Tuesday, June 20, 2023

ERUOPEON PEAR BODY WEIGHT LOWERING FRUIT 67. உடல் எடை குறைக்கும் ஐரோப்பிய பேரிக்காய்

 

உடல் எடை குறைக்கும் 
ஐரோப்பிய பேரிக்காய்

ஐரோப்பிய பேரிக்காய், இந்த வகையை பயன்படுத்திதான் பல பேரி பழ ரகங்களை  உருவாக்கி  உள்ளனர்,  ந்த ரகங்களின் பழங்கள்தான், இன்று அமெரிக்காவின் சூப்பர் மார்கட்டுகளில் பெரும்பாலும் விற்பனை ஆகின்றன, பேரி பழங்கள் உடல் எடை குறைப்பு உட்பட பல நோய்களை கட்டுப்படுத்தும், ஒரிஜினல் எபனியை ஓரங்கட்டிவிடும் என்று சொல்லும் அளவுக்கு தரம் உடையவை இதன் மரக்கட்டைகள், .  

தாவரவியல் பெயர்: பைரஸ் கம்யூனிஸ் (PYRUS COMMUNIS)

தாவரக்குடும்பம் பெயர்: ரோசேசி (ROSACEAE)

பொதுப் பெயர்கள்: ஈரோப்பியன் பேர், காமன் பேர் (EUROPEON PEAR, COMMON PEAR)

தாயகம்: மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, மற்றும் தென் மேற்கு ஆசியா

பேரிக்காய் மரத்தின் பிறமொழிப் பெயர்கள்:

ஆங்கிலம்: பீயர் (PEAR)

ஸ்பேனிஷ்;: பீயர், பேரால் ( PEAR, PERAL)

பிரேன்ச்: பாய்ர்,  பாய்ரெர் ( POIRE, POIRER)

போர்ச்சுகீஸ்: பெரிரா (PEREIRA)

ஜெர்மனி: பிர்ன் பாம் (BIRN BAUM)

இத்தாலி: பெரோ (PERO)

ப்பான்: சீயோ நாஷி (SEIYO - NASHI)

 நெதர்லேண்ட்ஸ்: பீர்பூம் (PERE BOOM)

ஸ்வீடன்: பேரான்டிரேட் (PAERONTRAED)

ஊட்டச் சத்துக்கள்

பேரி பழங்களில் கணிசமான அளவில் ஊட்டச் சத்துக்கள் அடங்கி உள்ளன, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், காப்பர், நார்ச்சத்து புரதம் ஆகியவையும் அடங்கியுள்ளது.

உடல் எடை குறையும்

சிவப்பு பேரிக்கள் இதய, ஆரோக்கியத்தையும் பச்சை பேரிக்கள் கண்களின் ஆரோக்கியத்தையும், டைப் இரண்டு சக்கரை நோயிலிருந்தும் பாதுகாக்கிறது.

புற்று நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் குணங்களும் இதில் மிகுந்துள்ளது, குறைவான கலோரியும், நீரும் நார்ச்சத்தும் நிறைந்தும் இருப்பதால் உடல் எடையை குறைக்கவும் உதவியாக உள்ளது.

மயக்க மருந்து

இந்த பழங்களை, துவர்ப்பியாக, குடற்புழுக்கள் நீக்கியாக மற்றும் மயக்க மருந்தாகவும் இதனை, பழங்குடி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.  ஆனால் இதுகுறித்து தீர்க்கமான ஆய்வுகள் ஏதும் செய்து அவை நிரூபிக்கப்படவில்லை.

இதன் இலைகளிலிருந்து ஒருவிதமான மஞ்சள்நிற சாயம் எடுக்கிறார்கள்.   

எபனி மரத்திற்கு சமம்

இதன் மரங்கள், எபனி மரத்திற்கு சமமான தரம் உடையவை.  மரங்கள் உறுதியானவை: கடினமானவை, நீண்ட நாட்களுக்கு உழைக்கும் தன்மையுடையது. 

பெட்டிகள் மற்றும் கருவிகள் போன்றவை செய்யலாம்.  இந்த மரத்தில் செய்த பொருட்களுக்கு கருப்பு வர்னீஷ், அடித்தவிட்டால் போதும்> தலயில் அடித்து சத்தியம் பண்ணி எபனி என்று சொல்லலாம்.

ஒரிஜினல் எபனியை ஓரங்கட்டிவிடும். அசப்பில் எபனி மாதிரியே தெரியும். 

கடைசல் மற்றும் இழைப்பு வேலைகளுக்கு ஏற்றது.  இந்த மரங்களை ஷெல்டர் பெல்ட் என்னும் காற்றுத்தடுப்பு வேலகளில் சிறந்த மரமாகப் பயன்படுத்தலாம்.

மூவாயிரம் ரகங்கள்

பேரியில் உலகம் முழுவதும் 3000 ரகங்கள் உள்ளன, அதில் இந்தியாவில் இருப்பவை மட்டும் சுமார் 20 ரகங்கள்,      

குளிர்ப் பிதேசங்களின் மிக முக்கியமான பழமரம் இது.  ஐரோப்பாவை> விட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது.     

