா, பாய்சன் நட், ஸ்ட்ரிக்னைன் ட்ரீ, செமன் ஸ்ட்ரிக்னாஸ், குவாக்கர் பட்டன்ஸ் (STRYCHNINE TREE, NUX VOMICA, POISON NUT, SEMEN STRYCHNOS, QUAKER BUTTONS)

தாயகம்: இந்தியா

எட்டி பழுத்தென்னெ லாபம் ?

எட்டிப்பழங்கள் அழகானது. ஆயினும் அது கசப்பானது. உண்ண பயன்படாது. அதுபோல  நல்லறம் செய்யாதவர் சேர்த்த செல்வம்  அவருக்கும் பயன்படாது. அடுத்தவருக்கும் பயன்படாதுஎன்று எட்டி மரத்தை உதாரணம் காட்டி ஒரு பாடலை எழுதியுள்ளார்  திருமூலர்  தனது திருமந்திரம்நூலில்.

                                   “எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,

          ஓட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்

                     வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்

                  பட்டிப் பதகர் பயன்அறி யாரே

-                                                                     திருமந்திரம் -260

எட்டிப் பழுத்தென்ன ஈயாதவன் வாழ்ந்தென்ன?” என்பதும் மிகவும் பிரபலமான தமிழ்ப்பழமொழி.  யாருக்கும் உதவாத மனிதர்களைப்பற்றி குறிப்பிடும்போது இந்தப் பழமொழி தானாக வந்து விழும். ஆனால் எட்டி அவ்வளவு மோசமான மரம் அல்ல. விஷம்தான் ஆனாலும் மருந்தாக அல்லது மருந்து செய்ய பயன்படுகிறது.

எட்டி மரம் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கு சொந்தமான மரம் ஆனால் ஆப்ரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளில், இயற்கையாகப் பரவியுள்ள மரம். கானா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யும் மரம்.

இந்தியாவில், மஹாராஷ்ட்ராவில் பசுமைமாறா காடுகள், கொங்கணி, மேற்குமலைத் தொடர்ச்சியின் சாயாத்தி மலைச்சரிவுகள், ஆகிய பகுதிகளில் எட்டி மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

எட்டிமரம் நடுத்தர உயரமானது.  கிளைகள் வளைந்தும் நெளிந்தும் இருக்கும்.  பட்டை வழுவழுப்பாக சாம்பல் நிறமாக இருக்கும்.  இலைகள் கூம்பு வடிவமாக, பளபளப்பான பசுமை நிறத்தில் இருக்கும்.  புனல் வடிவ பூக்கள்வெளிர் பச்சை நிறத்தில் சிறிய கொத்துக்களாய் கொப்பு நுனியில் பூக்கும்.  பழங்கள் எலுமிச்சம் பழங்களைப்போல, ஆரஞ்சுமஞ்சள் நிறத்தில் இருக்கும்.  ஒவ்வொரு பழத்திற்குள்ளும் ஐந்து, சில்லரைக் காசுகளைப் போல விதைகள் இருக்கும்.  பழத்தின் தசை கொழகொழப்பாக இருக்கும்.

எட்டிமரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: எட்டிமரம், கசோடி, காலம், காஞ்சிரை, (ETTY MARAM,KASODI, KALAM, KANJIRAI)

பெங்காலி: குச்சிலா (KUCHILA)

இந்தி: பெய்லிவா, சிப்பிஞ், ஐகார், கஐரா, குச்லா (PEPLIVA, SIPINJ,JAGAR, KAJRA, KUCHLA)

கன்னடா: ஹெம்முஷ்டி, இட்டாங்கி (HEMMUSTI, ITTANGI)

மலையாளி: சாம்ரான், கஞ்சிராம், கன்னி-ராக்-காரு (SAMRAN, KANJIRAM, KANNI-RAK,KARU)

மராத்தி: கஐ;ரா, குச்சாலா, hர்கட்சுரா (KACHRA, KUCHALU, JARCATCHURA)

ஒரியா: குச்லா (KUCHALA)

சமஸ்கிருதம்: கபிலு, சிப்பிதா, சுட்டகா, திர்கபத்ரா, கரட்ரூமா, விஷ்முவு;டி (ETTY MARAM)

தெலுங்கு: முசிடி, முஷிடி, முஷ்டி (MUSIDI, MUSHIDI, MUSHTI)

உருது: குச்லா முட்டாபிர் (KUCHLA MUTTAFIR)

எட்டி மரத்தை நாடி எந்தப் பறவைகளும் வராது.  எனது தோட்டத்து வேலியில்  ஒரு குட்டையான எட்டி மரம் உள்ளது.  எப்போதும் பச்சைப்பசேல்என தோற்றம் தரும்.  மரம்நிறைய ஆரஞ்சு நிறப் பழங்கள் வைத்து அலங்காரம் செய்தது போல இருக்கும். 

பறித்து சாப்பிடத் தோன்றும்.  பழங்கள் பார்க்க அவ்வளவு அழகு.  அத்தனைப் பழங்களும் உதிர்ந்து அந்த விதைகள் எல்லாம் என்ன ஆகிறது என்று தெரியவில்லை.