சாகுபடி ரகங்கள்

ஆசியன் பேரி (PYRUS PYRIROLIA) வீரிய ஒட்டு சைனிஸ் ஒயிட் பேரி (PYRUS BRETSCHNEIDERI ) ஆகிய இரண்டு பேரி ரகங்கள்தான் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.

ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்குரிய இரண்டு பேரி ரகங்கள்தான் உலகம் முழுவதும் பரவலாக பயிர் செய்கிறார்கள்.  ஐரோப்பிய பேரி ரகங்கள் பெரும்பாலும் பிரான்சில் உருவாக்கப்பட்டவை.

ஆசிய பேரி ரகங்கள் 

ஆசிய பேரி ரகங்கள் பெரும்பாலும் ஐப்பான் மற்றும் சீனா நாட்டின் படைப்புகள்.  உலக அளவில் அதிகமாக பரவி இருப்பவை ஆசிய பேரி ரகங்கள் தான்.  அதுபோல வட அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பேரி ரகங்களில் 75 சதம் ஆசிய பேரி ரகங்கள்தான்.   

நல்ல வடிகால் வசதி உள்ள அங்ககச் சத்துக்கள் நிறைந்தமண் இதற்கு பொருத்தமானது.  நல்ல சூரிய வெளிச்சம் தேவை.  குறைந்தபட்சம் இரண்டு ரகங்களையாவது நட்டால்தான் நல்ல மகரந்த சேர்க்கையும் நல்ல காய்ப்பும் சாத்தியமாகும்.  மரங்களை நட்ட பின்னால் காய்க்க குறைந்தபட்சம்  4 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.   

பேரி ரகங்களின் பெற்றோர்

பைரஸ் கம்யுனிஸ் என்னும் ஐரோப்பிய வகையைத்தான் பெரும்பாலான பேரி ரகங்களுக்கு பெற்றோராக பயன்படுத்தி உள்ளனர்.  இதிலிருந்து உருவாக்கப்பட்ட ரகங்களின் பழங்கள்தான் இன்று அமெரிக்காவின் சூப்பர் மார்கட்டுகளில் விற்பனை ஆகின்றன. 

அத்தோடு காமிஸ், பார்லெட் மற்றும் அஞ்சவ் (COMICE, BARLETTE & ANJOU) ஆகிய பிரபலமான பழைய பேரி கங்களும் அடங்கும்.   

காமன் பேர் என்ற  சொல்லப்படும் பேரி மரங்கள் பெரும்பாலும் பழங்களுக்காகவே சாகுபடி செய்கிறார்கள்.

ஏப்ரல் மேவில் பூக்கும்   

ஏப்ரல் மே மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும் பேரி மரங்கள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலங்களில் காய்க்கும்.  பேரி காய்களை காய்களாக இருக்கும்போதே பறிக்க வேண்டும்.  காய்கள் முதிர்ந்த பின்னால் அவை மரத்தில் நிற்காது உதிர்ந்து போகும்.   

மணல்சாரியான லேசான மண், நடுத்தரமான இருமண்பாட்டு மண்,  கடினத்தன்மை உடைய களிமண், அமிலத்தன்மை உடைய மண், நடுத்தரமான கார அமிலத்தன்மை உடைய மண்,  காரத்தன்மை உடைய மண், ஆகிய எல்லா மண்கண்டத்திலும் இந்த பேரி மரங்கள் பிரச்சினை இல்லாமல் வளரும். 

நிழல் இல்லாத நிலங்கள் அல்லது சுமாரான நிழல் உள்ள நிலங்களிலும் வளரும்.  எப்போதும் ஈரப்பசை உள்ள மண் வகைகளிலும் நன்கு வளரும்.  வறட்சியையும் ஒரளவு தாங்கி வளரும் மரம் இது.         

வேர்க் கன்றுகள்

வளர்ந்தமரங்கள் வறட்சியைத் தாங்கும்.  வேர்களிலிருந்து நிறைய வேர்க்கன்றுகளை உருவாக்கும்.  வேகமாக நிறைய மரங்களை உருவாக்கிக் கொண்டு வளரும் தன்மை கொண்டது.  ஒரு மரம் வைத்தால் ஒன்பது மரங்களை உடன் வளர்க்கும் பண்பு கொண்டது.   

கனெக்டிகட், மெய்ன், மாசாசூசெட்ஸ், நியூஹாம்ப்ஷ்யர், ரோட் ஐலண்ட் ரெட், வெர்மாண்ட் ஆகிய வட அமெரிக்க மாநிலங்களில் பேரி பழ மரங்கள் அதிகம் சாகுபடி ஆகின்றன.

புகைப்படங்கள்: டல்லஸ் தாரவியல் பூங்கா, போர்ட் ஒர்த் (DALLAS ARBORETUM, FORT WORTH)

FOR FURTHER READING

WWW.EN.WIKIPEDIA.COM – “PYRUS COMMUNIS”

WWW.PLANTS.USDA.GOV-“PYRUS COMMUNIS – COMMON PEAR”

WWW.MISSOUR BOTANICAL GARDEN.ORG.”PYRUS COMMONIS”

WWW.PF.AF.ORG – PYRUS COMMLINIS.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...