ஒரு டஐன் நோய்களை குணப்படுத்தும்

எட்டிப் பழங்களை யாரும் சாப்பிட முடியாது.  நச்சுத்தன்மை உடையது, என எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிலிருந்து தயார் செய்யும் மருந்துகள் மூலம், ஏறத்தாழ ஒரு டஐன் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

வயிற்றுவலி, மலச்சிக்கல், வாந்தி, குடல் எரிச்சல், இதய எரிச்சல், இதர இதய நோய்கள், ரத்த ஒட்டம் தொடர்பான பிரச்சினைகள், கண் நோய்கள், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, சுவாசமண்டலம் தொடர்பான மற்றும் மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவற்றை சரி செய்ய எட்டி பயன்படுகிறது.

மிகவும் ஆபத்தான காட்டு நாய்கள், நரிகள் மற்றும் எலிகள் போன்றவற்றைக் கொல்ல எட்டியின் விஷத்தை பல நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். எட்டிமரம்கூட கடினமான மரம்.  நன்றாக உழைக்கக் கூடியது.  அந்த மரத்தில் நிறைய மரச்சாமான்களைச் செய்யலாம்.

ஆலகால விஷத்தின் அடையாளம்தான் எட்டிமரம்

எட்டி மரத்திற்கு காஞ்சிகைஎன்ற பெயரும் உண்டு.  தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமுதத்திற்காக பாற்கடலை கடைந்தார்கள்.  அப்போது அமுதமும் வந்தது.  ஆலகால விஷமும் வந்தது.  உலகம் அதனால் பாதிக்கக் கூடாது என்பதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தைப் பருகினார்.  அந்த ஆலகால விஷத்தின் அடையாளம்தான் எட்டிமரம் என்று நமது புராணங்கள் சொல்லுகின்றன.

எட்டி விதைதளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது

இந்தியாதான் எட்டி மரத்தின் தாயகம்.  பல நாடுகள் பல லட்சம் டன் எட்டி விதைதளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன.  அப்படி இறக்குமதி செய்யும் எட்டி விதைகளப் பயன்படுத்தி நிறைய மருந்துப் பொருட்களை தயார்செய்து, அவற்றை நமது நாட்டிற்கே அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். 

அப்படி இறக்குமதி செய்யும் பட்டியலில் வரும் நாடுகள், அமெரிக்கா, ஹாலந்து, இஸ்ரேல் மற்றும் மேற்கு nஐர்மனி.

எட்டி மரங்கள், இருமண்பாடான மண், மணற்சாரியான இருமண்பாடான மண். களிமண், மற்றும் சரளைமண்ணில் நன்கு வளரும்.

ஒரு கிலோ எடையில் 900 விதைகள் இருக்கும்.

ஒரு எக்டர் நிலப்பரப்பில் 400 மரங்களை நடலாம். ஒரு வளர்ந்த ஒரு மரத்தில், 50 முதல் 75 கிலோ விதைகள் சேகரிக்கலாம்.  விதைகளை 6 முதல் 12 மணிநேரம் கொதிநீரில் விதைகளை ஊரவைத்து விதைப்பதால் முளைப்புத்திறன் மேம்படும்.  ஒரு ஏக்டரில் விதைக்க 1 கிலோ விதை தேவை.  புதிய விதைகள் நன்கு முளைக்கும்.  நாள்பட்ட விதைகள் நன்கு முளைக்காது.

ஒரு கிலோ எடையுள்ள கனிகளில், 600 முதல் 900 விதைகள் இருக்கும்.  விதைகள் மூலம் புதிய கன்றுகளை உருவாக்கலாம். விதைகள் முளைக்க 70 முதல் 120 நாட்கள் ஆகும்.  

வேர்ச்செடிகள் மூலமாகவும் புதிய கன்றுகளை உற்பத்தி செய்யலாம்.  மரத்தின் அடிப்பகுதியில் லேசாக வெட்டி, காயப்படுத்துவதால், வேர்ச் செடிகள் மளமளவென அதிக எண்ணிக்கையில் உருவாகும்.  இந்த வேர்ச்செடிகள் சுலபமாகப் பிரித்து புதிய கன்றுகளாக நடலாம். மரங்கள் காய்க்க 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.

அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும்

எட்டி மரங்களை வளர்க்க நல்ல மண் தேவையில்லை.  அதிக தண்ணீர் தேவையில்லை.  உரம் தேவையில்லை.  பூச்சி மருந்து தேவையில்லை.  சாகுபடி செய்ய அதிக பணம் தேவை இல்லை. வளர்க்க வேண்டும் என்ற மனம்தான் தேவை. 

அதிக  மரங்களை  நட்டு வளர்த்தால் அதிகமான எட்டி விதைகளை ஏற்றுமதி செய்யலாம்.  அந்நியச் செலாவணியும் அதிகம் கிடைக்கும்.  எட்டி கொட்டைகளுக்குப் பதிலாக மருந்துகளை நாமே தயாரித்து  ஏற்றுமதி செய்யலாம். கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து விட்டு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் பாருங்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...